சொந்த சேத பைக் இன்சூரன்ஸ்

usp icon

Cashless Garages

For Repair

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike
background-illustration

பைக்-கிற்கான சொந்த சேத இன்சூரன்ஸ் என்றால் என்ன?

சொந்த சேத பைக் இன்சூரன்ஸை யார் வாங்க வேண்டும்?

  •  நீங்கள் சமீபத்தில் பைக் வாங்கியிருந்து, உங்கள் பைக்-கிற்கு ஏற்கனவே டிஜிட்-இன் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வாங்கியிருந்தால் கூட, உங்கள் சொந்த பைக்-ஐ சேதங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் காப்பதற்காக நீங்கள் சொந்த சேத காப்பீட்டினையும் உங்கள் பைக்-கிற்கு வாங்கலாம்.
  • உங்களிடம் ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து பெற்ற நடைமுறையில் உள்ள தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் இருந்தாலும், உங்கள் பைக்-ஐ இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸையும் வாங்கலாம்.

பைக்-கின் ஓ.டி(OD) இன்சூரன்ஸில் என்னவெல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது?

விபத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள்

விபத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள்

விபத்து சமயங்களில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

உங்கள் டூ வீலர் திருட்டு போவது

உங்கள் டூ வீலர் திருட்டு போவது

கெடுவாய்ப்பாக உங்கள் பைக் திருடு போய் விட்டால் அதனால் ஏற்படும் நஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறது.

தீவிபத்தினால் ஏற்படும் சேதங்கள்

தீவிபத்தினால் ஏற்படும் சேதங்கள்

தீவிபத்தின் காரணமாக உங்கள் பைக் சேதமடைந்து விடும் சூழ்நிலையில் உங்கள் பைக்-கிற்கு இழப்பீடு வழங்கி பாதுகாப்பளிக்கிறது.

இயற்கை பேரிடர் ஏற்படும் சமயத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள்

இயற்கை பேரிடர் ஏற்படும் சமயத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள்

இயற்கை பேரிடர் ஏதேனும் நிகழும் பட்சத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கிறது.

ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸில் உள்ள ஆட்-ஆன்(மதிப்புக்கூட்டல்/add-on) கவர்கள்

தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ்(பொறுப்புகள்)

உங்கள் சொந்த பைக்-கிற்கு ஏற்படும் இழப்புகளுக்கு மட்டுமே உங்கள் தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கிறது, தேர்டு பார்ட்டி இழப்புகளுக்கு பாதுகாப்பளிக்கப்படாது. இதற்கு உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது

இதற்கு சட்டப்படி அனுமதியில்லை, எனவே நீங்கள் குடிபோதையில் வண்டி ஓட்டியிருந்தால் உங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைம்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுவது

கிளைம் செய்யும் நபர் சட்டத்திற்கு புறம்பாக வண்டி ஓட்டியிருந்தால், எந்த பைக் இன்சூரன்ஸ் நிறுவனமும் கிளைம்-ஐ ஏற்றுக் கொள்ளாது. எனவே, உங்களிடம் செல்லுபடியாகிற டூ வீலர் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே நீங்கள் கிளைம் செய்ய முடியும்.

ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) வாங்கப்படவில்லை

நீங்கள் குறிப்பிட்ட ஆட்-ஆனை வாங்கவில்லையெனில், அதன் பலன்களுக்கு நீங்கள் நிச்சயமாக கிளைம் செய்ய முடியாது.

பின்விளைகிற சேதங்கள்

கெடுவாய்ப்பாக, விபத்து நேர்ந்த சமயத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்பட்டிருக்காத சேதங்களுக்கு இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கப்படாது.

எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?

உங்கள் பைக்-இன் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் சொந்த சேத காப்பீடு அருமையானதென்றாலும், கீழ்க்கண்ட சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கப்படாது:

தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ்(பொறுப்புகள்)

உங்கள் சொந்த பைக்-கிற்கு ஏற்படும் இழப்புகளுக்கு மட்டுமே உங்கள் தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கிறது, தேர்டு பார்ட்டி இழப்புகளுக்கு பாதுகாப்பளிக்கப்படாது. இதற்கு உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது

இதற்கு சட்டப்படி அனுமதியில்லை, எனவே நீங்கள் குடிபோதையில் வண்டி ஓட்டியிருந்தால் உங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைம்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுவது

கிளைம் செய்யும் நபர் சட்டத்திற்கு புறம்பாக வண்டி ஓட்டியிருந்தால், எந்த பைக் இன்சூரன்ஸ் நிறுவனமும் கிளைம்-ஐ ஏற்றுக் கொள்ளாது. எனவே, உங்களிடம் செல்லுபடியாகிற டூ வீலர் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே நீங்கள் கிளைம் செய்ய முடியும்.

ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) வாங்கப்படவில்லை

நீங்கள் குறிப்பிட்ட ஆட்-ஆனை வாங்கவில்லையெனில், அதன் பலன்களுக்கு நீங்கள் நிச்சயமாக கிளைம் செய்ய முடியாது.

பின்விளைகிற சேதங்கள்

கெடுவாய்ப்பாக, விபத்து நேர்ந்த சமயத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்பட்டிருக்காத சேதங்களுக்கு இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கப்படாது.

அலட்சியத்தின் காரணமாக விளைகிற சேதங்கள்

இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் செய்யக் கூடாத ஒன்றை ஒரு வேளை நீங்கள் செய்திருக்கும் பட்சத்தில் உங்கள் பைக்-கிற்கு பாதுகாப்பளிக்கப்படாது. உதாரணத்திற்கு, உங்கள் ஊரில் வெள்ள நீர் புகுந்திருக்கும் நிலையில், நீங்கள் பைக்-ஐ வெளியில் எடுத்துச் சென்று அதன் சேதங்களுக்கு காரணமாக அமையும் செயல்!

உடன் லைசென்ஸ்தாரரின்றி வண்டி ஓட்டுவது

சட்டப்படி, உங்களிடம் பழகுநர் லைசென்ஸ் இருந்தால், நிரந்தர லைசென்ஸ் உள்ள ஒருவர் உங்கள் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில், உங்கள் ஓ.டி(OD) கிளைம் அங்கீகரிக்கப்படாது.

நீங்கள் ஏன் டிஜிட்-இன் சொந்த சேத பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

உங்கள் ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸ் சூப்பர் ஈஸி கிளைம் நடைமுறையை கொண்டிருப்பது மட்டுமின்றி, கேஷ்லெஸ் முறையினை தேர்வு செய்யும் வாய்ப்பினையும் கொண்டிருக்கிறது.

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வசதியாக,இந்தியா முழுவதிலும் 4400+ மேற்பட்ட கேஷ்லெஸ் நெட்வொர்க் கேராஜ்கள்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன் மூலமான சுய-ஆய்வு முறையில் துரிதமான, ஆவணங்களற்ற கிளைம்கள்

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

டூ வீலர் கிளைம்களை நிறைவேற்றுவதற்கு சராசரியாக 11 நாட்கள் எடுத்துக் கொள்கிறது

உங்கள் வாகன IDV-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் வாகன IDV-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன IDV-ஐ எங்களுடன் இணைந்து தனிப்பயனாக்கலாம்!

24*7 மணிநேர சேவை

24*7 மணிநேர சேவை

தேசிய விடுமுறைகளில் கூட தொடர்புகொள்வதற்கு 24*7 மணிநேர வசதிகள்

சொந்த சேத பைக் இன்சூரன்ஸுக்கான கிளைமிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

எங்களுடைய ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸ் பிளான்-ஐ நீங்கள் வாங்கிய அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் பதற்றமின்றி வாழலாம், ஏனென்றால் எங்களுடைய 3-படி கிளைம் நடைமுறை முழுமையாக டிஜிட்டல்மயமானது!

படி 1

1800-258-5956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். படிவங்கள் எதையும் பூர்த்தி செய்ய தேவையில்லை.

படி 2

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய-ஆய்விற்கான லிங்க்-இனை பெறவும். கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் படி, உங்கள் ஸ்மார்ட்ஃபோன்-இல் உங்கள் வண்டிக்கு ஏற்பட்ட சேதங்களை படம் பிடிக்கவும்.

படி 3

நீங்கள் விரும்பும் வழியிலான ரிப்பேர்-ஐ தேர்வு செய்யவும், அதாவது எங்களுடைய கேராஜ் நெட்வொர்க்-கிலிருந்து செலவு செய்த பணத்தை திரும்ப பெறுதல்(reimbursement) அல்லது கேஷ்லெஸ் சேவையை பெறுவது

Report Card

எவ்வளவு விரைவாக டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினை மாற்றும் நேரத்தில் உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். இந்த கேள்வியை நீங்கள் எழுப்புவது சரியே!

டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்

சொந்த சேத பைக் இன்சூரன்ஸின் பிரீமியம் கணக்கீடு

உங்கள் ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கின்ற காரணிகள்

சொந்த சேத பாலிசியில், உங்கள் பைக் சிசி மற்றும் உங்கள் பைக்-கின் ஐடிவியை வைத்து தான் உங்கள் பைக் பிரீமியம் கணக்கிடப்படுகிறது. அது மட்டுமின்றி, உங்கள் சொந்த சேத காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிடும் போது, கீழ்க்கண்ட காரணிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன:

ஐடிவி

ஐடிவி என்பது உங்கள் பைக்-கின் சரியான சந்தை மதிப்பினை குறிக்கின்றது. எனவே, உங்கள் பைக்-கின் ஓ.டி(OD) பிரீமியம் பெருமளவு இதனை சார்ந்தே இருக்கும்.

பைக்-கின் சிசி

உங்கள் பைக்-கின் வேகத்தை தீர்மானிப்பது சிசி தான், எனவே அதன் அபாயத்தையும் தீர்மானிக்கிறது. அதனால், உங்கள் பைக்-கின் சிசியும் உங்கள்  ஓ.டி(OD) பிரீமியத்தை பாதிக்கும். சிசி அதிகம் என்றால், ஓ.டி(OD) பிரீமியம் அதிகரிக்கும். அது போலவே சிசி குறைவு என்றால், ஓ.டி(OD) பிரீமியம் குறையும்.

பைக்-இன் மேக் மற்றும் மாடல்

உங்கள் பைக்கின் மேக் மற்றும் மாடல் உங்கள்  ஓ.டி(OD) பிரீமியத்தை நேரடியாக பாதிக்கும் என்பது நாம் நன்கு அறிந்ததே. உங்கள் பைக்கிற்கான பிரீமியம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவு அதிகமாக அதன் OD பிரீமியமும் இருக்கும்.

பைக்-கின் வயது

பைக் பழையது என்றால், அதன் ஓ.டி(OD) பிரீமியம் குறைவாக இருக்கும். மற்றும் பைக் புதிது என்றால், அதன் ஓ.டி(OD) பிரீமியம் அதிகமாக இருக்கும்.

நோ கிளைம் போனஸ்

உங்களிடம் முன்னமேயே காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸின் சொந்த சேத கவர் இருந்து, நீங்கள் இது நாள் வரை எந்த கிளைமும் செய்யவில்லையென்றால், உங்கள் தற்போதைய ஓ.டி(OD) பிரீமியத்தில் தள்ளுபடி பெறுவதற்கு உங்கள் திரட்டப்பட்ட நோ கிளைம் போனஸை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்-ஆன்கள்

ஒவ்வொரு ஆட்-ஆனும் வெவ்வேறானது. அதனால், நீங்கள் தேர்வு செய்யும் ஆட்-ஆன் வகையை பொறுத்தும், ஆட்-ஆன்களின் எண்ணிக்கையை பொறுத்தும், உங்கள் ஓ.டி(OD) பிரீமியம் அதற்கேற்றவாறு பாதிப்படையும்.

ஒப்பிடவும்: தேர்டு பார்ட்டி, சொந்த சேதம் மற்றும் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ்

சொந்த சேத பைக் இன்சூரன்ஸ்

காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது, மிக அடிப்படையான ஒரு வகை பைக் இன்சூரன்ஸ் ஆகும். மோட்டார் வாகன சட்டப்படி, ஒவ்வொரு பைக் உரிமையாளரிடமும் சட்டப்படி வண்டி ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் ஒரு தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.l

சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் என்பது, பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கி பாதுகாப்பளிக்கும் ஒரு தனித்தியங்கும் பைக் இன்சூரன்ஸ் பாலிசியாகும்.

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் மற்றும் சொந்த சேத கவர் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்தால், உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் இருக்கும். இது தேர்டு பார்ட்டியினர் மற்றும் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்களுக்கும் இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கிறது.

தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ்(பொறுப்புகள்)-ற்கு பாதுகாப்பளிக்கும் பைக் இன்சூரன்ஸை சட்டப்படி கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பது சட்டப்படி கட்டாயமல்ல. ஆனால் இது ஒருவரின் தனிப்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பளிப்பதால், வண்டி ஓட்டுபவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் கூட கட்டாயமானதல்ல. ஆனாலும், அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் பாதுகாப்பளிப்பதால், இது தான் கிடைக்கபெறுவதிலேயே சிறந்த பாலிசியாகும்.

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான தகுதி எல்லா பைக்கிற்கும் இருக்கிறது.

நடைமுறையில் உள்ள தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பவர் மட்டுமே, தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸை வாங்க முடியும்.

பைக் வைத்திருக்கும் அனைவருமே காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் பாலிசி பெறுவதற்கு தகுதியுடைவரகள் தான். எனினும், காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் அனைத்திற்குமான பாதுகாப்பளிப்பதால், நீங்கள் வேறெந்த பைக் இன்சூரன்ஸ் பாலிசியும் வாங்கத் தேவையில்லை என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

இந்த பாலிசியுடன் எந்த ஆட்-ஆன்களும் கிடையாது.

ஆட்-ஆன்கள் கிடைக்கப்பெறும்.

ஆட்-ஆன்கள் கிடைக்கப்பெறும்

சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்