ஆன்லைனில் உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ்-ஐ வாங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன்பு , பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது சிறந்த பழக்கம் ஆகும். இதன் மூலம் வெவ்வேறு மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்களைக் (addon) கொண்ட வெவ்வேறு திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதனால் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் ஏற்படும் மாற்றத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
சரியான மாற்றங்களைச் செய்து, இறுதியில் வரும் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பார்த்த பின் உங்களுக்கான சரியான மோட்டார் இன்சூரன்ஸ்-ஐ தேர்ந்தெடுங்கள்.
கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் அல்லது பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் பயன்படுத்தி உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பிரீமியமியத்தை கணக்கிடுங்கள்
உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானிக்கும் அளவுருக்கள்
இரண்டு வாகனத்தின் இன்சூரன்ஸ்களும் ஒரே மாதிரியாக இருக்காது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி வகை (தேர்டு பார்ட்டி மற்றும் ஸ்டாண்டர்ட்/ காம்பிரிஹென்சிவ் (முழுமையான)), உங்கள் வாகனத்தின் தயாரிப்பு மற்றும் மாதிரி (மாடல்), உங்கள் வாகனத்தின் சந்தை மதிப்பு (/ மார்க்கெட் வேல்யூ), நீங்கள் வசிக்கும் நகரம், உங்கள் இஞ்சினின் குணங்கள் (/இயல்புகள்) , உங்கள் வாகனத்தின் பயன்பாடு (தனிநபர்/வணிகம்), மற்றும் உங்கள் வாகனம் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி(CNG)ல் இயங்குகிறதா போன்ற பல காரணிகளின் அடிப்படையில் உங்கள் இன்சூரன்ஸின் பிரீமியமானது வேறுபடும்.
உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்
மலிவான பிரீமியத்தில் பாலிசி என்பது பலரின் கவனத்தை இழுக்கும். உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்யும் போது உங்கள் ஐடிவி (IDV)-ஐ தவறாகக் குறிப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக தேர்டு பார்ட்டி பாலிசி-ஐ மட்டும் வாங்கிவிடாதீர்கள்.
உங்களுக்கோ அல்லது உங்கள் வாகனத்திற்கோ எந்த வித ஆபத்தும் இல்லாமல், உங்கள் பிரீமியத்தைக் குறைப்பதற்கான வழிகள் இதோ:
- போனஸ்-ஐ மாற்றலாம்: ஆட்டோ இன்சூரன்ஸ் என்பது வாகனத்தின் உரிமையாளருடன் தொடர்புடையதே தவிர அந்த வாகனத்தோடு தொடர்புடையதல்ல. நீங்கள் இதற்கு முன் மோட்டார் இன்சூரன்ஸ் வைத்திருந்தால், உங்கள் போனஸ்-ஐ புதிய காருக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
- உங்கள் என்சிபி (NCB)-ஐ பயன்படுத்துங்கள்: குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் எவ்வித கிளைமும் செய்யாதிருந்தால், நீங்கள் என்சிபி (NCB) – நோ கிளைம் போனஸ்-ஐ பெறுவீர்கள். இதனால் அடுத்தமுறை நீங்கள், உங்கள் பாலிசி-ஐ ஆன்லைனில் புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம். எனவே, நீங்கள் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுகிறீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சிறு சேதங்களுக்காக கிளைம் செய்வதை தவிர்த்திடுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் அதிகமான தொகையை சேமித்திடலாம்!
- மட்டான டிடக்டபில் தொகையை முடிவு செய்யுங்கள்: எந்தவொரு வெஹிக்கில் இன்சூரன்ஸிலும், கிளைம் செய்யும் போது நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு தொகையின் பெயரே டிடக்டபில் ஆகும். எனவே, உங்கள் டிடக்டபில்-ஐ தேர்ந்தெடுக்கும்போது அதை பூஜ்ஜியமாகவோ (/ 0அகவோ) அல்லது மிகக் குறைவான தொகையையோ தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, உங்களால் செலுத்தக்கூடிய தொகையைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் டிடக்டபில் அதிகமாக இருந்தால், உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியமும் குறையும். நீங்கள் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுபவராக இருந்தால் மற்றும் சிறிது காலத்திற்கு எந்த கிளைமும் செய்யாமல் இருந்தால், இதன் மூலம் நீங்கள் சிறந்த பலனை அடையலாம்.