ஐடிவி (IDV) கால்குலேட்டர்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
இன்சூரன்ஸில் தற்போது பல வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருப்பினும், நாம் அவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது மிக அவசியம். அத்தகைய ஒரு வார்த்தை தான் ஐடிவி (IDV) ஆகும். ஐடிவி (IDV) என்பது ‘இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ’ (காப்பீடு செய்யப்பட்ட அறிவிக்கப்பட்ட மதிப்பு) என்பதைக் குறிக்கிறது,
கார் இன்சூரன்ஸில் ஐடிவி (IDV) என்பது அவ்வளவு சிக்கலான ஒன்றும் அல்ல, அது உங்கள் காரின் மார்க்கெட் மதிப்பைத் தான் குறிக்கிறது. வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில், இது இன்றைய மார்க்கெட் நிலவரப்படி உங்கள் கார் பெறக்கூடிய மதிப்புத்தொகையாகும்.
கார் இன்சூரன்ஸில் உள்ள இந்த ஐடிவி (IDV), உங்கள் இன்சூரரால், கிளைம் பேமெண்ட்களின் போது உங்கள் கிளைம் தொகையைச் சரியாகக் கண்டறிய உதவுகிறது. கூடுதலாக, இது உங்கள் கார் இன்சூரன்ஸுக்கான சரியான பிரீமியம் விலையைத் தீர்மானிக்கவும் உதவுகிறது.
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது நீங்கள் பெரிதும் விரும்பும் உங்கள் கார் இன்சூரன்ஸின் ஆன்மா என்றும் சொல்லலாம். உங்கள் வாகனத்தின் பிரீமியத்தை உங்கள் ஐடிவி (IDV) தான் தீர்மானிக்கிறது. ஆம், ஐடிவி (IDV) மற்றும் உங்கள் பிரீமியத்திற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.
ஐடிவி (IDV) அதிகமாக இருந்தால், செலுத்த வேண்டிய பிரீமியமும் அதிகமாக இருக்கும். இருப்பினும், உங்கள் வாகனத்தின் ஐடிவி-யை (IDV) நீங்கள் குறைவாக மதிப்பிடுவது அறிவுறுத்தப்படக்கூடியதில்லை, ஏனெனில், சேதம் ஏற்பட்டால், அது முற்றிலும் உங்கள் இழப்பே ஆகும்.
ஐடிவி (IDV) கால்குலேட்டர் என்பது மிக முக்கியமான இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவிகளில் ஒன்றாகும், ஏனெனில் இது ஒருவரின் காரின் மார்க்கெட் மதிப்பை மட்டும் தீர்மானிக்க உதவவில்லை, உங்கள் கார் இன்சூரன்ஸுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தின் சரியான தொகையை தீர்மானிக்கவும் உதவுகிறது
அதுமட்டுமின்றி இது எங்களுக்கு(காப்பீட்டாளர்) உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடையும் சந்தர்ப்பங்களிலோ கிளைம் செய்யும் செலுத்த வேண்டிய சரியான தொகையை தீர்மானிக்கவும் உதவுகிறது.
உங்கள் காரின் தேய்மான கட்டணங்களைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்
காரின் வயது |
டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) % |
6 மாதங்கள் மற்றும் அதற்கும் கீழ் |
5% |
6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை |
15% |
1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை |
20% |
2 வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரை |
30% |
3 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரை |
40% |
4 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரை |
50% |
எடுத்துக்காட்டு: உங்கள் காரை வாங்கி 6 மாத காலத்திற்கும் குறைவாக இருந்து, அதன் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 100 ஆக இருப்பின், அதன் தேய்மான விகிதம் 5% மட்டுமே ஆகும்.
அதாவது வாங்கிய பிறகு, ஐடிவி (IDV) ரூ. 95-க்கு குறைகிறது, மேலும் 6 மாதங்களை கடந்து 1 வருடத்திற்கு உட்பட்டும் இருந்தால் ரூ. 85-க்கு குறையும், வாகனத்தின் வயது 1 ஆண்டுக்கு மேலும் ஆனால் 2 ஆண்டுகளுக்கு உட்பட்டும் இருப்பின் ரூ. 80 க்கு குறையும், வாகனத்தின் வயது 2 ஆண்டுகளுக்கு மேலும் ஆனால் 3 ஆண்டுகளுக்கு உட்பட்டும் இருப்பின் ரூ. 70 ஆக குறையும், இவ்வாறு அதன் 5வது ஆண்டில் 50% தேய்மானத்திற்குப் பிறகு ரூ.50 ஆக குறையும் வரை நடக்கும் .
உங்கள் காரை வாங்கி 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இருந்தால், ஐடிவி (IDV) ஆனது காரின் நிலை - உற்பத்தியாளர், மாடல் மற்றும் அதன் உதிரி பாகங்களின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து கணிக்கப்படும்.
மறுவிற்பனையின் போது, உங்கள் ஐடிவி (IDV) உங்கள் காரின் மார்க்கெட் மதிப்பைக் குறிக்கிறது. இருப்பினும், உங்கள் காரை நீங்கள் நன்றாகப் பராமரித்து, புதியது போல் பளபளப்பாக வைத்திருந்தால், உங்கள் ஐடிவி (IDV) உங்களுக்கு வழங்குவதை விடவும், கூடுதல் விலையை நீங்கள் எப்போதும் இலக்காக தீர்மானிக்கலாம். இறுதியாக, இது உங்கள் கார் நீங்கள் எவ்வளவு பத்திரமாக பாதுகாத்து இருக்கிறீர்கள் என்பதிலேயே இருக்கிறது.
ஐடிவி (IDV) மற்றும் உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகிய இரண்டும் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளன. அதாவது, உங்கள் ஐடிவி (IDV) அதிகமாக இருந்தால், உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாகும் - மேலும் உங்கள் வாகனத்தின் வயது மற்றும் ஐடிவி (IDV) மதிப்பு குறையும் போது, உங்கள் பிரீமியமும் குறைகிறது.
மேலும், உங்கள் காரை விற்க முடிவு செய்யும் போது, அதிக ஐடிவி (IDV) என்றால் அதற்கு அதிக விலை கிடைக்கும். பயன்பாடு, கடந்தகால கார் காப்பீட்டு கிளைமின் அனுபவம் போன்ற பிற காரணிகளாலும் விலை பாதிக்கப்படலாம்.
எனவே, உங்கள் காருக்கான சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, பிரீமியம் மட்டும் இல்லாமல், வழங்கப்படும் ஐடிவி-யைக் (IDV) குறித்துக் கொள்ள மறக்காதீர்கள்.
குறைந்த பிரீமியத்தை வழங்கும் நிறுவனம் ஈர்க்கக்கூடியதாக இருக்கலாம், இது வழங்கப்படும் ஐடிவி (IDV) குறைவாக இருப்பதால் இவ்வாறு இருக்கலாம். உங்கள் கார் மொத்தத்தையும் இழக்க நேரிட்டால், அதிக ஐடிவி (IDV) அதிக இழப்பீடுகளுக்கு வழிவகுக்கும்.
நாங்கள் மிகவும் எளிமையாக இன்சூரன்ஸ் செய்கிறோம், ஆம், இப்போது 5 வயது குழந்தைகளாலும் இதனைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் விலையுயர்ந்த கடிகாரம் உள்ளது. ஒரு நாள், நீங்கள் அதை விற்றால் உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள எண்ணுகிறீர்கள். நீங்கள் அதை ஒரு வாட்ச்மேக்கரிடம் எடுத்துச் செல்லுங்கள். வாட்ச்மேக்கர் உங்கள் கடிகாரத்தைப் பார்த்து, அது கண்ணாடி, உலோகம், தோல் மற்றும் ஸ்க்ரூக்களால் ஆனது என்று விளக்குகிறார். எனவே, அவர் முதலில் அந்த பொருட்களின் விலையை கூட்டுகிறார். அப்போது அவர் உங்களிடம் வாட்ச் எவ்வளவு பழையது என்று கேட்கிறார், அதற்கு 5 வயது என்று சொல்லுங்கள். அவர் அதையும் குறித்துக்கொள்கிறார். இதையெல்லாம் அடிப்படையாக வைத்து, உங்கள் கடிகாரத்தை விற்றால், உங்களுக்கு ரூ. 500 கிடைக்கும். இங்கு, ரூ. 500 தான் உங்கள் ஐடிவி (IDV) ஆகும்!