கார் இன்சூரன்ஸ்-ல் என்சிபி(NCB)
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
இந்தியாவில் நான்கு சக்கர வாகனத்தின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மோட்டார் வெஹிகிள் இன்சூ ரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். மேலும், உங்களின் காருடன் சேர்த்தே இன்சூரன்ஸ்-ஐ வாங்கி விட வேண்டும் என்பதை நீங்கள், உங்கள் கார்-ஐ வாங்குவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்சிபி-ன் நன்மைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்குகிறார்கள் என்பது இதில் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு என்சிபி என்றால் என்ன என்பது கூட தெரியாது. ஆகவே, பொதுவாக கேட்கப்படும் இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலம் நாங்கள் கொடுக்க உள்ளோம்.
என்சிபி என்றால் ‘ நோ கிளைம் போனஸ்’ ( No Claim Bonus) என்பதை குறிக்கும். வாடிக்கையாளர் ஒருவர் பாலிசி பெற்ற குறிப்பிட்ட ஆண்டில் எந்தவொரு கிளைமும் செய்யாதபோது கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்கும் ஒரு வகையான வெகுமதியே என்சிபி ஆகும். இதனால், இன்சூர் செய்யப்பட்ட நபர் தனது இன்சூரன்ஸ்-ஐ அடுத்த ஆண்டு புதுப்பிக்கும்போது அதன் பிரீமியத்தில் தள்ளுபடியை வெகுமதியாக பெறுவார்
நீங்கள் வாங்கும் பொருட்களின் விலையானது ஏறிக்கொண்டே இருந்தாலும், உங்களின் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பதற்கான சிறந்த வாய்ப்பினை உங்களின் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு அளிக்கிறது. “ இது எப்படி சாத்தியம்” என்று நீங்கள் கேட்கிறீர்களா?
இது வெகுமதி (ரிவார்ட்) திட்டத்தை போன்று செயல்படும். இன்சூரன்ஸ் செய்த முதலாம் ஆண்டில் எந்தவொரு கிளைமும் செய்யாவிட்டால் 20% என்சிபி தள்ளுபடியைப் பெறுவீர்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் எவ்வித கிளைமும் செய்யாவிட்டால் கூடுதலாக 5% தள்ளுபடியாகப் பெறுவீர்கள். இது தொடர்ந்து கொண்டே போகும் பட்சத்தில் அதன் ஆறாம் ஆண்டில் 50% ஆக உயர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், நீங்கள் உங்கள் கார்-ஐ சரியாக ஓட்டுவதன் மூலம் உங்கள் கார்-ஐ சிறந்த முறையில் பாதுகாக்கலாம். மேலும், நாளடைவில் இதன்மூலம் நீங்கள் அதிக பலனை அடையலாம்.
இல்லை. சிறு விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கோ அல்லது சிறிய டயர் வெடிப்புக்கோ கிளைம் செய்வதை தவிர்த்து, உங்களின் சொந்த செலவிலே (உங்களால் அந்த செலவை செய்ய முடியும் என்கிற பட்சத்தில் ) அதை சரி செய்து கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு கிளைம்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் அடுத்த முறை உங்களின் கார் இன்சூரன்ஸ்-ஐ புதுப்பிக்கும் போது நோ கிளைம் போனஸ் பெறலாம்.
இன்சூரன்ஸ் வரையறைகளின் படி என்சிபி பாலிசி என்றால் என்ன என்பதை புரிந்துகொண்ட பின், கார் இன்சூரன்ஸிற்கான நோ கிளைம் போனஸ் எவ்வளவு? என்கிற அடுத்த கேள்வி எழும்.
உங்களின் காருக்கான நோ கிளைம் போனஸ்-ஐ கணக்கிடுவது என்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவர்களின் இணையதளத்தில் (வெப்சைட்டில்) நோ கிளைம் போனஸ் கால்குலேட்டர்-ஐ உங்களின் பயன்பாட்டிற்காக வைத்திருப்பார்கள், அதை வைத்து உங்களின் நோ கிளைம் போனஸ் தொகையை கணக்கிடலாம். இது வழக்கமாக உங்கள் பாலிசியின் இரண்டாம் வருடத்திலிருந்து தொடங்கும்.
தற்போதைய விதிமுறைப்படி, இந்தியாவில் என்சிபி 20 சதவீதத்தில் தொடங்கி ஆறாவது ஆண்டில் 50 சதவீதமாக உயரும். பொதுவாக, நான்கு சக்கர வாகனத்தின் நோ கிளைம் போனஸ் சதவீதமானது பின்வரும் முறையில் கணக்கிடப்படுகிறது.
கிளைம் ஃப்ரீ இயர்ஸ் (கிளைம் இல்லா வருடங்கள்) |
நோ கிளைம் போனஸ் |
1 வருடத்திற்கு பின் |
20% |
2 வருடங்களுக்குப் பின் |
25% |
3 வருடங்களுக்குப் பின் |
35% |
4 வருடங்களுக்குப் பின் |
45% |
5 வருடங்களுக்குப் பின் |
50% |
1. உங்களை ஊக்குவிக்கும் விதமான வெகுமதிகளை அளிக்கும்: என்சிபி என்பது நீங்கள் ஒரு சிறப்பான மற்றும் பொறுப்பான கார் ஓட்டுநராகவும், உரிமையாளராகவும் இருப்பதற்காக உங்களுக்கு அளிக்கப்படும் வெகுமதி ஆகும்.
2. இது உங்கள் காரோடு தொடர்புடையது அல்ல, உங்களோடு தொடர்புடையது: என்சிபி என்பது தனிநபரான உங்களோடு தொடர்புடையதே தவிர உங்கள் காரோடு அல்ல. இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் எந்த கார் வைத்திருந்தாலும்- உங்கள் கார் பாலிசிகள் முடிவடையும் தேதிக்கு முன்னர், நீங்கள் அதை புதுப்பித்துக் கொண்டிருக்கும் வரை, உங்கள் கார் இன்சூரன்ஸின் நோ கிளைம் போனஸ் மூலம் நீங்கள் பயனடையலாம்.
3. கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் சேமிக்கலாம்: அனைவரும் மிகவும் விரும்பக்கூடிய பயன் இது தான்! அது தான் தள்ளுபடிகள்! நோ கிளைம் போனஸ் மூலம் உங்களின் வருடாந்திர கார் இன்சூரன்ஸ் பிரீமியத்திலிருந்து 20% வரை நீங்கள் சேமிக்கலாம்.
4. இதை எளிதில் மாற்றலாம்: உங்கள் பாலிசியின் இன்சூரர் அல்லது காரை மாற்றும் நிலை ஏற்பட்டால், உங்கள் என்சிபிஐ எளிமையான செயல்முறை பின்பற்றி சுலபமாகவும், விரைவாகவும் மாற்றிடலாம். நீங்கள் தற்போது வைத்துள்ள பாலிசியின் காலமானது முடிவடையும் முன்னர் பாலிசியை மாற்ற வேண்டும்.
என்சிபி மிகவும் நன்மை பயக்கும் திட்டமாகும். நீங்கள் எவ்வித கிளைமும் செய்யாத வரை என்சிபி-யினால் கிடைக்கும் பலன்களையும் பாதுகாப்பையும் தொடர்ந்து அனுபவிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பாலிசி ஆண்டில் ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் கிளைம் செய்ய வேண்டியிருந்தால், அடுத்த பாலிசி ஆண்டில் நீங்கள் என்சிபி--ன் பலனைப் பெற இயலாது. தற்போது நீங்கள் வைத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிசி முடிவடைந்த தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் உங்களின் என்சிபி முடிந்துவிடும், மேலும் அதன் பின் நீங்கள் நோ கிளைம் போனஸின் பலனைப் பெற முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, சரியான நேரத்தில் உங்கள் பாலிசியை புதுபிக்க வேண்டியது அவசியமாகும்.
என்சிபி சான்றிதழை எப்படி பெறலாம்? என்கிற கேள்வி என்சிபி குறித்து எழும் அடுத்த கேள்வி ஆகும். பாலிசிதாரர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது அத்துடன் என்சிபி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் பாலிசிதாரர் குறிப்பிட்ட பாலிசி ஆண்டில் ஏதேனும் கிளைம் அவர் செய்தாரா இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் பயன்களை அனுபவிக்கலாம். நடப்பு ஆண்டில், கிளைம் ஏதேனும் செய்திருந்தால் அடுத்த ஆண்டுக்கான என்சிபி--ன் பலனை அனுபவிக்கும் தகுதியினை இழப்பார், ஆனால், அந்த ஆண்டு முழுவதும் அவர் கிளைம் எதுவும் செய்யவில்லை என்றால், அவர் என்சிபி--ன் பலன்களை அனுபவிக்கும் தகுதியினை பெறுவார்.
நீங்கள் இதுவரை எந்தவொரு கிளைமும் செய்யவில்லை, மேலும் ஆண்டிற்கு மத்தியில் உங்கள் காரை விற்க முடிவு செய்தாலோ அல்லது மற்றொரு காரை வாங்க முடிவு செய்தாலோ என்ன நடக்கும் என்று யோசிக்கிறீர்களா?
நீங்கள் டீலர் இடமிருந்தோ அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ ஒரு பழைய கார்-ஐ வாங்க இருந்தால் , அந்த கார் என்சிபிக்கு தகுதியானதாக இருந்தால், நீங்கள் நோ கிளைம் போனஸை மாற்றம் செய்வதற்காக விண்ணப்பிக்கலாம். அப்படி இருக்கையில் , நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்களின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீங்கள், உங்கள் பழைய காரை விற்பனை செய்ய இருப்பதை பற்றித் தெரியப்படுத்தி, உங்களின் என்சிபிஐ நீங்கள் வாங்க இருக்கும் புதிய காருக்கு மாற்றும்படி அவர்களிடம் கோரிக்கை வையுங்கள்.
இப்போது நீங்கள் டிஜிட்-ல் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் தற்போதைய என்சிபி மற்றும் உங்கள் முந்தைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் அத்தோடு (எங்களிடம் முதன்முறையாக புதிய கார் பாலிசியை வாங்குவதாக இருந்தால்) முந்தைய இன்சூரரின் பாலிசி எண்ணை எங்களோடு பகிர்ந்திடுங்கள். எஞ்சியவற்றை நாங்கள் பார்த்துக்கொள்வோம்
இது, உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ்- ஐ ஆன்லைனில் வாங்குகிறீர்களா அல்லது ஏஜென்ட் மூலமாக அல்லது நேரடியாக வாங்குகிறீர்களா என்பதைப் பொறுத்தது. உங்களின் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ நேரடியாகவோ அல்லது ஏஜென்ட் மூலமாக வாங்கினால், உங்களின் பையர்- செல்லர் அக்ரீமென்ட் (வாங்குபவர்-விற்பனையாளர் ஒப்பந்தம்) ஃபார்ம் (படிவம்) 29 மற்றும் 30ஐ சமர்ப்பித்து, உங்கள் என்சிபி-ஐ முந்தைய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மாற்றம் செய்வதற்கான கோரிக்கையை கடிதம் மூலமாக சமர்ப்பியுங்கள்.
இதற்குப் பின் சம்பந்தப்பட்ட இன்சூரர் என்சிபி சான்றிதழை வழங்குவார். அதை நீங்கள் உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் புதிய கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கப் போகிறீர்கள் என்றால், இவை எதையும் நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சரியான என்சிபி , பழைய பாலிசி எண் மற்றும் இன்சூரரின் பெயரை பகிர்ந்தால் போதும், உங்களின் புதிய இன்சூரன்ஸ் நிறுவனம் எஞ்சிய செயல்முறைகளை கவனித்துக்கொள்வார்கள்.
ஆவணத்தைப் பொறுத்த வரையில், விண்ணப்பத்தோடு சேர்த்து பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, நோ கிளைம் போனஸ் புதிய காருக்கு மாற்றப்படும். தற்போதுள்ள என்சிபி சான்றிதழின் அடிப்படையில் வாடிக்கையாளர் புதிய காருக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தில் தள்ளுபடியாக பெறலாம்