3 வருடங்களுக்கான லாங் டேர்ம் டூ வீலர் இன்சூரன்ஸ்

பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டுத் தொகையை இன்றே பெற்றிடுங்கள்.
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

லாங் டேர்ம் டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றிய விரிவான கையேடு

3 வருடங்களுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

3 வருடத்திற்கு டூ வீலர் இன்சூரன்ஸை எடுப்பதினால் வண்டியின்vஉரிமையாளருக்கு ஒவ்வொரு வருடமும் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் அவசியம் இருக்காது

இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) ஸ்டாண்ட்அலோன் தேர்ட்-பார்டி லையபிலிட்டி (பொறுப்பு) கவர் தனித்தும்,  ஓன் டேமேஜ் கவர் உடன் சேர்ந்தும் கிடைக்கும் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை பல வருடங்களுக்கு சேர்த்து வாங்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. 

இந்த காப்பீடுகளில் எவை கவர் செய்யப்பட்டுள்ளன?

கவர் வகை

அர்த்தம்

தேர்ட்-பார்டி லையபிலிட்டி (பொறுப்பு) கவர்

பாலிசியானது, உங்கள் டூ வீலரால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் உடல் காயம் அல்லது மூன்றாம் நபரின் இறப்பு அல்லது மூன்றாம் தரப்பு வாகனத்திற்கு ஏற்படும் சேதம் போன்ற லையபிலிட்டிகளை (பொறுப்பு) ஈடு செய்யும்.

ஓன் டேமேஜ் கவர்

இயற்கை அல்லது மனிதர்களால் உங்கள் சொந்த வண்டிக்கு நேரும் இழப்பு அல்லது சேதங்களினால் ஏற்படும் லையபிலிட்டிகளை ஈடு செய்யும்.

நீங்கள் டூ வீலருக்கான 3 வருட இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, 3 வருட தேர்ட்-பார்டி லையபிலிட்டி (பொறுப்பு) கவர் + 1 வருட ஓன் டேமேஜ் கவராக சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். 

செப்டெம்பர் 1, 2018க்கு பின் வாங்கப்பட்ட டூ வீலர்களுக்கு மட்டுமே மூன்று வருட காம்பிரிஹென்சிவ் இன்சூரன்ஸை வாங்க முடியும்.

காம்பிரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

3 வருட டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் எவ்வளவு?

லாங் டேர்ம் டூ வீலர் இன்சூரன்ஸின் பிரீமியக் கணக்கீடு

கால அளவு

பிரீமியத் தொகை (OD+TP) GST தவிர்த்து

3 வருடங்கள்

₹2,497

2 வருடங்கள்

₹1,680

1 வருடங்கள்

₹854

டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் வண்டிக்கான பிரீமியத்தைக் கணக்கிடுங்கள்.

3 வருடங்களுக்கான லாங் டேர்ம் டூ வீலர் இன்சூரன்ஸ் வாங்குவதால் கிடைக்கும் பயன்கள்

3 வருடங்களுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்