கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்
I agree to the Terms & Conditions
I agree to the Terms & Conditions
கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது தனிப்பயனாக்கப்பட்ட மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். இது கமர்ஷியல் வாகனத்திற்கு அல்லது கமர்ஷியல் வாகனத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடு செய்யும். மேலும், அந்த வாகனத்தின் ஓனர் - டிரைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும். சாலை விபத்துக்கள், வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்படும் விபத்துக்கள், தீ விபத்துக்கள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புக்களையும் இது ஈடு செய்யும். தொழிலுக்காக பயன்படுத்தும் வண்டிகளான ஆட்டோ ரிக்ஷாக்கள், கேப்கள், ஸ்கூல் பஸ்கள், டிராக்டர்கள், கமர்ஷியல் வேன்கள் மற்றும் டிரக்குகள் போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்க வேண்டியது கட்டாயமாகும்.
உங்கள் தொழிலுக்காக ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களை நீங்கள் வைத்திருந்தால், அந்த வண்டிகளுக்குக்காக நீங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த இன்சூரன்ஸானது உங்கள் வண்டிக்கு(களுக்கு) / வண்டியினால்(களினால்) பிறருக்கு ஏற்பட்ட இழப்புக்களிருந்தும் சேதங்களிலிருந்தும் உங்களையும் உங்கள் தொழிலையும் பாதுகாக்கும். இத்துடன் அந்த வண்டியைப் பயன்படுத்திய நபரையும் இந்த இன்சூரன்ஸ் பாதுகாக்கும்.
உங்களின் தொழிலானது வண்டிகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது என்றால் (எ.கா: கேப் அல்லது பிரைவேட் ஸ்கூல் பஸ் போல்), அந்த வண்டிக்குத் தொடர்புடைய அனைவரையும் இந்த கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாதுகாக்கும். அதாவது அந்த வண்டியில் பயணிக்கும் மக்களையும் இது பாதுகாக்கும்.
லையபிலிட்டி ஒன்லி பாலிசியை மட்டுமாவது வைத்திருக்க வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். உங்கள் கமர்ஷியல் வாகனத்தால் மூன்றாம் தரப்பினருக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டால், அதனால் உங்கள் தொழிலுக்கு ஏற்படும் நஷ்டத்திலிருந்து இந்த பாலிசி பாதுகாக்கும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபி-கள் போல நடத்துகிறோம், அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா சமயத்திலும் ஸ்டாண்டர்ட் கவரேஜ் கை கொடுக்காது. அதற்காகத் தான் உங்கள் கமர்ஷியல் வண்டிக்குத் தேவையான கூடுதல் பாதுகாப்பை வழங்கும் பல விதமான கவர்களை பாலிசி உடன் அளிக்கிறோம்.
நீங்கள் கிளைம் செய்யும் போது ஏமாற்றத்தை தடுக்க, உங்களின் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியில் எந்தெவொரு காரணங்களால் நீங்கள் இழப்பீடுகளை பெற இயலாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அதுபோன்ற சில காரணங்கள் இங்கே:
முக்கிய அம்சங்கள் |
டிஜிட்-ல் இருக்கும் பயன்கள் |
டிஜிட்-ல் இருக்கும் பயன்கள் |
ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்கத் தேவையில்லாத எளிமையான கிளைம் செயல்முறை |
வாடிக்கையாளர் சேவை |
24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை |
எந்த வகையான கமர்ஷியல் வாகனங்கள் இதன் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது |
கேப்கள் (cabs) மற்றும் டாக்ஸிகள், டிரக்குகள்,லாரிகள், பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், பள்ளி வேன்கள் போன்றவை. |
பிரீமியம் |
கமர்ஷியல் வாகனத்தின் வகை மற்றும் இன்சூர் செய்யப்பட வேண்டிய வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டது |
கூடுதல் கவரேஜ் |
பிஏ கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள்/ஸ்பெஷல் எக்ஸ்க்ளூஷன்ஸ் மற்றும் கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல |
மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள் |
தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு |
உங்கள் கமர்ஷியல் வாகனத்தின் தேவைக்கு ஏற்ப, நாங்கள் இரண்டு வகையான பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், கமர்ஷியல் வண்டிக்கு ஏற்படும் அபாயத்தையும் அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் கமர்ஷியல் வாகனம் மற்றும் உரிமையாளர் (ஓனர்)-ஓட்டுநர் (டிரைவர்) ஆகியோருக்கு ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்து, அவர்களையும் பாதுகாக்கும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்றாம் தரப்பு தனிநபருக்கோ அல்லது சொத்துக்கோ உங்கள் கமர்ஷியல் வாகனந்ததால் ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
மூன்றாம் தரப்பு தனிநபர் அல்லது சொத்துக்கு இன்சூர் செய்யப்பட்ட கமர்ஷியல் வாகனம் இழுக்கும் (டோவ்விங்) வாகனத்தினால் ஏற்படும் சேதங்கள். |
✔
|
✔
|
இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்துக்களால் உங்களின் சொந்த கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் |
×
|
✔
|
டிரக் உரிமையாளர்- ஓட்டுநர் காயம் அடைந்தால்/உயிரிழப்பு ஒருவேளை ஓனர்-டிரைவரிடம் ஏற்கனவே அவரது பெயரில் பர்சனல் ஆக்சிடண்ட் இன்சூரன்ஸ் கவர் இல்லாத பட்சத்தில் இது பொருந்தும். |
✔
|
✔
|
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது hello@godigit.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
எங்கள் செயல்முறையை எளிதாக்க, பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி & நேரம் மற்றும் இன்சூர் செய்தவரின்/அழைப்பவரின் தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் வைத்திருக்கவும்.
நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் நன்மைக்கே!
டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்நீங்கள் உங்கள் வாகனத்தை உங்கள் முதன்மை வணிகத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ கமர்ஷியல் நோக்கத்திற்காக உபயோகிக்கும் அனைத்து வாகனத்தையும் பாதுகாப்பது மிக அவசியம். ஒருவேளை சட்டத்தினால் கட்டாயமயமாக்கப்பட்ட லயபிலிட்டி மட்டுமே இருக்கும் பாலிசியை நீங்கள் வைத்திருக்கும் பட்சத்தில், ஓனர்-டிரைவருக்கு இயற்கை பேரழிவுகள், தீ, திருட்டு மற்றும் விபத்துக்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளினால் ஏற்படும் நிதியிழப்புகளிருந்து இந்த கமர்சியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ் பாதுகாக்கிறது.
பயன்படுத்தப்படும் வாகனங்கள் காரணமாக உங்கள் வணிகம் அதிக சொத்து மதிப்புடையதாக இருக்கும் பட்சத்தில், உங்களிடம் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி இருத்தல் வேண்டும். இது ஓனர்-டிரைவரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எப்பேற்பட்ட இழப்புகளிலிருந்தும் உங்கள் வணிகத்தைப் பாதுகாக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வணிகங்கள் என்பன எதிர்பாராத அபாயங்கள் நிறைந்தவையே. கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது குறைந்தபட்சம் அவற்றில் ஒன்றிலிருந்தாவது உங்களைப் பாதுகாக்கும்.
ஆம், கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது அத்தியாவசியமானது. லயபிலிட்டி மட்டுமே கொண்டிருக்கும் பாலிசியானது ஏற்கனவே சட்டத்தினால் கட்டாயமயமாக்கபட்டது, ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி என்பது உங்கள் வாகனத்தையும் உங்களையும் பாதுகாக்க அவசியமானது. அதுமட்டுமின்றி, கமர்ஷியல் வெஹிக்கில் பாலிசி இருந்தால் அது உங்கள் வணிகத்தை, திருட்டுகள், இயற்கை பேரிடர்கள், தீ மற்றும் விபத்துகளில் நடக்கும் எந்த எதிர்பாராத விதமான நிதி ரீதியான இழப்புகளும் பாதுகாக்கப்படும்.
இன்றைக்கு இருக்கும் ஏராளமான எண்ணிக்கையை பொருத்து ஒரு இன்சூரன்ஸை வாங்குவது என்பது எளிமையானது, அவசியமானது, பாதுகாப்பானது மட்டுமின்றி அது உங்களையும் உங்கள் வணிகத்தையும் அனைத்து சூழ்நிலையிலும் பாதுகாக்கக்கூடியது, மேலும் கிளைம்களை விரைவாக வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறது. எல்லாவற்றையும் விட, இது உங்கள் இன்சூரன்ஸின் ஒரு முக்கியமான பகுதியாகும்!
உங்கள் வாகனத்திற்கு சரியான மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும் சில டிப்ஸ் இங்கு இருக்கிறது:
சரியான இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி-IDV)
நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் உற்பத்தியாளரின் கமர்ஷியல் வாகனத்தின் செய்யும் விற்பனை விலையே(டிப்ரிசியேஷன் உட்பட)ஐடிவி-IDV ஆகும். உங்கள் ப்ரீமியம் இதை சார்ந்தே இருக்கும். சரியான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை ஆன்லைனில் தேடும் போது, உங்கள் (ஐடிவி-IDV) சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவும்.
சேவை பயன்கள்
மற்றவைகளின் மத்தியில், 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பணம் செலுத்தத் தேவையில்லாத கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும். தேவைப்படும் நேரங்களில், இத்தகைய சேவைகள் முக்கியமானவை
ஆட்-ஆன்களை ரிவ்யூ செய்யவும்:
உங்கள் வாகனத்திற்கு சரியான கமர்ஷியலை தேர்வு செய்யும் போது, அதிகபட்ச நன்மைகளை பெற அதற்கென இருக்கும் ஆட்-ஆன்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ளவும்.
கிளைம் வேகம்:
இது எந்தவொரு இன்சூரன்ஸின் மிக முக்கியமான அம்சமாகும். . கிளைம்களை விரைவாக செலுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும் .
சிறந்த மதிப்பு: சரியான பிரீமியம் முதல் சேவைகளுக்குப் பிறகு செட்டில்மென்ட்ஸ் மற்றும் ஆட்-ஆன்ஸ்; தேவைப்படும் நேரத்தில் சிறந்த மதிப்பு உடன் உதவும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் சௌகரியத்தையும் கொண்ட மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கவும்.
விலை குறைவாக இருக்கும் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் அதை வாங்குமாறு உங்களை கவர்ந்திழுக்கலாம்.எனினும், வெவ்வேறு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்சின் மேற்கோள்களை ஒப்பிடும் போது, சேவை நன்மைகள் மற்றும் கிளைம் செட்டில்மென்ட் காலங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் வாகன வகையை பொறுத்து, கமர்ஷியல் நோக்கத்திற்காக உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏராளமான ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். உங்கள் வாகனம் மற்றும் தொழில் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முக்கியமான காரணிகளை நன்கு ஆராய்ந்து முடிவு செய்வது மிக அவசியம்.
சேவை பயன்கள்: பிரச்சனையான நேரங்களில் சிறந்த சேவைகள் என்பது உண்மையில் முக்கியமானவை. ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் வழங்கும் சேவைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப ஒரு சிறந்த தேர்வை செய்வதற்கு உறுதி செய்யவும்.
டிஜிட் வழங்கும் சில சேவைகளுக்கான சலுகைகளின் மற்ற சேவைகளுக்கு மத்தியில் 24*7 வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணமில்லா 1400க்கும் மேற்பட்ட கேரேஜ்கள் ஆகியவையாகும்.
விரைவான கிளைம் செட்டில்மென்ட்:
இன்சூரன்ஸின் முழு நோக்கம் உங்கள் கிளைமிற்கான செட்டில்மென்ட்டைப் பெறுவதாகவும்! எனவே, விரைவான கிளைம் தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கூடுதலாக, எங்களிடம் பூஜ்ஜிய-ஹார்ட்காபி பாலிசி உள்ளது, அதாவது சாப்ட் காப்பிகளை மட்டுமே கேட்கிறோம். எல்லாமே பேப்பர்லெஸ், விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது!
உங்கள் ஐடிவி(IDV)யை சரிபார்க்கவும்:
ஆன்லைனில் நிறைய இன்சூரன்ஸ் தோராயமான மதிப்பீடுகள் குறைந்த ஐடிவியை-IDV கொண்டிருக்கும் (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது.உங்கள் தொழில் வாகனத்தின் உற்பத்தியாளரின் விற்பனை விலை. ஐடிவி-IDV உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் போது, செட்டில்மென்ட் நேரத்தில் உங்கள் சரியான கிளைமை பெறுவதையும் உறுதிப்படுத்துகிறது.
ஒரு திருட்டு அல்லது சேதம் போன்ற சூழ்நிலையின் போது உங்களுக்கு தெரியவரும் கடைசி விஷயம் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஐடிவியின்-IDV குறைந்த / தவறான மதிப்பாகும் !
டிஜிட்டில், உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் ஐடிவியை-IDV நீங்களே அமைப்பதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.
சிறந்த மதிப்பு:
இறுதியாக, உங்களுக்கு தேவையான அனைத்து காப்பீட்டையும் வழங்கும் ஒரு நியாயமான வெஹிக்கில் இன்சூரன்ஸை தேர்வு செய்யுங்கள் சரியான விலை, சேவைகள் மற்றும் ஆம், கண்டிப்பாக விரைவான கிளைம்களை கொண்டிருப்பதாக இருத்தல் வேண்டும்!
கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் பின்வருமாறு
மாடல், எஞ்சின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு:
கண்டிப்பாக, நீங்கள் எந்த வகை வாகனத்தை உபயோகிக்கிறீர்களோ அதை முதன்மையாக கொண்டே உங்கள் வாகனத்தின் ஆபத்து அளவும் இருக்கும்.
ஒரு பொதுவான கேபிற்கான ஒரு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது சரக்குகளை ஏற்றி செல்லும் டிரக் அல்லது பள்ளி வண்டியை விட குறைவானதாகவே இருக்கும், அதன் அளவு மற்றும் வாகனத்தின் வகையே இதற்கான காரணம். கூடுதலாக, அது உருவாக்கப்பட்ட ஆண்டு, வாகன நிலை போன்றவையும் உங்கள் ப்ரீமியத்தில் மாற்றம் ஏற்படுத்தும்.
இருப்பிடம்:
உங்கள் டாக்ஸி பதிவு செய்யப்படும் மற்றும் அது பயன்படுத்தப்படும் இடத்தின் அடிப்படையில் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடலாம்
இது ஏனென்றால் ஒவ்வொரு நகரத்திற்குமான ஆபத்து அளவு வெவ்வேறு ரகத்தில் இருக்கிறது அதாவது மும்பை, பெங்களூர், ஹைத்ராபாத் அல்லது மெட்ரோ நகரங்களில் மெட்ரோ அல்லாத நகரங்களை விட அதிகமாக இருக்கிறது.
நோ-கிளைம் போனஸ்: நீங்கள் ஏற்கனவே கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால், தற்போது உங்கள் பாலிசியை புதுப்பிக்க அல்லது ஒரு புதிய இன்சூரன்ஸை பெற விரும்பினால் - இந்த சூழ்நிலையில் உங்கள் என்சிபி (நோ-கிளைம் போனஸ்) பரிசீலிக்கப்படும், அதனால் உங்கள் பிரீமியம் தள்ளுபடி விகிதத்தில் கிடைக்கும்!
நோ-கிளைம் போனஸ் என்றால் உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் முந்தைய ஆண்டில் ஒரு கிளமை கூட செய்யவில்லை என்பதாகும்.
இன்சூரன்ஸ் பிளானின் வகை:
கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் கீழ், இரண்டு முதன்மை வகை இன்சூரன்ஸ்கள் கிடைக்கும். எனவே, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்தது.
கம்ப்பல்சரி, லயபிலிட்டி ஒன்லி பிளான் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் போது - அது தேர்டு பார்ட்டி டாமேஜஸ் அல்லது தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றையும் கவர்’ செய்யும் மேலும் உரிமையாளருக்கு ஏற்படும் தனிப்பட்ட விபத்து(ஒருவேளை அவன் /அவள் இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டிருந்தால்). அதேபோல, ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி பிரீமியத்தில் அதிகமாக இருக்கலாம், ஆனால் கமர்ஷியல் வெஹிக்கில் மற்றும் ஓட்டுனருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளையும் அது ஈடுசெய்யும்.
கமர்ஷியல் வெஹிக்கலின் நோக்கம்: ஒவ்வொரு கமர்ஷியல் வெஹிக்கிலும் வெவ்வேறு நோக்கங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன. சிலவகை பயணிகளை ஏற்றி செல்கிறது, சிலவகை சரக்குகளை ஏற்றி செல்லவும் அல்லது கட்டிடங்களை கட்டவும் உதவுகிறது. ஆகவே, உங்கள் இன்சூரன்சின் ப்ரீமியமானது உங்கள் வாகனத்தின் நோக்கத்தை பொருத்தும் கருத்தில் கொள்ளப்படும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு ரெகுலர் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனத்தை விட குறைவாகவே இருக்கும், அது அதன் அளவு வேறுபாட்டினால் மட்டுமில்லை, டிரக் இன்சூரன்ஸ் அதன் மதிப்பு மற்றும் ரெகுலராக கொண்டு செல்லப்படும் சரக்குகளின் மதிப்பையும் சேர்த்து காப்பீடு செய்வதினாலேயே ஆகும்.
IDV-ஐடிவி என்றால் என்ன?
ஒருவேளை உங்கள் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவு பாதிப்படைந்தாலோ உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு வழங்கும் அதிகபட்ச தொகை இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ ஆகும். இந்த மதிப்பு உங்கள் வாகனத்திற்கான உற்பத்தியாளரின் விற்பனை விலை மற்றும் அதற்கான டிப்ரிஷியேஷன் பொறுத்து கணக்கிடப்படும்.
நோ-கிளைம் போனஸ் NCB-என்சிபி என்றால் என்ன?
நோ-கிளைம் போனஸ் என்பது பாலிசி வைத்திருப்பவர் குறிப்பிட்ட டெர்மில் எந்தவித கிளைமும் செய்யாததால் அவரது பிரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடியாகும். நோ-கிளைம் போனசின் தள்ளுபடி 20-50% தள்ளுபடியில் வேறுபடும் மேலும் இது நீங்கள் உங்கள் பாலிசி முடியும் போது உங்கள் ரெக்கார்டில் கமர்ஷியல் வெஹிக்கலால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை என்பதற்காக உங்களுக்கு வழங்கப்படும் ஒன்று.
டிடக்டபிள்ஸ் என்றால் என்ன?
டிடக்டபிள்ஸ் என்பது பாலிசி வைத்திருப்பவர் கோரிக்கையின் போது செலுத்த வேண்டிய தொகையாகும். பொதுவாக இரண்டு வகை டிடக்டபிள்ஸ் உள்ளன; ஒன்று கட்டாயமானது மற்றும் மற்றொன்று, வாலண்டரி கிளைம்- உங்கள் வணிகத்தினால் ஒரு கிளைமின் போது எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்கள் வாலண்டரி கிளைம் அதிகமாக இருந்தால், உங்கள் பிரீமியம் குறைவாக இருக்கும். இருப்பினும், ஒரு வாலண்டரி டிடக்டபிள் தொகையைத் தேர்ந்தெடுக்கும் போது- கிளைம் எழும் போது அது உங்களால் செலுத்தக்கூடிய தொகை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கேஷ்லஸ் கிளைம்ஸ் என்றால் என்ன?
டிஜிட்டினால் அங்கீகாரம் பெற்ற பழுதுபார்க்கும் மையத்தில் உங்கள் வணிக வாகனத்தை பழுதுபார்க்க நீங்கள் தேர்வுசெய்தால், அங்கீகரிக்கப்பட்ட கிளைம் தொகையை நேரடியாக பழுதுபார்க்கும் மையத்திற்குச் செலுத்துவோம். இதுவே கேஷ்லஸ் கிளைம்.
உங்கள் இன்சூரன்ஸ் காப்பீடு செய்யாத பழுதுபார்ப்புக் கட்டணங்கள் அல்லது ஏதேனும் தேய்மானச் செலவுகள், கட்டாயக் கூடுதல்/ டிடக்டபிள்ஸ் போன்ற ஏதேனும் டிடக்டபிள்ஸ் இருந்தால், காப்பீட்டாளரின் சொந்தப் பாக்கெட்டில் செலுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி என்றால் என்ன?
உங்கள் கமர்ஷியல் வெஹிக்கல் உங்கள் தேர்ட் பார்ட்டி சொத்துக்கள், ஒரு நபர் அல்லது வாகனத்தை பாதிப்பதே தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி ஆகும். அந்த வகையில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி (லயபிலிட்டி மட்டுமே கொண்ட பாலிசி/ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி) மேற்கூறியவற்றிற்கு ஏற்படும் இழப்பை நிதி ரீதியாக காப்பீடு செய்ய பொறுப்பு வகிக்கும்.
ரெகுலர் கார் இன்சூரன்ஸை விட கமர்ஷியல் வெஹிக்கில் அதிக ஆபத்துக்கு ஆளாகிறது. உதாரணமாக ஒரு சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விபத்து அல்லது இயற்கை சீற்றம் ஏற்பட்டால், ஒரு டிரக் அதன் அளவு மற்றும் டிரக்கில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் மதிப்பு காரணமாக அதிக ஆபத்தை கொண்டதாக இருக்கிறது.
இதேபோல், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அதிக ஆபத்தை கொண்டது, ஏனெனில் அவை தினசரி பல்வேறு பயணிகளை ஏற்றிச் செல்லும் மேலும் அதுவே அவர்களுக்கு பொறுப்பு வகிக்க வேண்டும்.
எளிமையாகச் சொல்வதானால், ரெகுலர் கார் இன்சூரன்ஸ் முதன்மையாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான மற்றும் பயன்படுத்தும் கார்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கமர்ஷியல் வெஹிக்கல் இன்சூரன்ஸ் என்பது வாகனங்களை தங்கள் வணிகத்தின் முக்கிய பகுதியாக பயன்படுத்துபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் சூழ்நிலைகள் வேறுபட்டவை மற்றும் அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் கொள்கைகள் தனிப்பயனாக்கப்பட்டுள்ளான என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒவ்வொரு வாகனமும் தனிப்பட்ட அல்லது தொழில்முறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், உங்கள் வணிக வாகனத்தால் தேர்ட் பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் ஏதேனும் சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு ஈடுசெய்ய குறைந்தபட்சம் தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி பாலிசியை வைத்திருக்க வேண்டும்
விபத்துகள், மோதல்கள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றால் ஏற்படும் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிலை பாதுகாக்கும் முழுமையான பேக்கேஜ் பாலிசிக்கு செல்வதன் மூலம் உங்கள் சொந்த கமர்ஷியல் வெஹிக்கிலை பாதுகாக்கவும்.
· எதிர்பாராத வணிக இழப்புகளைத் தவிர்க்கவும், ஏனெனில் உங்கள் வணிக கமர்ஷியல் வெஹிக்கில் தேவைப்படும் நேரங்களில் அனைத்தையும் ஈடுசெய்யும்.
மற்ற முக்கியமான கட்டுரைகள்