ரெனால்ட் கார் இன்சூரன்ஸ்

Get Instant Policy in Minutes*

Third-party premium has changed from 1st June. Renew now

ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் பிளான்

1899 இல் நிறுவப்பட்டது, ரெனால்ட் குழுமம் ஒரு பிரெஞ்சு பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும். சமீப காலங்களில் கார்கள் மற்றும் வேன்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் அது வரை லாரிகள், டாங்கிகள், டிராக்டர்கள், விமான என்ஜின்கள் மற்றும் ஆட்டோரயில் வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, உற்பத்தி அளவின் அடிப்படையில் இது உலகின் ஒன்பதாவது பெரிய வாகன உற்பத்தியாளராக ஆனது.

மேலும், ரெனால்ட் கார்கள் ரேலியிங், ஃபார்முலா 1 மற்றும் ஃபார்முலா ஈ போன்ற மோட்டார்ஸ்போர்ட் நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றன. டிசம்பர் 2019 இல் உலகம் முழுவதும் 2,73,000 யூனிட் மின்சார வாகனங்களை விற்பனை செய்ததற்காக இந்நிறுவனம் அறியப்படுகிறது.

இந்த பன்னாட்டு நிறுவனமான ரெனால்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனம் அக்டோபர் 2005 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக நான்கு ரெனால்ட் கார் மாடல்களைக் கொண்டு வந்துள்ளது. சென்னையில் உற்பத்தி வசதி கொண்ட இந்நிறுவனம், ஆண்டுக்கு 4,80,000 யூனிட் ரெனால்ட் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரின் இந்திய துணை நிறுவனம் இந்தியா முழுவதும் 89,000 யூனிட் ரெனால்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. எனவே, இந்த பிராண்டின் கார் மாடல்களுக்கு இந்திய மோட்டாரிஸ்டுகளிடையே மவுசு உள்ளது தெளிவாகிறது.

நீங்கள் ரெனால்ட் கார்களில் ஒன்றை வைத்திருந்தால், ரெனால்ட் கார் இன்சூரன்ஸைப் பெறுவது அல்லது ரீனியூவல் செய்வது பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டும். விபத்து அல்லது பிற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் உங்கள் காருக்கு டேமேஜ் ஏற்பட்டால், கார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது செலவுகலை எளிதாக்குகிறது. முறையான இன்சூரன்ஸ் இல்லாவிடில், ரிப்பேர் செலவுகள் அனைத்திற்கும் உங்கள் பாக்கெட்டில் இருந்து தான் கொடுக்க வேண்டும்.

கூடுதலாக, மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988 கடுமையான அபராதத்தைத் தவிர்க்க குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது அவசியமாக்குகிறது. எனவே, ரெனால்ட் நிறுவனத்திற்கான கார் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம், நீங்கள் நிதி மற்றும் லீகல் லையபிளிட்டிகளைக் குறைக்கலாம்.

உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வழங்குகின்றன. முந்தைய பாலிசி, தேர்டு பார்ட்டி டேமேஜ்களை மட்டுமே கவர் செய்கிறது, அதேசமயம்; பிந்தையது தேர்டு பார்ட்டியுடன் சொந்த கார் டேமேஜ்களையும் கவர் செய்கிறது. தவிர, இன்சூரர்கள் உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தில் பல சேவைப் பலன்களை வழங்குகிறார்கள். அதிகபட்ச நன்மைகளுடன் வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

எளிதாக முடிவெடுப்பதற்கு, சிக்கனமான ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் விலை, ஆட்-ஆன் நன்மைகள், தடையற்ற கிளைம் ப்ராசஸ் மற்றும் பிற நன்மைகளை கருத்தில் கொண்டு டிஜிட் இன்சூரன்ஸைப் பரிசீலிக்கலாம்.

ரெனால்ட் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது

என்னென்ன கவர் செய்யப்படவில்லை

உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் என்னென்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் சமமாக முக்கியம், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த வித ஆச்சரியத்தையும் தராது. அத்தகைய சில சூழ்நிலைகளை இங்கே காணலாம்:

தேர்டு பார்ட்டி பாலிசி வைத்திருப்பவரின் சொந்த டேமேஜ்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிளிட்டி மட்டும் கார் பாலிசியில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் கவர் செய்யப்படாது.

குடிபோதையில் அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் கவர் செய்யப்படாது.

முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் உடனில்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் கற்றல் உரிமத்தை வைத்திருக்கிறீர்கள் மற்றும் முன் பயணிகள் இருக்கையில் முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் இல்லாமல் வாகனம் ஓட்டுனால் கவர் செய்யப்படாது.

விளைவாக ஏற்படும் டேமேஜ்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத எந்த டேமேஜும் (எ.கா. விபத்துக்குப் பிறகு, டேமேஜ் அடைந்த காரை தவறாக ஓட்டி, என்ஜின் டேமேஜ் அடைந்தால், அது கவர் செய்யப்படாது)

பங்களிப்பு அலட்சியங்கள்

ஏதேனும் பங்களிப்பு அலட்சியம் (எ.கா. வெள்ளத்தில் காரை ஓட்டுவதால் ஏற்படும் டேமேஜ், உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாத வகையில் ஓட்டினால்,கவர் செய்யப்படாது)

ஆட்-ஆன்கள் வாங்கப்படவில்லை

சில சூழ்நிலைகள் ஆட்-ஆன்களில் கவர் செய்யப்படும். நீங்கள் ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், தொடர்புடைய சூழ்நிலைகள் கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் ரெனால்ட் கார் இன்சூரன்ஸை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்?

ரெனால்ட்டுக்கான கார் இன்சூரன்ஸ் திட்டம்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீயினால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்ட்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு

×

கார் திருட்டு

×

வீட்டு வாசலில் பிக்-அப் & டிராப்

×

ஐ.டி.வி கஸ்டமைஷேஷன்

×

கூடுதல் பாதுகாப்பு தரும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்கள்

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்.

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி! டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

ரெனால்ட் பற்றி மேலும் அறியவும்

கார் வாங்க நினைக்கிறீர்களா? குறைந்த ரிப்பேர் செலவில் வரும் நம்பகமான காரைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், ரெனால்ட் உங்களுக்கான பிராண்ட். இந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் தொடர்ந்து உயர்தர தயாரிப்புகளை வழங்கி வருகிறது. பிரான்ஸை பூர்வீகமாகக் கொண்ட இந்நிறுவனம், மேலும் ரெனால்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது ரெனால்ட் எஸ்.ஏ பிரான்ஸின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும்.

ரெனால்ட் இந்தியாவிற்கு 2005 ஆம் ஆண்டு வந்ததிலிருந்து சில சிறந்த கார் மாடல்களை வெளியிட்டுள்ளனர். இவற்றில், ரெனால்ட் டஸ்டர்,இந்திய சந்தையில் வலுவான இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. ரெனால்ட், இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு, காம்பாக்ட் எஸ்யூவி டஸ்டர், மினி-வேன்கள் ட்ரைபர் மற்றும் லாட்ஜி, சப்காம்பாக்ட் கார் க்விட் மற்றும் எஸ்யூவி கேப்டூர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கார்களையும் வழங்கியுள்ளது. ரெனால்ட் காரின் விலை ரூ. 2.83 லட்சம் இருந்து துவங்குகிறது மற்றும் டாப் வரிசையில் உள்ள காரின் விலை ரூ.12.99 லட்சம் ஆகும்.

2012 ஆம் ஆண்டில், பிராண்ட் 23 விருதுகளைப் பெற்றது, இது அதிக எண்ணிக்கையிலான விருதுகளைப் பெற்ற சிறந்த போட்டியாளர்களில் இவர்களை ஒருவராக்குகிறது. 2018 ஆம் ஆண்டில், என்டிடிவி கார் மற்றும் பைக் விருதுகளில் ரெனால்ட் கேப்டூர் "2018 ஆம் ஆண்டின் என்டிடிவி வியூவரின் சாய்ஸ் கார்" விருதை வென்றது.

கார்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் உங்கள் காரை டேமேஜ் ஆக்கலாம். இதுபோன்ற விபத்துகளின் போது கார் இன்சூரன்ஸின் நன்மைகள் உதவுகின்றன. இது தவிர, கார் இன்சூரன்ஸ்,ஒரு கட்டாயத் தேவை ஆகும். கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

நீங்கள் ஏன் ரெனால்ட் காரை வாங்க வேண்டும்?

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கான காரணங்களைக் இங்கே காணலாம்:

  • சிக்கனமான விலை: ரெனால்ட் கார்கள் சிக்கனமான விலையில் உள்ளன. அவை ரூ.2.83 லட்சம் விலை வரம்பில் துவங்கி, டாப் மாடலுக்கு ரூ.12.99 லட்சங்கள் வரை மட்டுமே உயர்கிறது. இந்த பட்ஜெட்டில், நீங்கள் வலிமையான மற்றும் சக்திவாய்ந்த கார்களைப் பெறலாம்.ரெனால்ட் கார்கள் மிகவும் ஸ்டைலான எஸ்யூவியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அனைத்து பிரிவுகளுக்கான மாதிரிகள்: ரெனால்ட் க்விட் முதல் சப்காம்பாக்ட் காராக எஸ்யூவி ரெனால்ட் கேப்டூர் வரை, நீங்கள் தேர்வு செய்ய நல்ல விருப்பங்களைப் பெறுவீர்கள். ஒவ்வொரு மாதிரியும் பட்ஜெட்டுக்குள் அடங்கும்.
  • நல்ல எரிபொருள் திறன் கொண்ட கார்கள்: ஒரு காரை வாங்குவதற்கு முன், கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அளவுகோல் எரிபொருள் திறன் ஆகும். ரெனால்ட் கார்கள் டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளுக்கு நல்ல மைலேஜைத் தருகின்றன.
  • தோற்றம்: ரெனால்ட் கார்கள் வலுவானதாக தோற்றமளிக்கின்றன மற்றும் பாக்ஸி தோற்றத்துடன் தயாரிக்கப்படுகின்றன. அவர்களின் மிகச்சிறிய காரில் கூட எஸ்யூவி டிஎன்ஏ உள்ளது. உங்கள் விருப்பத்தை வரையறுக்க இது உதவுகிறது.
  • சௌகரியமான அம்சங்கள்: இந்த பிராண்டின் அனைத்து கார்களும் விசாலமானவை. உயர் மாடல்கள் ரியர் ஏர் கண்டிஷனிங் வென்ட்கள், 8-வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல், அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் வீல்கள் மற்றும் பலவற்றைப் பெற்றுள்ளன.
  • நம்பகமானது மற்றும் குறைந்த பராமரிப்பு கார்கள்: ரெனால்ட் கார்கள் அவற்றின் செயல்திறனில் மிகவும் நம்பகமானவை. இந்த பிராண்டின் ரிப்பேர் செலவுகள் குறைவாக இருப்பதால், அந்தக் காரை வாங்குவது உங்கள் சிறந்த முடிவுகளில் ஒன்றாக இருக்கும்.

ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

ரெனால்ட் தங்கள் கார்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யாததால், இது மக்களுக்கான பிராண்ட் ஆகிறது. ரிப்பேர் செய்யும் செலவு குறைவாக இருந்தாலும், கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது நன்மை பயக்கும். உங்கள் ரெனால்ட் காருக்கு நீங்கள் ஏன் இன்சூரன்ஸ் பாலிசி பெற வேண்டும் என்பதை இங்கே காணலாம்:

  • லீகல் ரெக்கியூர்மெண்ட்களை பூர்த்தி செய்கிறது: இந்திய அரசாங்கத்தால் கார் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வெஹிக்கல் ஆக்டின்படி, இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் யாரும் கார் ஓட்ட முடியாது. அவ்வாறு ஓட்டி பிடிபட்டால், முதல் குற்றத்திற்கு ரூ.2000/- மற்றும் அடுத்த குற்றத்திற்கு ரூ.4000/- அபராதம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படலாம்.
  • சொந்த டேமேஜ் செலவுகளை நிர்வகிக்க உதவுகிறது: விபத்து, தீ, திருட்டு மற்றும் இயற்கை பேரிடர் ஆகியவற்றால் ஏற்படும் எந்த டேமேஜும் சில சமயங்களில் செலவுக்கான உங்கள் தாங்கும் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். கார் இன்சூரன்ஸ் பாலிசி இந்த நிகழ்வுகளில் ஏதேனும் காரணமாக இழப்பு ஏற்படும் போது ரிப்பேருக்கான செலவை மீட்டெடுக்க உதவுகிறது.
  • லீகல் லையபிளிட்டிகளைத் தீர்க்க உதவுகிறது: தேர்டு பார்ட்டி இழப்புக்கு நீங்கள் பொறுப்பேற்றால், கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு லீகல் லையபிளிட்டிகளைச் செலுத்த உதவும். நீங்கள் தேர்டு பார்ட்டியை மோதியிருந்தால், அது உடல் காயம் அல்லது சொத்து டேமேஜிற்கு வழிவகுத்தால், அவர்களின் கிளைம் சில நேரங்களில் பெரியதாக இருக்கலாம். அத்தகைய செலவுகள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசியின் கீழ் கவர் செய்யப்படுகின்றன.
  • அடிப்படைக் கவரேஜை விரிவுபடுத்துங்கள்: விபத்து, திருட்டு, தீ மற்றும் இயற்கைப் பேரிடர் போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து, வேலைநிறுத்தம், டிரான்ஸ்மிஷன் செயலிழப்பு, என்ஜின்களில் நீர் உட்செலுத்துதல் போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்கள் போன்றவை இதில் கவர் செய்யப்படாது. இதற்கு, நீங்கள் ஆட்-ஆன் கவர்களை வாங்க வேண்டும். இவை கூடுதல் செலவில் வருகின்றன. ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர்,ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் போன்ற ஆட்-ஆன் கவர்கள் மற்றும் பிற அடிப்படைக் கவரேஜின் நோக்கத்தை விரிவுபடுத்த உதவுகின்றன.

ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் சில காரணிகள் பின்வருமாறு:

  • வயது: காலப்போக்கில் காரின் ஐ.டி.வி குறைகிறது மற்றும் பிரீமியத்தைக் கணக்கிடும் போது டிப்ரிஸியேஷன்‌ மதிப்பும் பயன்படுத்தப்படும். எனவே கார் பழையதாக ஆக பிரீமியம் குறையலாம்.
  • புவியியல் இருப்பிடம்: நகர்ப்புற நகரங்களில் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான கார்களால் விபத்துகள் ஏற்படுவதற்கான நிகழ்தகவு அதிகமாக இருப்பதால் தான் இந்த நிலை.
  • இன்சூரன்ஸ் பாலிசியின் வகை: காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசியின் கீழ் பிரீமியம் அதிகமாகும். இதற்கு சொந்த டேமேஜ் மற்றும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கவரின் இணைப்பு காரணமாகும். ஆனால் தனித்த தேர்டு பார்ட்டியில், பிரீமியம் குறைவாகவும் நிலையானதாகவும் இருக்கும்.
  • காரின் ஐ.டி.வி: உங்கள் காரின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐ.டி.வி) பிரீமியத்தைப் பாதிக்கும். அதிக ஐ.டி.விக்கு, பிரீமியம் அதிகமாகவும், குறைந்த ஐ.டி.விக்கு, பிரீமியம் குறைவாகவும் இருக்கும்.
  • சிஎன்ஜி கிட் நிறுவப்பட்டுள்ளது: உங்கள் ரெனால்ட் காரில் கூடுதல் சிஎன்ஜி கிட் நிறுவப்பட்டிருந்தால், கார் இன்சூரன்ஸின் பிரீமியத்தில் கூடுதல் தொகை சேர்க்கப்படும்.
  • ஆட்-ஆன் கவர்கள்: ஒவ்வொரு ஆட்-ஆன் கவர் கூடுதல் பிரீமியம் கட்டணத்துடன் வருகிறது. நீங்கள் ஆட்-ஆன் கவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பிரீமியம் அதிகரிக்கும்.
  • நோ கிளைம் போனஸ்(என்சிபி): நீங்கள் முழு வருடத்திற்கும் ஒருமுறை கூட கிளைம் செய்யவில்லை என்றால், அடுத்த ரீனியூவலுக்கு என்சிபி-ஐப் பெறுவீர்கள்.
  • என்ஜின் திறன்: இன்சூரன்ஸ் பிரீமியத்தில் உள்ள தேர்டு பார்ட்டி இணைப்புகள் கார் என்ஜினின் கன அளவைப் பொறுத்தது. கன அளவு அதிகமாக இருந்தால், பிரீமியம் அதிகமாக இருக்கும்.
  • வாலண்டரி டெடக்டபிள்: வால்ண்டரி டெடக்டபிள் என்பது, இன்சூரன்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் இன்சூரன்ஸ் செய்ய அனுமதிப்பதற்குப் பதிலாக, கிளைம் தொகையில் பங்களிப்பைச் செய்ய நீங்கள் முடிவு செய்வதாகும். அதிக வாலண்டரி டிடெக்டிபள் இருந்தால் குறைந்த பிரீமியம் கிடைக்கும்.

சமீபத்தில், தேர்டு பார்ட்டி பிரீமியம் தொகை இந்திய அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் கார் இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

  • குறைபாடற்ற சேவைகள்: டிஜிட் இன்சூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்தையும் வசதி செய்து கொடுத்துள்ளது. நீங்கள் ஒரு பாலிசியை வசதியாக ஆன்லைனில் வாங்கலாம் மற்றும் கிளைம் ஆவணங்களைப் பதிவேற்றலாம். பாலிசி வாங்குவது முதல் கிளைம் ஃபைலிங் செய்வது வரையிலான அனுபவம் குறைபாடற்றது.
  • இன்சூரன்ஸ் பாலிசியின் தேர்வு: டிஜிட் இரண்டு வகையான இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. ஒன்று, உங்கள் சொந்த டேமேஜ் மற்றும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிக்காக உங்களுக்குச் செலுத்தும் காம்ப்ரிஹென்சிவ் தொகுப்புக் பாலிசி. மற்ற வகை தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி. இது தேர்டு பார்ட்டி உடல் காயம் அல்லது சொத்து டேமேஜிற்கு ஏற்படும் இழப்புகளுக்கு கவர் செய்கிறது.
  • பாலிசியை வாங்குவதற்கு முன் பிரீமியத்தைக் கணக்கிடுங்கள்: வெப்சைட்டிற்குச் சென்று, உங்கள் பதிவு எண் அல்லது கார் விவரங்களைப் போட்டு, தேவையான சில புலங்களை நிரப்பி, உங்கள் தேவைக்கேற்ப கவரைத் தேர்ந்தெடுக்கவும், இதோ! உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கான விலை திரையில் காட்டப்படும்.
  • கஸ்டமைஷேஷன் செய்யக்கூடிய ஐ.டி.வி: இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவை கஸ்டமைஷேஷன் செய்ய டிஜிட் இன்சூரன்ஸ் உங்களை அனுமதிக்கிறது. மொத்த இழப்பு கிளைமின் போது கார் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு செலுத்தும் அதிகபட்ச தொகை இதுவாகும். பிரீமியமானது ஐ.டி.வியைப் பொறுத்து மாறுபடும்.
  • உயர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ: டிஜிட் இன்சூரன்ஸ் அனைத்து கிளைம்களையும் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்கிறது. எனவே கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ மிகவும் அதிகமாக உள்ளது.
  • ஆட்-ஆன் கவர்களின் வகைகளை வழங்குகிறது: வயது மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, நீங்கள் ஆட்-ஆன் கவர்களை பல வகைகளில் இருந்து தேர்வு செய்யலாம். உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது விபத்தில் முற்றிலும் டேமேஜ் அடைந்தாலோ செலவுகளை மீட்டெடுக்க உதவும் ரிட்டர்ன்-டு-இன்வாய்ஸ் கவர் ஒன்றை நீங்கள் வாங்கலாம். பயணிகளுக்கு விபத்தில் காயம் ஏற்பட்டால், பயணிகளைப் பாதுகாப்பதற்காக நீங்கள் பேசஞ்சர் கவரையும் பரிசீலிக்கலாம். டயர் புரட்டெக்ட் கவர், ஜீரோ டிப்ரிசியேஷன் கவர், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன் மற்றும் கன்ஸ்யூமபில் கவர் ஆகியவையும் இதில் அடங்கும்.
  • போட்டி பிரீமியம் விகிதங்கள்: டிஜிட் இன்சூரன்ஸ் வழங்கும் பிரீமியம் விகிதங்கள் மிகவும் சிறந்தவை. அவர்கள் பிரீமியத்தில் எந்த மறைமுக செலவையும் சேர்ப்பதில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவருக்கு மட்டுமே பணம் செலுத்துவீர்கள்.
  • எளிதானது மற்றும் வசதியானது: ஆன்லைனில் வாங்குதல் மற்றும் கிளைம் செய்தல் ப்ராசஸைத் தவிர, ரிப்பேரின் போது,உங்கள் கார் வீட்டு வாசலில் இருந்து பிக்-அப் செய்யப்பட்டு சரி செய்யப்பட்டு மீண்டும் வழங்கப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது காலாவதியான ரெனால்ட் கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்தால் நான் நோ கிளைம் நன்மைகளைஒப் பெற முடியுமா?

ரெனால்ட் காருக்கான உங்கள் இன்சூரன்ஸ் திட்டம் காலாவதியாகி 90 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், நீங்கள் சேகரித்த நோ கிளைம் போனஸை இழப்பீர்கள். எனவே, இந்த நன்மைகளைப் பெற, பாலிசி காலாவதியான 90 நாட்களுக்குள் உங்கள் பாலிசியை ரீனியூவல் செய்ய வேண்டும்.

ரெனால்ட் கார்களுக்கான எனது தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸில் ஆட்-ஆன் நன்மைகளைப் பெற முடியுமா?

முடியாது, காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் திட்டங்களின் பாலிசிதாரர்கள், ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்காக கூடுதல் கட்டணங்களுக்கு எதிராக சில ஆட்-ஆன் கவர்களைச் சேர்த்து,அதன் நன்மைகளைப் பெறலாம்.

எனது ரெனால்ட் கார் இன்சூரரை நான் மாற்றினால், நோ கிளைம் போனஸ் மாற்றப்பட முடியாதா?

ஆம், நீங்கள் உங்கள் இன்சூரரை மாற்றினால், சேகரித்த நோ கிளைம் போனஸ் உங்கள் தற்போதைய இன்சூரன்ஸ் திட்டம் மற்றும் இன்சூரருக்கு மாற்றப்படும்.