Third-party premium has changed from 1st June. Renew now
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் அனைத்து நன்மைகளையும் பெற அனுமதிக்கிறது, அதாவது ஒரு விபத்திற்குப் பிறகு சொந்த செலவில் உங்கள் காரை சரி செய்ய முடியும்.
காரை பழுதுபார்ப்பதற்கான பில்கள் எங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும் (இன்சூரன்ஸ் நிறுவனம்), நாங்கள் கேரேஜுக்கு பில்களை செட்டில் செய்வோம். எனவே, நீங்கள் வெறுமனே எங்கள் கேஷ்லெஸ் நெட்வொர்க்கின் எந்த கேரேஜ்களுக்கும் சென்று, உங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் உங்கள் காரை சரிசெய்ய முடியும் (உங்கள் டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) தவிர).
வழக்கமான இழப்பீடு கிளைம்களுடன் ஒப்பிடுகையில், கேஷ்லெஸ் கிளைம் மிக விரைவானது, எளிதானது மற்றும் எந்த வித தொந்தரவும் இல்லாதது. டிஜிட்டில், நாங்கள் 6 மாத உத்தரவாதத்துடன் வீட்டு வாசலில் பிக்கப், டிராப் செய்யும் வசதியை வழங்குகிறோம்!
ஆனால், இது உங்கள் கார் இன்சூரன்ஸில் அடங்கியுள்ள நன்மைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்கள் இன்சூரன்ஸின் கீழ் சேதங்களுக்கு காப்புறுதி இல்லை எனில், நீங்கள் உங்கள் சொந்த செலவில் தான் அதனை சரி செய்ய வேண்டும்.எடுத்துக்காட்டாக, உங்கள் எஞ்சினுக்கு ஏற்படும் நீர் சேதம் பல பேசிக் பாலிசிகளில் உள்ளடக்கப்படவில்லை.
கூடுதலாக, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) என்று பில்லில் ஒரு சிறிய பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும்.
கேஷ்லெஸ் கார் பாலிசி எவ்வாறு வேலை செய்கிறது?
பொதுவாக, கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் இன்சூரரின் உதவியுடன் நாடு முழுவதும் உள்ள கேரேஜ்களுடன் நேரடி ஒப்பந்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்கள் - நெட்வொர்க் கேரேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன - விபத்தின் காரணமாக ஏற்படும் ஏதேனும் சேதங்களுக்கு நீங்கள் கிளைம் செய்ய வேண்டுமெனில், கேஷ்லெஸ் கார் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்குகிறார்கள்.
- தற்செயலாக நேரும் ஏதேனும் விபத்தின் போது, நீங்கள் உங்களுக்கு மிகவும் அருகாமையில் கேரேஜ் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொண்டால் மட்டுமே போதும். ஏனெனில், டிஜிட்டில் இதற்கு பிக்கப், டிராப் சேவை வழங்கப்படுகிறது.
- உங்கள் இன்சூரருக்கு தெரிவித்த பின்னர், நீங்கள் காரை பழுதுபார்ப்பது மற்றும் கேஷ்லெஸ் கிளைம் செட்டில்மென்ட் செயல்முறையைத் தொடங்குவது முதலியவற்றை நெட்வொர்க் கேரேஜுடம் விட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.
- பழுபார்க்கப்பட்ட உடன் பில் நேரடியாக இன்சூரருக்கு அனுப்பி வைக்கப்படும்.
- பில்லின் பெரும்பாலான பகுதி இன்சூரரால் செலுதித்தப்பட்டாலும், டிடக்டபிள் மற்றும் ஏதேனும் பாகம் மாற்றப்பட வேண்டுமெனில் அதற்கான டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) போன்ற சிறு சிறு செலவு நீங்கள் செய்ய வேண்டி இருக்கும்.
- இதனுடன் நீங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) ஆட்-ஆன் கவரையும் தேர்வு செய்திருந்தால், டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) செலவையும் நீங்கள் செலுத்தத் தேவையில்லை.
கேஷ்லெஸ்/நெட்வொர்க் கேரேஜ் என்றால் என்ன?
இன்சூரரின் நெட்வொர்க்கின் பகுதியாக இருக்கக் கூடிய ஒரு கேரேஜில் உங்கள் கார் பழுது பார்க்கப்பட்டால் மட்டுமே கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் வேலை செய்யும். நெட்வொர்க் கேரேஜ் என்பது இன்சூரர் தங்கள் பாலிசிதாரர்களுக்கு கேஷ்லெஸ் முறையில் கார் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தைக் கொண்ட ஒரு கேரேஜ் ஆகும்.
கேஷ்லெஸ் கேரேஜ் வசதியைப் பெற, உங்களுக்கு தேவையானதெல்லாம் நீங்கள் ஒரு புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டும்.
டிஜிட்டில் நாங்கள் இதனை டோர்ஸ்டேப் பிக்கப் மற்றும் டிராப் வசதியுடன் செய்கிறோம் மற்றும் பழுது பார்ப்பதற்கு 6 மாத உத்திரவாதம் உள்ளது.
இன்சூரன்ஸை வாங்குவதற்கு முன், உங்களுக்கு அருகாமையில் கேரேஜ் உள்ளதா என்று இன்சூரர் வழங்கிய நெட்வொர்க் கேரேஜ்களின் பட்டியலைப் பார்வையிட்டு சரிபார்க்கவும். பின்னர் நீங்கள் நிம்மதியாக உட்கார்ந்து வேடிக்கைப் பாருங்கள், மீதமுள்ளவற்றைக் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
அருகாமையில் கேஷ்லெஸ் கேரேஜ்கள் இல்லையென்றால் என்ன செய்வது?
அருகாமையில் கேஷ்லெஸ் கேரேஜ்கள் இல்லையென்றாலும் கூட, எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் ஒரு ரிமோட் ஏரியாவுக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது சரியான நேரத்தில் பழுது பார்க்கும் வேலை செய்லபடும் வகையில், டிஜிட் 80% கட்டணத்தை முன்கூட்டியே நேரடியாக வொர்க்ஷாப்புக்கு அனுப்பி வைத்துவிடும்.
முழு வேலையும் முடிந்த பின்னர், எங்கள் பெயரில் இன்வாய்ஸ் எழுப்பப்பட்டிருக்கும் பட்சத்தில், டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) தவிர்த்து, நாங்கள் மீதமுள்ள கட்டணத்தை வொர்க்ஷாப்பில் செலுத்தி விடுவோம்.
டிஜிட்டின் கேஷ்லெஸ் கேரேஜ்கள்
6000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் >டிஜிட்டின் கேஷ்லெஸ் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வேண்டும்?
டிஜிட் மூலம் கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் கிளைமை எவ்வாறு செய்வது?
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கான கிளைம் செய்யும் செயல்முறை மிகவும் எளிமையானது. நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய சேவை மற்றும் பழுதுபார்க்கும் மையங்களின் பட்டியலை மட்டும் முன்பே அறிந்திருந்தால் போதும்.
- ஸ்டெப் 1 - 1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும். எந்த படிவங்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
- ஸ்டெப் 2 – நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் சேதங்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
- ஸ்டெப் 3 - நீங்கள் விரும்பும் பழுதுபார்க்கும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒன்றைப் பார்வையிட்டு, உங்கள் கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசி விவரங்களை வழங்கலாம்.
பின்பு நடக்க வேண்டிய அனைத்தையும் நெட்வொர்க் கேரேஜ் பார்த்துக் கொள்ளும். அதாவது, உங்கள் காரின் சேதத்தின் அளவை மதிப்பிடுவதிலிருந்து, அதை சரிசெய்வதற்கான செலவு, மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இன்வாய்ஸ் அனுப்புதல் என உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்!
கேஷ்லெஸ் கார் கிளைமில் ஒரு கஸ்டமருக்கு என்னென்ன செலவு ஏற்பட நேரும்?
கேஷ்லெஸ் கிளைம்கள் உண்மையில் 100% கேஷ்லெஸ் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். இன்சூரர் கவர் செய்யாத டிடக்டபிள் மற்றும் தேய்மானம் என கிளைம் செய்யும் தொகையில் ஒரு சிறிய பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும்.
டிப்ரிஸியேஷன் (தேய்மானம்)
டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) என்பது பயன்பாட்டின் காரணமாக உங்கள் கார் மற்றும் அதன் பாகங்களின் மதிப்பு குறைவதே ஆகும்.
உண்மையில், ஒரு புதிய காரை நீங்கள் ஷோரூமில் இருந்து எடுத்து வந்தாலே, அது 5% மதிப்பு மதிப்பிழந்ததாகக் கருதப்படுகிறது!
நீங்கள் கிளைம் செய்யும் போது, இன்சூரர் பொதுவாக பணம் செலுத்துவதற்கு முன் இந்த தேய்மான செலவைக் கழித்து விடுவார்.
கார் இன்சூரன்ஸில், இரண்டு வகையான தேய்மானம் உள்ளன - காரின் தேய்மானம் மற்றும் காரின் பல்வேறு பாகங்களுக்கான தேய்மானம். தேய்மானம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை ஐஆர்டிஏஐ (IRDAI) அமைத்துள்ளது.
ஏதேனும் சிறிய அளவிலான வாகன சேதம் போன்று பகுதி அளவில் இழப்பு ஏற்படும் பட்சத்தில், கார் பாகங்கள் மீதான தேய்மானம் கிளைமின் போது பரிசீலிக்கப்படும். ஒரு காரின் பாகங்கள் பின்வருமாறு வெவ்வேறு விகிதங்களில் மதிப்பிழக்கும்:
- ரப்பர் பாகங்கள், பிளாஸ்டிக் பாகங்கள், பேட்டரி, டியூப்கள் மற்றும் டயர்கள் போன்ற அதிக தேய்மானம் அடையக் கூடிய பாகங்கள். - 50%
- ஃபைபர்கிளாஸ் பாகங்கள் - 30%
- மெட்டாலிக் பாகங்கள் - 0% to 50%, வெஹிக்கிலின் வயதைப் பொறுத்து மாறுபடும்
கார் திருடு போவது போன்ற முழு-இழப்பு ஏற்படும் பட்சத்தில் தான் வாகனத்தின் தேய்மானம் செயல்பாட்டிற்கு வருகிறது. இது உங்கள் வாகனத்தின் வயதை அடிப்படையாகக் கொண்டது.
டிடக்டபிள்ஸ்
இன்சூரர் மீதமுள்ளவறிற்கு பணம் செலுத்துவதற்கு முன்பு உங்கள் சொந்த செலவில் நீங்கள் செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ் செலவினத்தின் ஒரு பகுதியே டிடக்டபிள்ஸ் ஆகும்.
கார் இன்சூரன்ஸில், இந்த டிடக்டபிள்ஸ் வழக்கமாக ஒரு கிளைம் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் ₹15,000 மதிப்புள்ள சேதங்களுக்கான கிளைம் செய்தால் மற்றும் டிடக்டபிள்ஸ் ₹1,000 என்றால்- இன்சூரர் உங்கள் கார் பழுதுபார்ப்புகளுக்கு ₹14,000 மட்டுமே செலுத்துவார்.
டிடக்டபிள்ஸ் இரண்டு வகைப்படும் - அவை டிடக்டபிள்ஸ் மற்றும் வாலண்ட்டரி ஆகும் .
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது நீங்கள் எவ்வளவு செலுத்த தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், இது ஒவ்வொரு கிளைமுக்கும் பயன்படுத்தப்படும்.
உங்கள் இன்சூரர் மொத்த வாலண்ட்டரி மற்றும் கம்பல்சரி டிடக்டபிள் தொகைக்கு மேல் உள்ள கிளைம் தொகையின் பகுதியை மட்டுமே செலுத்துவார்.
கம்பல்சரி டிடக்டபிள் - இந்த வகையான டிடக்டபிள்களில், பாலிசிதாரருக்கு மோட்டார் இன்சூரன்ஸ் கிளைமின் ஒரு பகுதியை செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஐஆர்டிஏஐ (IRDAI) வரையறுத்துள்ளதன் படி, கார் இன்சூரன்ஸில் கம்பல்சரி டிடக்டிபிளின் நிலையான மதிப்பு என்பது கார் என்ஜினின் கியூபிக் கேபாசிட்டியைப் பொறுத்து அமையும். தற்போது, அது பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
- 1,500 சிசி (cc) வரை - ரூ.1,000
- 1,500 சிசி (cc)-க்கு மேல்- ரூ. 2,000
வாலண்ட்டரி டிடக்டபிள் - வாலண்ட்டரி டிடக்டபிள் என்பது பொதுவாக இன்சூரர் செலுத்தும் தொகை தான், ஆனால் நீங்கள் அதனை சொந்தமாக செலவு செய்ய தேர்வு செய்து உள்ளீர்கள்.
நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் கவரில் வாலண்ட்டரி டிடக்டபிள் என்பதை தேர்வு செய்து இருந்தால், இது உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் குறைக்கிறது, ஏனெனில் இது இன்சூரர் பக்கத்தில் உள்ள ஆபத்துக்களைக் குறைக்கிறது.
ஆனால், உங்கள் காருக்கு ஏதேனும் சேதம் நேர்ந்தால் (இது மற்ற செலவுகளையும் பாதிக்கலாம்) நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரீஇம்பர்ஸ்மென்ட்டை விட கேஷ்லெஸ் கிளைம் சிறந்ததா?
இப்போது உங்களுக்கு கேஷ்லெஸ் கிளைம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரியும். அதனால் நீங்கள் இப்போது எது சிறந்தது என்பது பற்றி சிந்திக்கிறீர்கள் - ரீஇம்பர்ஸ்மென்ட்டை கிளைம் அல்லது கேஷ்லெஸ் கிளைம்?
இதற்கான பதிலை அறிந்து கொள்வதற்கு முன், நமக்கு ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்.
பெயர் கூறுவது போல், ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் என்பது நீங்களே பழுது பார்த்ததற்கான செலவை செய்து, பின்னர் பில் மற்றும் தகுந்த ஆவணங்கள் மூலம் நீங்கள் செலவழித்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெறுவதே ஆகும்.
இந்த இரண்டுக்கும் உள்ள முதன்மையான வித்தியாசம் என்னவென்றால், ரீஇம்பர்ஸ்மென்ட் செய்யும் பட்சத்தில் - நீங்கள் முதலில் மொத்த தொகையையும் செலவு செய்ய வேண்டும், பின்னர் கூடுதலாக பில் மற்றும் பேமெண்ட் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு பணம் வழங்கப்படும்.
ஆனால், கேஷ்லெஸ் கிளைமில், நீங்கள் சிறு தொகையை (டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் என்று ஏதேனும் இருந்தால்) நீங்கள் செலுத்த வேண்டும் மற்றும் இன்சூரரே நேரடியாக தேவையான அனைத்து கட்டணங்களையும் செலுத்தி விடுவார்.
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் நன்மைகள் யாவை?
- எந்த வித ஃபார்மேலிட்டியும் இல்லை – கேஷ்லெஸ் இல்லாத மற்ற பாலிசிகளைக் காட்டிலும், கேஷ்லெஸ் கிளைம் என்பது எந்த வித ஃபார்மேலிட்டியும் பேபர்வர்க்கும் இல்லாதது. கிளைம் செய்யும் செயல்முறையும் மிகவும் எளிமையானது, ஏனெனில் இதில் பணம் செலுத்தத் தேவையில்லை (டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் ஏதேனும் இருந்தால் தவிர)
- விரைவான கிளைம்கள் – கேஷ்லெஸ் கிளைம் உடன் கார் இன்சூரன்ஸ் வைத்திருந்தால், கிளைம் செய்வது மிக விரைவில் முடிந்து விடும். நீங்கள் உங்கள் பாலிசி விவரங்களை காட்டினால் மட்டுமே போதும், உங்கள் கார் உடனே பழுது பார்க்கப்படும்.
- கவைலை கொள்ளவே தேவையில்லை – கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸில், எல்லா பரிவர்த்தனையும் சேவை வழங்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இடையே நேரும். எனவே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கலாம்.
- பயன்படுத்துவதற்கு எளிது – டிஜிட் மூலம், கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு டோர்ஸ்டெப் பிக்கப், பழுது பார்ப்பு மற்றும் டிராப் வசதியை பழுது பார்த்தலில் 6 மாத கால உத்திரவாதத்துடன் பெறலாம்!
- கேஷ் தேவையில்லை – விபத்தில் ஏதேனும் சேதங்கள் நேர்ந்தால், அதற்கு கண்டிப்பாக செலவு அதிகமாக இருக்கும். கேஷ்லெஸ் கேரேஜ் உடன், இந்த சேதங்களை பழுது பார்க்க நீங்கள் உங்கள் சேமிப்பில் கை வைக்க வேண்டாம். அருகில் உள்ள நெட்வொர்க் கேரேஜுக்கு விரைந்து, எந்த சிரமும் இன்றி உங்கள் காரை பழுது பார்த்து விடலாம்!
- சுப்பீரியர் சேவை – பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சிறந்த சேவை மையங்களுடன் டை அப் வைத்துக் கொள்கின்றன. அதனால் உங்களுக்கு சிரமம் ஏற்படும் பட்சத்தில், சிறந்த சேவைக்கு நீங்கள் ஏதேனும் ஒரு நெட்வொர்க் கேரேஜை அணுகலாம்.
- ஒளிவுமறைவு இல்லை – கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் எந்த வித ஒளிவுமறைவும் இல்லை. எல்லாமே டிஜிட்டல் என்பதால் கிளைம் செய்வது வாங்குவது என்று எதிலுமே வெளிப்படைத் தன்மை நிறைந்து இருக்கும். இதில் எந்த வித முரண்பாடும் இல்லை மற்றும் ஏமாற்றுவதற்கு சொற்ப வாய்ப்பே உள்ளது.