Third-party premium has changed from 1st June. Renew now
கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் என்றால் என்ன?
கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மற்ற வாகனங்கள் மத்தியில் ட்ராக்குகள், பள்ளி பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டேக்சிகள் வெஹிக்கள் போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு தேவைப்படும் தனிப்பயனாக்கப்பட்ட மோட்டார் பாலிசியே கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகும்.
இந்தியாவில், மோட்டார் வாகன சட்டத்தின் படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி கமர்ஷியல் வாகன இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவசியமாகும். எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் வண்டி ஓட்டும் போது உங்கள் ட்ரக் மோதி சாலையில் இருக்கும் இன்னொரு வாகனத்தை சேதப்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்து நிகழ்வில் உங்கள் கமர்ஷியல் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் சேதமான வாகனத்திற்கு ஏற்படும் இழப்பீடுகளை காப்பீடு செய்யும்.
கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸில் டிஜிட்டால் காப்பீடு செய்யப்படுவது யாவை?
காப்பீடு செய்யப்படாதது யாவை?
நாம் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம். உங்களுக்கு என்னவெல்லாம் காப்பீடு செய்யப்படுகிறது என்று தெரியும் போது, என்னவெல்லாம் காப்பீடு செய்யப்படவில்லை என்பதை தெரிந்துக்கொள்வதும் அவசியம். அதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் தேர்டு பார்ட்டிகளுக்கென பிரத்தேயேகமான பாலிசியானதால், எதிர்பாராதவிதமாக உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் எந்தவித சேதத்தையும் காப்பீடு செய்யாது.
ஒருவேளை கிளைமின் போது, நீங்கள் குடிபோதையில் அல்லது சரியான வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய சூழ்நிலைகளில் பிடிப்பட்டது தெரியவந்தால் காப்பீடு செய்யப்பட்ட வாகனத்திற்கான காப்பீடு உங்களுக்கு வழங்கப்படாது
ஒருவேளை நீங்கள் கற்றல் உரிமத்தை வைத்திருந்து, வேலிட் லைசன்ஸ் வைத்திருப்பவர் முன் இருக்கையில் இல்லாமல் நீங்கள் உங்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருத்தல்- மாதிரியானச் சூழ்நிலைகளில் உங்கள் கிளைம் கவர்செய்யப்படாது.
டிஜிட்டின் கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள் | டிஜிட் பயன்கள் |
---|---|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சோதனை | வரம்பற்ற லையபிலிட்டி |
தேர்டு-பர்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் | 7.5 லட்சங்கள் வரை |
தனிப்பட்ட விபத்துக்கான கவர் | ₹330 |
தீ விபத்திற்கான காப்பீடு | ஒப்புதலின் பேரில் தேர்ட் பார்ட்டி பாலிசியில் கிடைக்கிறது (டன்கள் எடைக்கு மேல் டன் அளவைக்கொண்ட வாகனகளுக்கு மட்டுமே) |
கூடுதல் கவரேஜ் | PA காப்பீடுகள், லீகல் லையபிலிட்டி கவர், மற்றும் தனிப்பட்ட விடுப்புகள், மற்றும் பல. |
சரக்குகளை எடுத்து செல்லும் வாகனங்களுக்கான பிரீமியம் - பிரைவேட் கேரியர்கள் (3 வீலர்களை தவிர)
என்ஜின் அளவுத்திறன் | பிரீமியம் விலை ( 1ஆம் June 2022 லிருந்து அமல்) |
---|---|
7500 கிலோவிற்கு மேல் இல்லை | ₹16,049 |
7500கிலோவிற்கு மேல் ஆனால் 12,000 கிலோவிற்கு உட்பட்டது | ₹27,186 |
12,000 கிலோவிற்கு மேல் ஆனால் 20,000 கிலோவிற்கு உட்பட்டது | ₹35,313 |
20,000 கிலோவிற்கு மேல் ஆனால் 40,000 கிலோவிற்கு உட்பட்டது | ₹43,950 |
40,000 கிலோவிற்கு மேல் | ₹44,242 |
விவசாய டிராக்டர்களின் தேர்டு பார்ட்டி பிரீமியம்
இன்ஜின் செயல்திறன் | பிரீமியம் விலை (1 ஜூன் 2022 முதல் அமல்) |
---|---|
6HP வரை | ₹910 |
ஆட்டோ ரிக்ஷா மற்றும் இ- ரிக்ஷாவிற்கான தேர்டு பார்ட்டி பிரீமியம்
பிரிவு | பிரீமியம் விலை (1 ஜூன் 2022 முதல் அமல்) |
---|---|
ஆட்டோ ரிக்ஷா | ₹2,539 |
இ- ரிக்ஷா | ₹1,648 |
பேருந்துகளுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம்
பிரிவு | பிரீமியம் விலை (1 ஜூன் 2022 முதல் அமல்) |
---|---|
கல்வி நிறுவனப் பேருந்து | ₹12,192 |
கல்வி நிறுவனப் பேருந்து இன்றி மற்ற பேருந்துகள் | ₹14,343 |
கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை எப்படி கிளைம் செய்வது?
- ஒருவேளை உங்கள் கமர்ஷியல் வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால், அந்த தேர்டு பார்ட்டி FIR(எப்ஐஆர்) பதிவு செய்து சார்ஜ் ஷீட்டை பெறவேண்டும்.
- ஒருவேளை ஏதேனும் இழப்பீடு டெஹ்வைப்பட்டால், நாங்கள் உங்கள் சார்பாக அதைப்பார்த்துக்கொள்வோம். எங்களை 1800-103-4448 என்ற எண்ணில் அழைக்கவும்.
- விதிமுறைகளில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாதவரை, நாங்கள், உங்கள் தரப்பில் எந்தவித செலவும் இல்லாத தீர்வை காணவே முயற்ச்சிப்போம். ஒருவேளை நீதிமன்றத்திற்கு போகும் சூழல் ஏற்பட்டால் உங்கள் சார்பாக நாங்கள் அதை பார்த்துக்கொள்வோம்.
- கமர்ஷியல் வெஹிக்களின் ஓட்டுநர் ஒரு சிறந்த குடிமகனாக இருந்து தவறை ஒப்புக்கொண்டு எந்தவிதமான தீர்விற்கு ஒப்புக்கொண்டாலும், உங்கள் டிஜிட் தேர்டு பார்ட்டி கவர் உங்களுக்கு காப்பீட்டை வழங்கும்.
- ஒருவேளை தனிப்பட்ட விபத்து சார்ந்த கிளைம் இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது எங்களை 1800-258-5956 இ என்ற எண்ணில் அழைப்பதே, மீதி அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!
கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி வெஹிக்கிள் இன்சூரன்ஸை கிளைம் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
- ஒருவேளை விபத்து ஏற்பட்டால், தேர்டு பாரதியின் சேதம் ஏற்பட்ட நேரத்தில் எப்ஐஆர்(FIR) பதிவு செய்யவேண்டும்- அதன் பிறகு, அது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை இது தவரிக்கப்பட்டால், தேவைப்படும் இழப்பீடு வழங்கப்படாது.
- ஒரு விபத்தில், எதிர் தரப்பினர் மேல் தவறு என்பதை நிரூபிக்க தேர்டு-பார்ட்டியிடம் போதிய ஆதாரம் இருத்தல் அவசியம்.
- ஒருவேளை சிறிய சேதம் அல்லது இழப்பீடுகள் ஏற்பட்டால், நீங்கள் அதை நீதிமன்றத்துக்கு செல்லாமலே அதை தீர்த்துக்கொள்ளலாம். அது ஏனெனில் எப்ஐஆர்(FIR) பதிவு செய்ததன் செயல்முறையாகும், அத்துடன் மோட்டார் வெஹிக்கள் ட்ரிபியூனல் சிறிது நேர விரயம் செய்வதாகவும் இருக்கலாம்.
- ஐஆர்டிஐ(IRDAI) விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி, கிளைம் தொகையை தீர்மானிப்பது முழுவதும் மோட்டார் வெஹிக்கள் ட்ரிபியூனல் சேர்ந்தது. தனிப்பட்ட சேதத்தில் எந்தவித அதிகபட்ச அளவும் இல்லாதபோது, ஒருவேளை தேர்டு பார்ட்டி வெஹிக்கிள் அல்லது சொத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கு, ரூபாய். 7.5 லட்சம் வரையிலான வரம்புக்குட்பட்ட லையபிலிட்டி இருக்கிறது.
உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
உங்கள் கமர்ஷியல் வாகனத்தால் ஏதேனும் தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
|
உங்கள் கமர்ஷியல் வாகனத்தால் ஏதேனும் தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
|
உங்கள் கமர்ஷியல் வாகனத்தால் ஏதேனும் தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
|
தீயினால் சொந்த கமர்ஷியல் வெஹிக்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம். |
|
இயற்கை சீற்றத்தால் சொந்த கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பீடு அல்லது சேதம் |
|
விபத்தினால் சொந்த கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பீடு அல்லது சேதம் |
|
திருட்டினால் உங்கள் கமர்ஷியல் வெஹிக்களினால் ஏற்பட்ட இழப்பு |
|
கஸ்டமைஸ்ட் ஆட்-ஆன்ஸ் உடனான கூடுதல் புரடக்ஷன் |
|
தேர்டு-பார்ட்டி நபரின் காயம்/உயிரிழப்பு |
|
ஓனர்-டிரைவரின் காயம்/உயிரிழப்பு |
|
Get Quote | Get Quote |
கமர்ஷியல் வெஹிகளுக்கான தேர்டு-பார்ட்டி பாலிசியின் பயன்கள்
- தனிப்பட்ட சேதங்களுக்கான தேர்டு-பார்ட்டி காப்பீடு: ஒருவேளை நீங்கள் விபத்துக்குள்ளாகி யாரோ ஒருவரை உடல் ரீதியாக காயப்படுத்தினால்(அல்லது தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் உயிரிழப்பு), உங்கள் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் இன்சூரன்ஸ் அதற்கான இழப்பீட்டையும் வரம்பற்ற லையபிலிட்டி வரை காப்பீடு செய்கிறது.
- தேர்டு-பார்ட்டி சொத்து மற்றும் வாகனத்திற்கான சேதங்கள்:ஒருவேளை உங்கள் கமர்ஷியல் வாகனத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக வேறொருவரின் சொத்தையோ அல்லது வாகனத்தையோ சேதப்படுத்த நேர்ந்தால், உங்கள் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ் அதற்கான இழப்பீடுகளை பூர்த்தி செய்யும்.
- எதிர்பாராதவிதமான இழப்பீடுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவும்: இன்றைய நாட்களில் இருக்கும் ஏராளாமான ட்ராபிக்கில் தவறுகள் நடப்பது சகஜமே!, எனவே ஒருவேளை உங்கள் கமர்ஷியல் வாகனம் ஒருவரை அல்லது அவரது வாகனம்/சொத்தை பாதிக்க நேர்ந்தால், அத்தகைய சேதங்களை இந்த பாலிசி காப்பீடு செய்யும், எனவே உங்களுக்கு எந்தவித எதிர்பாராதவிதமான இழப்பீடுகளும் ஏற்படாது.
- நீங்கள் சட்ட ரீதியாக வாகனம் ஓடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்: இந்தியாவின் மோட்டார் வெஹிக்கிள் சட்டத்தின் படி, எல்லா வாகனத்திற்கும் குறைந்தபட்சம் கண்டிப்பாக தேர்டு பார்ட்டி வெஹிக்கள் இன்சூரன்ஸ் இருத்தல் அவசியம். ஒருவேளை நீங்கள் உங்கள் வாகனத்தை பாதுகாக்க வேண்டுமெனில், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு பதிவு செய்ய வேண்டும். இதில் தேர்டு பார்ட்டி சேதங்கள் மற்றும் உங்கள் சொந்த வாகனத்திற்கான பாதுகாப்பையும் வழங்கும்.
- டிராபிக் அபாரதங்களிலிருந்து பாதுகாப்பு: ஒருவேளை உங்கள் வாகனம் குறைந்தபட்சம் ரோட்டில் தேர்டு-பார்ட்டி வெஹிக்கள் இன்சூரன்ஸ் கூட இல்லாமல் இருப்பின், நீங்கள் ரூபாய் 2000 வரை அபராதம் செலுத்த வேண்டும் மற்றும்/அல்லது 3 மாதம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்!
கமர்ஷியல் வெஹிகளுக்கான தேர்டு-பார்ட்டி பாலிசியின் குறைபாடுகள்
- சொந்த இழப்பீடுகளை காப்பீடு செய்யாது: கமர்ஷியல் தேர்டு பார்ட்டி வெஹிக்கள் இன்சூரன்ஸ் எதிர்பாராதவிதமாக சொந்த வாகனத்திற்கு ஏற்படும் எந்தவித சேதங்கள் மற்றும் இழப்பீடுகளை காப்பீடு செய்யாது. (இது தேர்டு பார்ட்டிகளுக்கு மட்டுமானதால்). உங்கள் சொந்த வாகனத்திற்கு காப்பீடு செய்யவேண்டுமெனில் நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை தேர்வு செய்யவேண்டும்.
- இயற்கை சீற்றங்களுக்கு காப்பீடு செய்யாது: ஒருவேளை உங்கள் வாகனத்திற்கு அதாவது நிலநடுக்கம் அல்லது வெல்லம் ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் கமர்ஷியல் இன்சூரன்ஸ் உங்கள் சொந்த வாகனத்திற்கு காப்பீடு செய்யாது. மீண்டும், நீங்கள் இந்த காப்பீடு வேண்டுமென நினைத்தால், இதற்கு பதிலாக காம்ப்ரிஹென்சிவ் கமர்ஷியல் வெஹிக்கள் பாலிசியை பதிவு செய்யலாம்.
- தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் இல்லை: கமர்ஷியல் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது உங்கள் கமர்ஷியல் வாகனத்திற்கு நீங்கள் குறைந்தபட்சம் வைத்திருக்கவேண்டிய அடிப்படை திட்டம். இதை கூடுதல் பயன்கள் மற்றும் திருட்டு அல்லது தீ போன்ற காப்பீடுகளினால் தனிப்பயனாக்கம் செய்ய முடியாது. இருப்பினும், நீங்கள் இதை காம்ப்ரிஹென்சிவ் கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸ் மூலம்
காப்பீடு செய்யப்படும் கமர்ஷியல் வெஹிக்களின் வகை
- பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள்:ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை அழைத்து செல்லும் டாக்சிகள், கேப்கள், ஆட்டோரிக்ஷாக்கள், பள்ளி பேருந்துகள், தனியார் பேருந்துகள் போன்ற வாகனத்திற்கு பிரத்யேகமான இன்சூரன்ஸ்.
- கனரக வாகனங்கள்: புல்டோசர்கள், கிரேன்கள், லாரிகள், டிரய்லர்கள் மற்றும் பல போன்ற கனரக வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் இழப்புகளுக்கும் காப்பீடு வழங்குகிறது.
- ·சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள்: சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றி செல்லும் வாகனங்கள். இதில் பெரும்பகுதி ட்ரக்குகள், டெம்போக்கள் மற்றும் லாரிக்களை போன்றவை அடங்கும்.
- பயணிகளுக்கான பேருந்து/பள்ளி பேருந்து: கமர்ஷியல் பேருந்து, பள்ளி பேருந்துகள், பொது பேருந்துகள், தனியார் பேருந்துகள் அல்லது பயணிகளை ஏற்றி செல்லும் மற்ற பேருந்துகளால் தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
- டிராக்டர்ஸ்/விவசாய வாகனங்கள்: உங்கள் டிராக்டர் அல்லது மற்ற விவசாய வாகனங்களை ஏதேனும் தேர்டு பார்ட்டி ஏதேனும் விபத்துகள், சேதங்கள் மற்றும் இழப்பீடுகளிலிருந்து பாதுகாக்கிறது.
- கமிர்ஷியல் வேன்:பள்ளி வேன்கள், தனியார் வேன்கள் மற்றும் பயணிகளை கூட்டி செல்லும் அல்லது சரக்குகளை ஏற்றி செல்லும் மற்ற வேன்கள், பள்ளி வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வேன்களுக்கு காப்பீடு செய்யப்படும்
- இதர & ஸ்பெஷல் வாகனங்கள்: கேப்கள், டேக்சிகள், ட்ரக்குகள் மற்றும் பேருந்துகள் தவிர வணிகத்திற்காக அல்லது வணிகத்தினால் பயன்படுத்தப்படும் வேறு பல வாகனங்களும் இருக்கின்றன. இதில் சில விவசாயம், சுரங்கம் தோண்டுதல், கட்டுமான பணிக்கு உதவும் வாகனங்களும் அடங்கும்.
கமர்ஷியல் வெஹிகளுக்கான தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கமர்ஷியல் வெஹிகளுக்கான தேர்டு-பார்ட்டி பாலிசி அவசியமா?
இந்தியாவின் மோட்டார் வாகன சட்டத்தின் படி, எல்லா வாகனங்களும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி மோட்டார் இன்சூரன்ஸை கொண்டிருத்தல் வேண்டும், அதாவது கமர்ஷியல் வாகனத்திற்கு இது பொருந்தும் என்பதே இதன் பொருள்! ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லாமல் பிடிபட்டால் நீங்கள் அபராதம் மற்றும்/அல்லது, மூன்று மாதம் சிறை தண்டனை பெரும் வாய்ப்பும் இருக்கிறது!
இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் எவ்வளவு அபராதம்?
தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது இந்தியாவில் அவசியம், அதனால் ஒருவேளை உங்கள் வாகனம் ரோட்டில் இன்சூரன்ஸ் இல்லாமல் பிடிபட்டால் ரூபாய் 2,000 அபராதம் செலுத்தவேண்டும் (தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் 3 மாதம் வரையிலான சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது). எனவே, கவலை வேண்டாம், உங்கள் வாகனம் சரியான இன்சூரன்ஸ் உடன் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
டிபி கவரில் காப்பீடு செய்யப்படும் தீயினால் ஏற்படும் சேதங்கள் யாவை?
நமது பேக்கேஜ் பாலிசியின் கீழிருக்கும் இந்த ஒப்புதல் தீயினால் ஏற்பட்ட இழப்பீடு அல்லது சேதத்தை காப்பீடு செய்கிறது, வெடித்தல், தீ வைத்துக்கொள்தல் அல்லது மின்னல் தாக்கம் போன்ற எதனாலும் ஏற்படலாம். இருப்பினும், இது 20 டன்களுக்கு அதிகபட்சமாக இருக்கும் திறன் கொண்ட வாகனத்திற்கு மட்டுமே பொருந்தும்.
நான் எனது வாகனத்தை அதிகமாக பயன்படுத்துவதில்லை, அப்படியெனில் நான் எந்த திட்டத்தை பெற வேண்டும்?
இது பெரும்பாலும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் உங்கள் கமர்ஷியல் வாகனத்தின் பயன்பாட்டின் அடிப்படையிலுமே இருக்கும். ஒருவேளை வாகனம் அதிகபட்சம் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது ஒருவேளை நீங்கள் அதை குறைந்தக்காலத்திற்கு மட்டுமே உபயோகித்தாலோ, நீங்கள் தேர்டு பார்ட்டி கவரேஜ்க்கு மட்டுமே செல்லுங்கள், ஏனெனில் அதை வைத்திருப்பது அவசியம். வணிகம் சார்ந்த எல்லா வாகனத்திற்கும் குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி கமர்ஷியல் இன்சூரன்சாவது செய்திருக்க வேண்டும். ஆனால், ஒருவேளை உங்களுக்கு அதிகபட்ச கவரேஜ், உங்கள் சொந்த வாகனத்திற்கு அட்டகாசமான நீண்ட நாள் விருப்பங்கள் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு போன்றவை தேவைப்பட்டால் நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை பதிவு செய்யலாம். .
கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்சில் காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பாலிக்கு இடையே இருக்கும் வேறுபாடு யாவை?
தேர்டு பார்ட்டி கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸ் சொத்துகளுக்கு, ஒருநபருக்கு அல்லது தேர்டு பார்ட்டி வாகனம் போன்றவைக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யும், அதாவது உங்கள் விபத்தினால் பாதிக்கப்படும் மற்றவர்கள். இருப்பினும், காம்ப்ரிஹென்சிவ் பாலிசி தேர்டு பார்ட்டி சார்ந்த உங்கள் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளையும் காப்பீடு செய்கிறது.
எந்த திட்டம் சிறந்தது, தேர்டு பார்ட்டி அல்லது காம்ப்ரிஹென்சிவ்?
இது நீங்கள் எவ்வளவு தூரம் கமர்ஷியல் வாகனத்தை உபயோகிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. சட்ட ரீதியாக தேர்டு பார்ட்டி காப்பீடு அத்தியாவசியமாக இருக்கும் பட்சத்தில், ஒருவேளை கமர்ஷியல் வெஹிக்கள் ரெகுலராக பயன்படுத்தினால், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை வாங்கலாம். இத்துடன், நீங்கள் உங்கள் வாகனத்தை கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால், இது இயற்கை சீற்றங்கள், சிறிய மற்றும் பெரிய விபத்துக்கள், திருட்டுகள், தீ மற்றும் பலவிதமான எதிர்பாராதவிதமான இழப்புகளிலிருந்து காப்பீடு செய்யப்பட்டது என்பதை உறுதி செய்வது சிறப்பு.