டூ வீலர் இன்சூரன்ஸ்
usp icon

Cashless Garages

For Repair

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike
background-illustration

இந்தியாவில் ஆன்லைனில் பைக்/டூ வீலர் இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்

டிஜிட்-இன் டூ வீலர் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது?

Bike-insurance-damaged

விபத்து

விபத்தின் போது ஏற்படும் பொதுவான சேதங்கள் இதில் அடங்கும்

Bike Theft

திருட்டு

எதிர்பாராதவிதமாக உங்கள் பைக் திருட்டுப்போதல்

Car Got Fire

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான சேதம் இதில் அடங்கும்

Natural Disaster

இயற்கை சீற்றங்கள்

இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் சேதங்கள் இதில் அடங்கும்

Personal Accident

தனிநபர் விபத்து

சில நேரங்களில், விபத்து நிகழும் போது, நீங்கள் மிக கடுமையாகக் காயப்பட்டிருக்கும் போது, அதனால் ஏற்படும் சேதங்கள் இதில் அடங்கும்

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

ஒருவேளை வேறு யாரோ அல்லது எதோ பொருளோ உங்கள் பைக்கினால் அடிபட்டிருந்தால்

டிஜிட் டூ வீலர் இன்சூரன்ஸுடன் கிடைக்கும் ஆட்-ஆன்(add-on) கவர்கள்

உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியுடன் நீங்கள் வாங்கக் கூடிய டூ வீலர் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள்

ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) கவர்

ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) கவர் என்பது  

உங்கள் பைக் மற்றும் அதன் பாகங்கள் பழையதானவுடன் உபயோகப்படக் கூடிய ஒரு கவராகும். பொதுவாகவே, நாம் வண்டிக்கான கிளைம் செய்யும் போது அதன் டிப்ரிஸியேஷன் தொகை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) கவரை வாங்கும் போது, டிப்ரிஸியேஷன் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதாவது கிளைம் செய்யும் போது ரிப்பேர் செலவு/பாகங்களை மாற்றுவதற்கான செலவுகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பெறும்.

ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்

உங்கள் பைக் திருட்டு போய் விட்டாலோ அல்லது ரிப்பேர் செய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்து விட்டாலோ, இந்த ஆட்-ஆன் கவர் உங்களுக்குத் துணை நிற்கும். இந்த ஆட்-ஆன் வாங்கியிருந்தால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்படும் செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் அல்லது சாலை வரி மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணங்களோடு சேர்த்து அதே போன்ற ஒரு பைக்கை வாங்கவதற்கான இழப்பீட்டுத் தொகையை நாங்கள் வழங்குவோம்.

என்ஜின் & கியர்-பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவர்

உங்கள் என்ஜினை மாற்றுவதற்கு ஏறத்தாழ அதன் விலையின் 40% அளவிற்கு செலவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஸ்டாண்டர்ட் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில், விபத்தின் போது ஏற்படும் சேதங்களுக்கு மட்டுமே காப்புறுதி வழங்கப்படுகிறது. ஆனால், விபத்திற்கு பின் ஏற்படும் பின்விளைவினால் ஏற்படக் கூடிய சேதங்களிலிருந்து உங்கள் வாகனத்தை (என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்!) பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஆட்-ஆனை நீங்கள் பயன்படுத்தலாம். இது போன்ற பாதிப்புகள் நீர் என்ஜினுக்குள் செல்வது, ஆயில் கசிவு மற்றும் வண்டியின் அடிக்கட்டில் ஏற்படும் சேதங்கள் போன்ற காரணங்களினால் ஏற்படலாம்.

கன்ஸ்யூமபில் கவர்

உங்கள் டூ-வீலருக்கான கூடுதல் பாதுகாப்புக் கவசமாக இந்த கவர் விளங்குகிறது. விபத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் என்ஜின் ஆயில், ஸ்குருக்கள், நட், போல்ட், கிரீஸ் போன்ற உங்கள் பைக்கின் பாகங்களை மாற்றுவதற்கு ஆகும் செலவுகளை இந்த கவர் வழங்குகிறது.

பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ்

பிரேக்டவுன் ஏற்படும் சமயங்களில் உங்கள் டூ-வீலருக்கும், உங்களுக்கும் சேர்த்து பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் கவர் உதவுகிறது. இதன் சிறப்பு என்ன? எங்களிடம் நீங்கள் உதவி பெறும் போது அது கிளைமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது .

டயர் புரொட்டெக்ட்

இந்த ஆட்-ஆன் கவர் ரன் பிளாட் தொழில்நுட்பத்தை கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  அதன் ஒரு பகுதியாக, சேதமடைந்த டயர்களுக்கு சமமான அல்லது நிகரான டயர்களை கொண்டு சேதமடைந்த டயர்களை வாகனத்தில் மாற்றுவதற்கான செலவு, தொழிலாளர் மற்றும் வீல் பேலன்சிங் கட்டணங்கள் திரும்பித் தரப்படும்.  இருப்பினும், ஆட்-ஆன் கவரின் கீழ் செய்யப்படும் கிளைம்களானது, வாகன காப்பீட்டுக் கொள்கையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

டெய்லி கன்வேயன்ஸ் பெனிஃபிட்

இந்த ஆட்-ஆன் கவரில், இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கப்படும் போது, பழுது பார்க்க ஆகும் கூடுதல் காலத்துக்கு உட்பட்டு உங்களின் போக்குவரத்துச் செலவு ஈடுசெய்யப்படும்.  இருப்பினும், இன்சூரன்ஸ் பாலிசியின் 'சொந்த சேதம்' பிரிவின் கீழ் விபத்து சேதத்திற்கான கிளைம் கோரப்பட்டிருந்தால் மட்டுமே இது பொருந்தும்.  பாலிசிதாரருக்கு ஏற்படும் போக்குவரத்து செலவுக்கு சமமான தொகைக்கு ஃபிக்ஸ்டு அலவன்ஸ் அல்லது டாக்ஸி ஆபரேட்டர்களிடமிருந்து கூப்பன்கள் வழங்கப்படுவது போன்ற முறைகளில் ஈடுசெய்யப்படலாம்.

எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை?

உங்களுடைய டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை என்று தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும், அப்போது தான் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு ஏதும் சங்கடங்கள் நேராது. அவ்வாறான சில சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

தேர்டு-பார்ட்டி பாலிசிதாரருக்கான தனிப்பட்ட சேதங்கள்

தேர்டு-பார்ட்டி அல்லது லையபிலிட்டி(பொறுப்பு) ஒன்லி பைக் பாலிசியில், நம் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி வழங்கப்படாது.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது அல்லது லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுவது

நீங்கள் மது அருந்தி விட்டு வண்டி ஓட்டினாலோ அல்லது செல்லத்தக்க டூ-வீலர் லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டினாலோ, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உங்கள் பைக் இன்சூரன்ஸ் காப்புறுதி வழங்காது.

செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ்தாரரின்றி வண்டி ஓட்டுவது

நீங்கள் பழகுநர் லைசென்ஸ் வைத்திருந்து, உங்கள் டூ-வீலரின் பின்புற இருக்கையில் செல்லத்தக்க லைசென்ஸ்தாரரின்றி நீங்கள் வண்டி ஓட்டியிருக்கும் பட்சத்தில், ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் உங்களுக்குக் காப்புறுதி வழங்கப்படாது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தின் காரணமாக நேரடியாக ஏற்படாத எந்தவொரு சேதங்களுக்கும் காப்புறுதி வழங்கப்படாது (உதாரணத்திற்கு, விபத்திற்கு பிறகு, சேதமடைந்த டூ-வீலரை முறையாக பயன்படுத்தாத காரணத்தால், என்ஜின் சேதமடைந்திருக்கும் பட்சத்தில், இது பின்விளைவினால் ஏற்படும் சேதமாக கருதப்படும், இதற்கு காப்புறுதி வழங்கப்பட மாட்டாது).

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள் எதுவாயினும் (உதாரணத்திற்கு, மழை வெள்ளத்தில் டூ-வீலரை ஒட்டிச் செல்வதால் ஏற்படும் சேதங்கள், தயாரிப்பாளரின் ஓட்டுநர் கையேட்டில் இது பரிந்துரைக்கப்படாததால், இதற்கு காப்புறுதி வழங்கப்படாது).

ஆட்-ஆன்களை வாங்கியிருக்காத பட்சத்தில்

சில சூழ்நிலைகளில் ஆட்-ஆன்களினால் காப்புறுதி வழங்கப்படுகிறது. நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளுக்கு காப்புறுதி வழங்கப்படாது.

டிஜிட்-இன் டூ வீலர் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

உங்கள் பைக் இன்சூரன்ஸ் மிக எளிதான கிளைம் நடைமுறையை கொண்டது மட்டுமின்றி, கேஷ்லெஸ் செட்டில்மெண்ட்-ஐ தேர்வு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

இந்தியா முழுவதிலும் நீங்கள் தேர்வு செய்வதற்கான 4400+ கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்கள்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் செல்ப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் செல்ப் இன்ஸ்பெக்ஷன் நடைமுறையின் மூலம் விரைவான, ஆவணங்களற்ற கிளைம் நடைமுறை

Super-fast Claims

அதி விரைவான கிளைம்கள்

டூ-வீலர் கிளைம்களை செட்டில் செய்வதற்கு சராசரியாக எடுத்துக் கொள்ளும் அவகாசம் 11 நாட்கள்

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி(IDV)-யை தனிப்பயனாக்கவும்

உங்கள் விருப்பப்படியே, நீங்கள் உங்களின் வாகன ஐடிவி-ஐ தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

24*7 Support

24*7 மணி நேர சேவை

தேசிய விடுமுறைகளில் கூட 24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை

பிராந்தியத்தின் அடிப்படையில், 2014 முதல் 2024 வரையிலான மதிப்பின் அடிப்படையில் டூ வீலர் இன்சூரன்ஸ் மார்க்கெட் அளவு

டிஜிட் வழங்கும் டூ வீலர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட்-இன் பெனிஃபிட்

பிரீமியம்

ரூ.714-இல் தொடங்குகிறது

நோ கிளைம் போனஸ்

50% வரை தள்ளுபடி

தனிப்பயனாக்கக்கூடிய ஆட்-ஆன்கள்

7 ஆட்-ஆன்கள் கிடைக்கப்பெறும்

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

4400+ கேரேஜ்களில் கிடைக்கப்பெறும்

கிளைம் ப்ராஸஸ்

ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் கிளைம் ப்ராஸஸ். ஆன்லைனில் 7 நிமிடங்களில் செய்து விடலாம்!

ஓன் டேமேஜ் கவர்

கிடைக்கப்பெறும்

தேர்டு-பார்ட்டியினரின் சேதங்கள்

தனிப்பட்ட சேதங்களுக்கு அன்லிமிட்டெட் லையபிலிட்டி(பொறுப்பு), சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 இலட்சம் வரை

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற டூ வீலர் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி

தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்திற்கு மட்டுமே ஏற்படக் கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டுமே காப்புறுதி அளிக்கின்ற ஒரு வகையான பைக் இன்சூரன்ஸ் ஆகும்.

காம்ப்ரிஹென்சிவ்(விரிவானது)

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி சேதங்கள் மட்டுமில்லாது உங்களுடைய சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கும் காப்புறுதி அளிக்கின்ற பைக் இன்சூரன்ஸ் ஆகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்(விரிவானது)

×
×
×
×
×
×

டூ வீலர் இன்சூரன்ஸ் கிளைமிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

எங்களுடைய டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடன் அல்லது புதுப்பித்தவுடன், நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-ஸ்டெப் கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். எந்த படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டாம்.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய-ஆய்விற்கான லிங்க் கிடைக்கப்பெறும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனிலிருந்தே படிப்படியான வழிகாட்டுதல்களின் படி உங்கள் வாகனத்தின் சேதங்களை படம் பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் வழிமுறையை தேர்வு செய்யவும், அதாவது எங்களுடைய கேரேஜ் நெட்வொர்க்-களின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட்(பணம் செலுத்தி விட்டு பின்னர் பெற்றுக் கொள்ளுதல்) அல்லது கேஷ்லெஸ் வசதியை பெறவும்.

டிஜிட்-இல் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளைம்கள் எளிதாக்கப்பட்டுள்ளன

Cashless Garages by Digit

டிஜிட்-இன் கேஷ்லெஸ் கேரேஜ்கள்

இந்தியா முழுவதிலும் 4400+ கேரேஜ்களில் கேஷ்லெஸ் ரிப்பேர் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது

ரிப்போர்ட் கார்டு

டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் இவ்வாறு யோசிப்பது சரியே!

டிஜிட்-இன் கிளைம் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

இராஜகுமார்

அருமையான சேவை. எல்லாமே டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் ஆர்சி-ஐ மாற்றிய பிறகு முந்தைய இன்சூரன்ஸிலிருந்து நான் என்னுடைய இன்சூரன்ஸை மாற்ற வேண்டியிருந்தது. இந்த மொத்த நடைமுறையுமே நேரடியாக அவர்களின் அலுவலகத்திற்கு நான் செல்ல வேண்டிய அவசியமின்றி ஆன்லைனிலேயே நடைபெற்றது. டூ-வீலர் இன்சூரன்ஸ் வாங்க விரும்பும் நபர்களுக்கு நான் கோ-டிஜிட் இன்சூரன்ஸை பரிந்துரை செய்கிறேன்.

கௌரவ் யாதவ்

டிஜிட்-டிலிருந்து டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு நல்ல அனுபவமாகும். பூனம் தேவி என்பவர் மிகவும் பணிவான முறையிலே பேசி, விரைவானதொரு சேவையை வழங்கினார். பாலிசியை கூடுமான வரையில் விரைவாக பெறுவதில் அவர் அதிக கவனம் எடுத்துக் கொண்டார்.

சந்தீப் சௌத்ரி

டிஜிட் இன்சூரன்ஸில் அருமையானதொரு அனுபவம் கிடைத்தது. அவசியமான படங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்த 5 நிமிடத்திற்குள், செட்டில்மென்ட் ஏஜெண்டிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஃபோன் காலிலேயே கிளைம் செட்டில் செய்யப்பட்டது. அடுத்த பணி  நாளிலேயே இறுதியான இன்வாய்ஸை வழங்கியவுடன் கிளைம் தொகை கிடைக்கப்பெற்றது.

Show more

டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதின் நன்மைகள்

அநாவசிய செலவுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்

உங்களுடைய பைக்கை டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் இன்சூர் செய்வதென்பது, விபத்து, இயற்கை பேரிடர், தீவிபத்து அல்லது திருட்டு போன்ற கெடுவாய்ப்பான சூழ்நிலைகளில் உங்கள் பைக்கிற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளின் பொருட்டு, நீங்கள் அநாவசியமாக செலவு செய்வதை தவிர்ப்பதற்கு உதவுகிறது.

சட்டப்பூர்வமாக காப்புறுதி பெறவும்!

மோட்டார் வாகனச் சட்டப்படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். இது இல்லாமல், நீங்கள் இந்திய சாலைகளில் வண்டி ஓட்ட முடியாது! எனவே, சட்டப்பூர்வமாக காப்புறுதி செய்யப்பட்டிருப்பது, பைக் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதின் நன்மைகளுள் ஒன்றாகும்.

அபராதம் கட்ட நேருவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

குறைந்தபட்சம் அடிப்படையான, தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் இன்றி இந்தியாவில் வண்டி ஓட்டுவது சட்ட விரோதமாகும்; தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். பைக் இன்சூரன்ஸ் இன்றி வண்டி ஓட்டி ஒரு முறை மாட்டி அபராதம் செலுத்தும் தொகையை விடவும், உங்கள் பைக்கிற்கு இன்சூரன்ஸ் வாங்கும் தொகையில் நீங்கள் அதிகம் சேமிக்கலாம்!

ஆட்-ஆன்களுடன் கூடிய பரவலான காப்புறுதிப் பாதுகாப்பினை பெறவும்

நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யும் போது, ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், கன்ஸ்யூமபில் கவர் மற்றும் டயர் புரொட்டெக்ஷன் போன்ற பயனுள்ள ஆட்-ஆன்களின் மூலம் உங்கள் பாலிசியை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். இது உங்கள் பைக்கிற்கு முழுமையான பாதுகாப்பினை பெறுவதற்கு உதவும்.

தேர்டு-பார்ட்டி பிரச்சினைகளை தவிர்க்கவும்

ஏதேனும் விபத்து சம்பவம் நிகழும் போது, மக்கள் சந்திக்கக் கூடிய பிரதான பிரச்சினைகளுள் ஒன்று, தேர்டு-பார்ட்டியினருக்கு நேரும் சேதங்கள் அல்லது இழப்புகளின் காரணமாக அவர்களுடன் ஏற்படும் தகராறு தான். பைக் இன்சூரன்ஸ் பாலிசி கையில் இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்படும் நபரும் காப்புறுதி செய்யப்பட்டிருப்பார், எனவே அதிகம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடாது!

டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் விலைகள்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் பைக்கின் என்ஜின் திறனை அடிப்படையாகக் கொண்டு வசூலிக்கப்படுகிறது. 2019-20 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான விலைகளைப் பார்ப்போம்

என்ஜின் திறன்

ரூபாயில் 2019-20க்கான பிரீமியம்

புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)

75 சிசிக்கு மிகாமல்

₹482

₹538

75 சிசிக்கு மேல் ஆனால் 150 சிசிக்கு மிகாமல்

₹752

₹714

150 சிசிக்கு மேல் ஆனால் 350சிசிக்கு மிகாமல்

₹1193

₹1366

350 சிசிக்கு மேல்

₹2323

₹2804

புதிய டூ வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (5 வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

என்ஜின் திறன்

INRஇல் 2019-20க்கான பிரீமியம்

புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)

75 சிசிக்கு மிகாமல்

₹1,045

₹2,901

75 சிசிக்கு மேல் ஆனால் 150 சிசிக்கு மிகாமல்

₹3,285

₹3,851

150சிசிக்கு மேல் ஆனால் 350சிசிக்கு மிகாமல்

₹5,453

₹7,365

350 சிசிக்கு மேல்

₹13,034

₹15,117

புதிய எலக்ட்ரிக் வாகன (EV) டூ வீலருக்கான பிரீமியங்கள் (1-வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

வாகன கிலோவாட் திறன் (KW)

INRஇல் 2019-20க்கான பிரீமியம்

புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)

3KW க்கு மிகாமல்

₹410

₹457

3KW க்கு மேல் ஆனால் 7KW க்கு மிகாமல்

₹639

₹609

7KW க்கு மேல் ஆனால் 16KW க்கு மிகாமல்

₹1,014

₹1,161

16KWக்கு மேல்

₹1,975

₹2,383

புதிய எலக்ட்ரிக் வாகன (EV) டூ வீலருக்கான பிரீமியங்கள் (5-வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

வாகன கிலோவாட் திறன் (KW)

INRஇல் 2019-20க்கான பிரீமியம்

புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)

3KW க்கு மிகாமல்

₹888

₹2,466

3KW க்கு மேல் ஆனால் 7KW க்கு மிகாமல்

₹2,792

₹3,273

7KW க்கு மேல் ஆனால் 16KW க்கு மிகாமல்

₹4,653

₹6,260

16KWக்கு மேல்

₹11,079

₹12,849

எந்த டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு சிறந்தது?

சரியான டூ வீலர் இன்சூரன்ஸை எவ்வாறு தேர்வு செய்வது?

உங்கள் ஐடிவி(IDV)-ஐ தனிப்பயனாக்கவும்

ஐடிவி என்பது உங்கள் பைக்கின் டிப்ரிஸியேஷன் (தேய்மானத் தொகை) உள்ளிட்ட அதன் சந்தை மதிப்பினை குறிக்கிறது. இந்த மதிப்பானது உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையினை பாதிக்கிறது. மேலும், கிளைம் செய்யும் சமயங்களில் நீங்கள் பெறும் இழப்பீட்டுத் தொகையினையும் இது பாதிக்கிறது. எனவே, உங்கள் ஐடிவி சரியாக கணிக்கப்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். டிஜிட்-இல், நாங்கள் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம், எனவே உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவதற்கு உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினை(quote) ஒப்பிடவும்

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் வாங்குவதின் ஒரு வசதி என்னவென்றால், நீங்கள் வெவ்வேறு பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீங்கள் இதனை ஆன்லைன் இன்சூரன்ஸ் அக்கிரிகேட்டர்களை பயன்படுத்தி செய்யலாம் அல்லது வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர் வலைதளங்களில் சென்று செய்யலாம். உங்கள் ஐடிவி, கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள், சர்வீஸ் பெனிஃபிட்கள், நம்பகத்தன்மை போன்ற முக்கிய அம்சங்களோடு, கிளைம் செட்டில்மென்ட் விகிதங்கள் மற்றும் நடைமுறைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ளவும்.

சர்வீஸ் பெனிஃபிட்கள்

நல்ல பைக் இன்சூரன்ஸ் என்பது காப்புறுதிப் பாதுகாப்பினையும், கிளைம்களையும் பற்றியது மட்டுமேயல்ல (ஆயினும், இவை தான் நமக்கு மிக அவசியம் என்பதும் உண்மை தான்!). உங்கள் சர்வீஸ் வழங்குநரிடமிருந்து நீங்கள் பெறக் கூடிய சர்வீஸ் பெனிஃபிட்களையும் கூட நீங்கள் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, டிஜிட்-இல் நாங்கள் ரோடுசைடு அசிஸ்டன்ஸ் (இது கிளைம் கணக்கில் வராது) போன்ற சர்வீஸ்களையும் உங்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலமாக உங்களுக்கு வேண்டிய போதெல்லாம் நாங்கள் உங்கள் கூடவே இருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

உங்கள் காப்புறுதிப் பாதுகாப்பினை தெரிந்து கொள்ளவும்

நல்ல பைக் இன்சூரன்ஸ் என்பது நீங்கள் விரும்பும் பல்வேறு விஷயங்களுக்கும் உங்களுக்குக் காப்புறுதி வழங்க வேண்டும். அதற்காக தான் பிரீமியம் தொகையே உள்ளது! எனவே, சரியான பைக் இன்சூரன்ஸை தேர்வு செய்யும் போது, நீங்கள் பெறப் போகும் காப்புறுதிப் பாதுகாப்பினை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதன் பிறகு, நீங்கள் செலுத்தும் தொகை அந்த பெனிஃபிட்களை பெறுவதற்கு சரியானது தானா என்பதை முடிவு செய்யவும்.

நீங்கள் அறிய வேண்டிய டூ வீலர் இன்சூரன்ஸ் சொற்கள்

சரியான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு தேர்வு செய்வது?

டிஜிட்-இல் டூ வீலர் இன்சூரன்ஸை எவ்வாறு வாங்குவது/புதுப்பிப்பது?

டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்

டூ வீலர் இன்சூரன்ஸ் வாங்குவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்