Third-party premium has changed from 1st June. Renew now
What is a Truck Insurance?
டிரக் இன்சூரன்ஸ் என்பது கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசி வகைகளில் ஒன்று ஆகும். டெலிவரி, பிக் அப்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து போன்ற வணிக செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் டிரக்குகளுக்கான பிரத்தியேகமான பாலிசி ஆகும். விபத்துகள், வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதனால் ஏற்படும் விபத்து, இயற்கை பேரிடர்கள், தீ விபத்துகள், திருட்டு போன்ற எதிர்பாராத சம்பவங்களால் கமர்ஷியல் வெஹிக்கிளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு ஆகும் செலவுகளிலிருந்து டிரக் இன்சூரன்ஸானது நிதிப் பாதுகாப்பு அளித்திடும்.
நான் ஏன் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?
- நீங்கள் ஒரு தொழில் செய்து கொண்டிருந்தால், உங்களது அன்றாட செயற்பாடுகளுக்காக, ஒன்றோ அல்லது அதற்கும் அதிகமான டிரக்களை சொந்தமாக வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. டிரக்(கள்) உங்கள் தொழிலின் அங்கமாக இருப்பதனால், அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து அதை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இன்சூரன்ஸ் இருப்பதனால் எதிர்பாராமலும், துரதிருஷ்டமாகவும் நிகழக்கூடிய சூழ்நிலைகளினால் உங்களுக்கோ அல்லது உங்கள் தொழிலுக்கு ஏற்படக்கூடிய திடீர் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
- உங்களிடம் டிரக் இன்சூரன்ஸ் இருக்கும் என்றால், உங்கள் டிரக்கினால் ஏற்படும் நிதி இழப்புகளிருந்து உங்கள் தொழில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும். இந்த இன்சூரன்ஸ் வைத்திருப்பது என்பது உங்கள் டிரக்கினால் ஏற்பட்ட நிதி இழப்புகளால் உங்கள் தொழில் முடங்கிப்போகமல் இருப்பதையும், லாப வரம்பை தக்கவைத்துக்கொள்வதையும் உறுதிசெய்கிறது. மேலும், இழப்புகளை சரிசெய்ய பயன்படுத்தப்படக்கூடியப் பணத்தினை உங்கள் தொழில் வளர்ச்சிக்காக செலவிடலாம்.
- லையபிலிட்டி ஒன்லி பாலிசியை மட்டுமாவது வைத்திருக்கவேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். உங்கள் டிரக்கினால் மூன்றாம் தரப்பினருக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டால், அதனால் உங்கள் தொழிலுக்கு ஏற்படும் நஷ்டத்திலிருந்து இந்த பாலிசி பாதுகாக்கிறது. இருப்பினும், டிரக்குகள் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் சொந்த டிரக் மற்றும் உரிமையாளர்-ஓட்டுநர்-ஐப் பாதுகாக்க ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் வைத்திருப்பது எப்போதும் சிறந்ததாகும்.
டிஜிட்-ன் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் எந்தெந்த இழப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது?
எவ்வித இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு காப்பீடு இருக்காது?
நீங்கள் கிளைம் செய்யும் போது ஏமாற்றத்தை தவிர்த்திட, உங்களின் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் பாலிசியில் எவ்வித இழப்புகள் மற்றும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கப்படாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அதுபோன்ற சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
தேர்டு- பார்ட்டி லையபிலிட்டி பாலிசியை மட்டும் வைத்திருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் எதற்கும் காப்பீடு அளிக்கப்படாது.
கிளைம் செய்த டிரக்-ன் உரிமையாளர்-ஓட்டுநர் குடித்துவிட்டு அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஓட்டுவதால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது.
உரிமையாளர்-ஓட்டுநர் அலட்சியத்தால் ஏற்படும் சேதங்களுக்கு (ஏற்கனவே வெள்ளம் இருக்கும்போது வாகனம் ஓட்டுவது போன்றவை) காப்பீடு அளிக்கப்படாது.
விபத்து/இயற்கை சீற்றம் போன்றவற்றின் நேரடி விளைவாக ஏற்படாத சேதங்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது. (உதாரணத்திற்கு: ஒரு விபத்துக்கு பின், சேதம் அடைந்த டிரக் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அதன் விளைவாக என்ஜின் சேதமடைந்தால், அந்த இழப்புகள் இதில் அடங்காது)
டிஜிட்-ன் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள் | டிஜிட்-ல் இருக்கும் பயன்கள் |
---|---|
கிளைம் செயல்முறை | ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லாத கிளைம் செயல்முறை |
வாடிக்கையாளர் சேவை | 24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை |
கூடுதல் கவரேஜ் | பிஏ கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள்/ஸ்பெஷல் எக்ஸ்க்ளூஷன்ஸ் மற்றும் கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல |
மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள் | தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு |
கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்11
உங்கள் டிரக்கின் வகை மற்றும் அதன் தேவைக்கு ஏற்ப, நாங்கள் இரண்டு வகையான பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், வண்டிக்கு ஏற்படும் அபாயம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வண்டி என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் டிரக் மற்றும் அதன் ஓட்டுநருக்கு ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
லையபிலிட்டி ஒன்லி | ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் |
மூன்றாம் தரப்பு தனிநபருக்கோ அல்லது சொத்துக்கோ உங்கள் டிரக்கால் ஏற்படும் சேதங்கள் |
|
மூன்றாம் தரப்பு தனிநபர் அல்லது சொத்துக்கு இன்சூர் செய்யப்பட்ட டிரக் இழுக்கும் (டோவ்விங்) வாகனத்தினால் ஏற்படும் சேதங்கள். |
|
இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்துக்களால் உங்களின் சொந்த டிரக்கிற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் |
|
டிரக் உரிமையாளர்- ஓட்டுநர் காயம் அடைந்தால்/மரணித்தால்தோராய மதிப்பீட்டினை பெறவும் | தோராய மதிப்பீட்டினை பெறவும் |
|
Get Quote | Get Quote |
கிளைம் செய்வது எப்படி?
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது hello@godigit.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
எங்கள் செயல்முறையை எளிதாக்க, பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி & நேரம் மற்றும் இன்சூர் செய்தவரின்/அழைப்பவரின் தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைத் தயாராக வைத்திருக்கவும்.
எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்
முகமது ரிஸ்வான் என்னை நல்லா வழிநடத்தினார். என் வெஹிக்கில் இன்சூரன்ஸ் ரின்நியூவல் பத்தின இன்ஃபர்மேஷன் எல்லாத்தையும் ஃபாலோ செஞ்சார்... அவருடைய வேலைய டெடிகேஷனோட செய்யறதுக்கு எனது பாராட்டுங்கள், கஸ்டமருக்கு சொல்லி புரியவைப்பது என்பது சுலபமான வேலை இல்லைனு எனக்குத் தெரியும், அதுக்காகவே டிஜிட் அவரைப் பாராட்டணும். இன்னொரு தடவை சொல்றேன் முகமது ரிஸ்வான் ரொம்ப அருமையா வேலை செய்றார்:)
இந்த இன்சூரன்ஸ் கம்பெனி மார்க்கெட்கு புதுசு, ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல இது ஒரு பெரிய மோட்டார் இன்சூரன்ஸ் பிராண்டா ஆகுமுன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். நவம்பர் 25ஆம் தேதி என் வண்டி திருடு போச்சு. கம்ப்ளைண்ட் செஞ்சேன், அதுக்கு கோ-டிஜிட்-ன் பதில் நல்லா இருந்தது. என் கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டு, எனக்கு பெருசா எந்த தொந்தரவும் தராம கொஞ்ச நாளிலேயே அதை சரி செஞ்சிட்டாங்க. கிளைமை சீக்கிரம் கிடைக்க எனக்கு உதவிய திரு. சிவ்ரின் மண்டல் (ரொம்ப சின்சியாரான ஊழியர்) அவருக்கு நன்றி. நான் கோ-டிஜிட் மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்ததில் ரொம்ப சந்தோஷம். எனது கிளைம் கிடைக்க ஹெல்ப் செய்ய சிவ்ரின் கிடைத்தது என்அதிர்ஷ்டம்.கோ-டிஜிட் மற்றும் சிவ்ரினுக்கு தாங்க்ஸ்!
என்னுடைய 4வது வெஹிக்கிள் இன்சூரன்ஸை கோ-டிஜிட்டிலிருந்து வாங்கிய அனுபவம் சிறப்பாக இருந்தது. செல்வி.பூனம் தேவி பாலிசி குறித்த தகவல்களை நன்றாக விளக்கினார், அதே போல் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் நன்கு அறிந்திருந்தார். என் தேவைகளுக்கு ஏற்ப தோராய மதிப்பீட்டினை (Quote) வழங்கினார். மேலும் ஆன்லைன் மூலம் பேமென்ட் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. இதை விரைவில் செய்து முடித்த பூனத்திற்கு நன்றி. வாடிக்கையாளர் உறவு மேம்பாட்டுக் குழு (கஸ்டமர் ரிலேஷன்ஷிப் டீம்) நாளுக்கு நாள் மெருகு ஏறி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்!! சியர்ஸ்.
இந்தியாவிலுள்ள கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்
எனது தொழிலுக்காக கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
ஆம், இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி , அனைத்து வாகனங்களும் குறைந்தபட்சம் லையபிலிட்டி ஒன்லி பாலிசி மட்டுமாவது கட்டாயமாக எடுத்திருக்கவேண்டும். உங்கள் டிரக், மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படுத்திய சேதம் மற்றும் நிதி இழப்புகளிலிருந்து இது பாதுகாக்கும். அடிப்படை டிரக் இன்சூரன்ஸ் இல்லாமல், இந்தியாவில் உங்கள் டிரக்கை ஓட்டுவது என்பது சட்டத்திற்கு புறம்பானது ஆகும்.
டிரக்குகளின் அளவு பெரியது என்பதாலும், அடிக்கடி பயன்படுத்தப்படுவதாலும், டிரக் உரிமையாளர்கள் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியை கூடுதலாக எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இது மூன்றாம் தரப்பு சேதங்களிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவரின் டிரக் மற்றும் உரிமையாளர்-ஓட்டுநர்-க்கு ஏற்படும் இழப்புகளிலிருந்தும் பாதுகாக்கும்.
டிரக் இன்சூரன்ஸை வாங்குவது/புதுப்பிப்பது ஏன் முக்கியம்?
- சிறிய அல்லது பெரிய விபத்து, வண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து மற்றும் இயற்கை சீற்றம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உங்களின் தொழிலைப் பாதுகாப்பதற்கு.
- லீகல் லையபிலிட்டீஸ்-இல் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள; இந்தியாவில் உள்ள அனைத்து கமர்ஷியல் டிரக்குக்கும் தேர்டு பார்ட்டி பாலிசி இருக்க வேண்டும்.
- உங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி படுத்த, நீங்கள் காம்பிரிஹென்சிவ் (விரிவான) கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் போது, அத்துடன் பேசஞ்சர் கவரையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்வதோடு, நீங்கள் உங்கள் தொழிலில் பொறுப்புள்ளவராக மற்றும்/அல்லது சிறந்த ஓட்டுநராக இருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது
எனது தொழிலுக்கான சிறந்த டிரக் இன்சூரன்ஸை தேர்வு செய்வது எப்படி?
இன்றைய சூழலில் கிடைக்கக்கூடிய பலத்தரப்பட இன்சூரன்ஸ்களிலிருந்து எளிமையான, நியாயமான, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களையும் உங்கள் தொழிலையும் பாதுகாக்கக்கூடியதாகவும், எல்லா இழப்புகளை ஈடு செய்யக்கூடியதாகவும், மேலும் இவை எல்லாத்தையும் விட கிளைம்களை விரைவில் தருவதற்கு உறுதி அளிக்கக்கூடிய இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், நாம் இன்சூரன்ஸை வாங்குவதற்கான முக்கிய காரணமே இது தானே!
உங்கள் டிரக்கிற்கான சரியான இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கான உதவிக் குறிப்புகள் இதோ:
- Right Insured Declared Value (IDV) சரியான இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (IDV): ஐடிவி என்பது நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் கமர்ஷியல் வெஹிக்கிலின் உற்பத்தியாளர் பட்டியலிட்ட விற்பனை விலையை குறிக்கும். உங்கள் பிரீமியம் இதை வைத்து கணக்கிடப்படும். உங்கள் டிரக்கிற்கான இன்சூரன்ஸ்-ஐ ஆன்லைனில் தேடும் போது, சரியான ஐடிவி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
- Service Benefits - சேவைகளால் பெறக்கூடிய பயன்கள்: 24x7 மணி நேர வாடிக்கையாளர் உதவி, பரந்து விரிந்த கேஷ்லெஸ்(கட்டணமில்லா) கேரேஜ்களின் நெட்ஒர்க் போன்ற சேவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நேரங்களில், இந்த சேவைகளும் நமக்குத் தேவைப்படும்.
- Review Add-Ons - மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்களை மதிப்பிடுங்கள்: உங்கள் டிரக்கிற்கான சரியான கமர்ஷியல் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும் போது, அதிகபட்ச பலன்களை அளிக்கும் மதிப்புக்கூட்டல் ஆட்ஆன் (addon) காப்பீடுகளையும் மதிப்பீடு செய்யுங்கள்.
- Claim Speed - கிளைம் எவ்வளவு துரிதமாக செயல்படுத்தப்படுகிறது: எந்தவொரு இன்சூரன்ஸிலும் இது கவனிக்க வேண்டிய மற்றும் மிகவும் முக்கியமான அம்சமாகும். கிளைம்களை துரிதமாக செயல்படுத்தும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யுங்கள்.
- Best Value - பணத்திற்கேற்ற மதிப்பு: பிரீமியம், வழங்கப்படும் சேவைகள், கிளைமுக்கான இழப்பீடுகள் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆட்ஆன் (addon ) போன்ற அம்சங்களைப் போல நீங்கள் அவசியமானவை என்று நினைக்கும் பலன்களை ஒரு சேர்த்து மிகச் சிறந்த விலையில் அளிக்கக்கூடிய மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுங்கள்.
ஆன்லைனில் கிடைக்கும் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினை எப்படி ஒப்பிடலாம்?
மலிவான விலையில் கிடைக்கும் டிரக் இன்சூரன்ஸ்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அதை வாங்குதை, நாம் அதிகம் விரும்புவோம். இருப்பினும், வெவ்வேறு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினை ஒப்பிடும் போது சேவைகளின் பயன்கள், கிளைம்களை செட்டில் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள். மேலும், உங்கள் வண்டியின் வகையைப் பொறுத்து, டிரக்கள் முழுக்க முழுக்க தொழிலுக்காகவே பயன்படுத்தப்படுவதால் அதற்கான ஆபத்துக்களும் அதிகம். எனவே, உங்கள் வண்டியையும், தொழிலையும் எதிர்பாராத சிக்கல்களிருந்து பாதுகாக்க உறுதி அளிக்கும் முக்கியமான காரணிகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமாகும்:
- Service Benefits - சேவைகளின் பயன்கள்: இக்கட்டான சூழலில், சிறந்த சேவைகளை நமக்காக வழங்குபவர்களையே நாம் விரும்புவோம். ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் அளிக்கும் சேவைகளை மதிப்பீடு செய்து, உங்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்யுங்கள். 24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை மற்றும் 1000+ கேரேஜ்களில் கேஷ்லெஸ் (பணமில்லா) சேவைகள் போன்ற பல பயன்களை டிஜிட் வழங்குகிறது.
- Quick Claim Settlement - கிளைம்களுக்கு விரைவான செட்டில்மென்ட்: இன்சூரன்ஸ் பெறுவதற்கான முக்கிய காரணம் சரியான சமயத்தில் கிளைம்களை பெறுவதே ஆகும். எனவே, கிளைம்களை விரைவாக அளித்திடும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள். டிஜிட்-ன் 90.4% கிளைம்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்பட்டிருக்கிறது! இத்துடன், நாங்கள் காகிதமற்ற செயல்முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையே எங்களின் கொள்கையாக கொண்டுள்ளோம். அதாவது, எங்கள் செயல்முறைகள் அனைத்திற்கும் ஆவணங்களின் சாஃப்ட் காபி-ஐ மட்டுமே கேட்கிறோம். எங்களுடைய செயல்முறைகள் அனைத்தும் காகிதமற்றவை. ஆதலால், விரைவான மற்றும் தொந்தரவு இல்லா கிளைம் செயல்முறையின் பயன்களை அனுபவிக்கலாம்!
- Check your IDV - ஐடிவி (IDV )-ஐ சரிபார்க்கவும்: ஆன்லைனில் கிடைக்கும் பல இன்சூரன்ஸ்கள் உங்கள் வாகனத்திற்கான ஐடிவி (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ) குறைத்து மதிப்பிட்டுக் காட்டுவர். அதாவது, ஐடிவி உங்கள் வண்டியின் உற்பத்தியாளர், அதை விற்பனை செய்யும் விலையைக் குறிக்கும். ஐடிவி உங்கள் பிரீமியத்தை பாதிக்கும், அதே சமயம், உங்கள் கிளைமுக்கான சரியான இழப்பீடை கிடைக்கச் செய்யும். உங்கள் வாகனம் திருடு போன பின்னர் அல்லது வாகனம் சேதம் அடைந்த பின், உங்கள் ஐடிவி குறைவாக/தவறாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரிய வந்தால், அப்போது உங்களின் நிலை என்னவாக இருக்கக்கூடும்! டிஜிட் மூலம் உங்கள் டிரக் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது, உங்கள் ஐடிவி-ஐ நீங்களே குறிப்பிடும் வாய்ப்பினை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
- Best Value பணத்திற்கேற்ற மதிப்பு: இறுதியாக, உங்களுக்கு ஏற்ற விலையில், சேவைகள் மற்றும் கிளைம்களை விரைவாக செயல்முறைப் படுத்தும் டிரக் இன்சூரன்ஸ்-ஐ தேர்ந்தெடுங்கள்.
டிரக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
- Model, Engine & Make of the Truck - டிரக்கின் மாடல், என்ஜின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு: எந்த வகையான மோட்டார் இன்சூரன்ஸிலும், வாகனத்தின் மாடல், தயாரிப்பு மற்றும் என்ஜின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்சூரன்ஸின் பிரீமியமானது கணக்கிடப்படுகிறது. இதேபோல், டிரக்கின் தயாரிப்பு, மாடல் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு போன்றவைகளும் உங்கள் டிரக் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
- Type & Purpose of Truck - டிரக்கின் வகை மற்றும் அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது: தொழில் நிறுவனங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வகையான டிரக்குகள் பயன்படுத்கின்றன. உங்கள் டிரக் இன்சூரன்ஸ் பிரீமியமானது டிரக்கின் வகை மற்றும் அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது போன்ற வெவ்வேறு அளவுகோள்களை வைத்து அமையும். உதாரணத்திற்கு, சிறிய பிக்-அப் டிரக்கை விட சரக்குகளை ஏற்றிச் செல்லும் டிரக்கிற்கு அதிக இன்சூரன்ஸ் பிரீமியம் இருக்கும். ஏனென்றால், சரக்குகளை ஏற்றிச் செல்லும் டிரக் அளவு பெரியதாக இருக்கும், மேலும், அது கொண்டு செல்லும் பொருட்களின் மதிப்பிற்கும் பொறுப்பாகும்
- Location - இடம்: உங்கள் டிரக் இருக்கும் இடம் பொறுத்து, உங்கள் டிரக் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடப்படும். உங்கள் டிரக் பெருநகரம், மலைப் பகுதி அல்லது சிறிய நகரத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்குள்ளே பயன்படுத்தப்பட்டால் உங்கள் டிரக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணக்கிடுவதற்கு இந்த காரணிகளும் கருத்தில் கொள்ளப்படும்.
- No-Claim Bonus - நோ கிளைம் போனஸ்:இதற்கு முன்பு நீங்கள் டிரக் இன்சூரன்ஸை வைத்திருந்து, இப்போது உங்களின் பாலிசியை புதுப்பிக்க நினைத்தாலோ அல்லது புது இன்சூரரிடம் பாலிசியை வாங்கினாலோ உங்களின் என்.சி.பி (NCB - நோ கிளைம் போனஸ்) கருத்தில் கொள்ளப்படும். அதன் மூலம், உங்கள் பிரீமியத்தில் தள்ளுபடியும் பெறலாம்! நோ கிளைம் போனஸ் என்பது முந்தைய பாலிசி ஆண்டில் இன்சூரர் எவ்வித கிளைமும் செய்யவில்லை என்பதைக் குறிக்கிறது.
- Type of Truck Insurance Policies - டிரக் இன்சூரன்ஸ் பாலிசியின் வகை: அனைத்து கமர்ஷியல் வாகனங்களுக்கென்று இரண்டு வகையான இன்சூரன்ஸ்கள் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் டிரக் பிளானை பொறுத்து உங்கள் டிரக் இன்சூரன்ஸின் பிரீமியத் தொகை அமையும். அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய லையபிலிட்டி ஒன்லி பிளானின் பிரீமியத்தின் தொகை குறைவாக இருக்கும் - இது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகள் மற்றும் உரிமையாளர்–ஓட்டுநருக்கு ஏற்படும் தனிநபர் விபத்தால் ஏற்படும் இழப்புகளை மட்டுமே ஈடு செய்யும்; அதேசமயம் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி பிரீமியத்தின் தொகை அதிகமாக இருக்கலாம், ஆனால், நமது டிரக் மற்றும் அதன் ஓட்டுநருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளையும் ஈடு செய்யும்.
டிரக் இன்சூரன்ஸ் மூலம் எந்த வகையான டிரக்களை இன்சூர் செய்யலாம்?
தொழிலுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து டிரக்குகளுக்கும் டிஜிட்-ன் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் காப்பீடு அளிக்கும். இந்த டிரக்குகளை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்:
- Mini Trucks - மினி டிரக்குகள்: சந்தைகளில் கிடைக்கக்கூடிய சிறிய டிரக் வகைகளில் மினி டிரக்குகள் ஒன்றாகும். இது வணிகம், உள்ளூர் பிக் அப்-க்கு பயன்படுத்தப்படும் வண்டி ஆகும். இந்தியச் சாலைகளில்/ ரோடுகளில் நீங்கள் பார்க்கும் அசோக் லேலண்ட் தோஸ்த் வண்டி புகழ்பெற்ற இவ்வகை வண்டி ஆகும்.
- Light Trucks - லைட் டிரக்குகள்: லைட் டிரக்கள் என்பது ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல பொதுவாக பயன்படுத்தப்படும் டிரக்குகளின் வகைகள். உதாரணமாக; இன்றைய சந்தையில் இருக்கும் இ-காமர்ஸ் வணிகர்கள் தினசரி போக்குவரத்துக்காக, லைட் டிரக்குகளைப் பயன்படுத்துகின்றனர்
- Medium Trucks - மீடியம் டிரக்குகள்: பெயர் குறிப்பிடுவது போல, வழக்கமான பிக்-அப் டிரக்குகள் எனப்படும் லைட் டிரக்குகளை விட மீடியம் டிரக்கள் சற்று பெரியதாக இருக்கும். மரச்சாமான்கள், குப்பைகள் போன்ற பெரிய பொருட்களை இடம் மாற்றுவதற்காக இந்த டிரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
- Off-Road Trucks - ஆஃப்- ரோட் டிரக்குகள்: ஆஃப்-ரோட் டிரக்குகள், காரை இழுத்துச் செல்லவும்(டோவ்விங்), கட்டுமான பணிக்காகவும் பயன்படுத்தப்படும் கனரக டிரக்குகள் ஆகும்
இந்தியாவில் டிரக் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
டிரக்கை இன்சூர் செய்ய எவ்வளவு செலவாகும்?
நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் டிரக்கின் வகை, நீங்கள் டிரக்கைப் பயன்படுத்தும் நகரம் அல்லது நகரங்கள் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி வகையைப் பொறுத்து இன்சூரன்ஸ் தொகை கணக்கிடப்படும்.
ஒரு கமர்ஷியல் டிரக்கானது மற்றொன்றை விட வேறுபட்டதாக இருக்கும். எங்களோடு நீங்கள் பகிர்ந்த விவரங்களின் அடிப்படையில் உங்கள் பிரீமியத்தை பிரத்தியேகமாக்கித் தருவோம். நீங்கள் எங்களுக்கு வாட்ஸ்அப் செய்தால் மட்டுமே போதும், நாங்கள் உங்களுக்குப் பொறுத்தமான டிரக் இன்சூரன்ஸூக்கான தோராய மதிப்பீடை (quote) பிரத்தியேகமாக பெற்றிட உதவுவோம்.
டிரக் இன்சூரன்ஸில் காம்பிரிஹென்சிவ் மற்றும் தேர்டு- பார்ட்டி பாலிசி என்றால் என்ன?
காம்பிரிஹென்சிவ் டிரக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது டிரக்குக்குக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய தேர்டு பார்ட்டி லையபிலிட்டி மற்றும் விபத்துக்கள், மோதல்கள், இயற்கை சீற்றங்கள், தீ விபத்துகள் v எதிர்பாராத நிகழ்வுககளால் ஏற்படும் சொந்த சேதங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் டிரக்கைப் பாதுகாக்கும்.
ஆனால், தேர்டு பார்ட்டி டிரக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகளை (பொறுப்பு) மட்டும் ஈடு செய்யும் ஸ்டாண்ட் அலோன் டிரக் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும்
நான் டிரக் இன்சூரன்ஸை குறைந்த கட்டணத்தில் பெறுவது எப்படி?
நீங்கள் இந்த (70 2600 2400) எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். நாங்கள் உங்கள் டிரக் மற்றும் தொழிலுக்கு ஏற்ப குறைந்த விலைக்கு இன்சூரன்ஸைத் தனிப்பயனாக்கித் தருவோம்.
எனது நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட டிரக்குகள் உள்ளன, அவை அனைத்தையும் டிஜிட்-ன் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் மூலம் இன்சூர் செய்ய முடியுமா?
நிச்சயமாக! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 70 2600 2400 என்கிற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்வது மட்டும் தான். உங்கள் டிரக்குகளுக்கென்று பிரத்யேகமாகத் தனியனாக்கப்பட்ட இன்சூரன்ஸ் பிளான் உடன், உங்களை நாங்களே மீண்டும் தொடர்பு கொள்வோம்.
எனது டிரக் விபத்தில் சிக்கிக்கொண்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
1800-103-4448 என்கிற எண்ணில் உடனடியாக எங்களை அழைக்கவும்! அல்லது hello@godigit.com என்கிற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.