காலாவதியான பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்க

usp icon

9000+ Cashless

Network Garages

usp icon

96% Claim

Settlement (FY23-24)

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

Continue with

-

(Incl 18% GST)
background-illustration

காலாவதியான டூ-வீலர் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிக்க

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் காலாவதியானால் என்ன நடக்கும்?

உங்கள் பைக்கை உங்கள் வாழ்நாள் முழுவதும் இன்சூர் செய்வது முக்கியம், ஏனெனில் இது எல்லா நேரங்களிலும் பைக்குடன் தொடர்புடைய பல்வேறு ஆபத்துகளுக்கு எதிராகவும் உங்கள் பைக்கை பாதுகாக்க உதவுகிறது.

இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான பணத்தைச் செலுத்துதல்

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் காலாவதியாகி, காலாவதி தேதிக்குப் பிறகு ஏதேனும் நேர்ந்தால், அதன் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான பணத்தை நீங்களே செலுத்த வேண்டும். இந்த ஊரடங்கின்போது நீங்கள் டூ-வீலரை பயன்படுத்தாவிட்டாலும், வெஹிக்கில் ஓவர் ஹீட்டிங், பைக் அல்லது அதன் பாகங்கள் திருடப்படுதல், பார்க் செய்யப்பட்டிருக்கும் போது பைக் மீது ஏதாவது மோதும்போது ஏற்படும் சேதம் முதலிய நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் நீங்களே பணம் செலுத்தவேண்டியிருக்கும்.

டிராஃபிக் போலீசாரால் தண்டிக்கப்படுதல்

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸை புதுப்பிக்க மறந்துவிட்டு, போலீசார் உங்களைப் பிடித்தால், உங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். உண்மையில் இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த அபராத தொகையை ஒப்பிடும்போது இன்சூரன்ஸ் செய்வதற்கு அதை விட குறைவான செலவே ஆகும். இன்சூரன்ஸ் தொகை ரூ.750 முதல் (உங்கள் டூ-வீலர் வகையைப் பொறுத்து) தொடங்குகிறது!

நோ கிளைம் போனஸ் இழப்பு

உங்கள் பாலிசி செயல்பாட்டில் இருந்தபோதும் நீங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட நேரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ அதைப் புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் நோ கிளைம் போனஸை இழப்பீர்கள்! அதாவது, உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் புதுப்பித்தல் தள்ளுபடிகள் கிடைக்காது.

மீண்டும் ஆய்வுக்கு செல்லவேண்டும்!

நீங்கள் ஒரு பைக் இன்சூரன்ஸை மேற்கொள்ளும்போது, குறிப்பாக ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) அல்லது ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் செய்யும்போது, உங்கள் பாலிசி செயல்படுத்தப்படுவதற்கு முன் சுய பரிசோதனை செய்யும் செயல்முறை உள்ளது. உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை என்றால், நீங்கள் மீண்டும் ஆய்வு செயல்முறைக்கு செல்ல வேண்டும், இதன் காரணமாக உங்கள் பாலிசியை புதுப்பிக்க அதிக நேரம் எடுக்கும்!

காலாவதியான பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகும்போது மனதில் கொள்ள வேண்டியவை

காலாவதியான பைக் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்தல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்