பைக் இன்சூரன்ஸ்-இல் நோ கிளைம் போனஸ் (NCB)
உங்கள் குழந்தைப் பருவம் நினைவிருக்கிறதா? அதாவது, நீங்கள் 5 அல்லது 6 வயதாக இருந்த போது, உங்கள் தந்தை உங்களிடம் நீங்கள் அன்று முழுவதும் நல்லபடியாக நடந்து கொண்டால், நன்றாக படித்தால், எந்த விதமான தொந்தரவும் செய்யவில்லையென்றால், உங்களுக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக சொல்லியிருப்பார். அது போலவே, நோ கிளைம் போனஸ்(NCB) என்பது, நல்லதொரு கட்டுப்பாடான பைக் ஓட்டுநராக இருப்பதற்காக உங்களுக்குக் கொடுக்கப்படும் பரிசு போன்றது.
நல்லபடியாக பைக் ஓட்டுவதற்கும், போனஸிற்கும் என்ன சம்பந்தம் என்று இப்போது நீங்கள் கேட்கலாம். நீங்கள் பைக் இன்சூரன்ஸ் வாங்கியிருந்து, பாதுகாப்பாக வண்டி ஓட்டி, பைக்-ஐயும் சரியாக பராமரித்து வந்தால், நீங்கள் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய அவசியமிருக்காது. ஏனென்றால் கிளைம் செய்வதற்கு எந்த சேதமும் ஏற்பட்டிருக்காது!
பைக் இன்சூரன்ஸ்-இல் NCB என்றால் என்ன?
நீங்கள் பாதுகாப்பாக வண்டி ஓட்டி, ஒரு வருடத்திற்கு எந்த கிளைம்-உம் செய்யவில்லையென்றால், உங்கள் பாலிசியின் புதுப்பிப்பின்(renewal) போது, பிரீமியத்தில் உங்களுக்குத் தள்ளுபடி கிடைக்கும் என்று இப்போது இன்சூரர்கள் கூறுகிறார்கள். இந்த தள்ளுபடி தான் நோ கிளைம் போனஸ் எனப்படுகிறது.
வழமையாக, பாலிசி ஆண்டின் போது பாலிசிதாரர் எந்தவொரு கிளைம்-உம் செய்யாமல் இருக்கும் பட்சத்தில், அவருக்கு பிரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடியே NCB என்று பொருள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. மோசடியான கிளைம்களை தடுப்பதற்கும், ஒரு விதமான கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், நோ கிளைம் போனஸ் என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இருப்பினும் நாங்கள் கிளைமையும், மக்களுக்கு உதவி செய்வதையும் விரும்புகிறோம்.)
இதில் நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் தொடர்ச்சியாக இது போல் நல்லமுறையில் நடந்து வந்து, எந்தவொரு பிரச்சினைகள், சேதங்கள் அல்லது விபத்துக்களும் உங்கள் பைக்கிற்கு ஏற்படவில்லையென்றால், நீங்கள் உங்களுடைய நோ கிளைம் போனஸ்-ஐ சில வருடங்கள் சேர்ந்த பிறகு பெற்றுக் கொள்ளலாம். இது உங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது என்பதை பின்னர் பார்க்கலாம்.
நீங்கள் புது பைக்-ஐ வாங்கும் போது உங்கள் NCB-ஐ புது பைக்-கிற்கு மாற்றிக் கொள்ள முடியுமா?
இன்னொரு நற்செய்தி என்னவென்றால், திரட்டப்பட்ட NCB போனஸ் அந்த பிரபலமான நாய்க்குட்டியை போன்றது, நீங்கள் போகுமிடமெல்லாம் அது கூடவே வரும். அதாவது, நீங்கள் பாலிசிதாரராக இருக்கும் சமயத்தில், நீங்கள் புது பைக் வாங்க முடிவு செய்தால், பழைய வாகனத்திலிருந்து உங்கள் புது வாகனத்திற்கு NCB-ஐ மாற்றிக் கொள்ளலாம். பாலிசிதாரர் என்ற முறையில் உங்கள் NCB உங்களுக்குத் தான், உங்கள் பைக்-கிற்கு அல்ல.
பைக் இன்சூரன்ஸிற்கு NCB எவ்வாறு கணக்கிடப்படுகிறது
உங்கள் முழுமையான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் முதல் புதுப்பிப்பிற்கு(renewal) பின்னரே, உங்கள் நோ கிளைம் போனஸ் திட்டம் தொடங்கப்பெறும். (கவனிக்கவும், உங்கள் பிரீமியத்தின் சொந்த சேத பகுதிக்கு NCB பிரத்யேகமாக பொருந்துகிறது. உங்களுடைய பைக்-இன் ஐடிவி(IDV) அல்லது இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ-இல் (Insured Declared Value) பைக்-இன் வழக்கமான உபயோகத்தினால் ஏற்படும் சேதத்(wear and tear) தொகையை கழித்த பிறகு கணக்கிடப்படும் பிரீமியம் தொகையே இங்கு குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு பிரீமியத்திற்கு இந்த போனஸ் பொருந்தாது).
கிளைம்-செய்யாத முதலாம் வருடத்தில் உங்கள் பிரீமியத்தில் 20% தள்ளுபடி பெறுகிறீர்கள். பின்னர் ஒவ்வொரு வருடமும் பாலிசியை புதுப்பிக்கும்(renewal) சமயத்தில் 5-10% தள்ளுபடி உயர்கிறது. அதாவது, நீங்கள் கிளைம் செய்யாத ஒவ்வொரு வருடமும், பாலிசிதாரரின் நன்னடத்தைக்கு ஏற்ப வெகுமதி அளித்தது போன்று தள்ளுபடி உயர்கிறது.
உதாரணத்திற்கு, முதலாம் பாலிசி ஆண்டின் இறுதியில் நீங்கள் 20% NCB பெற்றிருந்தால், அடுத்த இரண்டாம் வருடத்திலும் நீங்கள் கிளைம் செய்யவில்லையென்றால், உங்கள் பிரீமியத்தின் மீதான தள்ளுபடி 25-30% அதிகரிக்கிறது, அதற்கடுத்த வருடத்தில் 30-35% அதிகரிக்கும், அடுத்தடுத்த வருடங்களிலும் இதே போன்று உயரும். இது போலவே, 5 வருடத்தில் உங்கள் பிரீமியம் மீது 50% வரை நீங்கள் தள்ளுபடி பெறலாம்.
சரி பார்க்கவும்: NCB தள்ளுபடியுடன் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பெறுவதற்கு பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தவும்.
கிளைம்-செய்யாத வருடங்கள் |
நோ கிளைம் போனஸ் |
1 வருடத்திற்கு பிறகு |
20% |
2 வருடத்திற்கு பிறகு |
25% |
3 வருடத்திற்கு பிறகு |
35% |
4 வருடத்திற்கு பிறகு |
45% |
5 வருடத்திற்கு பிறகு |
50% |
பேராசைப்பட வேண்டாம், ஏனென்றால் 5 வருடங்களுக்கு பிறகு, நீங்கள் ஒரு வருடத்திற்கு கிளைம் செய்யவில்லையென்றாலும் தள்ளுபடி அதிகரிக்காது. ஒரு சிறிய உதாரணத்துடன் இந்த கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதனை இப்போது பார்ப்போம்.
நீங்கள் ஒரு அழகிய அதி வேக பைக்-ஐ 2010-இல் வாங்கினீர்கள். உங்களை போல ஒரு நல்ல பைக் ஓட்டுநர்/பாலிசிதாரர் இந்த உலகிலேயே இல்லை. உங்கள் பிரீமியத்தை நீங்கள் சரியாக செலுத்தி வந்தீர்கள். நீங்கள் முதல் வருடம் அல்லது இரண்டாம் வருடம்…. அல்லது ஐந்தாம் வருடம் என எப்போதுமே கிளைம் செய்ததில்லை.
இப்போது, நீங்கள் இந்த பைக்-ஐ உபயோகித்து சலிப்படைந்து விட்டீர்கள். எனவே இந்த பைக்-ஐ விற்று விட்டு, வேறொரு அழகிய பைக்-ஐ 2015-இல் வாங்கி விட்டீர்கள். உங்கள் புதிய பைக்-உடன் பைக் இன்சூரன்ஸ்-உம் பெற்றிருக்கிறீர்கள். புது வண்டிக்கான சொந்த சேத பிரீமியம் ரூ.3000 என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நீங்கள் 5 வருடத்திற்கு NCB-ஐ சேர்த்து வைத்திருக்கிறீர்கள். எனவே உங்கள் புது வண்டிக்கான பிரீமியத்தின் மீது 50% வரை உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். சொந்த சேத பிரீமியத்திற்கு நீங்கள் ரூ.1500 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்!
நான் NCB-ஐ எப்போது இழக்கிறேன்?
நீங்கள் பாலிசியின் எந்த வருடத்தில் இருப்பினும், நீங்கள் ஒரு முறை கிளைம் செய்து விட்டால் NCB ஜீரோ-வுக்கு மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கு விதிவிலக்கு ஏதேனும் உண்டா? ஆம், இருக்கிறது. உங்கள் பாலிசியில் NCB பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டிருந்தால், இந்த விதி உங்களுக்கு பொருந்தாது.
நான் கிளைம் செய்த பிறகும், NCB-ஐ தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?
நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த சலுகையை அளித்திருக்கிறதா என்பதை பொறுத்தே இருக்கிறது. உங்கள் இன்சூரர் அனுமதித்தால், உங்கள் முற்றுமுழுதான பாலிசியின் ஒரு பகுதியாக நீங்கள் NCB பாதுகாப்பு ஆட்-ஆன்-ஐ(add-on /கூட்டுறுப்பு) தேர்வு செய்து கொள்ளலாம். இந்த அம்சத்தின் மூலமாக, உங்கள் நோ கிளைம் போனஸ்-ஐ இழக்காமலேயே, நீங்கள் ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் (பெரும்பாலும் ஒன்று தான்) இன்சூரன்ஸ் கிளைம்-களை மேற்கொள்ளலாம். சில இன்சூரர்கள், நீங்கள் குறிப்பிட்ட வருட காலத்திற்கு உங்கள் பாலிசியில் கிளைம் செய்யாதிருக்கும் பட்சத்தில் தான் இந்த பாதுகாப்பு அம்சம் தொடங்கப் பெறும் என்று நிபந்தனை விதிப்பார்கள்.
எனவே, அடுத்த முறை பைக் ரேஸ் செல்வது பற்றி யோசனை செய்யும் போது, நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நோ கிளைம் போனஸ் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த வெகுமதி புதிய வாகனங்களுக்கும், புதிய இன்சூரர்களுக்கும் மாற்றிக் கொள்ளத்தக்கது என்னும் உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், பாதுகாப்பாக வண்டி ஓட்டுங்கள், தேவைப்பட்டாலேயொழிய கிளைம் செய்யாதீர்கள். நோ கிளைம் போனஸ்களை பெறுவதற்கு தயாராக இருக்கவும்!