கார் இன்சூரன்ஸ் ஆன்லைன்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
கார் இன்சூரன்ஸ் என்பது ஆட்டோ அல்லது மோட்டார் இன்சூரன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது விபத்துகள், திருட்டுகள் அல்லது இயற்கை பேரிடர்கள் போன்றவற்றினால் ஏற்படக் கூடிய அபாயங்கள் மற்றும் சேதங்களிலிருந்து உங்களையும், உங்கள் காரையும் பாதுகாக்கின்ற ஒரு வகையான வெஹிகிள் இன்சூரன்ஸ் பாலிசியாகும். ஆகவே, இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய இழப்புகளிலிருந்து உங்களை பொருளாதார ரீதியாக நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். கூடுதலாக, தேர்டு-பார்ட்டியினருக்கு ஏற்படும் சேதங்களிலிருந்தும் கூட உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீங்கள் சட்டப்பூர்வமாக வண்டி ஓட்டுவதற்கு தேவையான அடிப்படையான, தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸை வாங்க விரும்பினாலும், அல்லது காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை கொண்டு உங்கள் காருக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்க விரும்பினாலும் அல்லது ஓன் டேமேஜ் பாலிசியை எடுக்க விரும்பினாலும், டிஜிட் நிறுவனம் ஆன்லைனிலேயே தேர்டு-பார்ட்டி, காம்ப்ரிஹென்சிவ் மற்றும் ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸை கட்டுப்படியாகும் விலையில் உங்களுக்கு வழங்குகிறது.
இதன் சிறப்பு என்ன? உங்கள் காருக்கு பொருந்தக் கூடிய வகையில் 7 பயனுள்ள ஆட்-ஆன்களை தேர்வு செய்வதுடன் உங்கள் ஐடிவி-ஐ நீங்களே தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். எனவே, டிஜிட்-இல் கார் இன்சூரன்ஸை நீங்கள் வாங்க/புதுப்பிக்க விரும்பினாலும் அல்லது கிளைம் செய்ய விரும்பினாலும் - இவை அனைத்தையுமே ஆன்லைனிலேயே எங்கள் எளிதான ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்யப்படும் சுய-ஆய்வு நடைமுறையின் மூலமாக விரைவாக செய்து விடலாம்.
உங்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் நீங்கள் வாங்கக்கூடிய கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள்
உங்களுடைய கார் இன்சூரன்ஸ் பாலிசியில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை என்று தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும், அப்போது தான் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு ஏதும் சங்கடங்கள் நேராது. அவ்வாறான சில சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களை விஐபி-க்கள் போல நடத்துகிறோம், எப்படியென தெரிந்து கொள்ளவும் …
முக்கிய அம்சங்கள் |
டிஜிட் பலன்கள் |
பிரீமியம் |
₹2094-ல் இருந்து ஆரம்பிக்கிறது |
நோ கிளைம் போனஸ் கிடையாது |
50% வரை தள்ளுபடி |
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்கள் |
10 ஆட்-ஆன்கள் கிடைக்கும் |
கேஷ்லெஸ் ரிப்பேர்கள் |
டோர்ஸ்டெப் பிக்அப் & டிராப் வசதி 6000+ கேரேஜ்களில் வழங்கப்படுகிறது |
கிளைம் செயல்முறை |
ஸ்மார்ட்போன் மூலம் செயல்படும் கிளைம் செயல்முறை. வெறும் 7 நிமிடங்களில் செய்து விடலாம்! |
ஓன் டேமேஜ் கவர் |
கிடைக்கும் |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட டேமேஜ் |
சொந்த சேதங்களுக்கு அன்லிமிடெட் லையபிலிட்டி, சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை கிடைக்கும் |
விபத்தின் காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் விபத்து அல்லது மோதல் காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதத்திற்கு காப்புறுதி |
×
|
✔
|
தீ காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் தீ காரணமாக உங்களின் காருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறது. |
×
|
✔
|
இயற்கை சீற்றங்கள் காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் வெள்ளப்பெருக்கு, பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறது. |
×
|
✔
|
தேர்டு-பார்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் உங்கள் காரின் காரணமாக தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரையிலான காப்புறுதியை வழங்குகிறது. |
✔
|
✔
|
தேர்டு-பார்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் உங்கள் காரின் காரணமாக தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரையிலான காப்புறுதியை வழங்குகிறது. |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் ஓனர் கம் டிரைவராக இருக்கும் நபருக்கு ஏதேனும் காயங்கள் அல்லது இறப்பு நேர்ந்தால் அதற்கான காப்புறுதியை வழங்குகிறது. (சட்டரீதியாக கட்டாயமானது, ஒருவர் இதனை தங்கள் பாலிசியில் ஏற்கனவே சேர்க்கவில்லை என்றால், தற்போது தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.) |
✔
|
✔
|
தேர்டு-பார்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/ இறப்பு உங்கள் காரின் காரணமாக தேர்டு-பார்ட்டி நபரின் உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது இறப்பு நிகழ்ந்தாலோ, அன்லிமிடெட் லையபிலிட்டி வரையிலான காப்புறுதியை வழங்குகிறது. |
✔
|
✔
|
கார் திருடு போதல் துரதிஷ்டவசமாக உங்கள் கார் திருடப்பட்டுவிட்டால் அந்த இழப்பிற்கான காப்புறுதியை பெறுவீர்கள் |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் எங்களின் நெட்வொர்க் கேரேஜ்களில் செய்யப்படும் ரிப்பேர்களுக்கு- 6 மாத வாரன்டியுடன் கூடிய டோர்ஸ்டெப் பிக்அப், ரிப்பேர் மற்றும் டிராப் வசதி வழங்கப்படும் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யை தனிப்பயனாக்குஙகள் உங்களின் விருப்பப்படி உங்கள் காரின் ஐடிவி-யை தனிப்பயனாக்குஙகள். அதற்கு தகுந்தாற்போல உங்கள் காரின் இன்சூரன்ஸ் பிரீமியத்தை சரிசெய்து கொள்ளலாம். |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்கள் மூலமாக கூடுதல் பாதுகாப்பு டையர் புரொட்டக்ட் கவர், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரொட்டெக்ஷன், ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்கள் மூலம் உங்கள் காருக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை வழங்குங்கள். |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உங்கள் காரின் என்ஜின் சிசி (CC)-ஐ பொறுத்தது மற்றும் அந்தந்த பிரீமியம் ரேட்ஸை கூட ஐ.ஆர்.டி.ஏ.ஐ, முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன, அவை பின்வருமாறு:
என்ஜின் திறன் கொண்ட தனியார் கார்கள் |
2019-20க்கான பிரீமியம் INR |
பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமலுக்கு வரும்) |
1000 சிசி(CC)-க்கு மிகாமல் |
₹2072 |
₹2094 |
1000 சிசி(CC)-க்கு மேல் ஆனால் 1500 சிசி(CC)-க்கு மிகாமல் இருக்கும். |
₹3221 |
₹3416 |
1500 சிசி(CC)-க்கு மேல் |
₹7890 |
₹7897 |
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடன் அல்லது புதுப்பித்தவுடன், நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். எந்த படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டாம்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய-ஆய்விற்கான லிங்க் கிடைக்கப்பெறும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனிலிருந்தே படிப்படியான வழிகாட்டுதல்களின் படி உங்கள் வாகனத்தின் சேதங்களை படம் பிடிக்கவும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் வழிமுறையை தேர்வு செய்யவும், அதாவது எங்களுடைய கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட்(பணம் செலுத்தி விட்டு பின்னர் பெற்றுக் கொள்ளுதல்) அல்லது கேஷ்லெஸ் வசதியை பெறவும்.
நாங்கள் கிளைம் ப்ராஸஸை எளிமையாக்குகிறோம் என்று கூறும் போது, உண்மையாகவே அந்த கருத்தை வலியுறுத்தித் தான் கூறுகிறோம்! கார் இன்சூரன்ஸ் என்று வரும் போது, நீங்கள் ஏற்கனவே கார் வாங்குவதற்கு அதிகமாக செலவு செய்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம், எனவே தான் கார் இன்சூரன்ஸ் கிளைம்களை எளிமையாகவும், சிக்கனமாகவும் செய்து கொடுப்பதற்கு முடிந்த வரையில் முயலுகிறோம்.
இந்தியா முழுவதிலும் 6000+ கேரேஜ்களில் கேஷ்லெஸ் ரிப்பேரினை பெறவும்
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் இவ்வாறு யோசிப்பது சரியே!
டிஜிட்-இன் கிளைம் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்
கேஸ் 1: நீங்கள் ஒரு புதிய ஆடம்பர கார் வாங்கினால் - ஆடம்பர காரை வாங்குவது பெரும்பாலான உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய விஷயமாகும். எனவே, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் ஓன் டேமேஜ் ஆகிய இரண்டையும் ஈடுசெய்ய காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் அதை ப்ரொடெக்ட் செய்ய வேண்டும். ஆடம்பர கார்களுக்கு பொருத்தமான ஆட்-ஆன்ஸும் அவசியம்.
அதன் விலையுயர்ந்த பாகங்களை ரிப்பேர் செய்தல்/ரீப்ளேஸ் செய்தல் ஆகியவற்றுக்கு முழு வேல்யூவையும் கிளைம் செய்ய நீங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் பெறலாம். திருட்டு அல்லது மொத்த இழப்பு ஏற்பட்டால் உங்கள் காரின் ஒரிஜினல் இன்வாய்ஸ் வேல்யூவைப் பெறுவதை உறுதி செய்வதால் ஆடம்பர கார்களுக்கு ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் பயனுள்ளதாக இருக்கும்.
என்ஜின் புரட்டெக்ஷன் கவர் ஆடம்பர காருக்கு அவசியம், ஏனெனில் இது காரின் விலையுயர்ந்த அங்கமாகும், மேலும் இந்த கவர் அனைத்து என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ரிப்பேர்களிலிருந்தும் உங்களுக்கு கவர் செய்யும். மேலும், லூப்ரிகன்ட்ஸ், ஆயில்ஸ், நட்ஸ், போல்ட்ஸ், ஸ்க்ரூஸ், வாஸர்ஸ், கிரீஸ் போன்றவற்றின் ரீப்ளேஸ்மென்ட் காஸ்டை ஈடுசெய்ய கன்ஸ்யூமபிள் கவரை பெறுவது நல்லது.
கேஸ் 2: நீங்கள் தினமும் ஓட்டும் கார் வாங்கி 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் - உங்களிடம் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட கார் இருந்தால் பெரும்பாலான கார் உரிமையாளர்கள் கார் இன்சூரன்ஸ் முக்கியத்துவத்தை புறக்கணிக்க முனைகிறார்கள்; இருப்பினும், குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் வைத்திருப்பது சட்டரீதியில் கட்டாயமாகும். உங்கள் கார் ஏற்கனவே 7 ஆண்டுகள் பழமையானது என்பதால், விபத்துகள், திருட்டு, தீ விபத்து, இயற்கை பேரழிவுகள் போன்றவற்றின் போது உங்கள் காரை ரிப்பேர் செய்ய அல்லது ரீப்ளேஸ்மென்ட் செய்வதற்கான கவரேஜைப் பெற ஓன் டேமேஜ் கவரை வைத்திருப்பது நல்லது.
மேலும், ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் போன்ற ஆட்-ஆன்களுடன் காம்ப்ரிஹென்சிவ் கவர் பெறுவது உங்கள் கார் பிரேக் டவுன் ஆனால், டயர் பஞ்சர் ஆகி இருந்தால் அல்லது டோயிங் தேவைப்பட்டால் நீண்ட சாலை பயணங்களில் உங்களைப் பாதுகாக்கும்.
கேஸ் 3: எப்போதாவது ஓட்டும் உங்கள் தாத்தாவின் காரை நீங்கள் பாதுகாத்து வைத்திருந்தால் - குடும்பத்தில் எமோஷனல் வேல்யூக்காகவே இதுபோன்ற காரை வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் இதை ஓட்ட மாட்டார்கள், ஆனாலும் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கவரேஜ் பாலிசி மூலம் இந்தக் காருக்கும் நீங்கள் இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். நீங்கள் அந்த காரை ஓட்டவில்லை என்பதால், மற்ற ஆட்-ஆன்ஸ் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
உங்கள் காருக்கு சரியான கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் கீழ்க்கண்டவற்றை கவனிக்க வேண்டும்:
ஐடிவி என்பது, உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது முழுமையாக சேதப்படுத்தப்பட்டாலோ, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச தொகையை குறிக்கிறது.
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவும், உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இதன் பொருள் என்னவென்றால், உங்கள் ஐடிவி அதிகமாக இருக்கும் போது, உங்கள் கார் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும் - மற்றும் உங்கள் வாகனம் பழையதாகி அதன் ஐடிவி மதிப்பு குறையும் போது, உங்கள் பிரீமியம் தொகையும் குறைகிறது.
மேலும், உங்கள் காரை நீங்கள் விற்பதற்கு முடிவு செய்யும் போது, ஐடிவி அதிகமாக இருக்கும் பட்சத்தில், உங்கள் காருக்கு அதிக விலை கிடைக்கும். காரின் பயன்பாடு, முந்தைய கார் இன்சூரன்ஸ் கிளைம் அனுபவம் போன்ற பிற காரணிகளால் கூட அதன் விலை பாதிக்கக் கூடும்.
எனவே, உங்கள் காருக்கு சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யும் போது, பிரீமியம் தொகை மட்டுமின்றி, உங்கள் காருக்கு வழங்கப்படும் ஐடிவி-யையும் கவனிப்பதற்கு தவறாதீர்கள்.
ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு வழங்குகின்ற பிரீமியம் தொகை குறைவாக இருக்கிறதென்றால், அந்நிறுவனம் வழங்கும் ஐடிவி தொகை குறைவானதாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஒரு வேளை உங்கள் கார் முழுமையாக சேதமடையும் பட்சத்தில், அதிக ஐடிவி இருப்பது உங்களுக்கு அதிக இழப்பீட்டினை பெற்றுத் தரும்.
காரை விற்பதற்கு எண்ணும் போது, உங்கள் ஐடிவி தான் உங்கள் காரின் சந்தை மதிப்பை குறிப்பதாக அமைகிறது. எனினும், உங்கள் காரை நல்ல முறையில் பராமரித்திருக்கும் பட்சத்தில், அது புதியது போலவே பளிச்சென்று இருந்தால், உங்கள் ஐடிவி மதிப்பினை விடவும் உங்கள் காருக்கு அதிக விலையினை நீங்கள் தீர்மானிக்கலாம்.
முடிவில், உங்கள் காரை நீங்கள் எந்த அளவிற்கு நேசித்திருக்கிறீர்கள் என்பதை இவையெல்லாம் காட்டும்.
கார் இன்சூரன்ஸில் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
என்சிபி-யின் (நோ கிளைம் போனஸ்) பொருள் வரையறை: என்சிபி என்பது பாலிசிதாரருக்கு கிளைம் பெறாத பாலிசி காலத்தின் போது பிரீமியத்தின் மீது வழங்கப்படும் தள்ளுபடியை குறிக்கிறது.
நோ கிளைம் போனஸ் என்பது 20-50% வரை தள்ளுபடி வழங்குகிறது. இது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை பயன்படுத்தி நீங்கள் கார் விபத்திற்கான எந்தவொரு கிளைம்களையும் செய்திருக்காத பட்சத்தில், உங்கள் பாலிசி காலத்தின் இறுதியில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
இதன் பொருள், உங்களுடைய முதல் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு நோ கிளைம் போனஸ் கிடைக்காது - உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது தான் இது உங்களுக்குக் கிடைக்கப்பெறும். கிளைம் செய்யாத ஒவ்வொரு வருடத்திற்கு பிறகும், உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் சமயத்தில் உங்கள் நோ கிளைம் போனஸ் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், முதல் வருடத்தில் எந்தவொரு கிளைமும் செய்திருக்காத பட்சத்தில் உங்களுக்கு 20% என்சிபி கிடைக்கப்பெறும். ஒவ்வொரு கிளைம் செய்யாத வருடங்களிலும் இந்த சதவிகிதம் உயரும், 5 வருடங்களுக்கு பிறகு 50% ஆகும் - பிறகு நீங்கள் கிளைம் செய்யும் போது ஜீரோவிற்கு சென்று விடும்.
5-ஆம் வருடத்தில் 50%-ஐ அடைந்ததும், உங்கள் என்சிபி சதவிகிதம் உயர்வது நிற்கிறது, பின்பு அப்படியே இருக்கிறது. இது நோ கிளைம் போனஸ் சன்செட் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது.
காரைப் பொறுத்து என்றில்லாமல், நோ கிளைம் போனஸ் என்பது கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரரையே சேருகிறது. அதாவது, நீங்கள் உங்கள் காருக்கு பதிலாக வேறு காரை மாற்றி விட்டாலும் கூட, உங்கள் என்சிபி உங்களுடனே இருக்கும்.
நீங்கள் புது கார் வாங்க முற்படும் போது, உங்களுக்கு புது கார் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படும். ஆனாலும் கூட, உங்கள் பழைய கார் அல்லது பாலிசியில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள என்சிபி-யின் நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
கார் இன்சூரன்ஸில் என்சிபி-ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
பம்பர்-பம்பர் அல்லது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் அல்லது பார்ட்ஸ் டிப்ரிஸியேஷன் கவர், 5 வருடங்களுக்கு குறைவாக பயன்படுத்திய கார்களுக்கு பொருந்தும். எல்லா பொருள்களையும் போலவே, காலப்போக்கில் பம்பர் அல்லது வேறு ஏதேனும் மெட்டல் அல்லது ஃபைபர் கிளாஸ் பாகங்கள் உள்ளிட்ட உங்கள் காரின் சில பாகங்களின் மதிப்பு குறையும்.
எனவே, சேதமேற்படும் போது, கிளைம் தொகையிலிருந்து டிப்ரிஸியேஷன் தொகை கழிக்கப்படுவதால், பாகங்களை மாற்றுவதற்கான இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த ஆட்-ஆனை வாங்குவதால், டிப்ரிஸியேஷன் தொகை கழிக்கப்படாது. மேலும் ரிப்பேர் செய்வதற்கு அல்லது பாகங்களை மாற்றுவதற்கான முழு தொகையும் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கார் ஓரளவிற்கு சேதமடைந்திருக்கும் போது, டிப்ரிஸியேஷனுக்கு கணக்கிடப்பட்டிருக்கும் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை, உங்கள் இன்சூரரே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.
மேலும் தெரிந்து கொள்ளவும்:
நீங்கள் டிஜிட்-இன் அங்கீகரிக்கப்பட்ட ரிப்பேர் சென்டரில் உங்கள் காரை ரிப்பேர் செய்ய தேர்வு செய்தால், உங்கள் காரினை ரிப்பேர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட கிளைம் தொகையை நாங்கள் நேரடியாக ரிப்பேர் சென்டரிலேயே செலுத்தி விடுவோம். இது தான் கேஷ்லெஸ் கிளைம்.
கம்பல்சரி எக்ஸெஸ்/டிடக்டபிள் போன்ற டிடக்டபிள்ஸ் (கழிப்புத்தொகை) ஏதேனும் இருப்பின், அல்லது உங்கள் இன்சூரன்ஸால் பாதுகாப்பளிக்கப்படாத ரிப்பேர் செலவுகள் அல்லது டிப்ரிஸியேஷன் கட்டணங்கள் போன்றவை இருப்பினும், இவற்றையெல்லாம் இன்சூர் செய்யப்பட்ட நபரின் சொந்த செலவில் தான் செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் குறித்து நீங்கள் நன்கு புரிந்து கொள்வதற்கும், அதனை தனிப்பயனாக்குவதற்கும் சௌகரியமாக, கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் சுயமாகவே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பினை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை முடிவு செய்வது எது? நீங்கள் இதனை உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரிலும் பார்க்கலாம். உங்கள் பிரீமியத்தினை பாதிக்கின்ற காரணிகளுள் சில:
கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பற்றி உங்கள் கார் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான விவரங்களை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
உங்கள் ஐடிவி-ஐ(IDV) சரிபார்க்கவும் - மலிவான கார் இன்சூரன்ஸ் தோராய மதிப்பீடுகளை கொண்டிருப்பவையின் ஐடிவி (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது உங்கள் காரின் சந்தை மதிப்பு குறைவாக இருக்கும். இது குறைவாக இருக்கும் பட்சத்தில், கிளைம் செய்யும் சமயத்தில், குறிப்பாக உங்கள் கார் திருடு போகும் சமயத்தில் மற்றும் முழுதாக சேதமடைந்திருக்கும் சமயத்திலும், நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்! எனவே இதன் சரியான மதிப்பை தீர்மானிப்பது மிக முக்கியம். ஆன்லைனில் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது இதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினை டிஜிட் வழங்குகிறது.
சர்வீஸ் பெனிஃபிட்களை சரிபார்க்கவும் - விற்பனைக்கு பின்னர் வழங்கும் சேவைகளை நல்லபடியாக வழங்கும் நிறுவனத்தினை தேர்வு செய்யவும். டிஜிட் வழங்கும் சேவைகளுள் சில - 6 மாத வாரண்டியுடன் வீட்டு வாசலிலேயே வண்டியை பிக்-அப் செய்து, ரிப்பேர் செய்தவுடன், டிராப் செய்யும் வசதி, 24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை, 6000+ கேரேஜ்களில் கேஷ்லெஸ், மற்றும் பல.
இன்சூரர் கிளைம்களை செட்டில் செய்யும் வேகம் - நீங்கள் கிளைமிற்காகவே இன்சூரன்ஸை வாங்குகிறீர்கள், எனவே இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றுவதற்கு முன் இதனை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும். டிஜிட் கிளைம்களில் 90.4% கிளைம்கள் வெறும் 30 நாட்களுக்குள்ளாகவே செட்டில் செய்யப்பட்டு விடும். எங்கள் கிளைம்கள் விரைவானது மற்றும் இடைஞ்சலற்றது என்பது இதன் பொருள். மேலும் நாங்கள் ஜீரோ ஹார்டுகாப்பி பாலிசியை பின்பற்றுகிறோம், அதாவது நாங்கள் மென் நகல்களை மட்டுமே கேட்கிறோம், முழுமையாக ஆவணங்களற்ற கிளைம்கள்!
சிறந்த மதிப்பு - சர்வீஸில் நீங்கள் திருப்தியடைந்து, ஐடிவி சரியாக இருக்கும் பட்சத்தில், பிரீமியம் தொகை மற்றும் நீங்கள் பெறும் தள்ளுபடியை சரிபார்க்கவும்.
கார் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை(quotes) ஒப்பிட்டுப் பார்ப்பதின் சரியான வழியை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன் கார் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்ல விஷயமாகும். ஆனால் அவற்றை கீழ்க்கண்ட அலகுகளை கொண்டு ஒப்பிட்டுப் பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தங்களின் கார் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, பொதுவாகவே மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
குறைவான பிரீமியம்
ஆனால் உங்கள் கார் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, நீங்கள் உண்மையில் பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
உங்கள் பழைய கார் இன்சூரன்ஸ் பாலிசி எங்களிடம் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட, கார் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கு டிஜிட்-ஐ தேர்வு செய்வது எளிமையானது, இடைஞ்சலற்றது. மேலும் ஆன்லைனில் சில நிமிடங்களிலேயே இதனை செய்து விடலாம்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை முதல் முறையாக எங்களிடம் புதுப்பிக்க இருக்கிறீர்களா? கீழ்க்கண்ட சில பெனிஃபிட்களை நீங்கள் எங்களிடம் எதிர்பார்க்கலாம்:
கெடுவாய்ப்பாக, கார் இன்சூரன்ஸ் எடுப்பது போன்ற சுவாரசியமற்ற விஷயங்கள் வரும் போது, இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தினால் எந்தவொரு பின்விளைவுகளும் ஏற்பட்டிருக்காத பட்சத்தில், மக்கள் அதனை புறக்கணிப்பார்கள் அல்லது மறந்து விடுவார்கள்.
எனினும், இந்த வழிகாட்டுதல்கள் உங்களையும் என்னையும் போன்ற மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு வழங்கப்படுகிறது.
உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்; தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் எடுப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்படவில்லையென்றால் என்ன ஆகும்? இப்பேற்பட்ட சூழ்நிலையில், பெரும்பாலான மக்களிடம் இன்சூரன்ஸ் இருக்காது. விபத்து ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட இரு தரப்பு நபர்களும் அநாவசியமான வாக்குவாதங்களில் ஈடுபடுவார்கள், மேலும் ஏகப்பட்ட செலவுகளும் ஆகும்!
எனவே, கார் இன்சூரன்ஸ் வாங்குவதின் முதன்மையான நோக்கம் விபத்து அல்லது ஆபத்துக் காலங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினை பாதுகாப்பது தான் என்ற போதிலும், இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.
சாலை விபத்துகளின் அதிகரிப்பு : இந்தியாவில் சாலை விபத்துகள் மிக அதிகரித்திருக்கிறது, மோட்டார் வாகனச் சட்டப்படி கார் இன்சூரன்ஸ் எடுப்பதை கட்டாயமாக்கியிருப்பதன் முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று. 2017-ஆம் ஆண்டில், சாலை விபத்துகளின் காரணமாக தினசரி 1200 பேர்களுக்கும் மேல் காயமடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது! கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது இது போன்ற சூழ்நிலையில் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது.
தேர்டு-பார்ட்டியினரை பாதுகாக்கிறது : நீங்கள் ஒருவரது வண்டியை இடித்து விட்டாலும் அல்லது உங்களுடைய பிரியமான காரை வேறு ஒரு கார் இடித்து விட்டாலும், குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது பாதிக்கப்பட்ட தேர்டு-பார்ட்டி அவர்தம் காருக்கு ஏற்பட்ட சேதங்கள் அல்லது தனிப்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதை உறுதிப்படுத்தும்.
சட்ட நடைமுறைகளை எளிதாக்குகிறது : ஒரு விபத்து நிகழும் போது, ஏற்பட்ட சேதங்களை காட்டிலும் - சட்ட நடைமுறை தான் ஒருவரின் நேரத்தையும், ஆற்றலையும் விரயமாக்குகின்றது. எனினும், உங்களிடம் செல்லத்தக்க கார் இன்சூரன்ஸ் இருக்கும் பட்சத்தில், சட்ட நடைமுறைகளும் கூட இன்சூரன்ஸ் மூலம் பார்த்துக் கொள்ளப்படும்.
இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்
உங்கள் எலக்ட்ரிசிட்டி பில்-ஐ பதிவு செய்யப்பட்ட மையத்தில் கடைசியாக எப்போது நேரில் சென்று கட்டினீர்கள் அல்லது, உங்கள் அருகிலுள்ள பலசரக்கு கடையில் கடைசியாக எப்போது உங்கள் மொபைல்-ஐ ரீசார்ஜ் செய்து கொண்டீர்கள்? இதற்கெல்லாம் நேரில் சென்று சில காலம் ஆகி விட்டதல்லவா?
இன்டர்நெட் வசதிக்கு நன்றி, நம்மில் பெரும்பாலானோர் பல காரியங்களுக்கு இன்டர்நெட்டையே பயன்படுத்துகின்றனர். பில்களை கட்டுவதற்கு, ரீசார்ஜ் செய்வதற்கு, இப்போது மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு கூட பயன்படுத்துகின்றனர்! இயல்பாகவே, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக நாம் கார் இன்சூரன்ஸ் வாங்க வேண்டுமானால், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளையோ அல்லது டீலர்களையோ நேரில் சென்று சந்திக்க வேண்டியதில்லை.
இப்போது, நீங்கள் ஆன்லைனிலேயே உங்கள் கார் இன்சூரன்ஸை எளிதாக வாங்கி விடலாம். அடிப்படையான உங்கள் கார் பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் பிரீமியத்தை செலுத்துவதற்கு உங்களுடைய டெபிட்/கிரெடிட் கார்டு மட்டுமே தேவைப்படும், அவ்வளவு தான், சில நிமிடங்களிலேயே உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பப்படும்.
நீங்கள் புத்தம் புதிய காரை வாங்கியிருந்தாலும் அல்லது செகண்ட்-ஹேண்ட் காரை வாங்கியிருந்தாலும், நீங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை உங்கள் காருக்கு வாங்கிக் கொள்ளலாம்.
எனினும், நீங்கள் செகண்ட்-ஹேண்ட் கார் வாங்கும் போது, அதன் உரிமையாளர் ஏற்கனவே செல்லத்தக்க கார் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறாரா இல்லையா என்பதை சரிபார்க்கவும், மேலும் அதனை கார் வாங்கிய 14 நாட்களுக்குள் உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளவும். கூடுதலாக, உங்கள் செகண்ட்-ஹேண்ட் காரை இன்சூர் செய்யும் போது, கீழ்க்கண்டவற்றையும் உறுதி செய்து கொள்ளவும்:
செகண்ட்-ஹேண்ட் கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்
நீங்கள் பழைய, செகண்ட்-ஹேண்ட் காரை வாங்கியிருக்கும் பட்சத்தில், உங்கள் தற்போதைய காருக்கு இன்னும் கார் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தீர்களானால், நீங்கள் உடனடியாக எங்கள் வலைதளத்தில் உங்கள் காரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
எனினும், உங்கள் பழைய காருக்கு ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன்பு, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
காரின் பயன்பாடு மற்றும் இன்சூரன்ஸின் வகை - இரண்டு வகையான கார் இன்சூரன்ஸ்கள் உள்ளன, தேர்டு-பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் ஆகியன. நாங்கள் பொதுவாகவே அதிகபட்ச நன்மைகளை பெறும் பொருட்டு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை வாங்குவதற்கு பரிந்துரைத்தாலும், நீங்கள் காரை அதிகமாக பயன்படுத்த போவதில்லையென்றாலோ அல்லது சிறிது காலத்திற்கு தான் பயன்படுத்த போகிறீர்கள் என்றாலோ, நீங்கள் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸை வாங்கிக் கொள்ளலாம். இந்த சூழ்நிலையில், குறைந்தபட்சம் உங்கள் காரின் சட்டபூர்வமான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதால், தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் வாங்கிக் கொள்வது சரியானதாகும்.
ஐடிவி (IDV/இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ) - ஐடிவி, அதாவது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது உங்கள் காரின் சந்தை மதிப்பாகும். உங்கள் கார் பழையதாக இருப்பதால், அதன் வயதினை பொறுத்து காலப்போக்கில் ஏற்படும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) காரணமாக, அதன் ஐடிவி-யும் குறைவாகவே இருக்கும் (நீங்கள் ஆன்லைனில் கார் இன்சூரன்ஸை வாங்கும் போது எங்கள் வலைதளத்தில் அதற்கேற்றவாறு தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்). இந்த ஐடிவி-யானது உங்கள் பிரீமியத்தையும், இன்சூர் செய்யப்பட்ட தொகையையும் நேரடியாக பாதிக்கிறது. பிரீமியம் குறைவாக இருக்கும் போது, கிளைம் செய்யும் சமயத்தில் இன்சூர் செய்யப்பட்ட தொகையும் குறைவாகவே இருக்கும்.
ஆட்-ஆன்கள் - ஆன்லைனில் உங்கள் பழைய காருக்கு நீங்கள் கார் இன்சூரன்ஸ் வாங்கும் போது, நீங்கள் ஆட்-ஆன்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆயினும், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ்/ஸ்டாண்டர்ட் கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது தான் இது பொருந்தும். இவை உங்களுக்கும், உங்கள் காருக்கும் அதிகபட்ச காப்புறுதிப் பாதுகாப்பினையும், டயர் புரொட்டெக்ட், கியர்பாக்ஸ் மற்றும் என்ஜின் புரொட்டெக்ஷன், ரிடர்ன் டூ இன்வாய்ஸ் போன்ற பெனிஃபிட்களையும் பெறுவதற்கு உதவும். எனினும், நீங்கள் பழைய காருக்கு கார் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு திட்டமிட்டிருப்பதால், எந்தெந்த ஆட்-ஆன்கள் உங்கள் பழைய காருக்குக் கிடைக்கும் என்பதை சரிபார்க்கவும். உதாரணத்திற்கு, உங்கள் கார் 5 வருடங்களுக்கு மேற்பட்டதாயிருந்தால், ஜீரோ டிப்ரிஸியேஷன் அல்லது பம்பர் டூ பம்பர் கவர் உங்கள் காருக்கு கிடைக்காது.
ஆன்லைனில் பழைய காருக்கான இன்சூரன்ஸ் பெறுவது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்.
உங்கள் காலாவதியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிப்பது ஏன் முக்கியமாக கருதப்படுகிறது?
ஆன்லைனில் காலாவதியான கார் இன்சூரன்ஸை புதுப்பிப்பது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்.
நீங்கள் கார் இன்சூரன்ஸ் வாங்குவதாக இருந்தாலும், புதுப்பிப்பதாக இருந்தாலும் அது குறித்த பல கேள்விகள் உங்கள் மனதில் எழுவது இயல்பானது தான். உங்கள் கேள்விக்கான பதில்களை தெரிந்துகொள்ள கீழே ஸ்க்ரோல் செய்யவும்!
மற்ற முக்கியமான கட்டுரைகள்