Third-party premium has changed from 1st June. Renew now
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது டூ-வீலர் இன்சூரன்ஸ் (இரு சக்கர வாகன) பாலிசியின் மிகவும் அடிப்படையான வகையாகும், இது உங்கள் பைக் மூலமாக தேர்டு பார்ட்டி நபருக்கு, வாகனத்திற்கு அல்லது பிற சொத்துக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள், மற்றும் சேதங்களை ஈடுசெய்ய உதவுகிறது. இது சட்டப்படி கட்டாயமாகும், இது இல்லையெனில் உங்களுக்கு ரூ 1,000 முதல் ரூ 2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸில் அடங்குபவை யாவை?
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாதது எது?
உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
ஒருவேளை தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியாக இருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.
நீங்கள் குடிபோதையில் அல்லது சரியான லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டி அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு உங்கள் பைக் இன்சூரன்ஸ் எந்த இழப்பீடும் வழங்காது.
ஒருவேளை நீங்கள் (லேர்னர் லைசன்ஸ்) கற்றல் உரிமத்தை வைத்திருந்து, செல்லத்தக்க லைசன்ஸ் வைத்திருப்பவர் பிலியன் இருக்கையில் இல்லாமல் நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி இருத்தல்- இத்தகைய சூழ்நிலைகளில் உங்கள் கிளைம் கவர் செய்யப்படாது.
சில சூழ்நிலைகள் ஆட்-ஆன் மூலம் கவர் செய்யப்படுகின்றன. அது போன்ற இரு சக்கர வாகன ஆட்-ஆன்களை நீங்கள் வாங்கவில்லை என்றால், அவற்றிற்கு இன்சூரன்ஸ் கவர் செய்யப்படாது.
டிஜிட்-ன் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள் | டிஜிட்-ன் பயன்கள் |
---|---|
பிரீமியம் | ₹714/-லிருந்து ஆரம்பம் |
வாங்கும் செயல்முறை | ஐந்தே நிமிடங்களில் முடியக்கூடிய ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தப்படும் விரைவான செயல்முறை! |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சேதங்கள் | வரம்பற்ற/அன்லிமிட்டட் லையபிலிட்டி |
தேர்டு பார்ட்டியின் சொத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் | 7.5 லட்சங்கள் வரை |
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் | 15 லட்சங்கள் வரை |
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் பிரீமியம் | ₹330/- |
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம்
காம்ப்ரின்ஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் போலில்லாமல், தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசிக்கான பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் ஐஆர்டிஏஐ (IRDAI) ஆல் முன்பே வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரீமியம் விலைகள் முதன்மையாக உங்கள் இரு சக்கர வாகனத்தின் சிசி-யைப் (CC) பொறுத்தது. ஐஆர்டிஏஐ-இன் (IRDAI) சமீபத்திய புதுப்பிப்பின்படி, பல்வேறு சிசி (CC) வரம்புகளில் செலுத்த வேண்டிய இரு சக்கர வாகன பிரீமியம் கட்டணங்கள் பின்வருமாறு. பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பார்க்கவும்.
என்ஜின் கேப்பாஸிட்டி உடனான இரு சக்கர வாகனங்கள் (டூ-வீலர்) | பிரீமியம் ரேட் |
---|---|
75சிசி-க்கு மிகாமல் | ₹538 |
75சிசி-க்கு மேல் ஆனால் 150சிசி-க்கு உட்பட்டது | ₹714 |
150சிசி-க்கு மேல் ஆனால் 350சிசி-க்கு உட்பட்டது | ₹1,366 |
350சிசி-க்கு மேல் | ₹2,804 |
புது டூ-வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (5-வருட சிங்கிள் பிரீமியம் பாலிசி)
இன்ஜின் திறன் கொண்ட டூ-வீலர்கள் | பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்) |
---|---|
75ccக்கு மேற்பட்டது | ₹2,901 |
75ccக்கு மேற்பட்டது, ஆனால் 150ccக்கு உட்பட்டது | ₹3,851 |
150ccக்கு மேற்பட்டது, ஆனால் 350ccக்கு உட்பட்டது | ₹7,365 |
350ccக்கு மேற்பட்டது | ₹15,117 |
புது எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (1-வருட சிங்கிள் பிரீமியம் பாலிசி)
வாகனத்தின் கிலோவாட் திறன் (KW) | பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்) |
---|---|
3KWக்கு உட்பட்டது | ₹457 |
3KWக்கு மேற்பட்டது, ஆனால் 7KWக்கு உட்பட்டது | ₹607 |
7KWக்கு மேற்பட்டது, ஆனால் 16KWக்கு உட்பட்டது | ₹1,161 |
16KWக்கு மேற்பட்டது | ₹2,383 |
புது எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (5-வருட சிங்கிள் பிரீமியம் பாலிசி)
வாகனத்தின் கிலோவாட் திறன் (KW) | பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்) |
---|---|
3KWக்கு உட்பட்டது | ₹2,466 |
3KWக்கு மேற்பட்டது, ஆனால் 7KWக்கு உட்பட்டது | ₹3,273 |
7KWக்கு மேற்பட்டது, ஆனால் 16KWக்கு உட்பட்டது | ₹6,260 |
16KWக்கு மேற்பட்டது | ₹12,849 |
தேர்டு பார்ட்டி பைக்கிற்கு எவ்வாறு கிளைம் செய்வது?
- கோரப்பட்ட கிளைம்களுக்கு எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யும் தேர்டு பார்ட்டி தன்னிடம் தகுந்த ஆதாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும
- உங்கள் இன்சூரரும் காவல்துறையும் கூடிய விரைவில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் கிளைம் செய்ய முடியாத
- ஐஆர்டிஏஐ-இன் (IRDAI) விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, மோட்டார் ஆக்சிடென்ட் கிளைம்ஸ் டிரிபியுனல் கிளைம் தொகையை முடிவு செய்ய வேண்டும். தேர்டு பார்ட்டிக்கான தனிப்பட்ட சேதங்களுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை என்றாலும், தேர்டு பார்ட்டி வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு ரூ. 7.5 லட்சம் வரையிலான லிமிட்டட் லையபிலிட்டி இருக்கின்றது.
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்
- கோரப்பட்ட கிளைம்களுக்கு எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யும் தேர்டு பார்ட்டி தன்னிடம் தகுந்த ஆதாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- உங்கள் இன்சூரரும் காவல்துறையும் கூடிய விரைவில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் கிளைம் செய்ய முடியாது.
- ஐஆர்டிஏஐ-இன் (IRDAI) விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, மோட்டார் ஆக்சிடென்ட் கிளைம்ஸ் டிரிபியுனல் கிளைம் தொகையை முடிவு செய்ய வேண்டும். தேர்டு பார்ட்டிக்கான தனிப்பட்ட சேதங்களுக்கு அதிகபட்ச.
எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்
எனது இரு சக்கர வாகன பஜாஜ் பிளாட்டினா கிளைமை ஒரே நாளில் செட்டில் செய்த கோ டிஜிட் இன்சூரன்ஸை சேர்ந்த ககன்தீப் சிங் (சர்வேயர் அமிர்தசரஸ்) அவர்களையும் கோ டிஜிட் இன்சூரன்ஸையும் நான் பாராட்டுகிறேன். கோ டிஜிட் மற்றும் ககன்தீப் சிங்கின் இடைவிடாத சேவைகளுக்கு நன்றி.
டிஜிட்டினால் ஆன சூப்பர் ஸ்மூத் சர்வீஸ், என் பைக்கின் கிளைமை பதிவு செய்தேன், 2 ஏ நாட்களில் கிடைத்தது. திரு நிர்மல் எனக்கு கிளைம் இன்டிமேஷனுக்கு எல்லா வகையிலும் உதவினார் மேலும் செயல்முறை மிகவும் எளிமையாக இருந்தது.
டிஜிட் இன்சூரன்ஸ் இந்தியாவின் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். அவர்கள் வேலை செய்யும் முறை எனக்கு பிடித்திருக்கிறது. எல்லா செயல்முறைகளும் எளிமையானது. எனது பைக்கிற்கான கிளைமை எளிதில் பெற்றேன். இன்று உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிக்க நன்றி, கோ டிஜிட் மற்றும் அபிஷேக் சார்.
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் நன்மைகள்
போக்குவரத்து விதிமீறல் மூலம் விதிக்கப்படும் அபராதங்களில் இருந்து இது உங்களைப் பாதுகாக்கிறது, ஏனெனில், குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் புதிய அபராதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 ஆகும். அடுத்த முறையும் நிகழ்ந்தால் அதற்கான அபராதம் ரூ. 4,000!
உங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு நபர், சொத்து அல்லது வாகனத்திற்கோ நீங்கள் பாதிப்பேற்படுத்தினால், அதனால் ஏற்படும் இழப்புகள் மற்றும் பொறுப்புகளிலிருந்தும் இது உங்களைப் பாதுகாக்கிறது.
நீங்கள் டூ வீலரில் (இரு சக்கர வாகனம்) செல்லும் போது உங்களுக்கு காயமடையும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால் அதிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
நீங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கும்போது 24x7 மணிநேர ஆதரவைப் பெறுவீர்கள், அதனால் எதுவாக இருந்தாலும், உங்கள் சிறந்த நண்பர், அதாவது உங்கள் பைக் இன்சூரர் எப்போதும் உங்களுடன் இருப்பார்!
சட்டத்திற்கு இணங்கவும், அனைத்து இந்திய சாலைகளிலும் சட்டப்பூர்வமாக சவாரி வண்டி ஓட்டவும் உங்களை அனுமதிக்கிறது.
உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது, நீங்கள் ஏதேனும் விபத்துகளை எதிர்கொண்டால், உங்களுக்கு அதுவும் கவர் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது.
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் பாதகங்கள்
எதிர்பாராதவிதமாக நீங்கள் உங்கள் சொந்த டூ-வீலர் வாகனத்தை சேதப்படுத்தினால், அதனால் ஏற்படும் இழப்புகள் கவர் செய்யப்படாது!
வெள்ளம், தீ, சூறாவளி மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் உங்கள் டூ-வீலருக்கு ஏற்படும் சேதம் மற்றும் இழப்பு போன்றவற்றிற்கு இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்காது.
உங்கள் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தனிப்பயனாக்கிக் கொள்ள முடியாது, அதாவது கூடுதல் அம்சங்களான ஆட்-ஆன்ஸ மற்றும் கவர்ஸ் அதாவது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ப்ரொட்டெக்க்ஷன் (பாதுகாப்பு) போன்றவற்றை சேர்க்க முடியாது. நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே நீங்கள் இதனை செய்ய முடியும்.
இந்தியாவின் பைக் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
|
தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் |
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு |
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல் |
|
உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல் |
|
தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ் |
|
Get Quote | Get Quote |
Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
இந்தியாவில் பிரபலமான மாடல்களுக்கான தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ்
இந்தியாவில் பிரபல பிராண்டுகளுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ்
பைக்கிற்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் வாங்குவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பைக்கிற்கு ஸ்டாண்ட் அலோன் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை என்னால் வாங்க முடியுமா?
ஆமாம், உங்களால் வாங்க முடியும். எவ்வாறாயினும், நீங்கள் எதையும் மற்றும் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸை வாங்குவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
எனது தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை நான் கிளைம் செய்தால், எனது என்சிபி-ஐ (NCB) இழக்க நேரிடுமா?
இல்லை, நீங்கள் இழக்கமாட்டீர்கள். உங்கள் என்சிபி (NCB) அல்லது நோ க்ளைம் போனஸ் அப்படியே உள்ளது.
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் அவசியமா?
ஆம், மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் கீழ் குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும்.
ஒருவேளை வேறு யாரேனும் எனது பைக்கை ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால், டிஜிட் என் இழப்பை ஈடுசெய்யுமா?
ஆம், விபத்தின் போது பைக்கை ஓட்டிச் சென்றவர் யாராக இருந்தாலும், உங்கள் இழப்பை டிஜிட் இன்சூரன்ஸ் ஈடு செய்யும். ஆனால், ஓட்டுநரிடம் செல்லத்தக்க லைசன்ஸ் இல்லை என்றால், அவர்களுக்கு கவராகாது, மேலும் இதனால் உங்கள் கிளமை ரத்து செய்யப்படும்.
எனது பைக்கிற்கு தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் போதுமா?
அடடா, உங்கள் பைக்கின் சேதத்திற்கான அனைத்து செலவையும் நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளீர்களா? அது வெடிகுண்டு அளவிலான செலவு என்பது உங்களுக்குத் தெரியும். தேர்டு பார்ட்டியின், வரையறையின்படி, தேர்டு பார்ட்டி என்பது நீங்கள் ஏற்படுத்திய விபத்தால் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரைக் குறிக்கிறது. காம்ப்ரிஹென்சிவ் பாலிசியானது தேர்டு பார்ட்டி கவரில் இல்லாத சேதத்தையும் பாதுகாக்கிறது.
நான் வேறு நகரம்/மாநிலத்தில் விபத்தை சந்தித்தால் என்ன நடக்கும்?
சம்பவம் நடந்த நகரம் அல்லது மாநிலம் எதுவாக இருந்தாலும், டிஜிட் இன்சூரன்ஸ் கவர் செய்யப்படும்.
தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸை நான் தவிர்க்கலாமா?
இல்லை, டூ வீலர் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை உங்களால் தவிர்க்க முடியாது, ஏனெனில் சட்டப்படி தேர்டு பார்ட்டி சேதங்களுக்கு குறைந்தபட்சம் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில், உங்களிடம் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் அல்லது அதைவிட சிறந்த, காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பது அவசியம். செல்லத்தக்க டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும், அதன் பின்னர் ரூ. 4,000 அபராதம்!
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு பகுதியாக வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீடு எவ்வளவு?
தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீடு பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பொறுத்தது. தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதத்துக்கு - (வரம்பற்ற பொறுப்பு) அன்லிமிடட் லையபிலிட்டி. தேர்டு பார்ட்டி வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் - ரூ. 7.5 லட்சம் வரை.
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் போது நான் என்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
ஆவணங்கள் தேவையில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட தேர்டு பார்ட்டி அருகிலுள்ள காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும்.
செல்லத்தக்க தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் நான் வண்டி ஓட்டினால் என்ன நடக்கும்?
முதல் முறை மீறினால் ரூ.2,000 அபராதமும், இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ.4,000 அபராதமும் விதிக்கப்படும்.