ரெனால்ட் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
1899 இல் நிறுவப்பட்டது, ரெனால்ட் குழுமம் ஒரு பிரெஞ்சு பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும். சமீப காலங்களில் கார்கள் மற்றும் வேன்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் அது வரை லாரிகள், டாங்கிகள், டிராக்டர்கள், விமான என்ஜின்கள் மற்றும் ஆட்டோரயில் வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, உற்பத்தி அளவின் அடிப்படையில் இது உலகின் ஒன்பதாவது பெரிய வாகன உற்பத்தியாளராக ஆனது.
மேலும், ரெனால்ட் கார்கள் ரேலியிங், ஃபார்முலா 1 மற்றும் ஃபார்முலா ஈ போன்ற மோட்டார்ஸ்போர்ட் நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றன. டிசம்பர் 2019 இல் உலகம் முழுவதும் 2,73,000 யூனிட் மின்சார வாகனங்களை விற்பனை செய்ததற்காக இந்நிறுவனம் அறியப்படுகிறது.
இந்த பன்னாட்டு நிறுவனமான ரெனால்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனம் அக்டோபர் 2005 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக நான்கு ரெனால்ட் கார் மாடல்களைக் கொண்டு வந்துள்ளது. சென்னையில் உற்பத்தி வசதி கொண்ட இந்நிறுவனம், ஆண்டுக்கு 4,80,000 யூனிட் ரெனால்ட் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரின் இந்திய துணை நிறுவனம் இந்தியா முழுவதும் 89,000 யூனிட் ரெனால்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. எனவே, இந்த பிராண்டின் கார் மாடல்களுக்கு இந்திய மோட்டாரிஸ்டுகளிடையே மவுசு உள்ளது தெளிவாகிறது.
நீங்கள் ரெனால்ட் கார்களில் ஒன்றை வைத்திருந்தால், ரெனால்ட் கார் இன்சூரன்ஸைப் பெறுவது அல்லது ரீனியூவல் செய்வது பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டும். விபத்து அல்லது பிற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் உங்கள் காருக்கு டேமேஜ் ஏற்பட்டால், கார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது செலவுகலை எளிதாக்குகிறது. முறையான இன்சூரன்ஸ் இல்லாவிடில், ரிப்பேர் செலவுகள் அனைத்திற்கும் உங்கள் பாக்கெட்டில் இருந்து தான் கொடுக்க வேண்டும்.
கூடுதலாக, மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988 கடுமையான அபராதத்தைத் தவிர்க்க குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது அவசியமாக்குகிறது. எனவே, ரெனால்ட் நிறுவனத்திற்கான கார் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம், நீங்கள் நிதி மற்றும் லீகல் லையபிளிட்டிகளைக் குறைக்கலாம்.
உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வழங்குகின்றன. முந்தைய பாலிசி, தேர்டு பார்ட்டி டேமேஜ்களை மட்டுமே கவர் செய்கிறது, அதேசமயம்; பிந்தையது தேர்டு பார்ட்டியுடன் சொந்த கார் டேமேஜ்களையும் கவர் செய்கிறது. தவிர, இன்சூரர்கள் உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தில் பல சேவைப் பலன்களை வழங்குகிறார்கள். அதிகபட்ச நன்மைகளுடன் வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
எளிதாக முடிவெடுப்பதற்கு, சிக்கனமான ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் விலை, ஆட்-ஆன் நன்மைகள், தடையற்ற கிளைம் ப்ராசஸ் மற்றும் பிற நன்மைகளை கருத்தில் கொண்டு டிஜிட் இன்சூரன்ஸைப் பரிசீலிக்கலாம்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் என்னென்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் சமமாக முக்கியம், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த வித ஆச்சரியத்தையும் தராது. அத்தகைய சில சூழ்நிலைகளை இங்கே காணலாம்:
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீயினால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்ட்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
கார் திருட்டு |
×
|
✔
|
வீட்டு வாசலில் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐ.டி.வி கஸ்டமைஷேஷன் |
||
கூடுதல் பாதுகாப்பு தரும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்கள் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்.
எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!
டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்
கார் வாங்க நினைக்கிறீர்களா? குறைந்த ரிப்பேர் செலவில் வரும் நம்பகமான காரைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், ரெனால்ட் உங்களுக்கான பிராண்ட். இந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் தொடர்ந்து உயர்தர தயாரிப்புகளை வழங்கி வருகிறது. பிரான்ஸை பூர்வீகமாகக் கொண்ட இந்நிறுவனம், மேலும் ரெனால்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது ரெனால்ட் எஸ்.ஏ பிரான்ஸின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும்.
ரெனால்ட் இந்தியாவிற்கு 2005 ஆம் ஆண்டு வந்ததிலிருந்து சில சிறந்த கார் மாடல்களை வெளியிட்டுள்ளனர். இவற்றில், ரெனால்ட் டஸ்டர்,இந்திய சந்தையில் வலுவான இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. ரெனால்ட், இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு, காம்பாக்ட் எஸ்யூவி டஸ்டர், மினி-வேன்கள் ட்ரைபர் மற்றும் லாட்ஜி, சப்காம்பாக்ட் கார் க்விட் மற்றும் எஸ்யூவி கேப்டூர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கார்களையும் வழங்கியுள்ளது. ரெனால்ட் காரின் விலை ரூ. 2.83 லட்சம் இருந்து துவங்குகிறது மற்றும் டாப் வரிசையில் உள்ள காரின் விலை ரூ.12.99 லட்சம் ஆகும்.
2012 ஆம் ஆண்டில், பிராண்ட் 23 விருதுகளைப் பெற்றது, இது அதிக எண்ணிக்கையிலான விருதுகளைப் பெற்ற சிறந்த போட்டியாளர்களில் இவர்களை ஒருவராக்குகிறது. 2018 ஆம் ஆண்டில், என்டிடிவி கார் மற்றும் பைக் விருதுகளில் ரெனால்ட் கேப்டூர் "2018 ஆம் ஆண்டின் என்டிடிவி வியூவரின் சாய்ஸ் கார்" விருதை வென்றது.
கார்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் உங்கள் காரை டேமேஜ் ஆக்கலாம். இதுபோன்ற விபத்துகளின் போது கார் இன்சூரன்ஸின் நன்மைகள் உதவுகின்றன. இது தவிர, கார் இன்சூரன்ஸ்,ஒரு கட்டாயத் தேவை ஆகும். கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
ரெனால்ட் கார்களை வாங்குவதற்கான காரணங்களைக் இங்கே காணலாம்:
ரெனால்ட் தங்கள் கார்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யாததால், இது மக்களுக்கான பிராண்ட் ஆகிறது. ரிப்பேர் செய்யும் செலவு குறைவாக இருந்தாலும், கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது நன்மை பயக்கும். உங்கள் ரெனால்ட் காருக்கு நீங்கள் ஏன் இன்சூரன்ஸ் பாலிசி பெற வேண்டும் என்பதை இங்கே காணலாம்:
ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் சில காரணிகள் பின்வருமாறு:
சமீபத்தில், தேர்டு பார்ட்டி பிரீமியம் தொகை இந்திய அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளது.