பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்க்கவும்

usp icon

Cashless Garages

For Repair

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike
background-illustration

ஏன் டூ வீலர் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

நீங்கள் ஏன் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட வேண்டும்?

இன்சூரர்களின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்கவும்

இன்சூரன்ஸ் நிறுவனங்களை அவைதம் நம்பகத்தன்மையை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றை தரவரிசைப்படுத்தலாம். மக்களின் மதிப்புரைகளை நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம், அதனை வைத்து எந்தெந்த நிறுவனங்கள் தம் சேவைகளில் சிறப்பாக விளங்குகிறதென்பதையும், கிளைம்களை செட்டில் செய்வதில் எது சிறந்து விளங்குகிறதென்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் நல்லதொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தினை தேர்ந்தெடுப்பது சுலபமானது.

உங்கள் பாலிசியின் விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும்

நீங்களாகவே பாலிசியை குறித்து புரிந்து கொண்ட பிறகு, எந்தவொரு  நிபுணரையோ அல்லது இன்சூரன்ஸ் முகவரையோ நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பாலிசியில் காப்புறுதி வழங்கப்பட்டிருப்பவை பற்றியும், வழங்கப்படாதவை குறித்தும் நீங்களே முழுமையாக தெரிந்து கொண்ட பின், பாரபட்சமில்லாத முடிவுகளை நீங்களே சுயமாக எடுக்கலாம். பல இன்சூரர்களின் பாலிசிக்களை ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் இது சாத்தியப்படும்.

கிளைம் நடைமுறையின் ஒத்தியல்பு குறித்து கவனமாக இருக்கவும்

பல்வேறு பாலிசிக்களை சரியான முறையில் ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்ப்பதின் மூலமாக, நீங்கள் உச்ச இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கிளைம் நடைமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். கிளைம் கோரிக்கையை நீங்கள் எழுப்பிய பின்னர் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். பின்னர் உங்களுக்கு ஏற்றதாயிருக்கிற ஒரு பாலிசியை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 

கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் பாலிசியை கண்டறியவும்

இந்தியாவில் உச்ச இன்சூரன்ஸ் நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் பாலிசிக்களை நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம். பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பாலிசிக்களுக்கு பெறும் பிரீமியம் தொகையினை ஆய்வு செய்து பார்ப்பது, நீங்கள் சரியான முடிவினை எடுத்து, உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும்.

சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறவும்

சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய பைக் இன்சூரன்ஸ் பிளான்களுக்கு நல்ல தள்ளுபடிகளை வழங்குவார்கள், நீங்கள் ஒரு வேளை மேற்சொன்ன முறையில் ஆய்வும், ஒப்பீடும் செய்து பார்க்கவில்லையென்றால் அதனை இழக்க நேரிடும். நீங்கள் நிச்சயமாக தள்ளுபடிகளை இழக்க விரும்ப மாட்டீர்கள்!

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிடும் போது நீங்கள் பரிசீலிக்க வேண்டிய காரணிகள்

டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பது?

ஆன்லைனில் டூ வீலர் இன்சூரன்ஸினை ஒப்பிடவும்

ஆஃப்லைனில் டூ வீலர் இன்சூரன்ஸினை ஒப்பிடவும்

உங்கள் வீட்டிலிருந்தபடியே, உங்கள் லேப்டாப்பில், பாலிசிக்களை ஒப்பிடுகின்ற வலைதளங்களில் லாக்-இன் செய்து பாருங்கள்.

உங்கள் ஏரியாவிலுள்ள ஒரு பிரபலமான, சுயேச்சை இன்சூரன்ஸ் முகவரை சந்திக்கவும். அவர் மூலம் கட்டுப்படியாகும் தரகு கட்டணத்திற்கு சரியான பாலிசிக்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் பைக்கின் விபரங்களை சுயமாகவே நீங்கள் பூர்த்தி செய்யவும். விவரக் குறிப்பீடுகள், ஐடிவி, ஆட்-ஆன்கள் போன்றவற்றை அவசியமேற்பட்டால் உள்ளிடவும்.

உங்கள் பைக் பற்றிய அனைத்து விபரங்களையும் முகவருக்குத் தெரிவிக்கவும், அப்போது தான் அவர் உங்களுக்கு ஏற்ற பாலிசிக்களை தேர்வு செய்து உங்களுக்கு உதவ முடியும்.

நியூ ஏஜ் ஃபின்டெக் நிறுவனங்களானது, நீங்கள் குறிப்பிட்ட தகவல்களுக்கு ஏற்றவாறு பாலிசிக்கள் மற்றும் அதன் விலைகளின் அட்டவணையிடப்பட்ட பட்டியலையும் காண்பிக்கின்றன.

தரகர் தன் ஆய்வை செய்த பிறகு வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து பல தோராய மதிப்பீடுகளை(quotes) காண்பிப்பார்.

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிடுவதின் நன்மைகள்

நேரத்தை மிச்சப்படுத்துகிறது

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பது சௌகரியமானது என்பது தான் முதன்மையான நன்மையாகும். உங்கள் விபரங்களை தயாராக வைத்துக் கொண்டு, நீங்கள் ஆன்லைனில் இலவசமாக தோராய மதிப்பீடுகளை(quotes) பெறலாம், பின்னர் வெவ்வேறு பாலிசிக்களை ஒப்பீடு செய்து பார்க்கலாம். இது நிச்சயமாக உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும்.

எளிமையான நடைமுறை

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பின்பற்றும் நடைமுறை எளிதானது. உங்களுக்கு வசதியான நேரத்தில் நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம். ஏனென்றால் ஆன்லைனில் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பது, நீங்கள் பாலிசியை உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப தேர்வு செய்து கொள்வதற்கான முழு சுதந்திரத்தையும் கொடுக்கிறது.

இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான தேவைகள் இருக்கும். பிரீமியம் கால்குலேட்டர் போன்ற டூல்களை பயன்படுத்தி ஆன்லைனில் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது மிகவும் சுலபமாகும். நீங்கள் விரும்பினால், நள்ளிரவு 2 மணிக்கு கூட உங்கள் பிரீமியம் தொகையை நீங்கள் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

சுலபமான மற்றும் அன்இன்ஃப்ளூயன்ஸ் செய்யமுடியாத முடிவு

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பது, இன்சூரன்ஸ் தரகரை நேரடியாக சந்திப்பதை விடவும் உங்களுக்கு நிறைய விருப்பத் தேர்வுகளை அளிக்கும். சரியான காப்புறுதியை தேர்வு செய்வதே அதி முக்கியமானது, உங்கள் பாலிசிக்கு ஏற்ற வெவ்வேறு ஆட்-ஆன்களை தேர்வு செய்து உங்கள் பாலிசியோடு பொருத்துவதற்கு இணைய வழியே சிறந்த வழியாகும்.

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை - ஏகப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பின்னணி குறித்து ஆய்வு செய்வதற்கு சிறிது நேரம் ஒதுக்குவது கட்டாயமாகும். ஆன்லைனில் மதிப்புரைகளை நீங்கள் பார்க்கலாம், அதே சமயத்தில் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மெண்ட் விகிதத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

  • நீங்கள் செலுத்தக் கூடிய தொகை - இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்களின் மூலம் நீங்கள் காப்புறுதி வாங்குவதற்கு செலுத்த வேண்டிய தொகையை குறித்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, பொத்தானை அழுத்தியவுடன், உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையானது வந்து விடும். ஆட்-ஆன்களின் விலையை பார்க்கவும், ஏற்படக் கூடிய அபாயங்களை யோசித்துப் பார்த்து அவற்றின் விலை சரி தானா என்று ஆய்வு செய்யவும்.

  • உங்கள் தேவைகள் குறித்த தெளிவு - பாலிசி வாங்குபவராக, பைக் இன்சூரன்ஸ் வாங்கும் போது உங்களுக்கு எந்த மாதிரியான ஆட்-ஆன்கள் தேவைப்படும் என்று முடிவு செய்வது உங்களுடைய உரிமையாகும். உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, சரியான ஆட்-ஆன்களுடன் கூடிய பாலிசியை பெறுவதற்கு தெளிவான யோசனை மிக முக்கியமானது.

  • டிடக்டிபிள்ஸ் - இது ஒரு சூதாட்டம் போன்றது, எனவே உங்கள் கார்டுகளை கவனமாக பார்த்து ஆடவும். நீங்கள் காப்புறுதி பெற விரும்பும் குறிப்பிட்ட ஆபத்துகள் குறித்து நீங்கள் மட்டுமே அறிவீர்கள். குறைந்த அபாயமுள்ள கவருக்கு அதிக தன்னிச்சையான டிடக்டிபிள்ஸை தேர்வு செயவ்தன் மூலம், உங்கள் பிரீமியம் தொகை குறையும்.