Third-party premium has changed from 1st June. Renew now
குட்ஸ் கேரியிங்வெஹிக்கல்இன்சூரன்ஸ் என்றால் என்ன?
பெயரில் குறிப்பிடுவது போலவே, குட்ஸ் கேரியிங்வெஹிக்கல்இன்சூரன்ஸ் என்பது ஒரு வகை கமர்ஷியல் வெஹிக்கல் இன்சூரன்ஸ் ஆகும், இது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் கமர்ஷியல் வாகனங்களைப் பாதுகாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றவைகளை விட இந்த வாகனங்கள் அதிக அபாயங்களுக்கு ஆளாகும் என்ற பட்சத்தில், குட்ஸ் கேரியிங்வெஹிக்கல்இன்சூரன்ஸ் என்பது மோதல்கள், திருட்டுகள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தீ போன்று எதிர்பாராத விதமான சூழ்நிலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களை கவர் செய்ய உதவும்.
குட்ஸ் கேரியிங் வெஹிக்கலின் வகைகள்
இந்தியாவில் வெவ்வேறு தொழில் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு வகையான சரக்கு எடுத்துச்செல்லும் வாகனங்கள் (குட்ஸ் கேரியிங் வெஹிக்கல்) உள்ளன. வாகனங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சில பொதுவான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- டிரக்குகள் - டிரக்குகள் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. தினசரி அத்தியாவசியப் பொருட்களை வழங்கப் பயன்படுத்தப்படும் சிறிய டிரக்குகள் முதல் மரச்சாமான்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பெரிய டிரக்குகள் என இவை வேறுபடுகின்றன. டிரக்குகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வகையான பொருட்களையும் கமர்ஷியல் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் இன்சூரன்ஸ் செய்யலாம்.·
- டெம்போக்கள் - டெம்போக்கள் டிரக்குகளை விட ஒப்பீட்டளவில் சிறியவை, மேலும் பெரும்பாலும் நகரத்திற்குள் போக்குவரத்து மற்றும் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் கீழ் பொருந்தும்.·
- மூன்று சக்கர வாகனங்கள்- சரக்கு ஆட்டோக்கள் அல்லது மூன்று சக்கர வாகனங்கள் நகரத்திற்குள் பொருட்களை வழங்க சரக்குகளை ஏற்றிச் செல்லும் சிறிய வாகனம் ஆகும். அவை அளவில் சிறியதாக இருப்பதால், டிரக்குகள் மற்றும் டிரெய்லர்களுடன் ஒப்பிடுகையில் அவை குறைந்த அபாயங்களுக்கு உட்படுபவை. இருப்பினும், அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் குறைந்த வணிக இழப்புகளுக்காகவும் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸின் கீழும் அவை இன்சூரன்ஸ் செய்யப்படலாம்.
- டிரெய்லர்கள் - டிரெய்லர்கள் என்பது மாபெரும் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஆகும்; பெரும்பாலும் கனரக பொருட்களை கொண்டு செல்வதற்கு நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
- டிப்பர்ஸ் - டிப்பர்ஸ் என்பது கனரகம் மற்றும் குட்ஸ் எடுத்து செல்லும் வாகனம். இவை பெரும்பாலும் கட்டுமான சரக்குகளை எடுத்துச்செல்ல பயன்படும். இது டிஜிட்டின் கமர்ஷியல் பாலிசியின் கீழ், சாத்தியமான அபாயங்களில் இருந்து பாதுகாக்கவும் கவர் செய்யப்படுகிறது.
டிஜிட்டின் மூலம் ஏன் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் (சரக்கை ஏற்றி செல்லும் வாகனத்திற்கான காப்பீடு) இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்?
குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸில் என்னென்ன கவராகியிருக்கிறது?
இதல் கவர் செய்யப்படாதது எது?
உங்கள் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
நீங்கள் உங்கள் வாகனத்திற்கு தேர்டு பார்ட்டி கமர்ஷியல் இன்சூரன்ஸ் தான் வாங்க போகிறீர்கள் என்றால் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது
கிளைம் செய்யும் போது இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தை ஓனர்-டிரைவர் குடிப்போதையிலோ அல்லது சரியான உரிமம் இல்லாமல் வாகனத்தை ஒட்டியதாக தெரியவந்தால் கிளைம் அங்கீகரிக்கப்படாது.
ஓனர்-டிரைவரின் கவனக்குறைவினால் குட்ஸ் கேரியிங் வெஹிக்கலுக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டிற்கு, ஏற்கனவே நகரத்தில் வாகனம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்படியிருந்தும் ஒருவர் வாகனத்தை வெளியே எடுத்தல்
இயற்கை சீற்றம் அல்லது தீயினால், விபத்தின் நேரடி விளைவின்றி ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.
டிஜிட்டின் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
முக்கிய அம்சங்கள் | டிஜிட் பெனிஃபிட் |
---|---|
கிளைம் செயல்முறை | பேப்பர்லெஸ் கிளைம்ஸ் |
வாடிக்கையாளர் சேவை | 24x7 சேவை |
கூடுதல் கவரேஜ் | பிஏ (PA) கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கம்பல்சரி டிடக்டபிள்ஸ் மற்றும் பல, |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் | சொத்து/வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை வரம்பற்ற லயபிலிட்டி |
குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள் 11
உங்கள் கனரக வாகனத்தின் வகை மற்றும் நீங்கள் எத்தனை வாகனத்தை இன்சூர் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்து நாங்கள் முதன்மையான இரண்டு பாலிசிகளை வழங்குகிறோம்.
லயபிலிட்டி மட்டுமே | ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் |
உங்கள் பயணியை சரக்கு வாகனத்தினால் (குட்ஸ் கேரியிங்) ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
|
நீங்கள் இன்சூர் செய்திருக்கும் சரக்கு வாகனம் (குட்ஸ் கேரியிங்) இழுத்து செல்வதால் வேறு யாரோ ஒருவருக்கோ அல்லது சொத்துக்கோ ஏற்படும் சேதங்கள், |
|
உங்கள் சரக்கு வாகனத்திற்கு (குட்ஸ் கேரியிங்) இயற்கை சீற்றம், தீ, திருட்டு அல்லது விபத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள் |
|
சரக்கு (குட்ஸ் கேரியிங்) வாகனத்தின் ஓனர்-டிரைவருக்கு ஏற்படும் காயம்/உயிரழப்புIf the owner-driver doesn’t already have a Personal Accident Cover from before |
|
Get Quote | Get Quote |
எவ்வாறு கிளைம் செய்வது?
1800-258-5956 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது hello@godigit.com ற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்
பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த நேரம் மற்றும் தேதி மட்டுமின்றி இன்சூர் செய்யப்பட்ட நபரின் தொடர்பு எண்/அழைப்பாளரின் எண் போன்ற உங்கள் விவரங்களை கையிலேயே தயராக வைத்திருப்பது இன்னும் செயல்முறையை எளிதாக்கும்.
நான் ஏன் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளில் ஏற்ப்படும் விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள், மோதல்கள், தீ மற்றும் திருட்டுகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய உங்கள் வாகனத்திற்கான ஆபத்து மற்றும் சாத்தியமாகம் இழப்புகளைக் குறைக்கவும் உதவும்.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சரக்கு வாகனம் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் குறைந்தபட்சமாக தேர்டு பார்ட்டி கமர்ஷியல் வெஹிக்கல் இன்சூரன்ஸ் ஆவது இருக்க வேண்டும். இது எந்தவொரு சாத்தியமான மூன்றாம் தரப்பு சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய உதவுகிறது.
கனமான சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிக அபாயங்களுக்கு உட்படுகின்றன; வாகனத்தின் அளவு மற்றும் அதன் வணிக நோக்கம் காரணமாக இது ஏற்படலாம். குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் தீ, விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் திருட்டுகள் போன்ற சாத்தியமான அபாயங்களில் இருந்து ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடு செய்ய உதவுகிறது.
இந்தியாவில் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் டிரைவருக்கும் கவர் செய்கிறதா?
ஆம், இந்த கமர்ஷியல் வெஹிக்கல் இன்சூரன்சான குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் ஓனர்-டிரைவருக்கும் காப்புறுதி வழங்குகிறது.
கனரக வாகனத்திற்கு இன்சூரன்ஸ் அவசியமா?
ஆம், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்திய சாலைகளில் சரக்கு ஏற்றி செல்லும் வாகனம் சட்டபூர்வமாக இயங்குவதற்கு குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது அவசியமாகும்.
குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸின் கீழ் அந்த சரக்குகளும் கவர் செய்யப்படுமா?
இல்லை, அது கவர் செய்யப்படாது. குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் சேதங்களிலிருந்தும் இழப்புகளிலிருந்தும், ஓனர்-டிரைவருக்கு ஏற்படும் உடல் காயங்களிலிருந்து மட்டுமே பாதுகாக்கின்றன.
கமர்ஷியல் இன்சூரன்ஸின் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸின் விலை என்ன?
இது நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸின் வகை மற்றும் அது இயங்கும் முதன்மையான நகரத்தை சார்ந்திருக்கிறது. உங்கள் குட்ஸ் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸுக்கான சாத்தியமான பிரீமியத்தை இங்கே பார்க்கலாம்.