டூ வீலர் இன்சூரன்ஸில் ஆட்-ஆன் கவர் என்றால் என்ன?
நம்மில் பலருக்கு நாம் நேசிக்கும் டூ வீலருக்கு ‘காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸ்’ மட்டுமே போதுமானது என்று நினைப்போம். ஏன் என்றால் தேவையான எல்லா பாதுகாப்பையும் இது அளிக்கும் என்று நம்புகிறோம். அது உண்மையாகவே முழுமையாக பாதுகாக்கிறதா?
சரி, இதை இப்படிப் பாருங்கள். உங்களுக்கு பிடித்த பீட்சாவை ஆர்டர் செய்கிறீர்கள், அது எப்படியும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால், அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆலிவ் அல்லது பிக்கிள்ட் பெப்பர் அல்லது சில துளிகள் டபாஸ்கோ சாஸ் போன்ற டாப்பிங்ஸை கூடுதலாக சேர்க்கும் போது அது இன்னும் நன்றாக இருக்கும். சரி தானே? உண்மையில் இதைக் கேட்கும் போதே உங்கள் வாயில் எச்சில் ஊருகிறது, இல்லையா!😊
உங்கள் டூ வீலருக்கான ‘காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ்' உடன் வரும் ஆட்-ஆன்களும் இது போலத்தான் செயல்படும். உங்கள் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மூலம் சிறந்த பாதுகாப்பை பெறுவதற்காக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீங்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக பல வகையான ஆட்-ஆன்களை உங்களுக்காக வழங்குகின்றன!
நாங்கள் இங்கே அருமையான ஐந்து ஆட்-ஆன் கவர்களை டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியோடு எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம். இருப்பினும், இந்த ஆட்-ஆன்கள் உங்கள் அடிப்படை இன்சூரன்ஸ் பாலிசியை விட சற்று அதிகமான பிரீமியத்தில் வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை உங்கள் பர்ஸுக்கு வேட்டு வைக்கும் என்று கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் தகுந்த பயனை அவை அளிக்கும்!
குறிப்பு: ஆட்-ஆன்களோடு சேர்த்து பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்-ஐப் பயன்படுத்தி கணக்கிடவும்.
டிஜிட்-ன் டூ வீலர் இன்சூரன்ஸ் உடன் கிடைக்கும் ஆட்-ஆன்கள்
ஒவ்வொரு நாளும், நீங்கள் முழு மன அமைதியுடன் எந்த பயமும் இன்றி உங்கள் வண்டியை ஓட்டிச் செல்லலாம். ஏனென்றால், ஆட் ஆன் கவர் வைத்திருப்பதினால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்😊!