Third-party premium has changed from 1st June. Renew now
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் என்றால் என்ன?
பெயர் குறிப்பிடுவது போல, ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் என்பது கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ் பாலிசி வகைகளில் ஒன்று ஆகும். இது இந்தியாவில் பயன்படுத்தப்படும் த்ரீ வீலர் வாகனங்களின் தேவைக்காகவும், வாகனத்தை பாதுகாப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா ஆட்டோ உரிமையாளர்களும் குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டியினால் ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து அவர்களை பாதுகாக்கும். இத்துடன் விபத்துகள், வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதனால் ஏற்படும் விபத்து, இயற்கை பேரிடர்கள், தீ விபத்துகள் போன்ற பிற எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய காம்பிரிஹென்சிவ் (முழுமையான) ஆட்டோ ரிக்ஷா பாலிசியைக் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்.
இது போன்ற பாலிசிகளை ஆட்டோ உரிமையாளர்களுக்கு, குறைந்த மற்றும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாக்கப்பட்ட பிரீமியத் தொகையில் டிஜிட் இன்சூரன்ஸ் வழங்குகிறது
ஏன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?
- நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ ஆட்டோ ரிக்ஷாக்களை சொந்தமாக வைத்திருந்தால், குறைந்தபட்சம் ஒரு லையபிலிட்டி பாலிசியை வைத்திருக்கவேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். மூன்றாம் தரப்பினரின் சொத்து, தனிநபர் அல்லது வேறொருவரின் வாகனத்திற்கு உங்கள் ரிக்ஷா(க்கள்)வால் சேதம் ஏற்பட்டால், அதனால் உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் ஏற்படும் பண இழப்புகளை ஈடு செய்யும்.
- உங்களின் தொழில் ஆட்டோ ரிக்ஷாவை மையமாக வைத்து இயங்கும் பட்சத்தில் இத்துடன் ஸ்டாண்டர்ட் அல்லது காம்பிரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசிஐ வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது உங்கள் ஆட்டோ மற்றும் உரிமையாளர் (ஓனர்)- டிரைவரை (ஓட்டுநர்) இயற்கைப் சீற்றங்கள், விபத்துக்கள், பயங்கரவாத தாக்குதல், தீ விபத்துகள், திருட்டு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
- செல்லுபடியாகும் (Check ) இன்சூரன்ஸுடன் நீங்கள் ஆட்டோ ரிக்ஷாவை வைத்திருந்தால், நீங்கள் உங்கள் தொழிலில் பொறுப்பானவராக இருக்குறீர்கள் என்பதையும், உங்கள் கடமையை சிறப்பாக செய்வீர்கள் என்பதை உங்கள் வாடிக்கையாளர்கள் / பயணிகளிடத்தில் உறுதிப்படுத்தும்.
- ஆட்டோ ரிக்ஷாவை இன்சூர் செய்வதனால் உங்கள் தொழிலில் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை அல்லது சோதனை காலத்தை சீராக கடக்க உதவி செய்யும், அதாவது நீங்கள் சிக்கலைத் தீர்ப்பதற்காக செலவிடும் நேரத்தையும் பணத்தையும் உங்கள் தொழிலின் வளர்ச்சிக்காக செலவிடலாம்.
டிஜிட்-ன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் எந்தெந்த இழப்புகளை ஈடு செய்யும்?
எவ்வித காரணங்களால் இழப்பீடுகளை பெற முடியாது?
நீங்கள் கிளைம் செய்யும் போது ஏமாற்றத்தை தடுக்க, உங்களின் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பாலிசியில் எந்தெவொரு காரணங்களால் நீங்கள் இழப்புகளை பெற இயலாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அதுபோன்ற சில காரணங்கள் இங்கே:
தேர்டு- பார்ட்டி லையபிலிட்டி பாலிசியை மட்டும் வைத்திருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் எதுவும் இதில் அடங்காது.
இன்சூர் செய்யப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவின் உரிமையாளர் (/ ஓனர் ) -ஓட்டுநர் ( / டிரைவர்) குடித்துவிட்டு அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஓட்டினால்
உரிமையாளர் (/ ஓனர் ) - ஓட்டுநர் ( / டிரைவர்) அலட்சியத்தால் ஏற்படும் சேதம் (ஏற்கனவே வெள்ளம் இருக்கும்போது வாகனம் ஓட்டுவது போன்றவை)
விபத்து/இயற்கை சீற்றம் போன்றவற்றின் நேரடி விளைவாக ஏற்படாத சேதம்
டிஜிட்-ன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள் | டிஜிட்-ல் இருக்கும் பலன்கள் |
---|---|
கிளைம் செயல்முறை | ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லாத கிளைம் செயல்முறை |
வாடிக்கையாளர் சேவை | 24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை |
கூடுதல் கவரேஜ் | பிஏ (PA) கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள் / தள்ளுபடிகள் / எக்ஸ்க்ளுஷன்ஸ் மற்றும் கட்டாயமான / கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல |
மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள் | தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/ வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு |
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பிளான்ஸ் வகைகள்11
உங்கள் த்ரீ வீலரின் தேவைக்கு ஏற்ப, நாங்கள் இரண்டு வகையான பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், கமர்ஷியல் வண்டிக்கு ஏற்படும் அபாயத்தையும் அது எப்படி, எதற்காக, எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் ரிக்ஷா மற்றும் உரிமையாளர் (ஓனர்)-ஓட்டுநர்(டிரைவர்) ஆகியோருக்கு ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்து, அவர்களையும் பாதுகாக்கும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
லையபிலிட்டி ஒன்லி | ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் |
மூன்றாம் தரப்பு தனிநபருக்கோ அல்லது சொத்துக்கோ உங்கள் ஆட்டோ ரிக்ஷாவால் ஏற்படும் சேதங்கள் |
|
மூன்றாம் தரப்பு வாகனத்திற்கு உங்கள் ஆட்டோ ரிக்ஷாவால் ஏற்படும் சேதங்கள் |
|
இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்துக்களால் உங்களின் சொந்த ஆட்டோ ரிக்ஷாவிற்கு ஏற்பட்ட இழப்பு அல்லது சேதம் |
|
உரிமையாளர் (ஓனர்)- டிரைவருக்கு (ஓட்டுநருக்கு) காயம் அடைந்தால் / மரணித்தால்If the owner-driver doesn’t already have a Personal Accident cover in his name |
|
Get Quote | Get Quote |
கிளைம் செய்வது எப்படி?
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது hello@godigit.com க்கு மின்னஞ்சல் / இ மெயில் அனுப்பலாம்.
எங்கள் செயல்முறையை எளிதாக்க, பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி & நேரம் மற்றும் இன்சூர் செய்தவரின்/அழைப்பவரின் தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் வைத்திருக்கவும்.
எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்
டிஜிட் இன்சூரன்ஸ் மூலம் எனது வெஹிக்கிள் இன்சூரன்ஸ் செயல்முறைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. நவீன தொழில்நுட்பத்தைக் / டெக்னாலஜியைக் கொண்டு வாடிக்கையாளரை சிறந்த முறையில் கையாளுகின்றனர். யாரையும் நேரடியாக சந்திக்காமல் என்னுடைய கிளைமை 24 மணிநேரத்திற்குள் பெற்றுவிட்டேன். எனது அழைப்புகளை வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் சிறந்த முறையில் கையாண்டார்கள். என்னுடைய கோரிக்கைகளை சிறப்பாக கையாண்ட திரு ராமராஜு கொண்டனாவுக்கு எனது நன்றிகள்.
நிஜமாகவே சூப்பரான இன்சூரன்ஸ் கம்பெனி. அதிகமான ஐடிவி வேல்யூ, மரியாதையாக நடத்தும் ஊழியர்கள், நான் ஊழியர்கள் அளித்த சேவைகளால் முற்றிலும் திருப்தி அடைகிறேன். பல்வேறு சலுகைகள் மற்றும் பலன்களைப் பற்றி சரியான நேரத்தில் எனக்குத் தெரியப்படுத்தி பாலிசியை டிஜிட் இன்சூரன்ஸில் வாங்கத் தூண்டிய யுவேஸ் ஃபர்குனுக்கு சிறப்பு நன்றிகள். தொகை மற்றும் சேவைகள் சிறப்பாக இருப்பதால் இப்போது நான் மற்றொரு வெஹிக்கிள் பாலிசியை டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து வாங்க முடிவு செய்துள்ளேன்.
என்னுடைய 4வது வெஹிக்கிள் இன்சூரன்ஸை கோ-டிஜிட்டிலிருந்து வாங்கிய அனுபவம் சிறப்பாக இருந்தது. Ms. பூனம் தேவி பாலிசி குறித்த தகவல்களை நன்றாக விளக்கினார், அதே போல் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் நன்கு அறிந்திருந்தார். என் தேவைகளுக்கு ஏற்ப தோராய மதிப்பீட்டினை (Quote) வழங்கினார். மேலும் ஆன்லைன் மூலம் பேமென்ட் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. இதை விரைவில் செய்து முடித்த பூனத்திற்கு நன்றி. வாடிக்கையாளர் உறவு மேம்பாட்டுக் குழு (கஸ்டமர் ரிலேஷன்ஷிப் டீம்) நாளுக்கு நாள் மெருகு ஏறி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்!! சியர்ஸ்.
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்
டிஜிட்-ன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் எந்த வகையான ரிக்ஷாக்களை பாதுகாக்கலாம்?
டிஜிட்-ன் கமர்ஷியல் வெஹிக்கிள் பேக்கேஜ் பாலிசியின் கீழ், பின்வரும் அனைத்து விதமான ஆட்டோ ரிக்ஷாக்களுக்கும் காப்பீடு அளிக்கப்படுகிறது:
- பெட்ரோல்/ டீஸலால் ஓடும் /இயங்கும் ஆட்டோ ரிக்ஷா: இந்தியாவின் நகர்ப்புறங்களில் போக்குவரத்துக்காக அனைவராலும் பயன்படுத்தப்படும் வண்டியில் ஒன்று ஆகும். இவை அனைத்தும் நீங்கள் வசிக்கும் இடத்தில் பார்க்கக்கூடிய டி வி எஸ் TVS மற்றும் பஜாஜ் ஆட்டோரிக்ஷாக்கள் ஆகும்.
- எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா : இது த்ரீ வீலர் குடும்பத்தில் இணைந்த புது வரவு ஆகும். இ - ஆட்டோ ரிக்ஷா என்பது மற்ற ஆட்டோ ரிக்ஷாக்களைப் போல பெட்ரோல் மற்றும் டீஸலால் ஓடாமல் / இயங்காமல் , மின்சார மோட்டார்கள்/சோலார் பேனல்கள் அல்லது பேட்டரிகளின் மூலம் இயங்குகிறது.
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டுமா?
ஆம், இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி , அனைத்து வாகனங்களும் குறைந்தபட்சம் லையபிலிட்டி ஒன்லி பாலிசியை மட்டுமாவது கட்டாயமாக வைத்திருக்கவேண்டும். இது இல்லாமல், இந்தியாவில் ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டுவது என்பது சட்டத்திற்கு புறம்பானது ஆகும்
இருப்பினும், உங்களின் வருமானம் ஆட்டோ ரிக்ஷாவை ஆதாரமாகக் கொண்டிருந்தாலோ அல்லது நீங்கள் தொழிலின் ஒரு பகுதியாக பயன்படுத்தினாலோ ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது உங்கள் ஆட்டோ ரிக்ஷாவால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதோடு மட்டுமல்லாமல் , உங்கள் சொந்த வாகனத்தையும் உரிமையாளர் (ஓனர்)- டிரைவருக்கு (ஓட்டுநருக்கு) ஏற்படும் இழப்பினை ஈடு செய்யும்.
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை வாங்குவது/ புதுப்பிப்பது முக்கியமா?
- சிறிய அல்லது பெரிய விபத்து, வண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து மற்றும் இயற்கை சீற்றம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உங்களின் தினசரி வேலையை பாதுகாக்க.
- தேர்டு பார்ட்டி லையபிலிட்டீஸ் மற்றும் பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள; இந்தியாவில் ஆட்டோ உட்பட அனைத்து வாகனங்களையும் சட்டப்பூர்வமாக ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருக்க வேண்டும்
- உங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி படுத்த. நீங்கள் காம்பிரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி எடுத்துக் கொண்டால் எங்களின் பேசஞ்சர் கவரை கூடுதலாக தேர்வு செய்யலாம். இது உங்கள் ஆட்டோ மற்றும் அதில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
வழக்கமான மோட்டார் இன்சூரன்ஸைக் காட்டிலும் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் எவ்வாறு வேறுபடுகிறது?
இது இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஆட்டோ தொழிலுக்காகவே பயன்படுத்தப்படும் வாகனம் ஆகும். மேலும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. அளவில் சிறியது என்பதால் அதில் இருக்கும் ஆபத்தும் குறைவு. இந்த ஒரு காரணத்தால் மற்ற கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ்களை விட ஆட்டோ இன்சூரன்ஸ் வேறுபடுகிறது. இதனால்தான் ஆட்டோ ரிக்ஷாவிற்கான கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸின் தொகையானது டிரக் அல்லது பேருந்திற்கான தொகையை விட மலிவானதாக இருக்கும் என்பதை நீங்கள் காணலாம்.
எனது ஆட்டோ ரிக்ஷாவிற்கான சரியான கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸை நான் எப்படி தேர்வு செய்வது?
இன்றைய சூழலில் கிடைக்கக்கூடிய பலத்தரப்பட இன்சூரன்ஸ்களிலிருந்து எளிமையான, நியாயமான, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களையும் உங்கள் தொழிலையும் பாதுகாக்கக்கூடியதாகவும் எல்லா இழப்புகளை ஈடு செய்யக்கூடியதாகவும், மேலும் இவை எல்லாத்தையும் விட கிளைம்களை விரைவில் தருவதாக உறுதி அளிக்கும் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். ஏன்னென்றால் நாம் இன்சூரன்ஸை வாங்குவதற்கான முக்கிய காரணம் இது தானே!
உங்கள் த்ரீ வீலருக்கான சரியான மோட்டார் இன்சூரன்ஸை தேர்வுசெய்வதற்கான உதவிக் குறிப்புகள் இதோ:
- சரியான இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ-ஐ பகிருங்கள்: ஐடிவி (IDV ) என்பது நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் ஆட்டோவின் உற்பத்தியாளரின் விற்பனை விலையை குறிக்கும்(அதன் தேய்மானம் உட்பட). உங்கள் பிரீமியம் இதை வைத்து கணக்கிடப்படும். உங்கள் வாகனத்திற்கான ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ்-ஐ ஆன்லைனில் தேடும் போது, சரியான ஐடிவி (IDV )-ஐ பகிர்ந்து கொள்ளுங்கள்.
- சேவைகளால் பெறக்கூடிய பயன்கள்: 24x7 வாடிக்கையாளர் உதவி, பரந்து விரிந்த கட்டணமில்லா கேரேஜ்களின் நெட்வொர்க் போன்ற சேவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நேரங்களில், இந்த சேவைகளும் நமக்கு தேவைப்படும்.
- மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்களை மதிப்பிடுங்கள்: உங்கள் த்ரீ-வீலருக்கான சரியான ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும் போது, அதிகபட்ச பலன்களை அளிக்கும் மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்களை (addon) மதிப்பீடு செய்யுங்கள்
- கிளைம் செயல்முறைப்படுத்தப்படும் வேகம்: எந்தவொரு இன்சூரன்ஸிலும் இது கவனிக்க வேண்டிய மற்றும் மிகவும் முக்கியமான அம்சமாகும். கிளைம்களை துரிதமாக செயல்படுத்தும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்.
- பணத்திற்கேற்ற மதிப்பு: பிரீமியம் , சேவைகள், கிளைமுக்கான இழப்பீடுகள் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆட்ஆன் (addon ) போன்ற அம்சங்களைப் போல நீங்கள் அவசியமானவை என்று நினைக்கும் பலன்களை ஒரு சேர்த்து மிகச் சிறந்த விலையில் கிடைக்கும் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை தேர்ந்தெடுங்கள்
ஆட்டோ ரிக்ஷா தோராய மதிப்பீட்டினை (Quote) ஒப்பிடுவதற்கான உதவிக்குறிப்புகள்
மலிவான விலையில் கிடைக்கும் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அதை வாங்குவதில் நாம் விருப்பம் கொள்வோம். இருப்பினும் வெவ்வேறு ஆட்டோ இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினை (Quote) ஒப்பிடும் போது சேவைகளின் பயன்கள், கிளைம்களை செட்டில் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் போன்ற காரணிகளை கவனியுங்கள்
உங்கள் த்ரீ வீலரையும், தொழிலையும் எதிர்பாராத சிக்கல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யும் முக்கியமான காரணிகள்:
- சேவைகளின் பயன்கள்: இக்கட்டான சூழலில் சிறந்த சேவைகளை நமக்காக வழங்குபவர்களையே நாம் விரும்புவோம். ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் அளிக்கும் சேவைகளை மதிப்பீடு செய்து, உங்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்யுங்கள். 24*7 வாடிக்கையாளர் சேவை மற்றும் 2500+ கேரேஜ்களில் பணமில்லா சேவைகள் போன்ற பல பலன்களை டிஜிட் மூலம் பெறலாம்.
- கிளைம்களுக்கு விரைவான செட்டில்மென்ட்: இன்சூரன்ஸ் பெறுவதற்கான முக்கிய காரணம் சரியான சமயத்தில் கிளைம்களை பெறுவதே ஆகும். எனவே கிளைம்களை விரைவாக அளித்திடும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள். டிஜிட்-ன் 96% கிளைம்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்பட்டிருக்கிறது! இத்துடன், நாங்கள் காகிதமற்ற செயல்முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையே எங்களின் கொள்கையாக கொண்டுள்ளோம் , அதாவது எங்கள் செயல்முறைகள் அனைத்திற்கும் ஆவணங்களின் சாஃப்ட் காபி-ஐ மட்டுமே கேட்கிறோம். எங்களுடைய செயல்முறைகள் அனைத்தும் காகிதமற்றவை. ஆதலால் இது விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாமல் பயன்களை அனுபவிக்கலாம்!
- ஐடிவி (IDV )-ஐ சரிபார்க்கவும்: ஆன்லைனில் கிடைக்கும் பல ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ்கள் உங்கள் வாகனத்திற்கான ஐடிவி (IDV- இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ ) குறைத்து மதிப்பிட்டு காட்டுவர். அதாவது உங்களின் த்ரீ வீலர் உற்பத்தியாளர் அதை விற்பனை செய்யும் விலையைக் குறிக்கும். ஐடிவி (IDV) உங்கள் பிரீமியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் , அதே சமயம் உங்கள் கிளைமுக்கான சரியான இழப்பீடை கிடைக்கச் செய்யும். உங்கள் வாகனம் திருடு போன பின்னர் அல்லது வாகனம் சேதம் அடைந்த பின் உங்கள் ஐடிவி (IDV ) குறைவாக/தவறாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிய வந்தால் அப்போது உங்களின் நிலை ! டிஜிட் மூலம் உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் ஐடிவி (IDV ) -ஐ நீங்களே குறிப்பிடும் வாய்ப்பினை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
- பணத்திற்கேற்ற மதிப்பு: இறுதியாக, உங்களுக்கு ஏற்ற விலையில், சேவைகள் மற்றும் கிளைம்களை விரைவாக செயல்முறைப் படுத்தும் ஆட்டோ இன்சூரன்ஸ்-ஐ தேர்ந்தெடுங்கள்.
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்
உங்களின் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பிரீமியத்தில் பின்வரும் காரணிகள் பாதிப்பை ஏற்படுத்தும்?
உங்களின் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பிரீமியத்தில் பின்வரும் காரணிகள் பாதிப்பை ஏற்படுத்தும்?
- மாடல், இஞ்சின் & வாகனத்தின் தயாரிப்பு: எந்த வகையான மோட்டார் இன்சூரன்ஸுக்கும், சரியான பிரீமியத்தை கணக்கிடுவதற்கு மாடல், மேக் மற்றும் இன்ஜின் போன்ற தகவல்கள் மிகவும் அவசியம். உங்கள் ரிக்ஷாவின் மாடல் மற்றும் தயாரிப்பு, எரிபொருள் வகை, அதன் உற்பத்தி ஆண்டு மற்றும் கூடுதல் அம்சங்களைப் பொறுத்து உங்கள் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் அமையும்.
- இடம்: நீங்கள் உங்கள் ரிக்ஷாவை பதிவு செய்து, அதை ஓட்டவிருக்கும் இடத்தை பொறுத்து உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் தீர்மானிக்கப்படும். போக்குவரத்து, குற்றம் மற்றும் விபத்து விகிதங்கள் அதிகம் இருக்கும் பெருநகரங்களுக்கு அதிகமான பிரீமியத் தொகை இருக்கும், அதே சமயம் பாதுகாப்பான மற்றும் சிறிய நகரங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத் தொகை குறைவானதாக இருக்கும்
- நோ கிளைம் போனஸ்: இதற்கு முன்பு நீங்கள் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை வைத்திருந்து, இப்போது உங்களின் பாலிசியை புதுப்பிக்க நினைத்தாலோ அல்லது புது இன்சூரரிடம் பாலிசியை வாங்க நினைத்தாலோ உங்களின் என் சி பி (NCB) (நோ கிளைம் போனஸ்) கருத்தில் கொள்ளப்படும், இத்துடன் உங்கள் பிரீமியத்தில் தள்ளுபடியும் பெறலாம்! நோ கிளைம் போனஸ் என்பது முந்தைய பாலிசி ஆண்டில் உங்களின் ஆட்டோ ரிக்ஷாவிற்காக நீங்கள் எவ்வித கிளைமும் செய்யவில்லை என்பதை குறிக்கிறது.
- இன்சூரன்ஸ் பிளானின் வகை: ஆட்டோ ரிக்ஷாக்கள் உட்பட அனைத்து கமர்ஷியல் வாகனங்களுக்கென்று இரண்டு வகையான இன்சூரன்ஸ்கள் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிளானை பொறுத்து உங்கள் இன்சூரன்ஸின் பிரீமியத் தொகை அமையும். அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய லையபிலிட்டி ஒன்லி பிளானின் பிரீமியத்தின் தொகை குறைவாக இருக்கும் - இது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு மற்றும் உரிமையாளருக்கு (ஓனருக்கு) ஏற்படும் இழப்புகளை மட்டுமே ஈடு செய்யும்; அதேசமயம் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி பிரீமியத்தின் தொகை அதிகமாக இருக்கலாம், ஆனால், நமது ஆட்டோ மற்றும் அதன் உரிமையாளர் (ஓனர்) –ஓட்டுநருக்கு (டிரைவருக்கு) ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளையும் ஈடு செய்யும்.
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நான் டிஜிட் இடமிருந்து இ-ரிக்ஷா இன்சூரன்ஸை ஆன்லைன் வாயிலாக வாங்கலாமா?
ஆம், நீங்கள் வாங்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் 70 2600 2400 என்கிற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு பொருத்தமான இ-ரிக்ஷா இன்சூரன்ஸ் பிளானை பிரத்தியேகமாக்கித் தருவோம்.
லையபிலிட்டி ஒன்லி ஆட்டோ ரிக்ஷா பாலிசி மற்றும் ஸ்டாண்டர்ட் ஆட்டோ ரிக்ஷா பாலிசிக்கு இடையிலான வேறுபாடு என்ன?
லையபிலிட்டி ஒன்லி ஆட்டோ ரிக்ஷா பாலிசி என்பது உங்கள் ரிக்ஷாவால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள், அதாவது வேறொரு நபருக்கோ, வாகனத்துக்கோ அல்லது சொத்துக்களுக்கோ சேதம் ஏற்பட்டால் அந்த இழப்புகளை மட்டுமே ஈடு செய்யும். அதேசமயம் ஸ்டாண்டர்ட் ஆட்டோ ரிக்ஷா பாலிசி என்பது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் ஓன் டேமேஜ்ஸ், அதாவது விபத்து அல்லது இயற்கை சீற்றத்தால் உங்கள் ஆட்டோ ரிக்ஷாவிற்கு ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்யும்
ஆட்டோ ரிக்ஷா பழுதடைந்தால், அதை நான் எங்கே சென்று பழுதுபார்க்கலாம் (/ரிப்பேர் செய்யலாம்) ?
நீங்கள் எங்களிடம் ஆட்டோ ரிக்ஷா பாலிசியை பெற்றிருந்தால், இந்தியா முழுவதும் பறந்து விரிந்துள்ள 1400+ கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால், நீங்கள் விரும்பும் மற்றொரு கேரேஜில் உங்கள் ஆட்டோ ரிக்ஷாவை பழுதுபார்த்து (ரிப்பேர் செய்து) விட்டு , அதற்கான செலவினை எங்களிடமிருந்து பணமாக திரும்பப் பெறலாம். எங்கள் நெட்ஒர்க்கில் இருக்கும் கேரேஜ்களின் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸில் பயணிகளின் பாதுகாப்பும் அடங்குமா ?
பயணிகள் மூன்றாம் தரப்பினர்களாக கருதப்படுவார்கள். எனவேz அவர்கள் லையபிலிட்டி-ஒன்லி பாலிசி மற்றும் ஸ்டாண்டர்ட் பாலிசி ஆகிய இரண்டின் கீழ் உள்ளடங்குவர்.
எனது நிறுவனத்தில் 100கும் மேற்பட்ட ரிக்ஷாக்கள் உள்ளது, அவை அனைத்தையும் டிஜிட்-ன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் மூலம் இன்சூர் செய்ய முடியுமா?
ஆம், எங்களிடம் இன்சூர் செய்துகொள்ளும் வாகன எண்ணிக்கைக்கு வரம்புகள் ஏதும் இல்லை. ஆதலால், நீங்கள் எத்தனை ஆட்டோ ரிக்ஷாக்களை வேண்டுமானாலும் இன்சூர் செய்யலாம்.
எனது ஆட்டோ ரிக்ஷா விபத்தில் சிக்கிக்கொண்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
1800-103-4448 என்கிற எண்ணில் உடனடியாக எங்களை அழைக்கவும்! அதன் மூலம், நாங்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளை அளிப்போம்