கனரக வாகன காப்பீடு

கனரக வாகனங்களுக்கான வணிக வாகன காப்பீடு

Third-party premium has changed from 1st June. Renew now

ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது, புல்டோசர்கள், கிரேன்கள், லாரிகள், டிரெய்லர்கள் போன்ற ஹெவி டியூட்டி வாகனங்களுக்கு பாதுகாப்பளிக்கும் ஒரு வகையான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியாகும். ஒரு அடிப்படையான, தேர்டு பார்ட்டி (மூன்றாம் தரப்பு) ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டியினருக்கு அந்த வாகனத்தின் மூலமாக நேரக் கூடிய சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கும். காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது சொந்த சேதங்களுக்கு இழப்பீடு அளித்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதிகபட்ச பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு கூடுதல் கவர்களையும் வழங்குகின்றது.

ஹெவி வெஹிக்கில்களின் வகைகள்

பல வகையான ஹெவி-டியூட்டி வாகனங்கள் இந்தியாவில் உள்ளன, அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன, இவை அனைத்திற்குமே எங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸின் கீழ் பாதுகாப்பளிக்கப்படும்.

  • புல்டோசர்கள் - பெரும்பாலும் ஹெவி டியூட்டி வாகனங்கள் கட்டுமான வேலையில் மண்ணை தள்ளுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸின் மூலம் இதற்கு காப்புறுதி வழங்கப்படுகிறது.
  • கிரேன்கள்- கிரேன்களும் கட்டுமான வேலைகளுக்கே பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. ஹெவி டியூட்டி வாகனங்களுக்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸின் மூலம் இதனை இன்சூர் செய்து கொள்ளலாம்.
  • பேக்ஹோ டிகர் - இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஹெவி-டியூட்டி வாகனங்களில், குறிப்பாக கட்டுமான வேலைகளுக்கு உபயோகப்படும் வாகனங்களில் பேக்ஹோ டிகரும் ஒன்றாகும்.
  • டிரெய்லர்கள்  - பொதுவாக இந்தியாவில், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சரக்குகளையும், பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு அனைத்து வகையான டிரெய்லர்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஹெவி-டியூட்டி கமர்ஷியல் இன்சூரன்ஸின் மூலம் இதற்கு காப்புறுதி வழங்கப்படுகிறது.
  • லாரிகள் - இந்தியாவில் டிப்பர் டிரக்குகளும், லாரிகளும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லுகின்ற பணிக்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

டிஜிட்-இன் ஹெவி கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகின்றது?

எவ்வித காரணங்களால் இழப்பீடுகளை பெற முடியாது?

உங்கள் ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியில்எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுவதில்லை என்பதை தெரிந்து கொள்வதும் மிக முக்கியமாகும், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் போது உங்களுக்கு ஏதும் சங்கடங்கள் நேராது. அது மாதிரியான சில சந்தர்ப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தேர்டு- பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் ஓன் டேமேஜஸ்

தேர்டு- பார்ட்டி லையபிலிட்டி பாலிசியை  மட்டும்  வைத்திருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் எதுவும் இதில் அடங்காது.

குடிபோதையில் வண்டி ஓட்டுதல் அல்லது லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுதல்

இன்சூர் செய்யப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவின் உரிமையாளர் (/ ஓனர் ) -ஓட்டுநர் ( / டிரைவர்)  குடித்துவிட்டு அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஓட்டினால்

அலட்சியத்தினால் ஏற்பட்ட சேதம்

உரிமையாளர் (/ ஓனர் ) - ஓட்டுநர் ( / டிரைவர்) அலட்சியத்தால் ஏற்படும் சேதம் (ஏற்கனவே வெள்ளம் இருக்கும்போது வாகனம் ஓட்டுவது போன்றவை)

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து/இயற்கை சீற்றம் போன்றவற்றின்  நேரடி விளைவாக ஏற்படாத சேதம்

டிஜிட் வழங்கும் ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள் டிஜிட்-ல் இருக்கும் பலன்கள்
கிளைம் செயல்முறை ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லாத கிளைம் செயல்முறை
வாடிக்கையாளர் சேவை 24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை
கூடுதல் கவரேஜ் பிஏ (PA) கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள் / தள்ளுபடிகள் / எக்ஸ்க்ளுஷன்ஸ் மற்றும் கட்டாயமான / கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல
மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள் தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/ வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு

ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்11

உங்கள் ஹெவி-டியூட்டி வாகனத்தின் வகை, மற்றும் நீங்கள் இன்சூர் செய்ய விரும்புகிற வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து, நாங்கள் இரண்டு முதன்மையான திட்டங்களை உங்களுக்காக வழங்குகிறோம். அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Liability Only Standard Package

ஏதேனும் தேர்டு பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு உங்கள் ஹெவி வெஹிக்கிலால் ஏற்படும் சேதங்கள்.

×

உங்கள் இன்சூர் செய்யப்பட்ட ஹெவி வெஹிக்கிலால் கட்டி இழுக்கப்பட்டு வந்த ஓடாத வண்டியினால் ஏதேனும் தேர்டு பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

இயற்கை பேரிடர்கள், தீ, திருட்டு அல்லது விபத்துக்கள் காரணமாக உங்கள் சொந்த ஹெவி வெஹிக்கிலுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள்.

×

ஹெவி வெஹிக்கில் உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்படும் காயம்/மரணம்

×
Get Quote Get Quote

கிளைம் செய்வது எப்படி?

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது hello@godigit.com  க்கு மின்னஞ்சல் / இ மெயில்  அனுப்பலாம்.

எங்கள் செயல்முறையை எளிதாக்க, பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி & நேரம் மற்றும் இன்சூர் செய்தவரின்/அழைப்பவரின் தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் வைத்திருக்கவும்.

டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எத்தனை விரைவாக கிடைக்கும்? நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் நன்மைக்கே! டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்

ஹெவி வெஹிக்கில் இன்சூர்னஸை எதற்காக வாங்க வேண்டும்?

  • ஹெவி வெஹிக்கில் இன்சூர்னஸை எதற்காக வாங்க வேண்டும்?
  • ஹெவி டியூட்டி வாகனங்கள் எந்தவொரு பிசினஸின் செயல்பாட்டுக்கான முதலீட்டின் பெரும் பகுதியாகும். அதனால், பிசினஸ் சீராக தொடர குறைந்தபட்சம் வாகனங்களை இன்சூரன்ஸ் மூலம் பாதுகாக்க வேண்டும், அது தேவைப்படும் நேரங்களில் இழப்புகளை ஈடுசெய்ய உதவும்.

  • மோட்டார் வெஹிக்கில் சட்டத்தின்படி, வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூர்னஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். அப்படி வாங்காவிடில், உங்களுக்கு  கடுமையான அபராதம்  செலுத்த வேண்டியிருக்கும் அல்லது பிற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

  • உங்கள் ஹெவி வெஹிக்கிலை இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் உங்கள் பிசினஸ் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்கள், தீ விபத்துகள் மற்றும் மோதல்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளின் போது உங்கள் வாகனத்தையும் நீங்கள் சிறப்பாக பராமரிக்க உதவுகிறது.

இந்தியாவில் ஆன்லைனில் கிடைக்கப்பெறும் ஹெவி கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூர்னஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸ் ஓட்டுநருக்கும் காப்புறுதி வழங்குகின்றதா?

ஆம், ஹெவி டியூட்டி வாகனங்களுக்கான இந்த கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸானது, உரிமையாளர்-ஓட்டுநருக்கும் காப்புறுதி வழங்குகின்றது.

 

ஹெவி டியூட்டி வெஹிக்கிலை இன்சூர் செய்வது கட்டாயமா?

ஆம், மோட்டார் வாகன சட்டப்படி, நீங்கள் இந்திய சாலைகளில் சட்டப்படி உங்கள் வண்டியை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியாவது வைத்திருப்பது கட்டாயமாகும். ஆயினும், ஹெவி-டியூட்டி வெஹிக்கில்களின் அபாய காரணிகளை கருத்தில் கொண்டு, தகுந்த ஆட்-ஆன்களுடன் (Add-on) சேர்த்து, காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கமர்ஷியல் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதன் மூலம் நீங்கள் அதிகபட்ச காப்புறுதியைப் பெறலாம்.

 

ஒரு ஹெவி டியூட்டி வெஹிக்கிலிற்கான கமர்ஷியல் இன்சூரன்ஸின் விலை என்ன?

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் ஹெவி டியூட்டி வெஹிக்கிலின் வகை, அது இயங்க இருக்கிற முதன்மையான நகரம் போன்றவற்றை சார்ந்தே இதன் விலை இருக்கும். உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸிற்கான பிரீமியம் தொகையை தெரிந்து கொள்வதற்கு இங்கே பார்க்கவும்.

 

ஒரு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் நான் எத்தனை வாகனங்களுக்கு காப்புறுதி பெற முடியும்?

ஒவ்வொரு வாகனமும் அதற்குரிய தனி இன்சூரன்ஸ் பாலிசியை கொண்டிருக்க வேண்டும். ஒரே பாலிசியில் நீங்கள் பல வாகனங்களுக்கு காப்புறுதி அளிக்க முடியாது.