Third-party premium has changed from 1st June. Renew now
கியா சோனேட் இன்சூரன்ஸ்: ஆன்லைனில் உங்கள் கியா சோனேட் கார் இன்சூரன்ஸை வாங்குங்கள்/ரீனியூவல் செய்திடுங்கள்.
கியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா இந்தியா பிரைவெட் லிமிடெட் 2017 முதல் இந்திய வாகன சந்தையில் முன்னிலையில் தலை தூக்கி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அதன் அறிமுகத்திலிருந்து 38,000 க்கும் மேற்பட்ட கார் யூனிட்டுகள் விற்கப்பட்டு, கியா சோனேட் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக தனது அடையாளத்தை முத்திரையிட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி, ஒவ்வொரு கார் உரிமையாளரும் தங்கள் காரைச் சரியான தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். மேலும், சொந்த மற்றும் தேர்டு பார்ட்டி கார் சேதங்களினால் ஏற்படும் நிதி இழப்புகளைத் தவிர்க்க காம்ப்ரிஹென்சிவ் கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதற்காக, கியா சோனேட்டிற்கான இன்சூரன்ஸை வாங்க அல்லது ரீனியூவல் செய்ய டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கியா சோனேட் கார் இன்சூரன்ஸின் ரீனியூவல் விலை
ரெஜிஸ்ட்ரேஷன் தேதி | பிரீமியம் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கானது) |
---|---|
ஆகஸ்ட்-2020 | 7,974 |
**பொறுப்பு திறப்பு - கியா சோனேட் ஜி1.0 டி 7டிசிடி ஜிடிஎக்ஸ் பிளஸ் பிஎஸ்விஐ 998.0 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. GST சேர்க்கப்படவில்லை.
நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு செப்டம்பர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.
கியா சோனேட் கார் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுபவை யாவை?
டிஜிட்டின் கியா சோனேட் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்
தேர்டு-பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
தேர்டு-பார்ட்டி வெஹிக்கலுக்கு ஏற்படும் சேதங்கள் |
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
|
உங்கள் கார் திருடு போவது |
|
டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி |
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குதல் |
|
தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள
எவ்வாறு கிளைம் செய்வது?
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
ஸ்டெப் 1
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
ஸ்டெப் 2
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் சேதங்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
ஸ்டெப் 3
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
டிஜிட்டின் கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்
கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் விலையைத் தவிர, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது வேறு பல காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். கியா கார் உரிமையாளர்களுக்கு இது எளிமையான விருப்பதேர்வாகக் கருதும் பல கூடுதல் பெனிஃபிட்களை டிஜிட் வழங்குகிறது.
- சௌகரியமான ஆன்லைன் செயல்முறை - கியா சோனேட் இன்சூரன்ஸை வாங்குவதற்கும் கிளைம் செய்வதற்கும் டிஜிட் ஒரு எளிமையான ஆன்லைன் செயல்முறையை வழங்குகிறது. நீங்கள் உங்களுக்குப் பிடித்த பாலிசியை தேர்ந்தெடுத்து உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இருந்து கிளைம் ஆவணங்களை பதிவேற்றலாம்.
- இன்சூரன்ஸ் பாலிசிக்கான விருப்பத்தேர்வுகள் - டிஜிட் உங்களுக்குக் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியையும் தேர்டு பார்ட்டியின் லையபிளிட்டி பாலிசியையும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் வழங்குகிறது. உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை முற்றிலும் உங்கள் விருப்பப்படியே நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
- ஐடிவி(IDV) தனிப்பயனாக்குதல் சோனேட் போன்ற கியா கார்களின் ஐடிவியைத் தனிப்பயனாக்குவதற்கு டிஜிட் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் குறைவான ஐடிவியைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் பிரீமியமும் அதற்கேற்ப குறைவாக இருக்கும். இருப்பினும், நீங்கள் இன்சூரன்ஸ் செய்த கார் திருட்டுபோனாலோ அதற்கு இழப்பு ஏற்பட்டாலோ அதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைவான ஐடிவி உங்களுக்கு ஒரு பெரிய இழப்பாக அமையும். எனவே, டிஜிட்டின் ஐடிவி தனிப்பயனாக்குதல் விருப்பம் முழுவதையும் முடிந்தளவு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஆட்-ஆன் பாலிசிகள் - டிஜிட் உங்களுக்குப் பின்வருவது போன்ற பல அத்தியாவசியமான ஆட்-ஆன் பாலிசிகளை வழங்குகிறது:
- ரிட்டர்ன்-டூ-இன்வாய்ஸ் கவர்
- ஜீரோ-டிப்ரிஸியேஷன் கவர்
- கன்ஸ்யூமபில் கவர்
- டையர் புரட்டக்ட் கவர்
- என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
- புரட்டெக்ஷன் கவர்
- பேசஞ்சர் கவர்
- மறைமுக கட்டணம் இல்லை - இன்சூரன்ஸ் குறித்து நீங்கள் வலைத்தளத்தில் பிரௌஸ் செய்யும்போது டிஜிட் அதற்கான வெளிப்படை தன்மையை தெளிவாகப் புரியவவைக்கும். நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே நீங்கள் துல்லியமாக பணம் செலுத்துகிறீர்கள். அதேபோல, நீங்கள் செலுத்தும் தொகைக்கு மட்டுமே உங்களுக்குக் காப்பீடும் கிடைக்கும்.
- உடனடி கிளைம் செட்டில்மென்ட் - டிஜிட்டின் உடனடி கிளைம் செட்டில்மென்ட் சேவைகளுக்கு, நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மார்ட்போன் இயக்கப்பட்ட சுய ஆய்வு செயல்முறை மூலம் நீங்கள் அதை கண் சிமிட்டும் நேரத்தில் செய்துமுடிக்கலாம்.
- சிறந்த கஸ்டமர் கேர் சேவை - உங்கள் கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் தொடர்பாக டிஜிட்டின் பிரத்யேக 24×7 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் உங்களுக்கு உதவுகிறது.
- கேரேஜ்களின் பரந்த அளவிலான நெட்வொர்க் - இந்தியா முழுவதும் உள்ள 6000+ கேரேஜ்களில் டிஜிட் மூலம் நீங்கள் உங்கள் கியா சோனேட் காருக்கு கேஷ்லெஸ் ரிப்பேர்களைப் பெறலாம்.
- பிக்-அப் மற்றும் டிராப் வசதிகள் - நீங்கள் எதிர்பாராதவிதமாக சாலையோர விபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் டிஜிட்டின் கேரேஜ்கள் ரிப்பேர் செய்வதற்கு வீட்டு வாசலில் பிக்-அப் மற்றும் டிராப் வசதிகளை வழங்குகின்றன.
டிஜிட் உடன், அதிக டிடெக்டிபள்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், சிறிய கிளம்களைத் தவிர்ப்பதன் மூலமும் உங்கள் கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் குறைக்கலாம். இருப்பினும், குறைந்த பிரீமியங்களுக்காக கிடைக்கும் பெனிஃபிட்கள் மட்டுமே போதும் என்று நினைத்துவிடாமல் இருப்பது நல்லது.
எனவே, இது குறித்து இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்ள டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கியா சோனேட் கார் இன்சூரன்ஸைப் பெறுவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?
வருமுன் காப்பதே சிறந்தது. இதேபோல், கியா சோனேட் இன்சூரன்ஸ் செலவை ஏற்றுக்கொள்வது என்பது பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதத்திற்கான ரிப்பேர்கள் மற்றும் கட்டணங்களுக்குச் செலவழிப்பதை விட மிகவும் எளிதாகும்:
- அபராதம்/தண்டனையிலிருந்து பாதுகாக்கிறது - மோட்டார் வெஹிக்கிலஸ் ஆக்ட், 1988 இன் படி, வாகனம் ஓட்டும்போது நீங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் முதல் முறை தவறு செய்தால், 2,000 ரூபாயும், மீண்டும் தவறு செய்தால், 4,000 ரூபாயும் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
- சொந்த சேதங்களுக்கான பாதுகாப்பு - தீ விபத்து, திருட்டு, விபத்து அல்லது வெள்ளம் போன்ற நிகழ்வுகளில் உங்கள் கார் அதிக சேதங்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகளில், ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் ஃபைனான்ஷியல் லையபிளிட்டியையும் காப்பீடு செய்யும்.
- தேர்டு பார்ட்டி சேதத்திற்கான பாதுகாப்பு - உங்கள் கியா சோனேட் மூலம் நீங்கள் தற்செயலாக ஒரு தனிநபர் அல்லது தேர்டு பார்ட்டியினரின் சொத்தை மோத நேர்ந்தால், அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அந்த லையபிளிட்டிகளைக் காப்பீடு செய்வதால் அங்கு உங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸைப் பயன்படுத்தலாம். மேலும், கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் இருந்தால், மற்றவருக்கு ஏற்படும் சேதங்களினால் போடப்படும் வழக்கு தொடர்பான சிக்கல்களை மறந்து விடலாம்.
- பர்சனல் ஆக்சிடன்ட் கவர் - ஐஆர்டிஏஐ (இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) இன் படி, கியா சோனேட் உரிமையாளர்கள், மற்ற கார் உரிமையாளர்களைப் போலவே, தங்கள் தேர்டு பார்ட்டி அல்லது காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸூடன் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் தேர்வு செய்வதும் கட்டாயமாகும். இது உரிமையாளரான ஓட்டுநருக்குக் கார் விபத்தால் ஏற்படும் ஊனம் அல்லது உயிரிழப்பிற்கான நிதி செலவுகளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது.
- நோ கிளைம் போனஸ் - பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரீனியூவலின் போது பிரீமியம் தொகையைக் குறைப்பதற்காக ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும் தள்ளுபடியை வழங்குகின்றன. இவ்வாறு, கார் உரிமையாளர்கள் தங்கள் கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் ரீனியூவலின் போது நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்களை அனுபவிக்கலாம்.
எனவே, இந்த பெனிஃபிட்களைப் பெற, இப்போது கியா சோனேட் இன்சூரன்ஸ் விலையைச் செலுத்துவதும், எதிர்கால செலவுகளைத் தவிர்ப்பதும் மிகவும் எளிதாகத் தெரிகிறது.
இதனால், கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்வதற்கும் வாங்குவதற்கும் டிஜிட் ஒரு நம்பகமான விருப்பத்தேர்வாக இருக்கும்.
கியா சோனேட் குறித்து மேலும் அறிக
கியா சோனேட் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என இரண்டு வேரியண்ட்டுகள் உடன் 10 கலர் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்தக் கார் மாடல் பிரசத்தி பெற்று வரும் அதன் பெயர் நிலைத்துநிற்பதற்கு வழிவகுக்கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில இதோ.
- கியா சோனேட் 1.5 சிஆர்டிஐ டீசல், ஜி 1.0 டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஜி 1.2 பெட்ரோல் என மூன்று என்ஜின் வேரியண்ட்டுகளைக் கொண்டுள்ளது
- இது 26.03 செ.மீ (10.25") டச்ஸ்க்ரீன் மற்றும் 10.67 செ.மீ (4.2") கலர் கிளஸ்டருக்கான எளிய அணுகலைக் கொண்டுள்ளது.
- EVOவின் சமீபத்திய பரிணாமத்துடன் இணைந்திருக்க கியா சோனேட் 58 ஸ்மார்ட் வழிகளை வழங்குகிறது.
- மேலும் இது போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் எல்இடி சவுண்ட் மூட் லைட்டுகளுடன் வருகிறது.
- கியா சோனேட் காரில் 6 ஏர்பேக்குகள், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன
கியா கார்கள் அவற்றின் உயர்தர கையாளுதல், ஆயுட்காலம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும், எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் சேதங்களையும் நீங்கள் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், இன்சூரன்ஸ் பாலிசியால் செலவுகளைக் காப்பீடு செய்யவும் நிதிசார்ந்த அழுத்தங்களைக் குறைக்கும்.
எனவே, கியா சோனேட்டுக்கான கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்வது அல்லது வாங்குவது முக்கியம்.
கியா சோனேட் - வேரியண்ட்ஸ் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்) |
---|---|
சோனேட் 1.2 HTE | ₹6.89 லட்சம் |
சோனேட்1.2 HTK | ₹7.89 லட்சம் |
சோனேட் 1.5 HTE டீசல் | ₹8.55 லட்சம் |
சோனேட் 1.2 HTK பிளஸ் | ₹8.75 லட்சம் |
சோனேட் 1.5 HTK டீசல் | ₹9.49 லட்சம் |
சோனேட் HTK பிளஸ் டர்போ iMT | ₹9.89 லட்சம் |
சோனேட் 1.5 HTK பிளஸ் டீசல் | ₹9.99 லட்சம் |
சோனேட் HTX டர்போ iMT | ₹10.39 லட்சம் |
சோனேட்1.5 HTX டீசல் | ₹10.69 லட்சம் |
சோனேட் HTX DCT | ₹11.09 லட்சம் |
சோனேட்1.5 HTX டீசல் AT | ₹11.49 லட்சம் |
சோனேட் HTX பிளஸ் டர்போ iMT | ₹11.85 லட்சம் |
சோனேட் HTX பிளஸ் டர்போ iMT DT | ₹11.95 லட்சம் |
சோனேட் 1.5 HTX பிளஸ் டீசல் | ₹12.19 லட்சம் |
சோனேட் 1.5 HTX பிளஸ் டீசல் l DT | ₹12.29 லட்சம் |
சோனேட் GTX பிளஸ் டர்போ iMT | ₹12.29 லட்சம் |
சோனேட் GTX பிளஸ் டர்போ iMT DT | ₹12.39 லட்சம் |
சோனேட் 1.5 GTX பிளஸ் டீசல் | ₹12.65 லட்சம் |
சோனேட் 1.5 GTX பிளஸ் டீசல் DT | ₹12.75 லட்சம் |
சோனேட் GTX பிளஸ் டர்போ DCT | ₹12.99 லட்சம் |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எனது கியா சோனேட் இன்சூரன்ஸ் பாலிசியுடன் கூடுதல் கவரேஜ் கிடைக்குமா?
கார் காப்பீட்டை வாங்குவதோடு நீங்கள் தேர்வு செய்யக்கூடிய பல ஆட்-ஆன் பாலிசிகளை டிஜிட் வழங்குகிறது. கன்ஸ்யூமபில் கவர், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பாதுகாப்பு, டயர் புரட்டக்ட் கவர் மற்றும் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரும் அவற்றில் சில.
கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டால் நீங்கள் செலுத்த வேண்டிய டிடெக்டிபள் எவ்வளவு?
ஐஆர்டிஏஐ விதிமுறைகளின்படி, கியா சோனேட்டின் என்ஜின் இடப்பெயர்வு 1500 சிசிக்கு கீழ் வருவதால், உங்கள் கார் இன்சூரன்ஸிற்கு ரூ.1,000 கட்டாய டிடெக்டிபள் செலுத்த வேண்டும்.