Third-party premium has changed from 1st June. Renew now
டூ வீலர் இன்சூரன்ஸில் ஆட்-ஆன் கவர் என்றால் என்ன?
நம்மில் பலருக்கு நாம் நேசிக்கும் டூ வீலருக்கு ‘காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸ்’ மட்டுமே போதுமானது என்று நினைப்போம். ஏன் என்றால் தேவையான எல்லா பாதுகாப்பையும் இது அளிக்கும் என்று நம்புகிறோம். அது உண்மையாகவே முழுமையாக பாதுகாக்கிறதா?
சரி, இதை இப்படிப் பாருங்கள். உங்களுக்கு பிடித்த பீட்சாவை ஆர்டர் செய்கிறீர்கள், அது எப்படியும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால், அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆலிவ் அல்லது பிக்கிள்ட் பெப்பர் அல்லது சில துளிகள் டபாஸ்கோ சாஸ் போன்ற டாப்பிங்ஸை கூடுதலாக சேர்க்கும் போது அது இன்னும் நன்றாக இருக்கும். சரி தானே? உண்மையில் இதைக் கேட்கும் போதே உங்கள் வாயில் எச்சில் ஊருகிறது, இல்லையா!😊
உங்கள் டூ வீலருக்கான ‘காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ்' உடன் வரும் ஆட்-ஆன்களும் இது போலத்தான் செயல்படும். உங்கள் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மூலம் சிறந்த பாதுகாப்பை பெறுவதற்காக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீங்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக பல வகையான ஆட்-ஆன்களை உங்களுக்காக வழங்குகின்றன!
நாங்கள் இங்கே அருமையான ஐந்து ஆட்-ஆன் கவர்களை டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியோடு எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம். இருப்பினும், இந்த ஆட்-ஆன்கள் உங்கள் அடிப்படை இன்சூரன்ஸ் பாலிசியை விட சற்று அதிகமான பிரீமியத்தில் வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை உங்கள் பர்ஸுக்கு வேட்டு வைக்கும் என்று கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் தகுந்த பயனை அவை அளிக்கும்!
குறிப்பு: ஆட்-ஆன்களோடு சேர்த்து பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்-ஐப் பயன்படுத்தி கணக்கிடவும்.
டிஜிட்-ன் டூ வீலர் இன்சூரன்ஸ் உடன் கிடைக்கும் ஆட்-ஆன்கள்
பெரும்பாலான சூழலில் விபத்துக்குப் பிறகு, தேய்மானம் மற்றும் புதிய ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதற்கு ஆகும் செலவுகளை பைக்கின் உரிமையாளர் செய்வார். இருப்பினும், இந்தச் செலவையும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒருவர் பெற விரும்பினால், தற்போதுள்ள இன்சூரன்ஸ் பிளான் உடன் சேர்த்து நில் அல்லது ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) ஆட்-ஆன் கவரை வாங்க வேண்டும். இதை வாங்குவதன் மூலம் இந்த கவரின் பலனை நீங்கள் அனுபவிக்கலாம்.
ரோட்சைட் அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் கவரானது டூ வீலருடன் சாலையில் இருக்கும் போது உங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு சென்று அடைய உதவும் வகையில் டாக்ஸி சேவை முதல் உங்கள் பைக்கை அந்த இடத்திலிருந்து இழுத்துச் செல்லும் (டோவ்விங்) வரை பல நன்மைகளை இந்த கவர் வழங்குகிறது. நகரிலிருந்து 500 கிமீ சுற்றளவில் இருக்கும் எந்த இடத்தில் சிக்கித் தவிக்கும் எவருக்கும் நாங்கள் ரோட்சைட் அஸ்சிஸ்டன்ஸ் வழங்குகிறோம்.
கிளைம் செய்யும் போது, பொதுவாக ஆயில், நட்ஸ், போல்ட் போன்ற கன்ஸ்யூமபில்ஸ் இன்சூரன்ஸில் கவர் ஆகாது. சிறியதாக இருந்தாலும் அனைத்து கன்ஸ்யூமபில்களையும் இந்த ஆட்-ஆன் மூலம் நீங்கள் கவர் செய்ய முடியும்! விபத்தினால் ஏற்பட்ட சேதத்தின் விளைவினால் பயன்படுத்தத் தகுதியற்ற கன்ஸ்யூமபில்களுக்கான செலவுகளையும் இது கவர் செய்யும்.
டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில், விபத்தின் போது ஏற்படும் சேதங்களுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கப்படும். இருப்பினும், பல முறை விபத்தின் பின்விளைவாக உங்கள் என்ஜினில் பழுது ஏற்பட்டிருக்கலாம். இது போன்ற சேதங்களைப் பாதுகாக்க இந்த ஆட் ஆன் உதவுகிறது. லூப்ரிகேட்டிங் ஆயில் லீக்கேஜ் அல்லது இயற்கை பேரிடர்கள் காரணமாக என்ஜினுக்குள் தண்ணீர் புகுதல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய சேதங்களை என்ஜின் புரொட்டெக்ஷன் கவர் செய்கிறது.
உங்கள் பைக் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடையும் நிலையானது வண்டி ஓட்டுபவருக்கு ஏற்படக்கூடிய மிகவும் மோசமான நிலை! அதாவது, கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு விபத்து. இது போன்ற சில தவிர்க்கமுடியாத நிகழ்வுகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முழு தொகையைத் திருப்பித் தரும்.
உங்கள் டூ வீலரின் டயர் சேதமடைந்தால் இந்த ஆட்-ஆன் கவர் உங்களுக்கு உதவுகிறது. பழுதடைந்த டயரைப் புதியதாக மாற்றுவதற்கு ஆகும் செலவையும், வீல் பேலன்சிங் மற்றும் டயரை மாற்றும் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கான கட்டணங்களையும் இந்த கவர் திருப்பித் தரும்.
இந்த ஆட்-ஆன் கவரின்படி, வாகனத்தைப் பழுதுபார்க்கும் போது அதைப் பயன்படுத்த முடியாததால், அதற்காக டிஜிட் பாலிசிதாரருக்கு நிலையான அலவன்ஸை செலுத்தும் அல்லது தெரிந்த டாக்ஸி ஆபரேட்டர்களிடமிருந்து கூப்பன்களை வழங்கும். டூ வீலர் விபத்துக்குள்ளாகி, இன்சூரன்ஸ் பாலிசியின் படி ‘சொந்த சேதம்’ என்பதன் கீழ் கிளைம் கோரப்பட்டிருந்தால் மட்டுமே இது பொருந்தும்.
ஒவ்வொரு நாளும், நீங்கள் முழு மன அமைதியுடன் எந்த பயமும் இன்றி உங்கள் வண்டியை ஓட்டிச் செல்லலாம். ஏனென்றால், ஆட் ஆன் கவர் வைத்திருப்பதினால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்😊!