Third-party premium has changed from 1st June. Renew now
ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸை வாங்குங்கள் அல்லது ரீனியூவல் செய்யுங்கள்
ரெனோ க்விட் கார் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மினி எஸ்யூவி வடிவமைப்பினால், க்விட் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான காராக வளம் வந்தது.
இந்த காரில் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள் உள்ளன. அத்துடன் ரெனோ க்விட் கார் 799 சிசி மற்றும் 999சிசி என்ஜின் விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 67பிஹெச்பி@5500ஆர்பிஎம் பவரையும், 91என்எம்@4250ஆர்பிஎம் டார்க் திறனையும் வழங்கும். க்விட் கார் லிட்டருக்கு 20.71 கிமீ முதல் 22.30 கிமீ மைலேஜ் தரும். மேலும், இந்த மாடலில் டிரைவர் உட்பட 5 நபர்கள் அமர்வதற்கான வசதி உள்ளது.
க்விட் காரின் உட்புறத்தில் க்ரோம் இன்னர் டோர் கைப்பிடி, எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், குரோம் எச்விஏசி கன்ட்ரோல் பேனல் மற்றும் ஆன்போர்டு ட்ரிப் கம்ப்யூட்டர் ஆகியவை உள்ளன. இந்த காரின் வெளிப்புறத்தில் எல்இடி லைட் வழிகாட்டிகளுடன் கூடிய டெயில் விளக்குகள், பிளாக் ஹப் கேப், பி-பில்லர் பிளாக் பயன்பாடு மற்றும் கூரை ரயில் ஆகியவை உள்ளன.
வழிகாட்டுதல்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, உயர்வாகப் பொருத்தப்பட்ட ஸ்டாப் விளக்குகள், பின்புற ஈஎல்ஆர் சீட் பெல்ட்கள், இரண்டு வருட கொரோஷனுக்கான பாதுகாப்பு மற்றும் பின்புற கிராப் கைப்பிடிகள் போன்ற மேம்பட்ட ஓட்டுநர் பாதுகாப்பு அம்சங்களை ரெனால்ட் க்விட் கொண்டுள்ளது.
இருப்பினும், ரெனால்ட் க்விட் பல எதிர்பாராத டேமேஜ்களுக்கு ஆளாகிறது. எனவே, நீங்கள் க்விட் காரை வைத்திருந்தால் அல்லது புதிய காரை வாங்க திட்டமிட்டால், ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது கட்டாயமாகிறது. இல்லையெனில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய பல லையபிளிட்டிகளிலிருந்து பாதுகாக்க இது உதவும்.
ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுபவை யாவை?
டிஜிட்டின் ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்
தேர்டு-பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தேர்டு-பார்ட்டி வெஹிக்கலுக்கு ஏற்படும் டேமேஜ்கள் |
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
|
உங்கள் கார் திருடு போவது |
|
டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி |
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குதல் |
|
தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
எவ்வாறு கிளைம் ஃபைல் செய்வது?
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
ஸ்டெப் 1
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
ஸ்டெப் 2
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
ஸ்டெப் 3
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸுக்கு டிஜிட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதன் காரணம் என்ன?
ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன் பல காரணிகளை நன்கு அலசி ஆராய்வது அவசியம். டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரெனால்ட் க்விட் இன்சூரன்ஸிற்கு குறைந்த விலை வெஹிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குகின்றன. டிஜிட் அதன் கஸ்டமர்களுக்கு என்ன வழங்குகிறது என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்
1. பல்வேறு இன்சூரன்ஸ் பாலிசிகளின் வகைகள்
ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸ் வாங்க விரும்பும் வாகன உரிமையாளர்களுக்கு டிஜிட் இரண்டு வகையான இன்சூரன்ஸ் பாலிசி விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது. இவற்றில் பின்வருவன அடங்கும்:
- தேர்டு-பார்ட்டி பாலிசி
1988 ஆம் ஆண்டின் மோட்டார் வெஹிக்கல் ஆக்ட்டின்படி, ஒவ்வொரு கார் உரிமையாளரும் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது கட்டாயமாகும். இந்த பாலிசியின் கீழ், வெஹிக்கல் உரிமையாளரின் கார் மூன்றாம் நபருக்கோ, சொத்திற்கோ வெஹிக்கலுக்கோ டேமேஜ் ஏற்படுத்தினால் அதன் விளைவால் ஏற்படும் தேர்டு-பார்ட்டி லைபிளிட்டிகளிலிருந்து பாதுகாக்கப்படுவார். மேலும், ஏதேனும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் இருந்தால், அவற்றை டிஜிட் நிறுவனம் தீர்க்கிறது.
- காம்ப்ரிஹென்சிவ் பாலிசி
டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் க்விட் இன்சூரன்ஸ் பாலிசி கொண்ட தனிநபர்கள் தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த டேமேஜ்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் பாலிசி பிரீமியங்களுடன் பெயரளவு விலையில் பல கூடுதல் வசதிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. கேரேஜ்களின் பெரிய நெட்வொர்க்
டிஜிட் நிறுவனம் நாடு முழுவதும் பல நெட்வொர்க் கேரேஜ்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே வாகனம் தொடர்பான ஏதேனும் பிரச்சினையுடன் நீங்கள் சாலையில் மாட்டிக்கொண்டால், நீங்கள் இருக்குமிடத்தின் அருகாமையில் எப்போதுமே ஒரு நெட்வொர்க் கேரேஜைக் காண்பீர்கள். இந்த நெட்வொர்க் கேரேஜ்கள் அல்லது வொர்க்ஷாப்களைப் பார்வையிட்டு கேஷ்லெஸ் ரிப்பேரிங் மற்றும் சேவையைப் பெற்று மகிழுங்கள். டிஜிட் உங்கள் சார்பாகக் கட்டணங்களைச் செலுத்தும்.
3. 24x7 கஸ்டமர் சப்போர்ட்
டிஜிட் நிறுவனத்திடம் பொறுப்பான கஸ்டமர் சப்போர்ட் குழு உள்ளது. இன்சூரன்ஸ் அல்லது வெஹிக்கல் தொடர்பான எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளும் எவருக்கும் உதவ, தேசிய விடுமுறை நாட்களில் கூட இந்த குழு 24 மணி நேரமும் செயல்படுகிறது. 1800 258 5956 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் தெரிந்துகொள்ளலாம்.
4. எளிமையான கிளைம் ஃபைலிங் செயல்முறை
டிஜிட் நிறுவனம் மூலம் அதிக நேரம் எடுக்கும் மற்றும் கடினமான கிளைம் செய்யும் செயல்முறையைக் குறைக்கலாம். இந்த மூன்று ஸ்டெப்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக நீங்கள் கிளைம் செய்யலாம்
டிஜிட் நிறுவனம் அதன் எளிமையான 3-ஸ்டெப் கிளைம் ஃபைல் செயல்முறையினால் அதன் கஸ்டமர்களால் எழுப்பப்பட்ட அதிகபட்ச கிளைம்களை செட்டில் செய்வதில் அளப்பெரிய சாதனையைக் கொண்டுள்ளது! அதில் பின்வருபவை அடங்கும்:
- ஸ்டெப் 1 - சுய ஆய்வுக்கான இணைப்பைப் பெற 1800-258-5956 என்ற எண்ணுக்கு ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அழைக்கவும்.
- ஸ்டெப் 2 - இணைப்பில் உங்கள் டேமேஜ் ஆன காருக்கான ஃபோட்டோக்களை பதிவேற்றவும்
- ஸ்டெப் 3 - ‘ரீஇம்பர்ஸ்மென்ட்’(பணம் செலுத்தி விட்டு பின்னர் பெற்றுக் கொள்ளுதல்) மற்றும் ‘கேஷ்லெஸ்’ ரிப்பேர் முறைகளின் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. பல்வேறு அடிஷ்னல் பெனிஃபிட்கள்
ரெனோல்ட் க்விட் காருக்காக டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸைக் கொண்டிருப்பவர்கள் கூடுதல் கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம் தங்கள் பாலிசி பிரீமியங்களுடன் பல கூடுதல் வசதிகளைப் பெறலாம். இந்த ஆட்-ஆண்களில் சில பின்வருமாறு -
- கன்ஸ்யூமபில் கவரேஜ்
- ரோட்சைட் அசிஸ்டன்ஸ்
- என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன் கவர்
- டையர் புரட்டக்ஷன் கவர்
- ஜீரோ-டிப்ரிஸியேஷன் கவர்
6. இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ தனிப்பயணாக்கம்
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி) உங்கள் காரின் தற்போதைய சந்தை மதிப்பை தீர்மானிக்கிறது. டிஜிட் அதன் கஸ்டமர்களின் வசதிக்கு ஏற்ப அவர்கள் வாகனத்தின் ஐடிவியை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் பெனிஃபிட்டை வழங்குகிறது. அதிக ஐடிவி என்பது உங்கள் கார் திருடப்பட்டாலோ தீப்பிடித்தாலோ கிளைம் செய்யப்படும் அதிக இழப்பீட்டுத் தொகையைக் குறிக்கிறது, மேலும் குறைந்த ஐடிவி என்பது குறைவான பாலிசி பிரீமியங்களைக் குறிக்கிறது.
7. ஆன்லைன் இன்சூரன்ஸ் புராடக்ட்ஸ் மற்றும் சேவைகள்
டிஜிட்டின் அஃபிஷியல் வலைத்தளத்தில் அனைத்து விதமான இன்சூரன்ஸ் புராடக்ட்ஸ் மற்றும் சேவைகளையும் நீங்கள் காணலாம். எனவே நீங்கள் ரெனால்ட் க்விட் இன்சூரன்ஸ் ரீனியூவலைத் தேடுகிறீர்களானால், அஃபிஷியல் போர்ட்டலில் அதற்கு பொருத்தமான விருப்பத்தேர்வை கிளிக் செய்யுங்கள்.
மேலும், டிஜிட்டின் டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் டிராப் வசதியை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் இந்த சேவையைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் வெஹிக்கல் உங்கள் வீட்டிலிருந்து ரிப்பேர் செய்ய நெட்வொர்க் கேரேஜுக்குக் கொண்டு செல்லப்படும். தேவையான ரிப்பேர் முடிந்ததும், டிஜிட்டின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு காரை உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யும். உங்கள் வாகனம் ஓட்டமுடியாத நிலையில் இல்லாத சந்தர்ப்பங்களில் இந்த வசதி முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, உங்கள் ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.
ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?
லட்சக்கணக்கில் செலவு செய்து கார் வாங்கிய பிறகும் மேலும் அதற்கான செலவுகளை அதிகரிப்பது உங்களுக்கு நிச்சயம் பிடிக்காது. எனவே ரெனோ க்விட் கார் இன்சூரன்ஸ் உங்கள் காரைப் பாதுகாத்து, அதிக பணத்தை வீணடிப்பதில் இருந்து காப்பாற்றும். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்:
- சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுங்கள், அபராதம் செலுத்த வேண்டாம்: கார் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். முதல் முறையாக விதியை மீறினால் ரூ.2000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்/முதல் குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் ₹ 4000 வரையிலான செலுத்த வேண்டியிருக்கும்/மீண்டும் 3 மாதச் சிறை தண்டனை கிடைக்கும்.
- தேர்டு பார்ட்டி கிளைம்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் மூலம், உங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் இன்சூரரால் கவனிக்கப்படும். உங்களால் ஏற்பட்ட விபத்தில் காயமடையும் அல்லது சொத்து டேமேஜால் பாதிக்கப்படும் தேர்டு பார்ட்டியின் கிளைம்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் செலுத்தும்.
மோட்டார் வாகன சட்டத்தின்படி தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கட்டாயமாகும். ஆனால் தனித்து நிற்கும் மூன்றாம் தரப்பு பாலிசி உங்கள் காருக்கு எந்த டேமேஜையும் கவர் செய்யாது.
- காம்ப்ரிஹென்சிவ் பாலிசி மூலம் உங்கள் காரைப் பாதுகாத்திடுங்கள்: காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், உங்கள் காரின் டேமேஜ்கள் மற்றும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிக்கான இன்சூரன்ஸை நீங்கள் அனுபவிக்கலாம். இது விபத்துகள், நாசவேலைகள், கலவரங்கள், திருட்டுகள், புயல்கள், பூகம்பங்கள், வெள்ளம் போன்ற டேமேஜ்களிலிருந்து உங்கள் காரைப் பாதுகாக்கிறது.
- ஆட்-ஆன்களுடன் சிறந்த பாதுகாப்பு: உங்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் எப்போதும் ஆட்-ஆன் விருப்பத்துடன் தனிப்பயனாக்கக்கூடியது. கவரேஜை விரிவுபடுத்தும் நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பல ஆட் ஆன்கள் உள்ளன. அதாவது ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் ஆட்-ஆன் மூலம் நீங்கள் காரின் முழுமையான இழப்பை சந்தித்தால், காரின் முழு மதிப்பையும் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். என்ஜின் பாதுகாப்பு, பிரேக்டவுன் அசிஸ்டென்ஸ் போன்ற பிற ஆட்-ஆன்களை நீங்கள் ஆராயலாம்.
கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
ரெனால்ட் க்விட் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்
ரெனால்ட் க்விட் கார் என்பது உற்பத்தியாளரின் நுழைவு நிலை கார் ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறிய ஹேட்ச்பேக் கார்களில் ஆர்வம் காட்டும் அனைத்து வயதினரையும் அனைத்து இடங்களைச் சேர்ந்தவர்களையும் ஈர்க்கிறது. எளிமையாக சொல்வதானால், மினி எஸ்யூவி போன்ற ஸ்டைலிங் கொண்ட இந்த கார் இந்திய கஸ்டமர்களைக் கவர்ந்து பட்ஜெட் ஹேட்ச் மார்க்கெட்டையே ஒரு கலக்கு கலக்கியது.
இந்திய கார் சந்தையில் ஒரு புதிய இடத்தை உருவாக்குவதற்கு ரெனால்ட்டின் இந்த கார் மட்டுமே பொறுப்பாகும். இந்த காரின் மிகப்பெரிய வெற்றி மாருதியை முக்கிய இடத்தில் ஆர்வம் காட்ட வைத்தது, இதன் விளைவாக, மாருதி க்விட் உடன் போட்டியிட எஸ்-பிரெஸ்ஸோவை அறிமுகப்படுத்தியது. ஆனால் க்விட் தான் அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் மூலம் அனைவரையும் ஈர்த்தது. இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 2.83 லட்சத்தில் தொடங்குகிறது.
நீங்கள் ஏன் ரெனால்ட் க்விட் காரை வாங்கவேண்டும்?
- ஹேண்ட்ஸம் கார்: கார் ஒரு எஸ்யூவி போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதற்காக கிளாசிக் ஹாட்ச்-பேக் விகிதங்களையும் இது தவறவிடவில்லை. க்விட் காரின் சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் முன்னெப்போதையும் விட கவர்ச்சிகரமானதாக உள்ளது. முன்பக்கத்தில் பிளவு ஹெட்லேம்ப் மூலம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது, இதில் மேலே நிலையான எல்இடி டிஆர்எல்எஸ் மற்றும் கீழே உள்ள ஹெட்லைட்டுகள் உள்ளன. ஹெட்லைட்டின் தடிமனான சூழல்கள் தோற்றத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன. ஆரஞ்சு ஆக்சென்டஸ் மற்றும் ஸ்மோக்ட் க்ரே வீல் அட்டைகளின் தொடுதல் அதன் ஸ்போர்ட்டி தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
- ஃபங்கி இன்டீரியர்: க்விட் காரின் இன்டீரியர் மிகவும் ஃபங்கியாகவும், வேடிக்கையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் நிறைய வெட்டுக்கள் மற்றும் வளைவுகள் உள்ளன. டாஷ்போர்டில் உள்ள ஆரஞ்சு ஹைலைட்டுகள் சிறிய காருக்கான பிரீமியம் டச் போல தோற்றமளிக்கின்றன. கவனத்தை ஈர்க்கும் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் உள்ள லெதர் இன்சர்ட்களும் காண்போரின் ஈர்ப்பை அதிகரிக்கின்றன. தோற்றத்தைத் தவிர, க்ளோவ் பாக்ஸ் மற்றும் ஏராளமான சேமிப்பு இடங்கள் கேபினை இந்த காலத்திற்கு உகந்ததாக மாற்றுகின்றன.
- பாதுகாப்பு: இந்த கார் இந்தியாவின் சமீபத்திய கிராஷ் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குகிறது. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ரியர்வியூ கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை அடிப்படையாகவே காரில் உள்ளன. அதிக ட்ரிம்கள் கொண்ட பயணிகள் ஏர்பேக்கை நீங்கள் தேர்வு செய்யலாம்.
- செயல்திறன் மிக்க என்ஜின்: க்விட் காரில் 0.8 லிட்டர் அல்லது 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த கார் 68 குதிரைகள் வரை சக்தியை உற்பத்தி செய்து பாடி மாஸை மிக எளிதாக இழுக்கிறது. ஏராளமான இந்திய வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ற இந்த கார் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று ரெனால்ட் கூறுகிறது.
- கடினமாக வடிவமைக்கப்பட்ட கார்: க்விட் நகரத்தில் மிக லேசாக அழுத்தத்தில் அதாவது லைட் ஃபூட்டில் பயணிக்கிறது, மேலும் நீங்கள் வேகமாக ஓட்டும்போது நெடுஞ்சாலைகளில் உறுதியாக கால் பதிக்கிறது. நீங்கள் வேகமாக செல்லும்போது இந்த காரின் செங்குத்து இயக்கம் குறைவாக இருந்தாலும் சந்து பொந்துகளைப் பொறுத்த வரை உங்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.
வேரியண்ட்களுக்கான விலை பட்டியல்
வேரியண்ட்டின் பெயர் | நியூ டெல்லியில் வேரியண்ட்டுகளின் தோரயமான விலை |
---|---|
RXE | ₹ 4.11 லட்சங்கள் |
RXL | ₹ 4.41 லட்சங்கள் |
1.0 RXL | ₹ 4.58 லட்சங்கள் |
RXT | ₹ 4.71 லட்சங்கள் |
1.0 RXT Opt | ₹ 4.95 லட்சங்கள் |
1.0 RXL AMT | ₹ 4.98 லட்சங்கள் |
கிளைம்பர் 1.0 MT Opt | ₹ 5.16 லட்சங்கள் |
கிளைம்பர் 1.0 MT DT | ₹ 5.19 லட்சங்கள் |
1.0 RXT AMT Opt | ₹ 5.35 லட்சங்கள் |
கிளைம்பர் 1.0 AMT Opt | ₹ 5.56 லட்சங்கள் |
கிளைம்பர் 1.0 AMT Opt DT | ₹ 5.59 லட்சங்கள் |
[1]
அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்
டிஜிட்டின் கஸ்டமர் சப்போர்ட் குழுவை நான் எப்போது அழைக்கலாம்?
டிஜிட்டின் கஸ்டமர் சப்போர்ட் குழு தேசிய விடுமுறை நாட்களில் கூட 24 மணி நேரமும் செயல்படுகிறது. 1800 258 5956 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சினைகளை சிறிது நேரத்தில் தீர்த்துக் கொள்ளுங்கள்.
டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் எனக்கு சொந்த டேமேஜுக்கான கவரேஜ் கிடைக்குமா?
ஆம், காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியானது அனைத்து தேர்டுபார்ட்டி மற்றும் சொந்த டேமேஜுக்கான லையபிளிட்டிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.