காலாவதியான கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பித்தல்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
உங்கள் காரை பராமரிக்கின்ற அதே வேளையில், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் ஒன்று என்னவென்றால், அது உங்களுடைய கார் இன்சூரன்ஸை சரியான நேரத்தில் புதுப்பிப்பது தான். உங்கள் காரை நல்ல முறையில் பராமரிப்பதற்கு நீங்கள் இவ்வளவு மெனக்கெடும் வேளையில், நீங்கள் உங்களுக்கு நேரக் கூடிய ஏதேனும் எதிர்பாரா சங்கடங்களிலிருந்து உங்கள் காரை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கும், வீண் பணச் செலவுகளை தவிர்ப்பதற்கும் இது உதவுகிறது.
கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது, விபத்துகள், இயற்கை பேரிடர்கள், திருட்டு மற்றும் தீவிபத்து போன்ற எதிர்பாராமல் நேரும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்தும் உங்களுக்கு காப்புறுதி அளிப்பதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி, சட்டத்தின் பிடியிலிருந்தும் உங்களை காப்பாற்றுகிறது.
பொதுவாக, கார் இன்சூரன்ஸ் என்பது ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேற்பட்ட பாலிசி காலத்துடன் வருகிறது. அதற்கு, பிறகு நீங்கள் அதனை காலாவதியாகும் தேதியன்று அல்லது அதற்கு முன்னதாகவே புதுப்பிக்க வேண்டியிருக்கும். எனினும், உங்கள் கார் இன்சூரன்ஸானது நீண்ட காலத்திற்கு முன்னரே காலாவதியாகி விட்டாலும் கூட, உங்கள் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஆன்லைனிலேயே தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் உட்பட, அனைத்து பொருட்களுமே காலாவதித் தேதியுடன் தான் வருகின்றன. அது காலாவதியாகி விட்டால் என்ன ஆகுமென்று சொல்வது எளிது, அதாவது இன்சூரன்ஸின் பலன்கள் எதுவும் உங்களுக்குக் கிடைக்கப்பெறாது!
எனவே, உங்கள் கார் இன்சூரன்ஸ் காலாவதியாகி நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லையென்றால், கீழ்க்கண்ட சில நன்மைகளை நீங்கள் இழந்து விடுவீர்கள்:
பொதுவாக, மக்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது அல்லது புதுப்பிப்பதின் முக்கியமான காரணங்களில் ஒன்று என்னவென்றால், காரினால் அல்லது காருக்கு நேரக் கூடிய எதிர்பாரா சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்காக தான்.
எனவே, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகி விட்டால், எந்தவொரு இழப்பீட்டினை பெறுவதற்கானத் தகுதியையும் நீங்கள் இழந்துவிடுகிறீர்கள்.
கார் உரிமையாளர்கள் பலர், கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவார்கள் (குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸை வாங்குவார்கள்). ஏனென்றால், இது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கார் இன்சூரன்ஸ் இல்லையென்றால், கார் உரிமையாளர்கள் ரூ.1000-லிருந்து ரூ.2000 வரை அபராதம் செலுத்த நேரிடலாம். உங்கள் கார் இன்சூரன்ஸ் காலாவதியான சமயத்தில் நீங்கள் ஒரு வேளை பிடிபட நேரிட்டால், நீங்கள் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும்.
நீங்கள் முன்னமே கார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருந்தீர்களானால், உங்களுக்கு ‘நோ கிளைம் போனஸை’ பற்றி தெரிந்திருக்கும். நோ கிளைம் போனஸ் என்பது, நீங்கள் கடந்த பாலிசி ஆண்டில் எந்த கிளைம்களையும் செய்திருக்காத பட்சத்தில், உங்கள் கார் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு பிரீமியம் தொகையின் மீது உங்களுக்குக் கிடைக்கப்பெறும் தள்ளுபடியை குறிக்கிறது.
எனவே, இந்த பலன் கிடைக்கப்பெறுவதற்கு, நீங்கள் உங்களுடைய பாலிசியானது காலாவதியாவதற்கு முன்னரே கண்டிப்பாக அதனை புதுப்பித்து விட வேண்டும். ஒரு வேளை உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியானதற்கு பின்னர், நீங்கள் அதனை புதுப்பித்தீர்களானால், கெடுவாய்ப்பாக, இந்த தள்ளுபடி பெறும் பலனை நீங்கள் இழக்க நேரிடும்.
உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(விரிவான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிப்பதற்கு நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுடைய தற்போதைய பாலிசி ஏற்கனவே காலாவதியாகி இருக்கும் பட்சத்தில், பாலிசியை புதுப்பிக்கும் சமயத்தில், நீங்கள் சுய-ஆய்வு நடைமுறையை மீண்டும் முதலிலிருந்து செய்ய வேண்டியிருக்கும்.
டிஜிட்-இல் ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்யப்படும் புதுப்பிப்பு நடைமுறைகள் மிக எளிமையானது தான். எனினும், நீங்கள் பாலிசி காலாவதியாவதற்கு முன்னரே இதனை செய்யும் போது எடுத்துக் கொள்ளும் காலஅவகாசத்தை விடவும், உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(விரிவான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை தற்போது, பாலிசி காலாவதியானதற்கு பின்னர் புதுப்பிப்பதற்கு ஆகும் காலம் சற்று கூடுதலாக இருக்கும்.
எனவே தான், எப்போதுமே சரியான நேரத்தில் கார் இன்சூரன்ஸை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கு முன்னமேயே கூட புதுப்பித்துக் கொள்ளலாம். எனினும், நீங்கள் இன்னும் இதனை செய்யவில்லையென்றாலும் கூட, தற்போது கூட ஒன்றும் தாமதமாகி விடவில்லை! காலாவதியான இன்சூரன்ஸை டிஜிட்-இல் ஆன்லைனிலேயே புதுப்பிப்பது பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு வாசிக்கவும்.
உங்களுடைய காலாவதியான கார் இன்சூரன்ஸை ஆன்லைனிலேயே நீங்கள் புதுப்பிக்க விரும்பினால், இதோ அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசியை இந்த முறை டிஜிட்-இல் வாங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நாங்கள் எந்த விதத்தில் மாறுபட்டிருக்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும்…
உங்கள் இன்சூரன்ஸின் காலாவதித் தேதி நெருங்கும் போது, உடனடியாக நீங்கள் உங்களுடைய கார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்து விட வேண்டும். எனினும், சில சமயங்களில், உங்களுக்கு கால தாமதம் ஏற்பட்டு விடலாம், அது எங்களுக்கு நன்றாக புரிகிறது.
நீங்கள் முடிவெடுப்பதற்கு முன்னர், கார் இன்சூரர்கள் சிலர் பற்றி ஆய்வு செய்ய விரும்பலாம் அல்லது, உங்களுடைய பின்னணி குறித்த சோதனைக்கும், சுய-ஆய்வு நடைமுறைக்கும் சிறிது கால அவகாசம் உங்களுக்குத் தேவைப்படலாம்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி ஏற்கனவே காலாவதியாகி இருந்தாலோ அல்லது இன்னும் செயல்பட தொடங்கவில்லையென்றாலோ, உங்களையும், உங்கள் காரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்.