ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவர் உட்பட்ட ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியே ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் ஆகும். இது கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது உங்கள் காருக்கான பொதுவான தேய்மானம் தவிர அனைத்தும் உட்படும் என்பதை குறிக்கிறது.
ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் இல்லாமல், அனைத்து இன்சூரர்களும் உங்கள் காரின் உதிரிபாகங்களில் ஏற்பட்டுள்ள தேய்மானத்தின் மதிப்பைக் கணக்கிட்டு, அத்தொகையைக் கழித்த பின்னரே உங்கள் கிளைம் தொகையை வழங்குகிறார்கள். ஆட்-ஆன் கவர் மூலம், தேய்மானத்திற்கான தொகை எதுவும் கழிக்கப்படாது, மேலும் கிளைமின் போது அதிகப் பணத்தைப் பெறுவீர்கள்.
டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) என்பது உங்கள் காரின் நீண்ட நாள் பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் அதன் விலை குறைப்பாகும். உங்கள் கார் பழையதாக இருந்தால், அதன் டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) அதிகமாகும்
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) படி டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) விகிதங்கள் பின்வருமாறு, கீழ்கொடுக்கப்பட்டுள்ளவையின் அடிப்படையில், உங்கள் காரின் மொத்த டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) கணக்கிடப்படும்:
வாகனத்தின் வயது |
தேய்மானத்தின் % |
6 மாதங்களுக்கு மேல் இல்லாதவை |
5% |
6 மாதங்களுக்கு மேற்பட்டவை ஆனால் 1 வருடத்திற்கு உட்பட்டவை |
15% |
1 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 2 வருடத்திற்கு உட்பட்டவை |
20% |
2 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 3 வருடத்திற்கு உட்பட்டவை |
30% |
3 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 4 வருடத்திற்கு உட்பட்டவை |
40% |
4 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 5 வருடத்திற்கு உட்பட்டவை |
50% |
வாகனத்தின் வயது |
வாகனத்தின் வயது % |
6 மாதங்களுக்கு கீழ் |
Nil |
6 மாதங்களுக்கு மேற்பட்டவை ஆனால் 1 வருடத்திற்கு உட்பட்டவை |
5% |
1 வருடத்திற்கு மேற்பவை ஆனால் 2 வருடத்திற்கு உட்பட்டவை |
10% |
2 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 3 வருடத்திற்கு உட்பட்டவை |
15% |
3 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 4 வருடத்திற்கு உட்பட்டவை |
25% |
4 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 5 வருடத்திற்கு உட்பட்டவை |
35% |
5 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 10 வருடத்திற்கு உட்பட்டவை |
40% |
10 வருடத்திற்கு மேற்பட்டவை |
50% |
பொதுவாக, உங்கள் விரிவான பாலிசியில் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செலவு உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை விட தோராயமாக 15% கூடுதலாக இருக்கும்.
உங்கள் காரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக நீங்கள் 15% கூடுதல் பிரீமியத்தை செலுத்தினால், அது முற்றிலும் மதிப்புக்குரியது, ஏனெனில் கிளைம்களின் போது நீங்கள் சேமிக்கும் தொகை ஆட்ஆனின் விலையை விட அதிகமாக இருக்கும்.
மேலும் அறிந்துக்கொள்ள:
உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரின் பிரீமியத்தைப் பாதிக்கும் காரணிகள் பின்வருமாறு:
சாத்தியமான அனைத்து சேதங்களிலிருந்தும் உங்கள் காரைப் பாதுகாப்பதில் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி சாலசிறந்தது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இருப்பினும், கிளைமின் போது- உங்கள் காரின் பாகங்களின் தேய்மானத்திற்கு நீங்கள் எப்படியும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால்தான், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரைத் தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது உங்கள் காருக்கு அதிகபட்ச கவரேஜை வழங்குவது மட்டுமல்லாமல், கிளைம்களின் போது உங்கள் காரின் தேய்மானச் செலவை செலுத்துவதிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும்.
|
ஜீரோ ப்ரிஸியேஷன் உடைய கார் இன்சூரன்ஸ் |
காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் |
அப்படியென்றால் என்ன? |
ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான இன்சூரன்ஸ் என்பது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் விரும்பினால் தேர்வுசெய்யக்கூடிய ஒரு ஆட்-ஆன் ஆகும். உங்கள் திட்டத்தில் இந்த ஆட்-ஆன் இருப்பதால், கிளைம்களின் போது உங்கள் காரின் தேய்மானத்திற்கு உங்கள் இன்சுரர் கட்டணம் வசூலிக்க மாட்டார் என்பதை இது உறுதிசெய்கிறது. எனவே, கிளைம்களின் போது உங்கள் காரின் உதிரிபாகங்களின் தேய்மானச் செலவை நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை. |
ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் காரின் சொந்த சேதங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேதங்களை உள்ளடக்கும் ஒரு வகை கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். மேலும் இவ்வகையை சேர்ந்த பாலிசியை விரிவான காப்பீட்டிற்காக தனிப்பயனாக்கவும் செய்யலாம். |
பிரீமியம் |
இந்த ஆட்-ஆனைத் தேர்வுசெய்தால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் தோராயமாக 15% அதிகரிக்கும். |
காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம், ஆட் ஆன் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை விடக் குறைவு. |
தேய்மான கட்டணம் |
ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான ஆட் ஆன் இருந்தால், உங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது தேய்மானச் செலவுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. |
காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில், கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது உங்கள் காரின் உதிரிபாகங்களின் தேய்மானத்திற்கான பணத்தை நீங்கள் அவசியம் செலுத்த வேண்டும். |
காரின் வயது |
ஐந்து வருடங்களுக்கும் குறைவான அனைத்து கார்களுக்கும் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட் ஆனை தேர்வு செய்யலாம். |
பதினைந்து வருடங்களுக்கும் குறைவான அனைத்து கார்களுக்கும் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யலாம். |
நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள்? |
நீங்கள் கொஞ்சம் அதிக பிரீமியத்தைச் செலுத்துவதினால், உங்கள் காரின் தேய்மானத்திற்கான செலவுகளை கிளைம்களின் போது நீங்கள் செலுத்த வேண்டியதில்லை என்பதால், உங்கள் நீண்ட கால சேமிப்பு அதிகமாக இருக்கும். |
ஆட்ஆன்களைத் தேர்வு செய்யாததினால் நீங்கள் அதில் சேமிக்கும் எக்ஸ்ட்ரா பிரீமியமே உங்களிடம் இருக்கும் ஒரே சேமிப்பு. |
கிளைம் செய்யும் போது உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் செலவழிக்கும் பணத்தை சேமிப்பதே ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரின் முக்கிய பங்காகும். இதை உங்களுக்கு எளிமையாக்க ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்; உங்களின் மொத்த கிளைம் தொகை ரூ. 20,000 ஆகவும், உங்கள் காரின் பாகங்களின் தேய்மானத்தின் மொத்தச் செலவு ரூ. 6,000 ஆகவும் இருந்தால், ஜீரோ டிப்ரிஸியேஷன் இல்லாமல், உங்கள் இன்சூரர் இந்தச் செலவைக் கணக்கிட்டு உங்களுக்கு ரூ. 14,000 மட்டுமே செலுத்துவார். இருப்பினும், உங்களிடம் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் இருந்தால், உங்கள் கிளைம்த் தொகையாக நீங்கள் ரூ.20,000 முழுவதும் பெறுவீர்கள்.