இந்தியாவில் பைக் இன்சூரன்ஸ் ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
கிராமப்புறமாக இருந்தாலும் சரி அல்லது நெரிசலான பெருநகரமாக இருந்தாலும் சரி, சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் ஒருவரது தனிப்பட்ட போக்குவரத்திற்கு மிகவும் பொருத்தமான வாகனமாக இருப்பது டூ-வீலர் தான். ஏனென்றால், மும்பை, பெங்களூர் அல்லது டெல்லி போன்ற பரபரப்பான பெருநகரங்களின் நெரிசலான சாலைகளைப் போலவே கிராமப்புறங்களின் குறுகிய சாலைகளிலும் எளிதாக செல்ல டூ-வீலர்கள் உங்களுக்கு உதவுகின்றன. மேலும், டூ-வீலர்கள் பெரும்பாலான மக்களுக்கு எளிதாக மலிவு விலையில் கிடைக்கும் ஒரு வாகனம். உண்மையில், டூ-வீலர் வாங்க முடியாதவர்களுக்கு கூட, இன்றைய நாட்களில் வங்கிகளில் வாகன கடன் வழங்கப்படுகிறது.
இந்த காரணிகள், இந்திய நடுத்தர குடும்பத்தினரின் வளர்ந்து வரும் திறன் மற்றும் எதிர்கால கனவுகளுடன், இந்தியாவில் டூ-வீலர்களின் பிரபலத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே இந்திய சாலைகளில் டூ-வீலர்கள் முன்பை விட அதிக எண்ணிக்கையில் உள்ளன.
சாலையில் டூ-வீலர்கள் அதிகளவில் செல்வதால், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. அதே விகிதத்தில், இந்தியாவில் டூ-வீலருக்கான இன்சூரன்ஸின் தேவையும் அதிகரித்துள்ளது. இது எதனால் மற்றும் எப்படி? என்பதை இந்த பதிவில் காண்போம்.
உங்கள் டூ-வீலரை ஏன் இன்சூர் செய்ய வேண்டும்?
ஒரு புத்தம் புதிய டூ-வீலரை விற்கும் போது, கிட்டத்தட்ட அனைத்து மோட்டார் நிறுவனங்களும் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குகின்றன. இருப்பினும், பெரும்பாலான மக்கள் சில சலுகைகளைப் பெறுவதற்காக இன்சூரன்ஸை ரத்து செய்கிறார்கள் அல்லது காலாவதியானவுடன் அதைப் புதுப்பிக்காமல் விட்டு விடுகிறார்கள். ஒருவேளை மக்கள் இன்சூரன்ஸில் செலவழித்த பணத்தைச் சேமிக்க விரும்பலாம் அல்லது இன்சூரன்ஸை புதுப்பிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம்! இருப்பினும், பைக் இன்சூரன்ஸின் மீதான இந்த மந்தமான அணுகுமுறையின் உண்மையான காரணம் என்னவென்றால், - நான் ஏன் பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்? என்ற கேள்விக்கான பதில் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது தான்.
சரி, இதை சரியான கண்ணோட்டத்தில் காண, உங்கள் டூ-வீலருக்கு சில வகையான இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் இரண்டு முக்கிய உந்துதல்கள் இருக்கலாம்: ஒன்று, இந்திய சாலைகளில் ஓடும் அனைத்து டூ-வீலர்களுக்கும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது விதிகளின்படி கட்டாயம். இரண்டாவது, இன்சூரன்ஸ் உங்களையும், உங்கள் வாகனத்தையும், விபத்து அல்லது விபத்தில் சிக்கிய தேர்டு பார்ட்டி நபரையும் பாதுகாக்கிறது, மேலும் நிறைய செலவுகளையும் மிச்சப்படுத்துகிறது.
சட்டப்படி குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் தேவை என்றாலும், அதற்குப் பதிலாக காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி திட்டத்தைத் தேர்வுசெய்ய கடுமையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. விபத்துக்கள், திருட்டுகள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றுக்கு எதிராக உங்கள் வாகனத்தின் சொந்தப் பாதுகாப்பை ஒரு விரிவான பாலிசி கூடுதலாக வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், மூன்றாம் தரப்பு காயங்கள் அல்லது சொத்துச் சேதங்களும் விரிவான காப்பீட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக பாதுகாக்கப்படுகின்றன. மூன்றாம் தரப்பு காப்பீடு மற்றும் விரிவான அல்லது நிலையான காப்பீடு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விரிவான ஒப்பீடு, இரண்டிற்கும் இடையில் நீங்கள் புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய கீழே செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பைக் இன்சூரன்ஸ் திட்டங்கள்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம் |
✔
|
✔
|
தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்) |
✔
|
✔
|
தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்) |
✔
|
✔
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள் |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
டிஜிட்டானது இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் நன்கு வெளிப்படுத்தப்பட்ட, சமநிலையான காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளில் ஒன்றை வழங்குகிறது. டிஜிட் வழங்கும் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் மிக எளிமையான கிளைம்கள், மறைக்கப்பட்ட செலவுகள் மற்றும் வெளிப்படையான இன்சூரன்ஸ் செயலாக்க வழிமுறை ஆகிய அம்சங்கள் உள்ளன.
நீங்கள் ஒரு பொறுப்பான வாகன ஓட்டியாக இருக்கலாம். ஆனால் உங்கள் பைக் சாலையில் விபத்தை சந்திக்காது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டினாலும் எந்த நேரத்திலும் விபத்து நேரிடலாம். விபத்துகளைத் தவிர திருட்டு அல்லது இயற்கை பேரழிவு போன்ற சம்பவங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நீங்கள் பொறுப்பா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் உங்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. ஆனால் உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், அது உங்களை நிதி இழப்பு மற்றும் சாத்தியமான லையபிலிட்டிகள் இரண்டிலிருந்தும் உங்களை பாதுகாக்கும்.
மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 1998 பைக் இன்சூரன்ஸ் என்பது இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் டூ-வீலர்கள் வாங்கும் போதே ஒருவர் பைக் இன்சூரன்ஸை வாங்கி விட வேண்டும்.
டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் என்னவெல்லாம் கிடைக்கும்?
டிஜிட்டிலிருந்து கிடைக்கும் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியானது பின்வரும் அபாயங்களை உள்ளடக்கியது:
இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகள் - பூகம்பம், புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் எந்த நேரத்திலும் நிகழும் என்பதை எவராலும் சொல்ல முடியாது மற்றும் அவை நமது உயிர் மற்றும் உடைமைகளுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தலாம். டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் அனைத்துச் சேதங்களிலிருந்தும் நிதி இழப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன.
மனிதனால் உண்டாகும் பேரழிவுகளால் ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகள் - இயற்கை பேரழிவுகள் தவிர மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை பேரிடர்களான கொள்ளை, திருட்டு, கலவரங்கள் அல்லது இதுபோன்ற ஏதேனும் அசம்பாவிதங்களின் விளைவாக உங்கள் பைக்கானது சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளது.
டிஜிட்டின் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள், மனிதனால் ஏற்படும் பேரழிவுகளால் விளையும் அனைத்து சேதங்களுக்கும் எதிரான நிதி இழப்பிலிருந்தும் முழுப் பாதுகாப்பை உங்களுக்கு வழங்கும்.
விபத்து காரணமாக ஓரு சில பாகங்கள் அல்லது முழுவதுமாக ஊனம் ஆகுதல் - விபத்துக்கள் என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய துரதிர்ஷ்டங்களில் ஒன்றாகும். இது எந்த நேரத்திலும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஒரு நபர் விபத்தை சந்திக்கும் போது, அவர் பகுதி அல்லது முழுமையான ஊனத்தால் பாதிக்கப்படலாம்.
பகுதி இயலாமைக்கான எடுத்துக்காட்டுகள் தற்காலிக செயலிழப்பு, உடலின் சில பகுதி மட்டும் இயங்காமல் இருத்தல் போன்றவையாகும். முழுமையான பார்வை இழப்பு, நடக்க முடியாமல் போவது போன்றவை முழுமையான இயலாமைக்கான சில எடுத்துக்காட்டுகள். டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி இந்தத் துயரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி, இதற்கான சிகிச்சைச் செலவையும் உங்களுக்கு வழங்குகிறது.
பாலிசிதாரரின் மறைவு -ஒரு பெரிய விபத்து பாலிசிதாரரின் மரணத்திற்கு வழிவகுக்கலாம் அல்லது விபத்தின் போது பைக்கை ஓட்டிய தேர்டு பார்ட்டி நபரின் மரணத்தில் முடிவடையலாம். அத்தகைய சூழ்நிலையில், பாலிசிதாரர் பிஏ கவரைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பாலிசிதாரரின் நாமினிகளுக்கு பைக் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு கணிசமான இழப்பீட்டை வழங்குகிறது.
டிஜிட்-ன் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இவை. இந்திய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்பது உண்மைதான். எனவே டூ-வீலரில் செல்லும் போது அதிக ஆபத்தை சந்திக்க நேரிடலாம். உண்மையில், சாலையில் கார் ஓட்டுவதை விட டூ-வீலர்களில் செல்வது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் பைக் ஓட்டும்போது, காருக்குள் அமர்ந்திருக்கும் காரை ஓட்டுபவர்களை விட, நீங்கள் அதிக ஆபத்தில் உள்ளீர்கள். டிஜிட் வழங்கும் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி, சுய-உடல் காயம், வாகனத்தின் மொத்த அல்லது பகுதி சேதம், சவாரி செய்பவரின் மொத்த அல்லது பகுதியளவு இயலாமை மற்றும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) போன்றவற்றிற்கான பெரிய அளவிலான ஆபத்துக் கவரேஜை உங்களுக்கு வழங்குகிறது.
இந்தியாவில் பைக் இன்சூரன்ஸ் ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு சட்ட ரீதியான இணக்கங்கள், இதில் உள்ள ரிஸ்க் ஃபேக்டர் மற்றும் செலவு, சேமிப்பு - போன்ற காரணங்கள் போதுமானது. பைக் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட பிறகு, நீங்கள் இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உங்கள் டூ-வீலருக்கு ஒரு இன்சூரன்ஸை நீங்கள் இன்னும் வாங்கவில்லை என்றால், நீங்கள் இப்போதே உங்கள் பைக்கை இன்சூர் செய்யுங்கள்!