கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் அனைத்து நன்மைகளையும் பெற அனுமதிக்கிறது, அதாவது ஒரு விபத்திற்குப் பிறகு சொந்த செலவில் உங்கள் காரை சரி செய்ய முடியும்.
காரை பழுதுபார்ப்பதற்கான பில்கள் எங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும் (இன்சூரன்ஸ் நிறுவனம்), நாங்கள் கேரேஜுக்கு பில்களை செட்டில் செய்வோம். எனவே, நீங்கள் வெறுமனே எங்கள் கேஷ்லெஸ் நெட்வொர்க்கின் எந்த கேரேஜ்களுக்கும் சென்று, உங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் உங்கள் காரை சரிசெய்ய முடியும் (உங்கள் டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) தவிர).
வழக்கமான இழப்பீடு கிளைம்களுடன் ஒப்பிடுகையில், கேஷ்லெஸ் கிளைம் மிக விரைவானது, எளிதானது மற்றும் எந்த வித தொந்தரவும் இல்லாதது. டிஜிட்டில், நாங்கள் 6 மாத உத்தரவாதத்துடன் வீட்டு வாசலில் பிக்கப், டிராப் செய்யும் வசதியை வழங்குகிறோம்!
ஆனால், இது உங்கள் கார் இன்சூரன்ஸில் அடங்கியுள்ள நன்மைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்கள் இன்சூரன்ஸின் கீழ் சேதங்களுக்கு காப்புறுதி இல்லை எனில், நீங்கள் உங்கள் சொந்த செலவில் தான் அதனை சரி செய்ய வேண்டும்.எடுத்துக்காட்டாக, உங்கள் எஞ்சினுக்கு ஏற்படும் நீர் சேதம் பல பேசிக் பாலிசிகளில் உள்ளடக்கப்படவில்லை.
கூடுதலாக, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) என்று பில்லில் ஒரு சிறிய பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும்.
பொதுவாக, கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் இன்சூரரின் உதவியுடன் நாடு முழுவதும் உள்ள கேரேஜ்களுடன் நேரடி ஒப்பந்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்கள் - நெட்வொர்க் கேரேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன - விபத்தின் காரணமாக ஏற்படும் ஏதேனும் சேதங்களுக்கு நீங்கள் கிளைம் செய்ய வேண்டுமெனில், கேஷ்லெஸ் கார் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்குகிறார்கள்.
இன்சூரரின் நெட்வொர்க்கின் பகுதியாக இருக்கக் கூடிய ஒரு கேரேஜில் உங்கள் கார் பழுது பார்க்கப்பட்டால் மட்டுமே கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் வேலை செய்யும். நெட்வொர்க் கேரேஜ் என்பது இன்சூரர் தங்கள் பாலிசிதாரர்களுக்கு கேஷ்லெஸ் முறையில் கார் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தைக் கொண்ட ஒரு கேரேஜ் ஆகும்.
கேஷ்லெஸ் கேரேஜ் வசதியைப் பெற, உங்களுக்கு தேவையானதெல்லாம் நீங்கள் ஒரு புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டும்.
டிஜிட்டில் நாங்கள் இதனை டோர்ஸ்டேப் பிக்கப் மற்றும் டிராப் வசதியுடன் செய்கிறோம் மற்றும் பழுது பார்ப்பதற்கு 6 மாத உத்திரவாதம் உள்ளது.
இன்சூரன்ஸை வாங்குவதற்கு முன், உங்களுக்கு அருகாமையில் கேரேஜ் உள்ளதா என்று இன்சூரர் வழங்கிய நெட்வொர்க் கேரேஜ்களின் பட்டியலைப் பார்வையிட்டு சரிபார்க்கவும். பின்னர் நீங்கள் நிம்மதியாக உட்கார்ந்து வேடிக்கைப் பாருங்கள், மீதமுள்ளவற்றைக் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
அருகாமையில் கேஷ்லெஸ் கேரேஜ்கள் இல்லையென்றாலும் கூட, எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் ஒரு ரிமோட் ஏரியாவுக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது சரியான நேரத்தில் பழுது பார்க்கும் வேலை செய்லபடும் வகையில், டிஜிட் 80% கட்டணத்தை முன்கூட்டியே நேரடியாக வொர்க்ஷாப்புக்கு அனுப்பி வைத்துவிடும்.
முழு வேலையும் முடிந்த பின்னர், எங்கள் பெயரில் இன்வாய்ஸ் எழுப்பப்பட்டிருக்கும் பட்சத்தில், டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) தவிர்த்து, நாங்கள் மீதமுள்ள கட்டணத்தை வொர்க்ஷாப்பில் செலுத்தி விடுவோம்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி (VIP) போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கான கிளைம் செய்யும் செயல்முறை மிகவும் எளிமையானது. நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய சேவை மற்றும் பழுதுபார்க்கும் மையங்களின் பட்டியலை மட்டும் முன்பே அறிந்திருந்தால் போதும்.
எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒன்றைப் பார்வையிட்டு, உங்கள் கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசி விவரங்களை வழங்கலாம்.
பின்பு நடக்க வேண்டிய அனைத்தையும் நெட்வொர்க் கேரேஜ் பார்த்துக் கொள்ளும். அதாவது, உங்கள் காரின் சேதத்தின் அளவை மதிப்பிடுவதிலிருந்து, அதை சரிசெய்வதற்கான செலவு, மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இன்வாய்ஸ் அனுப்புதல் என உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்!
கேஷ்லெஸ் கிளைம்கள் உண்மையில் 100% கேஷ்லெஸ் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். இன்சூரர் கவர் செய்யாத டிடக்டபிள் மற்றும் தேய்மானம் என கிளைம் செய்யும் தொகையில் ஒரு சிறிய பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும்.
டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) என்பது பயன்பாட்டின் காரணமாக உங்கள் கார் மற்றும் அதன் பாகங்களின் மதிப்பு குறைவதே ஆகும்.
உண்மையில், ஒரு புதிய காரை நீங்கள் ஷோரூமில் இருந்து எடுத்து வந்தாலே, அது 5% மதிப்பு மதிப்பிழந்ததாகக் கருதப்படுகிறது!
நீங்கள் கிளைம் செய்யும் போது, இன்சூரர் பொதுவாக பணம் செலுத்துவதற்கு முன் இந்த தேய்மான செலவைக் கழித்து விடுவார்.
கார் இன்சூரன்ஸில், இரண்டு வகையான தேய்மானம் உள்ளன - காரின் தேய்மானம் மற்றும் காரின் பல்வேறு பாகங்களுக்கான தேய்மானம். தேய்மானம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை ஐஆர்டிஏஐ (IRDAI) அமைத்துள்ளது.
ஏதேனும் சிறிய அளவிலான வாகன சேதம் போன்று பகுதி அளவில் இழப்பு ஏற்படும் பட்சத்தில், கார் பாகங்கள் மீதான தேய்மானம் கிளைமின் போது பரிசீலிக்கப்படும். ஒரு காரின் பாகங்கள் பின்வருமாறு வெவ்வேறு விகிதங்களில் மதிப்பிழக்கும்:
கார் திருடு போவது போன்ற முழு-இழப்பு ஏற்படும் பட்சத்தில் தான் வாகனத்தின் தேய்மானம் செயல்பாட்டிற்கு வருகிறது. இது உங்கள் வாகனத்தின் வயதை அடிப்படையாகக் கொண்டது.
இன்சூரர் மீதமுள்ளவறிற்கு பணம் செலுத்துவதற்கு முன்பு உங்கள் சொந்த செலவில் நீங்கள் செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ் செலவினத்தின் ஒரு பகுதியே டிடக்டபிள்ஸ் ஆகும்.
கார் இன்சூரன்ஸில், இந்த டிடக்டபிள்ஸ் வழக்கமாக ஒரு கிளைம் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் ₹15,000 மதிப்புள்ள சேதங்களுக்கான கிளைம் செய்தால் மற்றும் டிடக்டபிள்ஸ் ₹1,000 என்றால்- இன்சூரர் உங்கள் கார் பழுதுபார்ப்புகளுக்கு ₹14,000 மட்டுமே செலுத்துவார்.
டிடக்டபிள்ஸ் இரண்டு வகைப்படும் - அவை டிடக்டபிள்ஸ் மற்றும் வாலண்ட்டரி ஆகும் .
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது நீங்கள் எவ்வளவு செலுத்த தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், இது ஒவ்வொரு கிளைமுக்கும் பயன்படுத்தப்படும்.
உங்கள் இன்சூரர் மொத்த வாலண்ட்டரி மற்றும் கம்பல்சரி டிடக்டபிள் தொகைக்கு மேல் உள்ள கிளைம் தொகையின் பகுதியை மட்டுமே செலுத்துவார்.
கம்பல்சரி டிடக்டபிள் - இந்த வகையான டிடக்டபிள்களில், பாலிசிதாரருக்கு மோட்டார் இன்சூரன்ஸ் கிளைமின் ஒரு பகுதியை செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஐஆர்டிஏஐ (IRDAI) வரையறுத்துள்ளதன் படி, கார் இன்சூரன்ஸில் கம்பல்சரி டிடக்டிபிளின் நிலையான மதிப்பு என்பது கார் என்ஜினின் கியூபிக் கேபாசிட்டியைப் பொறுத்து அமையும். தற்போது, அது பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
வாலண்ட்டரி டிடக்டபிள் - வாலண்ட்டரி டிடக்டபிள் என்பது பொதுவாக இன்சூரர் செலுத்தும் தொகை தான், ஆனால் நீங்கள் அதனை சொந்தமாக செலவு செய்ய தேர்வு செய்து உள்ளீர்கள்.
நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் கவரில் வாலண்ட்டரி டிடக்டபிள் என்பதை தேர்வு செய்து இருந்தால், இது உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் குறைக்கிறது, ஏனெனில் இது இன்சூரர் பக்கத்தில் உள்ள ஆபத்துக்களைக் குறைக்கிறது.
ஆனால், உங்கள் காருக்கு ஏதேனும் சேதம் நேர்ந்தால் (இது மற்ற செலவுகளையும் பாதிக்கலாம்) நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்கு கேஷ்லெஸ் கிளைம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரியும். அதனால் நீங்கள் இப்போது எது சிறந்தது என்பது பற்றி சிந்திக்கிறீர்கள் - ரீஇம்பர்ஸ்மென்ட்டை கிளைம் அல்லது கேஷ்லெஸ் கிளைம்?
இதற்கான பதிலை அறிந்து கொள்வதற்கு முன், நமக்கு ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்.
பெயர் கூறுவது போல், ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் என்பது நீங்களே பழுது பார்த்ததற்கான செலவை செய்து, பின்னர் பில் மற்றும் தகுந்த ஆவணங்கள் மூலம் நீங்கள் செலவழித்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெறுவதே ஆகும்.
இந்த இரண்டுக்கும் உள்ள முதன்மையான வித்தியாசம் என்னவென்றால், ரீஇம்பர்ஸ்மென்ட் செய்யும் பட்சத்தில் - நீங்கள் முதலில் மொத்த தொகையையும் செலவு செய்ய வேண்டும், பின்னர் கூடுதலாக பில் மற்றும் பேமெண்ட் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு பணம் வழங்கப்படும்.
ஆனால், கேஷ்லெஸ் கிளைமில், நீங்கள் சிறு தொகையை (டிடக்டபிள் மற்றும் டிப்ரிஸியேஷன் என்று ஏதேனும் இருந்தால்) நீங்கள் செலுத்த வேண்டும் மற்றும் இன்சூரரே நேரடியாக தேவையான அனைத்து கட்டணங்களையும் செலுத்தி விடுவார்.