ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ்

Get Instant Policy in Minutes*

Third-party premium has changed from 1st June. Renew now

ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும் அல்லது ரீனியூவல் செய்யவும்

பிரெஞ்சு உற்பத்தியாளர் ரெனால்ட் மற்றும் அதன் ருமேனிய துணை நிறுவனமான டேசியா 2010 இல் ஒரு சிறிய கிராஸ்ஓவர் எஸ்யூவி, ரெனால்ட் டஸ்டர்-ஐ அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தியது. இந்த மாடல் பல ரீனியூவல்களுக்குப் பிறகு 2012 இல் இந்தியப் பயணிகள் சந்தையில் நுழைந்தது.

இதைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட பதிப்புகளில், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மாட்யூல், ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் மற்றும் பிற டிரைவிங் பாதுகாப்பு விருப்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மற்ற வாகனங்களைப் போலவே, இந்த காரும் ஆபத்துகள் மற்றும் டேமேஜ்களுக்கு ஆளாகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஒரு நம்பகமான இன்சூரரிடமிருந்து ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸைப் பெறுவது நல்லது. எனவே பல்வேறு நன்மைகள் காரணமாக நீங்கள் டிஜிட்டை கருத்தில் கொள்ளலாம்.

மேலும் அறிய படிக்கவும்.

ரெனால்ட் டஸ்டர் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது

டிஜிட்டின் ரெனால்ட் டஸ்டர் கார் இன்சூரன்ஸை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்?

ரெனால்ட் டஸ்டருக்கான கார் இன்சூரன்ஸ் திட்டம்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீயினால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்ட்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு

×

கார் திருட்டு

×

வீட்டு வாசலில் பிக்-அப் & டிராப்

×

ஐ.டி.வி கஸ்டமைஷேஷன்

×

கூடுதல் பாதுகாப்பு தரும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்கள்

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்.

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!

ஸ்டெப் 2

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை. ரிப்போர்ட் கார்டு

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி! டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, அதிகபட்ச நன்மைகளுக்கு சில காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியம். இது சம்பந்தமாக, ஒருவர் வெவ்வேறு இன்சூரர்களின் திட்டங்களை ஒப்பிட்டு, சிறந்த இன்சூரன்ஸ் விலைகளுடன் பல சேவைப் பலன்களை வழங்கும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

தகவலறிந்த முடிவை எடுப்பதற்கு முன், டிஜிட்டின் சில சலுகைகளை இங்கே காணலாம்:

1. பல்வேறு இன்சூரன்ஸ் விருப்பங்கள்

டிஜிட் அதன் பயனர்களுக்கு பின்வரும் இன்சூரன்ஸ் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய அனுமதிக்கிறது:

  • தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ்

விபத்து அல்லது மோதலின் போது உங்கள் ரெனால்ட் கார் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது உடைமைகளுக்கு டேமேஜை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில் கடுமையான நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய லையபிளிட்டிகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் டிஜிட்டிலிருந்து ரெனால்ட் டஸ்டருக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸைப் பெற்றிருந்தால், தேர்டு பார்ட்டி விபத்துக்களில் ஏற்படும் கட்டணங்களை கவர் செய்ய இது உதவும். கூடுதலாக, மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988 இன் படி, அதிக அபராதங்களைத் தவிர்க்க, இந்த அடிப்படை இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது கட்டாயமாகும்.

  • காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ்

தேர்டு பார்ட்டி டேமேஜ்களைத் தவிர, திருட்டு, தீ, பூகம்பம் மற்றும் பிற பேரழிவுகளின் போது உங்கள் ரெனால்ட் டஸ்டர் சொந்த டேமேஜ்களை சந்திக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து, கவரேஜ் நன்மைகளைப் பெறலாம். டிஜிட்டில் இருந்து ரெனால்ட் டஸ்டருக்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸின் கீழ், உங்கள் இன்சூரர் உங்கள் சார்பாக ரிப்பேர் செலவுகளுக்கு பணம் செலுத்துகிறார் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக நிதியைச் சேமிக்க உதவுகிறார். இது தவிர, இந்த இன்சூரன்ஸ் பாலிசி தேர்டு பார்ட்டி விபத்துக்களால் ஏற்படும் டேமேஜ்களுக்கும் கவரேஜை வழங்குகிறது.

2. பல ஆட்-ஆன் பாலிசிகள்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்யும் என்றாலும், சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதற்காக, கூடுதல் கட்டணங்களுக்கு டிஜிட்டிலிருந்து ஆட்-ஆன் நன்மைகளைப் பெறலாம். உங்கள் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் விலையை அதிகரிப்பதன் மூலம் பின்வரும் கவர்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்கலாம்:

  • கன்ஸ்யூமபில் கவர்
  • ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர்
  • ரோடுசைடு அசிஸ்டன்ஸ்
  • என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன் கவர்
  • ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்

3. கேஷ்லெஸ் ரிப்பேர் செய்யும் முறை

டிஜிட் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்யும் பயனர்கள், அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜிலிருந்து ரெனால்ட் கார்களைப் ரிப்பேர் செய்யும் போது, கேஷ்லெஸ் ரிப்பேர் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதியின் கீழ், இன்சூரர் நேரடியாக மையத்தில் பணம் செலுத்துவதால், ரிப்பேர் செலவை பயனர் ஏற்க வேண்டியதில்லை.

4. எளிதான கிளைம் ஃபைலிங் ப்ராசஸ்

உங்கள் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து சுலபமாக கிளைம்களை பெறுவதற்கு டிஜிட் வழிவகுக்கிறது. இதற்கு காரணம், ஸ்மார்ட்போனிலிருந்து கிளைம்களை ஃபைல் செய்யவும் மற்றும் ரெனால்ட் டஸ்டர் டேமேஜ்களை சுய பரிசோதனை செய்யவும் உதவும் ப்ராசஸ் ஆகும். எனவே, இந்த தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ப்ராசஸின் காரணமாக நீங்கள் முழு கிளைம் ப்ராசஸையும் குறுகிய காலத்திற்குள் முடிக்க முடியும்.

5. ஏராளமான நெட்வொர்க் கேரேஜ்கள்

டிஜிட்டிலிருந்து ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் ரீனியூவலுக்குச் செல்வதன் மூலம், டேமேஜ் ரிப்பேர் ஏற்பட்டால் இந்தியா முழுவதும் உள்ள பல டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களை நீங்கள் அணுகலாம். இந்த கேரேஜ்கள் ஏராளமாக இருப்பதால், அவசரகாலத்தில் ரிப்பேர் செய்யும் மையத்தை கண்டுபிடிப்பது எளிதாகிறது. மேலும், இந்த கேரேஜ்களில் இருந்து கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம்.

6. காகிதமற்ற நடைமுறை

டிஜிட்டிலிருந்து ஆன்லைனில் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸைப் பெற முடியும் என்பதால், ஆவணங்களின் நகல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. வெற்றிகரமான இன்சூரன்ஸ் ரீனியூவல் மற்றும் கிளைம் ப்ராசஸ்க்கு தேவையான ஆவணங்களை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பதிவேற்றினால் போதும்.

7. வீட்டு வாசலில் பிக் அப் மற்றும் டிராப் வசதி

காம்ப்ரிஹென்சிவ் திட்டத்திற்கான ரெனால்ட் டஸ்டர் இன் இன்சூரன்ஸ் ரீனியூவல் விலையை செலுத்துவதன் மூலம், டிஜிட் ஆனது உங்கள் ரெனால்ட்டின் டேமேஜ் அடைந்த பாகங்களுக்கு வீட்டு வாசலில் பிக்-அப் மற்றும் டிராப் வசதியை வழங்குகிறது. இந்த வசதி உங்கள் ரெனால்ட் காரின் ரிப்பேர் செய்யும் சேவைகளை வீட்டில் இருந்தபடியே பெற உதவுகிறது.

8. ஐ.டி.வி(IDV) கஸ்டமைஷேஷன்

ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் செலவு உங்கள் காரின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவைப் பொறுத்தது. இன்சூரர்கள் இந்த மதிப்பை அதன் உற்பத்தியாளரின் விற்பனை விலையிலிருந்து காரின் டிப்ரிஸியேஷனைக் கழிப்பதன் மூலம் மதிப்பிடுகின்றனர். உங்கள் தேவைக்கேற்ப இந்த மதிப்பைத் கஸ்டமைஷேஷன் செய்ய டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. இது, கார் திருட்டு அல்லது ரிப்பேர் செய்ய முடியாத டேமேஜ் ஏற்பட்டால் உங்கள் வருமானத்தை அதிகப்படுத்த உதவுகிறது.

மேலும், டிஜிட்-இன் நம்பகமான வாடிக்கையாளர் சேவையானது ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குகிறது. தேசிய விடுமுறை நாட்களில் கூட அவை 24x7 இயங்கும். உங்கள் ரெனால்ட் காருக்கான டிஜிட் இன்சூரன்ஸைப் பெறுவதன் பலன்களைப் பற்றி இப்போது உங்களுக்குத் தெரியும், ஆன்லைனில் நீங்கள் திட்டங்களை ஒப்பிடும்போது இந்த இன்சூரரைக் கருத்தில் கொள்ளலாம்.

ரெனால்ட் டஸ்டருக்கு கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

கார் இன்சூரன்ஸ் என்பது விவேகமான ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் அடிப்படைக் கடமையாகும், ஏனெனில் இன்சூரன்ஸ் என்பது பல சூழ்நிலைகளில் நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தைச் சேமிக்கும் நிதிப் பாதுகாப்பு ஆகும். ரெனால்ட் டஸ்டர் கார் இன்சூரன்ஸ் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்:

  • விதிகளை மதித்தால், அபராதம் கிடையாது: கார் இன்சூரன்ஸ் என்பது லீகல் கடமை. இந்திய சாலைகளில் கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது. அத்தகைய குற்றத்திற்காக உங்களுக்கு ₹2000 மற்றும்/அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்வது, ஒரு த்ரில் தேடுபவராக இருப்பதை விட, புத்திசாலித்தனமான விருப்பமாகும்.

இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் பற்றி மேலும் அறியவும்

  • தேர்டு பார்ட்டியின் லையபிளிட்டிகளிலிருந்து பாதுகாப்பு: உங்கள் கவனக்குறைவால் தேர்டு பார்ட்டிக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களுடைய சொத்துக்கள் டேமேஜ் அடைந்தாலோ, விபத்துக்கு நீங்கள் பொறுப்பேற்றால், அவர்களின் இழப்பிற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். ஆனால் உங்களிடம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், உங்கள் இன்சூரர் கிளைம் தொகையை செலுத்துவது உங்களுக்கு சேமிப்பு. மேலும் மோட்டார் வெஹிக்கல் ஆக்டின்படி தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும்.
  • காம்ப்ரிஹென்சிவ் பாலிசியுடன் உங்கள் டஸ்டர் காரைப் பாதுகாக்கவும்: காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் இரண்டு வகையான கவரேஜுடன் வருகிறது. இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் உங்கள் காருக்கு ஏற்படும் டேமேஜ்களையும் உள்ளடக்கியது. ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசியுடன், எந்தவொரு மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு அல்லது இயற்கை பேரழிவுகளில் இருந்து உங்கள் காரை நீங்கள் பாதுகாக்க முடியும். இந்த பாலிசியின் கீழ் உங்கள் காருக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க, ஆட்-ஆன்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளது.

கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றி மேலும் அறியவும்.

  • ஆட்-ஆன்களுடன் கூடிய பரந்த பாதுகாப்பு: காம்ப்ரிஹென்சிவ் பாலிசியுடன் இணைந்து உங்கள் காருக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்காக ஆட்-ஆன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. என்ஜின் புரட்டெக்‌ஷன் ஆட்-ஆன் மூலம் உங்கள் என்ஜின் வெள்ள நீர் போன்ற சூழ்நிலைகளில் டேமேஜ் அடையும் போது நீங்கள் கிளைம் செய்ய உதவுகிறது. பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ், டையர் புரட்டெக்ஷன், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் போன்ற பிற ஆட்-ஆன்களையும் நீங்கள் ஆராயலாம்.

ரெனால்ட் டஸ்டர் பற்றி மேலும் அறிக

ரெனால்ட் டஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய கார் ஆர்வலர்களின் கண்ணோட்டத்தில் ஒரு எஸ்யூவியின் தேவைகள் என்று வரும்போது இது கண்களை கவர்கிறது. இந்த கார் இதுவரை 29 விருதுகள் பெற்றுள்ளது, அவற்றில் சில: இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ஐ.சி.ஓ.டி.ஒய்), பிபிசி மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் ஆண்டின் காம்பாக்ட் எஸ்யூவி, கார் இந்தியா வழங்கும் எஸ்யூவி போன்றவை.

மகத்தான வெற்றியின் காரணமாக, ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டஸ்டரின் இரண்டாம் தலைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ₹.8.00 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்குகிறது.

நீங்கள் ஏன் ரெனால்ட் டஸ்டரை வாங்க வேண்டும்?

  • ஃபேஸ் லிஃப்ட்டுடன் மாற்றப்பட்ட ஸ்டைலிங்: சமீபத்திய பாதசாரி பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க ஃப்ரண்ட் பம்பர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. பானட் லைன் உயர்த்தப்பட்டுள்ளது, இது காரை பெரிதாக காட்டுகிறது. பானட் கான்டோர் செய்யப்பட்டுள்ளது, இது காருக்கு கம்பீரத்தை சேர்க்கிறது. பெரிய குரோமால் அலங்கரிக்கப்பட்ட கிரில் இந்த கார் ஒரு எஸ்யூவி என்று தனித்துக்காட்டுகிறது. இது ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்களைக் கொண்டுள்ளது, அவை ட்ரெண்டுடன் இருக்கின்றன. கவர்ச்சிகரமான மெஷிண்டு அலாய்கள் எந்த நிலப்பரப்பிலும் உங்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. காரின் ஜன்னல்களின் அடிப்பகுதியில் இருக்கும் குரோம் ஸ்ட்ரிப் பிரீமியம் டச்.
  • உறுதியான பில்ட் தரம் மற்றும் ஸ்டோரேஜ்: நீங்கள் கார்தில் அமர்ந்து கதவை மூடியதும் கட்டமைப்பின் கம்பீரத் தரத்தை உணர்வீர்கள். அதன் ஜப்பானிய அல்லது கொரிய போட்டியாளர்களை விட பில்ட் தரம் சிறப்பாக உள்ளது. இருக்கைகள் சிறந்த ஆதரவு மற்றும் சிறந்த குஷனிங் வழங்குகின்றன. காரின் உள்ளே நிறைய ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன. டஸ்டர், இரண்டு குலோவ் பாக்ஸஸ், டேஷ்போர்டில் ட்ரே, கேபினை உப்யோகிக்க எளிதாக்கும் பெரிய கதவு பின்களைக் கொண்டுள்ளது.
  • லேட்டஸ்ட் அம்சங்கள்: டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்டீயரிங் டில்ட் அட்ஜஸ்ட், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாட்டிலைட் நேவிகேஷன், பவர்டு மிரர்கள், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், குரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல நவீன அம்சங்களையும் ரெனால்ட் டஸ்டர் கொண்டுள்ளது.
  • நீண்ட பயணங்களுக்காகத் தயாரிக்கப்பட்டது: டஸ்டர் 50 லிட்டர் எரிபொருள் திறனுடன் வருகிறது. வசதியான ஓட்டுநர் அனுபவத்திற்காக டஸ்டர் 3 சக்திவாய்ந்த என்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. அவை:
    • 106 ஹார்ஸ்பவர் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி ஆட்டோவுடன் இணைந்துள்ளது
    • 85 ஹெச்பி 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
    • 110 ஹெச்பி 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி விருப்பங்கள்

ரிஃபைன்டு ஓட்டுநர் அனுபவம்: சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்து என்ஜின்களும் ரிஃபைன் செய்யப்பட்டுள்ளன மற்றும் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் முன்பை விட சிறப்பாக உள்ளது.

ரெனால்ட் டஸ்டர் வேரியண்டுகளின் விலை பட்டியல்

ரெனால்ட் டஸ்டர் வேரியண்டுகள் விலை (புது தில்லியில், மற்ற நகரங்களில் மாறுபடும்)
ஆர்.எக்ஸ்.எஸ் ₹11.02 லட்சங்கள்
ஆர்.எக்ஸ்.ஜீ ₹11.18 லட்சங்கள்
ஆர்.எக்ஸ்.இ டர்போ ₹13.04 லட்சங்கள்
ஆர்.எக்ஸ்.எஸ் டர்போ ₹13.93 லட்சங்கள்
ஆர்.எக்ஸ்.ஜீ டர்போ ₹14,62 லட்சங்கள்
ஆர்.எக்ஸ்.எஸ் டர்போ சிவிடி ₹15.77 லட்சங்கள்
ஆர்.எக்ஸ்.ஜீ டர்போ சிவிடி ₹16.45 லட்சங்கள்

[1]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது ரெனால்ட் டஸ்டருக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆட்-ஆன் நன்மைகளைப் பெற முடியுமா?

இல்லை, கூடுதல் கட்டணங்களுக்கு எதிராக காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வுசெய்தால் மட்டுமே ஆட்-ஆன் நன்மைகள் கிடைக்கும்.

எனது ரெனால்ட் டஸ்டர் கார் இன்சூரன்ஸின் கீழ் என்ஜின் டேமேஜ்களுக்கு எதிராக எனக்கு கவரேஜ் கிடைக்குமா?

ஒரு ஸ்டாண்டர்ட் இன்சூரன்ஸ் பாலிசி என்ஜின் டேமேஜ்களை கவர் செய்யாது. இருப்பினும், உங்கள் ரெனால்ட் காரின் என்ஜினுக்கான கூடுதல் பாதுகாப்பைப் பெற, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகமாகச் செலுத்தி, ஆட்-ஆன் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன் கவரைச் சேர்க்கலாம்.