ஜாவா எனர்ஜி பைக் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்குதல்/புதுப்பித்தல்
ஜாவா பைக் இன்சூரன்ஸில் என்னவெல்லாம் அடங்கும்
இதில் பாதுக்காக்கப்படாதது எது
உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் கவர் செய்யப்படவில்லை என்பதை அறிவது முக்கியம், இதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த ஆச்சரியமான சூழலும் ஏற்படாது. அத்தகைய ஆச்சரியமூட்டும் சில சூழ்நிலைகள் இங்கே:
நீங்கள் ஏன் ஜாவா பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் பைக் இன்சூரன்ஸ்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல் |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ் |
×
|
✔
|
Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!
ஸ்டெப் 1
1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
ஸ்டெப் 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!
டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்ஜாவா மோட்டார் சைக்கிள் பற்றிய ஒரு சிறிய வரலாற்று குறிப்பு
இந்த தயாரிப்பு நிறுவனமானது அதன் முதல் பைக் ஜாவா 500 ஓஎச்வி- ஐ முதல் உலகப் போரின் போது வெளியிட்டது. இதேபோல், மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் துணை நிறுவனமான கிளாசிக் லெஜெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் ஜாவா பிராண்ட் மூலமாக பைக்குகளை வெளியிட ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனை அடுத்து, நவம்பர் 2018 இல், அவர்கள் ஜாவா 300, நாற்பத்தி இரண்டு மற்றும் பேராக் ஆகிய மூன்று மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தினர்.
ஜாவா பைக்குகளின் எஞ்சின் விபரங்கள் காரணமாக, 1960கள் வரை இந்த பைக்குகள் பந்தயத்தில் தீவிரமாக பங்கேற்றன. அதன் பழமை வாய்ந்த மாடல்கள் ஸ்பீட்வே, டர்ட்-ட்ராக் மற்றும் ஐஸ் ரேசிங்கிற்கு ஏற்ற வகையில் நான்கு-ஸ்ட்ரோக் என்ஜின்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இருப்பினும், பின்னர் அவை இரண்டு-ஸ்ட்ரோக் என்ஜின்கள் கொண்டு மாற்றப்பட்டன.
இந்தியாவில், ஜாவா நாற்பத்தி-இரண்டு பைக்குகளின் விலையானது ₹1.69 லட்சத்தில் ஆரம்பித்து ஜாவா பேராக்கின் விலை ₹2.06 லட்சம் வரை விற்கப்படுகிறது. செப்டம்பர் 2020 கிடைத்த தகவலின்படி, இந்த நிறுவனம் 42% வளர்ச்சி அடைந்துள்ளது.
உங்கள் ஜாவா டூ வீலர் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு நீங்கள் ஏன் டிஜிட்டை தேர்வு செய்ய வேண்டும்?
பிற மோட்டார் சைக்கிள்களைப் போலவே, உங்கள் ஜாவா பைக்கும் பெரும் பண இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் மற்றும் சேதங்களுக்கு ஆளாகக்கூடும். ஆகவே, ஜாவா பைக் டூ வீலருக்கான இன்சூரன்ஸ் எடுப்பது அத்தகைய இழப்புகளை திறம்பட சமாளிக்க உங்களுக்கு உதவும். உங்கள் ஜாவா பைக்கிற்கு டூ வீலர் இன்சூரன்ஸைப் பெறுவதால் கிடைக்கும் வேறு சில ஆதாயங்கள் பின்வருமாறு:
சிக்கல்களைத் தவிர்க்கலாம் - மோட்டார் வாகனச் சட்டம், 1989 இன் படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவது கட்டாயமாகும். ஆகையால், இந்தக் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்காத தனிநபர்கள் முதல் முறையாக குற்றம் புரிந்தால் ₹2000 வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைப் புரியும் பட்சத்தில் ₹4000 வரை செலுத்த வேண்டும். எனவே, தேவையற்ற சாலை அபராதங்கள் மற்றும் பிற சட்டரீதியான விளைவுகளைத் தவிர்க்க, உங்கள் பைக்கிற்கு டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியது அவசியம்.
தேர்டு-பார்ட்டி சேதங்களை உள்ளடக்கும் - உங்கள் ஜாவா பைக் மற்றும் தேர்டு-பார்ட்டி வாகனம் ஆகிய இரண்டிற்கும் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு கணிசமான சேதம் ஏற்படலாம். அப்படியானால், தகுந்த தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது, தேர்டு-பார்ட்டி சேதங்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை ஈடுசெய்ய உதவும். மேலும் தேர்டு-பார்ட்டியுடன் ஏற்பட்ட விபத்துக்களால் எழக்கூடிய சட்ட சிக்கல்களை சமாளிக்கவும் இது உதவுகிறது.
சொந்த சேத கவரேஜை வழங்குகிறது - திருட்டு, தீ, இயற்கை அல்லது மனிதனால் எழும் பேரழிவுகள் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் உங்கள் ஜாவா பைக்கிற்கு சேதம் ஏற்படலாம். இது போன்ற சூழ்நிலைகளில், ஜாவா பைக்கிற்கான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது மேற்கூறிய விபத்துகளால் ஏற்படும் ரிப்பேர்களுக்கான கவரேஜ் வழங்குகிறது.
சொந்த சேத பலன்களை வழங்குகிறது - கடுமையான விபத்துகளினால் நிரந்தர ஊனநிலை அல்லது மரணம் ஏற்பட்டுவிட்டால், பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் பெர்சனல் ஆக்சிடன்ட் கவரின் கீழ் இழப்பீடு பெறுவார்கள்.
நோ கிளைம் பலன்கள் கிடைக்கும் - உங்கள் ஜாவா பைக் இன்சூரன்ஸ் பாலிசி காலஅளவிற்குள் நீங்கள் எந்த ஒரு கிளைமும் செய்யவில்லை என்றால், உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் நீங்கள் செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ் பிரீமியத்தில் தள்ளுபடிகளை வழங்குவார். ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பித்தலின் போது இந்த போனஸை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர, அந்தந்த இன்சூரரைப் பொறுத்து இன்னும் பல்வேறு விதமான பலன்களைப் பெறலாம். இந்த காரணங்களுக்காக, போட்டித்தன்மை வாய்ந்த ஜாவா டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி விலை, ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் செயல்முறைகள் மற்றும் பலவற்றின் காரணமாக டிஜிட் இன்சூரன்ஸைப் பெறுவது சிறந்த யோசனையாக இருக்கலாம்.
ஜாவா பைக் இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்
ஆன்லைனில் ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கும்போது, பல விருப்பங்கள் உள்ளதால் நீங்கள் குழப்பமடையலாம். உங்களுக்கான சரியான முடிவை எடுக்க, இன்சூரர்களையும் அவர்கள் வழங்கும் சேவைப் பலன்களையும் துல்லியமாக ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். இப்போது டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சில நீட்டிக்கப்பட்ட நன்மைகளைப் பார்ப்போம்.
- பல விதமான இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள் - டிஜிட்டில் இருந்து ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும் நபர்கள் பின்வரும் விருப்பங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம்:
- தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசி - உங்கள் ஜாவா பைக்கினால் ஏற்படும் தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களில் இருந்து உங்களை பாதுகாக்க டிஜிட் இந்த அடிப்படை இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குகிறது. உங்கள் வாகனமானது தேர்டு-பார்ட்டி நபர், சொத்து அல்லது வாகனத்திற்கு சேதம் விளைவித்தால், இன்சூரர் உங்கள் சார்பாக ரிப்பேர் செலவுகளை செலுத்துவார்
- சொந்த சேத பாலிசி- தேர்டு-பார்ட்டி சேதங்களுக்கு பாதுகாப்பு பெறுவதைத் தவிர, உங்கள் சொந்த பைக் சேதங்களை உள்ளடக்கிய ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் பெற விரும்பலாம். இதனை பூர்த்தி செய்ய நீங்கள் டிஜிட்டிலிருந்து ஒரு முழுமையான சொந்த சேத பாலிசியைப் பெறலாம்
- காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பைக் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு-பார்ட்டி மற்றும் சொந்த சேதங்கள் ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், இயற்கை பேரழிவுகள், திருட்டு போன்றவற்றின் விளைவாக பைக்கிற்கு சேதத்தினால் ஏற்படும் நிதி இழப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
- ஐடிவி தனிப்பயனாக்கம் - உங்கள் பைக்கின் உயர் இன்சூரன்ஸ் அறிவிக்கப்பட்ட மதிப்பு (IDV)-ன் அடிப்படையில், பைக் திருடு போய்விட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத சேதம் ஏற்பட்டாலோ உங்களுக்கு இன்சூரரால் ரிட்டர்ன் தொகையை வழங்கப்படும். டிஜிட் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த மதிப்பைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் உங்கள் ரிட்டர்ன் தொகையை அதிகரிக்கலாம்.
- எளிமையான ஆன்லைன் செயல்முறை - இன்சூரன்ஸ் செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் கிளைம் செயல்முறைகள் ஆன்லைனில் எளிமையாக இருப்பதை டிஜிட் உறுதி செய்கிறது. அதன் தொழில்நுட்பம் சார்ந்த செயல்முறையானது, பாலிசிதாரர்கள் அதிக அளவில் ஆவணங்கள் சமர்பிப்பதன் தேவையில்லாமல் தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தே பாலிசிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்பட்ட சுய-பரிசோதனை செயல்முறை இருப்பதால் ஒரு சில நிமிடங்களிலேயே ஒருவரின் இன்சூரன்ஸ் பாலிசிக்கான கிளைமை ஒருவர் எழுப்பலாம்.
- வித விதமான ஆட்-ஆன் பாலிசிகள் - டிஜிட்டைத் தேர்வு செய்வதன் மூலம், ஏற்கனவே நீங்கள் பெற்றுள்ள உங்கள் பாலிசியுடன் வெவ்வேறு விதமான ஆட்-ஆன் பாலிசிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். ஆட்-ஆன் கவர்களில் சில பின்வருமாறு:
· கன்ஸ்யூமபிள் கவர்
· ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர்
· எஞ்சின் ப்ரொடக்ஷன் கவர்
· ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கவர்
· சாலை பாதுகாப்பு
- அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் மூலம்அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் நாடு முழுவதும் உள்ளது. அவற்றில் கேஷ்லெஸ் பழுதுபார்க்கும் வசதிகளை நீங்கள் பெறலாம். இந்த கேரேஜ்களில் பழுதுபார்க்கும் போது, இன்சூரர் நேரடியாக பழுதுபார்க்கும் மையத்தில் பணம் செலுத்துவதால், தனிநபர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
- 24*7 மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு - ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பித்தல் விலையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் வசதிக்கேற்ப டிஜிட் வாடிக்கையாளர் ஆதரவு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். நாளின் எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவ அவர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.
மேலும், உங்களால் குறைவான எண்ணிக்கையில் கிளைம் செய்ய முடியும் என்றால், அதிக டிடக்டபிள்ஸ் மூலமாக டிஜிட்-ல் இருந்து குறைந்த ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் கட்டணத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இருப்பினும், இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன், நீங்கள் எந்த ஒரு முக்கியமான நன்மைகளையும் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, மேற்கூறிய விவரங்களை வாசித்த பிறகு, சரியான இன்சூரரிடருந்து ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸை வாங்குவது பணம் மற்றும் சட்டம் சார்ந்த பொறுப்புகளை குறைத்து ஒருவருக்கு நன்மைகளை வழங்குகிறது என்று கூறலாம்.
இந்தியாவில் ஜாவா பைக் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Two Wheeler Insurance for Jawa Motorcycle models