ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் புதுப்பித்தல்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
நீங்கள் இந்த ஆண்டு உங்கள் கார் இன்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா? நீங்கள் புதிய பாலிசியை தேர்ந்தெடுப்பதா அல்லது தற்போது இருக்கும் இன்சூரருடனே தொடர்வதா என்று குழம்பியிருக்கிறீர்களா? அதற்கான தக்க முடிவை எடுப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால் கவலைப்படாதீர்கள், நீங்கள் இந்த முடிவு எடுப்பதை நாங்கள் உங்களுக்கு எளிமையாக்குகிறோம்.
வாருங்கள் முதலில் கார் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பற்றி புரிந்து கொள்வோம்.
கார் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் என்பது இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் நடப்பு இன்சூரன்ஸின் தொகை மதிப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் அதன் கால அளவை நீட்டிப்பதே ஆகும். ஆனால், பாலிசியின் ஆரம்ப காலம் முடிந்தவுடன், பாலிசியை புதுப்பிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லையெனில், உங்கள் இன்சூரன்ஸ் தொகை மாற்றமில்லாமல் அதேவாக தான் இருக்க வேண்டும். அது தான் நீங்கள் சிந்திப்பதற்கான நேரம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசியை புதுப்பிப்பதற்கான நேரம் வரும்போது, உங்கள் தொகையை மாற்றியமைக்காது என்று உங்களுக்குத் தெரியும்போது, நீங்கள் புதிய விருப்பங்களைத் தேடலாம்.
உண்மையில் சொல்லப்போனால், உங்களுக்கு இங்கே இரண்டு விருப்பங்களும் உண்டு. கிளைம் நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை, வாடிக்கையாளர் சேவை போன்ற அனுபவத்தில் நீங்கள் திருப்தி அடைந்திருந்தால் அதே இன்சூரருடன் பாலிசியை தொடரலாம் அல்லது ஒரு புதிய இன்சூரருக்கு செல்லலாம். எந்த விருப்பத்தைத் தேர்வு செய்வது என்பது முற்றிலும் உங்கள் அனுபவம் மற்றும் இன்சூரன்ஸ் தேவைகளைப் பொறுத்தது.
கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது அறிந்து கொள்ள வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவற்றை தெளிவாக புரிந்து கொள்வது வருடாந்திர புதுப்பித்தல் முறையின் மூலம் நீங்கள் சிறந்த பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்யும். இந்த காரணிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பாலிசி வகை- பாலிசி வகைகளை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டியதற்கு உள்ள விருப்பங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். உங்களிடம் தேர்ட் பார்ட்டி கார் இன்சூரன்ஸ் மட்டுமே இருந்தால், புதுப்பித்தலின் போது, உங்கள் மாறிவரும் இன்சூரன்ஸ் தேவைகளைப் பொறுத்து ஒரு காம்ப்ரீஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்யலாம்.
உங்கள் இன்சூரரை மதிப்பீடு செய்யுங்கள் - எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்படக்கூடிய தருணங்கள் ஏற்படாமல் இருக்க, உங்கள் இன்சூரர் பற்றிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ளவும்.
ஆட்-ஆன்ஸ் - உங்கள் பாலிசியுடன் சரியான ஆட்-ஆன்ஸ்களையும் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க முடியும். இவற்றில் சில, ஜீரோ டிப்ரிஷியேஷன் கவர், என்சிபி கவர், இன்வாய்ஸ் ப்ரொடக்ஷன் கவர் மற்றும் எஞ்சின் ப்ரொடெக்ட் கவர். கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்ஸ் பற்றி தெரிந்துக்கொண்டு, சரியானவற்றைத் தேர்வு செய்யவும்.
கிளைம் செயல்முறை - இது மிகவும் முக்கியமானது; இந்த செயல்முறை மிக வேகமாகவும், தொந்தரவு இல்லாததாகவும் இருக்க வேண்டும். எல்லா சாத்தியமான மூலங்களிலிருந்தும் இன்சூரரின் கிளைம் ஹிஸ்டரியை சரிபார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விலைகளை ஒப்பிடவும் - ரேட்களை ஒப்பிடுவதற்கு ஆன்லைனில் பார்க்கவும், ஆன்லைனில் உங்கள் பாலிசியையும் புதுப்பிக்கலாம். இதற்கு பல்வேறு விருப்பங்களும் உள்ளன. குறிப்பாக, எங்கள் மூலம் ஆன்லைனில் பாலிசியை வாங்குதல்/புதுப்பித்தல் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், எவ்வித நேரடி ஆவண(பேப்பர் வோர்க்) சரிபார்ப்புகளும் இல்லை. உங்கள் விவரங்களை ஆன்லைனில் உள்ளிட்டால் போதும், உங்கள் வேலை முடிந்தது.
சரியான ஐடிவி( IDV) - சரியான ஐடிவி பாலிசியைத் தேர்ந்தெடுப்பதில் அல்லது புதுப்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐடிவி அதிகமாக இருந்தால், எதிர்பாராமல் நிகழும் சூழ்நிலைகளின் போது கிடைக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையும் அதிகமாக இருக்கும். உயர்ந்த ஐடிவி-க்கு, எதிர்பாராத சூழ்நிலைகளில் இழப்பீடும் அதிகமாக இருக்கும்.·
உங்கள் கார் இன்சூரன்ஸ் காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - அதிகப்படியான அபராதங்கள் செலுத்துவதைத் தவிர்க்க, எப்போதும் உங்கள் கார் இன்சூரன்ஸை முன்கூட்டியே புதுப்பித்து விடுங்கள். மேலும், சரியான இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் உங்கள் காரை வெளியே எடுத்து ஓட்டுவது என்பது ஒரு பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே, இவை அனைத்தையும் தவிர்க்க, உங்கள் பாலிசியை முன்கூட்டியே புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.
நோ கிளைம் போனஸ்- ஒரு ஆண்டு நீங்கள் எந்த கிளைமும் செய்யாததால், கிளைம்-ப்ரீ ஆண்டாக உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு உங்கள் இன்சூரரிடமிருந்து நோ கிளைம் போனஸ் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி தொகையானது, நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த பிரீமியத்திலிருந்து கழிக்கப்படும். இதில் உள்ள மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், ஒருவேளை நீங்கள் உங்கள் இன்சூரரை மாற்ற விரும்பினால், இந்த போனஸ் தொகையும் உங்கள் புதிய இன்சூரரிடம் மாற்றப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
கேரேஜ்களுக்கான நெட்வொர்க் - எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் விபத்து ஏற்படும் பட்சத்தில், இன்சூரன்ஸ் மூலம் உங்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்ய, இன்சூரர் கேரேஜ்களின் நெட்வொர்க்கை பற்றி உங்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் சேவை - 24/7 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவை முக்கியமானது. இன்சூரர் அதை வழங்குகிறாரா என்று சரிபார்க்கவும்.
நேரடி ஆவண சமர்ப்பிப்பு மற்றும் சரிபார்ப்பு (பேப்பர் வோர்க்) இல்லை - ஆன்லைன் செயல்முறை எளிதானது, உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிட்டால் மட்டும் போதும் உங்கள் வேலை முடிந்தது. நேரடி ஆவண சமர்ப்பிப்பு மற்றும் சரிபார்ப்பு (பேப்பர் வோர்க்) தேவையில்லை.
எளிதானது மற்றும் விரைவானது- இணையம் என்பது ஒரு பரிசு! இஆன்லைன் புதுப்பிப்பு எளிதானது மற்றும் விரைவானது, ஒரு சில கிளிக்குகளிலேயே நீங்கள் எளிதாக உங்கள் பாலிசியை புதுப்பித்துவிடலாம்.
நீங்கள் உட்கார்ந்து, ஓய்வெடுத்து கொண்டே கட்டணங்கள்/ஆட்-ஆன் கவர்களை ஒப்பிட்டு பார்க்கலாம் - ஆன்லைன் ஒப்பீடு எளிதானது மற்றும் தொந்தரவு இல்லாதது, வீட்டில் இருந்தப்படியே நீங்கள் சௌகரியமாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் போது, பல இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கட்டணங்கள்/ஆட்-ஆன்களை ஒப்பிட்டு உங்கள் முடிவை எடுக்கலாம்.
நேரத்தைச் சேமிக்கவும் - உங்கள் வசதிக்கேற்ப, வீட்டிலும், உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் உங்கள் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். இது குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதை சொல்லி தெரிய வேண்டாம் இல்லையா!!
படி 1 - உங்கள் வாகனத்தின் தயாரிப்பு, மாடல், வேரியன்ட், ரெஜிஸ்ட்ரேஷன் தேதி, மற்றும் நீங்கள் ஓட்டுகின்ற நகரம் போன்றவற்றை பூர்த்தி செய்யவும். ‘தோராய மதிப்பீட்டினை(quote) பெறவும்’ என்பதனை அழுத்தி, உங்களுடைய பிளானைத் தேர்ந்தெடுக்கவும்
படி 2 - தேர்ட் பார்ட்டி லையபிலிட்டி மட்டும் அல்லது ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் (விரிவான காப்பீடு) ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யவும்.
படி 3 - உங்களின் முந்தைய இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய விவரங்களை எங்களிடம் அளிக்கவும் - காலாவதியாகும் தேதி, கடந்த ஆண்டில் செய்த கிளைம், கிடைத்த நோ கிளைம் போனஸ்.
படி 4 - உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை இப்போது உங்களுக்குக் காண்பிக்கப்படும். நீங்கள் ஸ்டாண்டர்ட் பிளானை தேர்வு செய்திருந்தால், கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களை தேர்வு செய்வது, ஐடிவியை அமைத்துக் கொள்வது மற்றும் உங்களிடம் சிஎன்ஜி கார் இருப்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வது போன்றவற்றின் மூலம் உங்கள் பிளானை, நீங்கள் மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்த ஆட்-ஆன்-களை சேர்த்த பின்னர் வரும் இறுதி பிரீமியத் தொகையை அடுத்த பக்கத்தில் காண்பீர்கள்.
முழு பெயர்
முகவரி
கார் தயாரிப்பு மற்றும் மாடல் விவரங்கள்
கார் பதிவு எண்
முந்தைய பாலிசி எண்
தேர்வு செய்ய வேண்டிய ஆட்-ஆன்கள்
கட்டண விவரங்கள்
உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசியை இந்த முறை டிஜிட்-இல் வாங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நாங்கள் எந்த விதத்தில் மாறுபட்டிருக்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும்…