கியா கார்னிவல் இன்சூரன்ஸ்

கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை ஆன்லைனில் சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸ்: ஆன்லைனில் உங்கள் கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸை வாங்குங்கள்/ரீனியூவல் செய்யுங்கள்

இது செப்டம்பர் 1998 ஆம் ஆண்டு கியா மோட்டார்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, கார்னிவல் என்பது தனது நான்காவது ஜெனரேஷனில் உள்ள ஒரு மினிவேன் ஆகும். 

அத்துடன், கியாவின் இந்திய நிறுவனம் கார்னிவல் சீரிஸ் உடன் லிமௌசைன் கார்(Limousine Car) எனும் ஒரு புதிய வகையைச் சேர்த்துள்ளது. புதிய கார்ப்பரேட் லோகோவையும் கொண்டிருப்பது இதற்கு கூடுதல் மதிப்பைச் சேர்க்கிறது.

அதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் ரீனியூவல் செய்யப்பட்ட தொழில்நுட்பங்களின் சிறப்பின் காரணமாக, இது இந்திய சந்தையில் தனி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மேலும், தென் கொரிய வாகன உற்பத்தியாளரின் இந்த மாடலுக்கு 2021 சிஎன்பி எம்பிவி(CNB MPV ) வருட விருதும் (2021 CNB MPV of the Year award) வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிற வெஹிக்கிலைப் போலவே, கியா கார்னிவலும் ஆபத்து மற்றும் விபத்துகளினால் சுலபமாகப் பாதிக்கப்படக்கூடியது. எனவே, கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸை வைத்திருப்பதும் சேதங்களின் செலவுகளைக் காப்பிட வேண்டியதும் அவசியமாகிறது.

மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி ஒரு தனிநபர் தேர்டு பார்ட்டி வெஹிக்கிலையோ நபரையோ அல்லது சொத்துக்களுக்குத் தனது காரால் ஏற்படும் சேதங்களை ஈடுசெய்ய குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். இருப்பினும், முழுமையான கவரேஜ் நன்மைகளுக்கு, ஒருவர் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தியாவில் பல இன்சூரன்ஸ் வழங்குநர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வகையான பாலிசிகளையும் வழங்குகிறார்கள். அத்தகைய இன்சூரர்களில் டிஜிட் நிறுவனமும் ஒன்று.

இந்தப் பிரிவில், கியா கார்னிவல் இன்சூரன்ஸ் குறித்து டிஜிட் நிறுவனம் வழங்கும் சலுகைகள் மற்றும் நன்மைகள் பற்றிய அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸின் ரீனியூவல் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கானது)
ஆகஸ்ட்-2021 43,937
ஆகஸ்ட்-2020 18,688
ஆகஸ்ட்-2019 24,536

**பொறுப்புத் துறப்பு - கியா கார்னிவல் 2.2 லிமௌசைன் கார் 7 பிஎஸ்விஐ -க்காக 2199.0 டீசல் ஜிஎஸ்டிக்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. GST சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்.சி.பி(NCB) - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐ.டி.வி(IDV) இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு அக்டோபர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.

கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுபவை எவை?

டிஜிட்டின் கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

கியா கார்னிவலுக்கான கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு-பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி

×

உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது

×

தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

எவ்வாறு கிளைம் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த படிவங்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் சேதங்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

டிஜிட்டின் கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்

இன்சூரரைத் தீர்மானிப்பதற்கு முன்பு ஒருவர் கியா கார்னிவல் இன்சூரன்ஸ் விலை, நெட்வொர்க் கேரேஜ்கள், கிளைம் செயல்முறை மற்றும் பல காரணிகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். அந்த நல்ல காரணத்திற்காக, நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநராக டிஜிட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பின்பற்றவேண்டிய முக்கிய பாயிண்டர்களின் பட்டியல் இதோ:

  • ஆன்லைன் வசதியுடைய செயல்முறை / சௌகரியமான ஆன்லைன் செயல்முறை - டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், அதன் பாலிசிஹோல்டர்களை அவர்களது ஸ்மார்ட்ஃபோனில் இயக்கப்பட்ட செயல்முறைகள் மூலம் ஆன்லைனில் கியா கார்னிவல் இன்சூரன்ஸைப் பெற அனுமதிக்கிறது. இந்தச் செயல்முறையானது மிக குறைவான நேரத்தில் கிளைம்களை உடனுக்குடன் செட்டில் செய்வதற்கான உத்தரவாதம் அளிக்கிறது.
  • டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்கள் - இது 6000 க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களைக் கொண்டிருக்கிறது, அங்கு உங்கள் கியா கார்னிவலுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் சரிசெய்யலாம்.
  • கேஷ்லேஸ் ரிப்பேர்கள் - டிஜிட்டின் நெட்வொர்க் கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றுக்குக் கார் ரிப்பேருக்காகச் செல்லும்போது நீங்கள் கேஷ்லேஸ் ரிப்பேர்களைத் பயன்படுத்தலாம். இந்தச் செயல்முறையின்போது உங்கள் கையிலிருந்து பணம் செலுத்த வேண்டியதில்லை. இன்சூரர் நேரடியாக ரிப்பேர் சென்டருக்கான தொகையைச் செலுத்திவிடுவார். எனவே, கேஷ்லேஸ் ரிப்பேரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் நிதி சார்ந்த சேமிப்பையும் அதிகரிக்கலாம்.
  • டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் டிராப் வசதிகள் - உங்கள் கார் ரிப்பேர்காக இன்சூரரின் நெட்வொர்க் கேரேஜ்களுக்கு உங்களால் செல்ல முடியாவிட்டால், உங்கள் வீட்டிலிருந்தப்படியே சௌகரியமாக அத்தகைய சேவைகளைப் பெறலாம். எனவே, கார்னிவல் இன்சூரன்சிற்கான தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம், உங்கள் வீட்டு வாசலிலிருந்தே பிக்-அப் மற்றும் டிராப் வசதிகளை இலவசமாகப் பெறலாம்.
  • ஆட்-ஆன் பாலிசிகள் - டிஜிட் நிறுவனம் உங்கள் கியா காருக்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸின் கூடுதல் நன்மைகளுக்காக, உங்கள் அடிப்படை திட்டத்தில் கூடுதல் ஆட்-ஆன்களைச் சேர்க்க உதவும். ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர், கன்ஸ்யூமபில்ஸ் கவர், பேசஞ்சர் கவர் மற்றும் பல அவற்றுள் அடங்கும் சில ஆட்-ஆன்களாகும்.
  • நம்பகமான வாடிக்கையாளர் சேவை - அனைத்து நன்மைகளுக்குப் பிறகும், இந்த இன்சூரர் நிறுவனம் வழங்குவது குறித்து உங்களுக்கு சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், டிஜிட்டின் 24*7 வாடிக்கையாளர் சேவை தேசிய விடுமுறை நாட்களில் கூட உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும், நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்.

ஆகவே, டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரர்களிடமிருந்து பெறும் கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸ் கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸைப் பெறுவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?

கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸ் விபத்துகளின் போது ஏற்படும் சேதங்களின் செலவுகளைக் குறைப்பது என்பது முக்கியமானது மட்டுமல்லாமல், சட்டப்படி கட்டாயமாகிறது. இன்சூரன்ஸ் பாலிசி இல்லை எனில், பாதிக்கப்பட்டவர் கடுமையான நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும் மற்றும் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு, உங்கள் கியா காருக்கான இன்சூரன்ஸை நீங்கள் ஏன் பெற வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இதோ:

  • தேர்டு-பார்ட்டியினரின் சேதங்களுக்கான பாதுகாப்பு - இது உங்கள் சொந்த காரால் தேர்டு பார்ட்டியான ஒருவர், வெஹிக்கல் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்களின் செலவுகளை கொண்ட ஒரு அடிப்படை திட்டமாகும். மோட்டார் வெஹிக்கல் ஆக்ட் ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் இந்தத் திட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், தேர்டு பார்ட்டி கார்னிவல் இன்சூரன்ஸ் சொந்த சேதங்களினால் ஏற்படும் செலவுகளை காப்பீடு செய்யாது.
  • சொந்த சேதங்களுக்கான காப்பீடு - கியா கார்னிவலுக்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் விபத்து, இயற்கை அல்லது செயற்கை பேரழிவு, திருட்டு போன்றவற்றால் ஏற்படும் சொந்த சேதங்களுக்கான காப்பீட்டை வழங்குகிறது.
  • தனிப்பட்ட விபத்துக்கான காப்பீடு - ஐஆர்டிஏ படி, நீங்கள் மூன்றாம் தரப்பு அல்லது காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பிளானைத் தேர்வுசெய்தாலும், நிரந்தர முழு ஊனம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் கார் விபத்துகளின் ஏற்படுகையில் நீங்கள் அதற்கான காப்பீடு பெற கடமைப்பட்டுள்ளீர்கள்.
  • நோ-கிளைம் போனஸ் - ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும், உங்கள் இன்சூரர் உங்கள் பாலிசி பிரீமியத்தில் நோ-கிளைம் போனஸ் எனும் வெகுமதியை வழங்குவார். இது 20 முதல் 50% வரையிலான தள்ளுபடியாகும். எனவே, கிளைம் செய்யாத ஆண்டுக்குப் பிறகு கியா கார்னிவல் இன்சூரன்ஸ் ரீனியூவல் செய்யதலுக்கான தொகையைச் செலுத்துவதன் மூலம் உங்கள் பிரீமியம் தொகையில் தள்ளுபடி பெறலாம்.
  • நிதிசார்ந்த பொறுப்புகளைக் குறைக்கலாம் - கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸ் இல்லாத ஒரு நபர் சட்டப்படி அபராதம் செலுத்த வேண்டும். முதல் முறை தவறு செய்தால், 2,000 ரூபாயும், இரண்டாவது முறையாக, 4,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, கார் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம் சட்ட பொறுப்புகளை நீங்கள் வெகுவாகக் குறைக்கலாம்.

எல்லாவற்றிக்கும் மேலாக, டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தனிநபர்களிடமிருந்து இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதற்கு பலவேறு நன்பயன்களை வழங்குகிறார்கள்.

கியா கார்னிவல் குறித்து மேலும் அறிக

இந்தக் கார் 6 வேரியண்ட்டுகளில், குறிப்பாக வெளிப்புறத்தில் மூன்று விதமான நிறங்களிலும் உட்புறத்தில் ஒரு நிறத்திலும் கிடைக்கிறது. இது தவிர, அதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் காரணமாக அசத்தலான ஒப்பிடமுடியாத செயல்திறனை வழங்குகிறது. இந்த மாடலின் முக்கிய விவரக்குறிப்புகளுக்கான பார்வை இதோ:

பரிமாணங்கள் இந்த காரின் ஒட்டுமொத்த நீளம், அகலம் மற்றும் உயரமானது 5115 மிமீ, 1985 மிமீ மற்றும் 1740 மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 3060 மிமீ மற்றும் பூட் ஸ்பேஸ் 540 லிட்டர் ஆகும்

  • என்ஜின் - இது பிஎஸ்-விஐ மாசு உமிழ்வு தரத்தைப் பூர்த்தி செய்யும் சிஆர்டிஐ டீசல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 200 பிஎஸ் / 3800 ஆர்பிஎம் பவர் மற்றும் 440 என்எம் / 1500 ~ 2750 ஆர்பிஎம் டார்க் திறனை வழங்கும். மேலும், மாடலின் எஞ்சின் இடப்பெயர்வு 2.2 லிட்டர் ஆகும்.
  • டிரான்ஸ்மிஷன் மற்றும் டிரைவ் - கியா கார்னிவல் 8 ஏடி டிரான்ஸ்மிஷன் மற்றும் 2 டபிள்யூடி டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.
  • இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டெக்னாலஜி - இந்த காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் பொருந்தக்கூடிய 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
  • பாதுகாப்பு அம்சங்கள் - டிரைவர் மற்றும் பயணிகள் ஏர்பேக்குகள், ப்ரொஜெக்டர் பல்ப் வகையைச் சேர்ந்த பனி விளக்குகள், ஆட்டோ முகப்பு விளக்குகள், ப்ரீ-டென்ஷனர் மற்றும் லோட் லிமிட்டருடன் கூடிய முன் சீட் பெல்ட்கள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இருப்பினும், உங்கள் கார் விபத்துக்குள்ளானாலோ அதிக சேதங்களைச் சந்தித்தாலோ அதற்கான நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்த நீங்கள் கியா கார்னிவல் இன்சூரன்ஸைப் ரீனியூவல் செய்ய வேண்டும் அல்லது ஏற்கனவே உங்களிடம் இன்சூரன்ஸ் இல்லையென்றால் புதிதாக ஒன்றை வாங்க வேண்டும்.

கியா கார்னிவல் - வேரியண்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறலாம்)
பிரீமியம் (டீசல்) ₹30.18 லட்சம் பிரீமியம் 8 STR(டீசல்) ₹30.42 லட்சம் பிரஸ்டீஜ் (டீசல்) ₹34.97 லட்சம் பிரஸ்டீஜ் 9 STR (டீசல்) ₹36.17 லட்சம் லிமௌசைன் (டீசல்) ₹40.97 லட்சம் லிமௌசைன் கார் பிளஸ் (டீசல்) ₹40.34 லட்சம்

இந்தியாவில் கார்னிவல் கார் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மூன்றாம் தரப்பு கியா கார்னிவல் இன்சூரன்ஸ் பிளானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நான் வீட்டு வாசலில் பிக்-அப் மற்றும் டிராப் வசதியைப் பெற முடியுமா?

இல்லை. காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பிளான்களில் மட்டுமே டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி கிடைக்கிறது.

காப்பீடு செய்யும் போது எனது கியா கார்னிவலின் ஐடிவியை நான் தனிப்பயனாக்கிக்கொள்ள முடியுமா?

டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பிளானைத் தேர்வுசெய்தால் உங்கள் காரின் ஐடிவியைத் IDV) தனிப்பயனாக்க அனுமதிக்கின்றனர். இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ மதிப்பைத் தனிப்பயனாக்குவதன் மூலம், நீங்கள் பெற விரும்பும் கிளைம் தொகையைத் தேர்வு செய்யலாம்.

கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸில் என்ஜின் காப்பீடும் அடங்குமா?

இல்லை. என்ஜின் காப்பீடு என்பது ஒரு அடிப்படை இன்சூரன்ஸ் பிளான் காப்பீட்டின் கீழ் வராது. இருப்பினும், காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பிளான் கீழ் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸிற்கான ஆட்-ஆன் கவரை நீங்கள் வாங்கலாம்.