கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்

digit car insurance
usp icon

6000+ Cashless

Network Garages

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை எப்படி உபயோகிப்பது?

டிஜிட்-இன் கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை எவ்வாறு உபயோகிப்பதென்பது குறித்தும், உங்கள் காருக்கான சரியான இன்சூரன்ஸை பெறுவதனை குறித்தும் படிப்படியாக இங்கு விளக்கப்பட்டுள்ளது!

படி 1

உங்கள் காரின் மேக், மாடல், வேரியண்ட், பதிவீட்டு தேதி மற்றும் உங்கள் நகரத்தின் பெயரை உள்ளிடவும்.

படி 2

‘தோராய மதிப்பீட்டினை(quote) பெறவும்’ என்பதனை கிளிக் செய்து, உங்கள் பிளான்-ஐ தேர்வு செய்யவும்.

படி 3

தேர்டு பார்ட்டி பொறுப்பு மட்டும் என்பதையோ அல்லது காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) தொகுப்பு என்பதையோ தேர்வு செய்யவும்.

படி 4

உங்கள் கடைசி இன்சூரன்ஸ் பாலிசியை பற்றி எங்களுக்குச் சொல்லவும் - காலாவதியான தேதி, மேற்கொள்ளப்பட்ட கிளைம்கள் மற்றும் ஈட்டிய நோ கிளைம் போனஸ் ஆகியவை.

படி 5

இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தின் வலது கீழ்ப்பகுதியில் உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் காணலாம்.

படி 6

நீங்கள் திட்டமான(standard)/காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பிளான்-ஐ தேர்ந்தெடுத்திருந்தால், ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்), முழு பில் தொகை இழப்பீடு(return to invoice), கியர் மற்றும் எஞ்ஜின் பாதுகாப்பு போன்ற ஆட்-ஆன்களை(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) தேர்வு செய்வதன் மூலமாக, உங்களுடைய ஐடிவி-ஐ(IDV) அமைத்துக் கொண்டு, உங்கள் பிளான்-ஐ நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

படி 7

இப்போது பக்கத்தின் வலது பகுதியில் உங்களுடைய இறுதி கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் காணலாம்.

கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் பயன்கள்

    • சரியான ஐடிவி(IDV/இன்சூர்டு டிக்லேர்டு வேல்யூ) - உங்கள் காரின் மேக், மாடல் மற்றும் வயதுக்கு தகுந்தவாறு உங்கள் ஐடிவி-ஐ(IDV) நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் காருக்கு முழுமையான இழப்பு உண்டாவது அல்லது திருடு போகும் சமயத்தில் சரியான ஐடிவி-ஐ(IDV) வைத்திருப்பது, உங்கள் காரின் சரியான சந்தை மதிப்பினை நீங்கள் பெறுவதையும், பெருத்த இழப்புகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது.

    • சரியான ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) - சரியான ஆட்-ஆன்களுடன்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) கார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பதென்பது, மழை நாளில் உங்களை முழுதாக மறைத்துக் காக்கக் கூடிய குடை ஒன்றை வைத்திருப்பது போன்றாகும். ஆனால் பெரும்பாலான மக்கள், பிரீமியத்தின் தொகை கூடுவதனால் எந்த ஆட்-ஆன்(மதிப்புக்கூட்டல்/add-on) காப்பீடுகளையும் எடுப்பதில்லை. கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் மூலம், நீங்கள் வெவ்வேறு கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள்-ஐ(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) சேர்த்துக் கொள்ளலாம். மற்றும் பிரீமியம் தொகையினை அதிகரிப்பை சரிபார்த்து, அதற்கேற்றவாறு சரியான கூட்டுமுறையில் ஆட்-ஆன்கள்-ஐ(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) தேர்வு செய்து கொள்ளலாம்.

கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை உபயோகிப்பது ஏன் முக்கியமானதாகும்?

குருட்டாம்போக்கில் ஏதேனும் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தேர்வு செய்வதா அல்லது நீங்களே கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை கணக்கிட்டுக் கொண்டு, விபரமறிந்து முடிவு எடுப்பதா என்று உங்களுக்குக் குழப்பமாக உள்ளதா? நீங்கள் ஏன் பின் சொல்லப்பட்ட முடிவினை எடுக்க வேண்டும் என்பதையும், இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை அதன் பொருட்டு ஏன் உபயோகப்படுத்த வேண்டும் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

விலை குறைவானது, உங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறது

வெவ்வேறு கார் இன்சூரன்ஸ் பிரீமியம்களை நேரடியாக ஒப்பிட்டு பார்ப்பதற்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உதவுகிறது. இதன் மூலம் உங்களுக்கும், உங்கள் காருக்கும் விலை குறைவான இன்சூரன்ஸினை தேர்வு செய்து கொள்ளலாம்.

கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை குறைக்கிறது

கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தும் போது, சில காரணிகளின் மாற்றத்தின் மூலம் உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு அதிகமாகிறது அல்லது குறைகிறது என்பதனை நீங்கள் கவனிக்கலாம். அதற்கேற்றவாறு நீங்கள் வெவ்வேறு தேர்வுகளை முயற்சி செய்து பார்த்து, உங்களுக்கு தகுந்ததை கண்டுபிடிக்கலாம்!

விபரமறிந்த முடிவினை எடுப்பதற்கு உதவுகிறது

எல்லாவற்றுக்கும் மேலாக, இது உங்களுடைய கார். நீங்கள் குறைந்தபட்சம் அதன் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியது விபரமறிந்து கொண்டு முடிவினை எடுப்பதேயாகும். உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை நீங்களே பார்ப்பதற்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உதவுகிறது.

புதிய மற்றும் பழைய கார்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தினை கணக்கிட்டுப் பார்க்கவும்

இந்தியாவிலுள்ள கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

பொதுவான கார் இன்சூரன்ஸ் வகைகளில், தேர்டு பார்ட்டியினர் கார் இன்சூரன்ஸ் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புக்களுக்கு மட்டுமே பாதுகாப்பளிக்கப்படுகிறது.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்(முழுமையானது)

 மிகவும் மதிப்புடைய கார் இன்சூரன்ஸ் வகைகளில் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் ஒன்றாகும், தேர்டு பார்ட்டியினர் பொறுப்புகள் மட்டுமின்றி உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பளிக்கிறது.

காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் என்பது உங்கள் காருக்கு 360-டிகிரி கோணத்தில் காப்புறுதிப் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரு வகையான இன்சூரன்ஸ் திட்டமாகும். தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் இழப்புக்கள் மட்டுமின்றி உங்களின் சொந்த சேதங்களுக்கும் பாதுகாப்பளித்து, பல ஆட்-ஆன்(மதிப்புக்கூட்டல்கள்/add-on) கவர்களை அனுமதித்து, காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் மட்டுமே இவ்வளவு தனிப்பயனாக்கத்தினை அனுமதிக்கிற ஒரே கார் இன்சூரன்ஸ் திட்டமாகும். இங்கு தான் உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உபயோகப்படுகிறது. உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை பாதிக்கக்கூடிய வெவ்வேறு ஆட்-ஆன்களை(மதிப்புக்கூட்டல்/add-on) நீங்கள் இதன் மூலம் முயற்சி செய்து பார்க்கலாம் - உங்கள் முடிவை மிக எளிமையாகவும், நேர்மையாகவும் அமைத்துக் கொள்ள உதவும்.

காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் முக்கிய கூறுகளை பற்றி தெரிந்து கொள்ள மேலும் வாசிக்கவும்.

சொந்த சேதங்கள்

உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்களின் காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காக இந்த காப்பீடு, அனைத்து காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசிக்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது விபத்து அல்லது இயற்கை பேரிடர் சமயங்களில் ஏற்படும் பாதிப்புகள். உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் இதன் விலையானது, உங்கள் காரின் மேக், மாடல் மற்றும் வயதினை பொறுத்து தீர்மானிக்கப்படும். மேலும் நீங்கள் வண்டி ஓட்டுகின்ற நகரத்தினையும் பொறுத்தது.

தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் சேதங்கள்

இது சட்டப்பூர்வமானது மற்றும் சட்டப்படி கட்டாயமானது, காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசி ஆகிய இரண்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது உங்கள் கார் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்திற்கு ஏற்படுத்தக் கூடிய சேதங்களுக்கும், இழப்புக்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது. இதற்கான நஷ்டஈடு ஐஆர்டிஏஐ(IRDAI)-ஆல் முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது, மற்றும் அனைத்து பாலிசிக்களிலும் இது ஒன்றேயாகும்.

இன்சூர்டு டிக்லேர்டு வேல்யூ (ஐடிவி/IDV)

ஐடிவி/IDV என்பது உங்கள் காரின் டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) உள்ளிட்ட உங்கள் காரின் சந்தை மதிப்பாகும். உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை தீர்மானிப்பதில் உங்கள் ஐடிவி/IDV பெரும் பங்கு வகிக்கிறது. டிஜிட்-உடன் இணைந்து, நீங்கள் உங்களுடைய ஐடிவி/IDV-யை தனிப்பயனாக்கிக் கொண்டு, அது எவ்வாறு பிரீமியத்தையும், இன்சூர் செய்யப்பட்ட தொகையையும் பாதிக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

ஆட்-ஆன்(மதிப்புக்கூட்டல்கள்/add-on) கவர்கள்

காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியின் சிறப்பான அம்சமே, அதிக பாதுகாப்பின் பொருட்டு உங்கள் பாலிசியில் நீங்கள் கூடுதல் காப்பீடுகளை சேர்த்துக் கொள்வது தான். ஆட்-ஆன்களின்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) வகை மற்றும் எண்ணிக்கையை பொறுத்து உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை பாதிக்கப்படுகிறது.

கழிப்புத்தொகை

கிளைம் செய்யும் நேரத்தில் நீங்கள் செலுத்தும் தொகையே கழிப்புத்தொகை எனப்படுகிறது. உங்களுக்கு சாத்தியமான ஒன்றை நீங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் அதிக விழுக்காடு தேர்வு செய்திருந்தால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியமானது குறைவாக இருக்கும். மாறாக குறைந்த விழுக்காடு தேர்வு செய்திருந்தால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியமானது அதிகமாக இருக்கும்.

நோ கிளைம் போனஸ்

உங்கள் முதன்மையான கிளைம்-செய்யாத வருடத்தில் 20%-இல் தொடங்கி, உங்களிடமுள்ள கிளைம்-செய்யாத வருடங்களின் எண்ணிக்கையை பொறுத்தே உங்கள் நோ கிளைம் போனஸ் உள்ளது. எனவே, நோ கிளைம் போனஸ் உங்களிடம் அதிகமாக இருக்கும் போது, உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைவாக இருக்கும். அது போலவே, நோ கிளைம் போனஸ் உங்களிடம் குறைவாக இருக்கும் போது, உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாக இருக்கும்.

உங்கள் காரின் மேக் மற்றும் மாடல்

ஒவ்வொரு காரும் அதன் எஞ்ஜின், சிசி, அம்சங்கள் போன்றவற்றில் வேறுபட்டு இருப்பதால், உங்களிடமுள்ள காரின் வகையானது உங்கள் பிரீமியத்தை வெகுவாக பாதிக்கிறது. முடிவில், ஒவ்வொரு காரும் அதற்கே உரிய சொந்த அபாயங்களின் தொகுதியோடு வருவதால், பிரீமியம் தொகையும் அதற்கேற்றாற் போல வேறுபடுகிறது.

உரிமையாளர்-ஓட்டுநருக்கான தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடன்ட் கவர்)

சட்டப்படி கட்டாயமாக, தனிப்பட்ட விபத்து காப்பீடு(பிஏ கவர்) உங்களுடைய காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில் (ஒரு வேளை ஏற்கனவே உள்ளடக்கப்படவில்லையெனில்) உள்ளடக்கப்படும்.

உங்கள் காரின் வயது

எளிமையாக சொல்ல வேண்டுமெனில், உங்கள் கார் எவ்வளவு பழையதோ, அந்த அளவிற்கு உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் மலிவாக இருக்கிறது. அதே போலவே, உங்கள் கார் எவ்வளவு புதியதோ, அந்த அளவிற்கு உங்கள் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை அதிகமாக இருக்கிறது.

தேர்டு பார்ட்டியினரின் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது, சட்டப்படி, மிக அடிப்படையான ஒரு இன்சூரன்ஸ் வகையாகும். உங்கள் கார் ஒரு நபரை இடித்திருப்பது, சொத்து அல்லது வாகனத்தை சேதப்படுத்தியிருப்பது போன்ற நடவடிக்கையில், தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டும் இந்த காப்பீடு பாதுகாப்பளிக்கிறது.

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் முக்கிய கூறுகளை பற்றி தெரிந்து கொள்ள மேலும் வாசிக்கவும்.

உங்கள் காரின் சிசி(cc)

சிசி என்பது உங்கள் காரின் எஞ்ஜின் ஆற்றலை குறிக்கிறது, இது தான் உங்கள் காரின் வேகம் மற்றும் அபாயத்தினை தீர்மானிக்கிறது. தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸில், உங்கள் காரின் சிசி அதிகமாக அல்லது குறைவாக இருப்பது உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நேரடியாக பாதிக்கிறது.

உரிமையாளர்-ஓட்டுநருக்கான தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடன்ட் கவர்)

உங்களிடம் ஏற்கனவே தனிப்பட்ட விபத்து காப்பீடு இல்லையெனில், உங்கள்  தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியில் இதனை சேர்ப்பது கட்டாயமாகும். இதனால் உங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிரீமியம் சிறிதளவு அதிகரிக்கிறது.

தேர்டு பார்ட்டியின் சேதங்கள்

தேர்டு பார்ட்டியின் சேதங்களுக்கு மட்டுமே தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாதுகாப்பளிப்பதால், உங்கள் பிரீமியம் விலையை கணக்கிடும் போது உங்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பிரீமியம் பெருமளவு இதை குறித்தே கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலை

தனிப்பட்ட கார்களின் எஞ்ஜின் ஆற்றல்

பிரீமியம் விலை

1000cc - க்கு மிகாமல்

ரூ.2,094

1000cc-க்கு மேற்பட்டது, ஆனால் 1500cc-க்கு மிகாதது

ரூ.3,416

1500cc-க்கு மேற்பட்டது

ரூ.7,897

உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை குறைப்பதற்கான ஆலோசனைகள்

கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்வதன் மூலம், நீங்கள் உங்களின் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைக்கலாம்:

உங்கள் தன்னிச்சையான கழிப்புத்தொகையை அதிகரிக்கவும்

4-5 வருடங்களுக்கு மேலாக நீங்கள் எந்த கிளைமும் செய்திருக்கவில்லையென்றால், உங்கள் தன்னிச்சையான கழிப்புத்தொகையை அதிகரிப்பதற்கும், உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை குறைப்பதற்கும் நீங்கள் பார்க்கலாம்.

தொடர்புடைய ஆட்-ஆன்களை தேர்வு செய்யவும்

உங்கள் காருக்கு கூடுதல் அடுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) ஒரு சிறந்த வழியாகும், ஆனால் இது உங்கள் பிரீமியத்தையும் அதிகரிக்கிறது. எனவே எப்போதும், உங்களுக்கும், உங்கள் காருக்கும் தொடர்புடைய ஆட்-ஆன்களையே தேர்வு செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பேசவும்

உங்களுக்கு மலிவான கார் இன்சூரன்ஸ் தோராய மதிப்பீடு(quote) கிடைக்கவில்லையென்று நீங்கள் என்ணினால், இறுதி முடிவெடுப்பதற்கு முன்னர் நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தை அழைத்து பேசுவது நல்ல யோசனையாகும்.

உங்கள் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிக்கவும்

எப்போதும் காலாவதி தேதிக்கு முன்னர் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கவும். உங்கள் காருக்கு செய்யப்படும் முன்-ஆய்வு நடைமுறைக்கு அதிக நேரமெடுப்பதை இது தவிர்ப்பது மட்டுமின்றி, உங்கள் நோ கிளைம் போனஸ்-ஐ நீங்கள் உள்ளடக்கி தள்ளுபடி பெறுவதையும் இது உறுதிப்படுத்துகிறது.

நல்லதொரு வண்டி ஓட்டும் பதிவினை பராமரிக்கவும்

இது வெளிப்படையானது, ஆனால் முக்கியமானது. சாலையில் பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி, வேக-வரம்புகளில் எச்சரிக்கையாக வண்டி ஓட்டுவது விபத்துக்களை தவிர்க்க உதவும். மேலும் ஒவ்வொரு வருடமும் நீங்கள் நோ கிளைம் போனஸை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

டிஜிட் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களை விஐபி-க்களை போலவே நடத்துகிறோம், எப்படியென்று தெரிந்து கொள்ளவும்…

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வசதியாக,இந்தியா முழுவதிலும் 6000+ மேற்பட்ட கேஷ்லெஸ் நெட்வொர்க் கேராஜ்கள்

வீட்டிற்கே வந்து பிக்-அப் செய்து, ரிப்பேர் செய்து கொடுப்பது

வீட்டிற்கே வந்து பிக்-அப் செய்து, ரிப்பேர் செய்து கொடுப்பது

எங்களுடைய நெட்வொர்க் கேராஜ்-களில் ரிப்பேர் செய்தல் - 6 மாத ரிப்பேர் வாரண்டியுடன் வீட்டிற்கே வந்து பிக்-அப் செய்து, ரிப்பேர் செய்து, பின்னர் வண்டியை ஒப்படைத்து விடுவது.

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

உங்கள் ஃபோனில் சேதங்கள் குறித்து பதிவிடுங்கள், அதுவே போதுமானது

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

தனிப்பட்ட கார்களுக்கு கேட்கப்பட்ட கிளைம்களில், 96% கிளைம்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்!

உங்கள் வாகன ஐடிவி-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் வாகன ஐடிவி-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன ஐடிவி-ஐ எங்களுடன் இணைந்து தனிப்பயனாக்கலாம்!

24*7 மணிநேர சேவை

24*7 மணிநேர சேவை

தேசிய விடுமுறைகளில் கூட 24*7 மணிநேர தொடர்பு வசதிகள்

டிஜிட் வழங்கும் கார் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பயன்

பிரீமியம்

ரூ2,094-லிருந்து தொடங்குகிறது

நோ கிளைம் போனஸ்

50% வரை தள்ளுபடி

தனிப்பயனாக்கக்கூடிய ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்)

10 ஆட்-ஆன்கள் கிடைக்கப்பெறும்

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

6000+ கேரேஜ்களில் கிடைக்கும்

கிளைம் நடைமுறை

ஸ்மார்ட்ஃபோன்-எனேபிள்டு கிளைம் நடைமுறை. 7 நிமிடத்தில் ஆன்லைனில் செய்து விடலாம்!

சொந்த சேத காப்பீடு

கிடைக்கப்பெறும்

தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் சேதங்கள்

தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பற்ற பொறுப்பு, சொத்து/வாகன சேதத்திற்கு 7.5 இலட்சம் வரை வழங்கப்பெறும்

கார் இன்சூரன்ஸ் கிளைம்-ஐ எவ்வாறு தாக்கல் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளான்-ஐ நீங்கள் வாங்கிய அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் பதற்றமின்றி வாழலாம், ஏனென்றால் எங்களுடைய 3-படி கிளைம் நடைமுறை முழுமையாக டிஜிட்டல்மயமானது!

படி 1

1800-258-5956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். படிவங்கள் எதையும் பூர்த்தி செய்ய தேவையில்லை.

படி 2

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய-ஆய்விற்கான லிங்க்-இனை பெறவும். கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் படி, உங்கள் ஸ்மார்ட்ஃபோன்-இல் உங்கள் வாகன சேதங்களை படம் பிடிக்கவும்.

படி 3

நீங்கள் விரும்பும் வழியிலான ரிப்பேர்-ஐ தேர்வு செய்யவும், அதாவது எங்களுடைய கேராஜ் நெட்வொர்க்-கிலிருந்து செலவு செய்த பணத்தை திரும்ப பெறுதல்(reimbursement) அல்லது கேஷ்லெஸ் சேவையை பெறுவது.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு சீக்கிரமாக தீர்த்து வைக்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினை மாற்றும் நேரத்தில் உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். இந்த கேள்வியை நீங்கள் எழுப்புவது சரியே!

டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்

கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்