மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
மாருதி சுஸுகி நிறுவனம் பலதரப்பட்ட செடான் கார்கள், ஹேட்ச்பேக் கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாவில் பட்ஜெட் சார்ந்த சந்தைக்கான நிறுவனத்தின் சில எஸ்யூவிகளில் விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்றாகும்.
1462சிசி என்ஜின் ஆற்றல் கொண்ட இந்த எஸ்யூவி பார்ப்பதற்கு மிக ஸ்டைலாக இருப்பதோடு, சாலையில் கஸ்டமர்களை ஈர்க்கும் அளவு செயல்திறனை வெளிப்படுத்துவதையும் உறுதிசெய்கிறது. அதன் பல அதிநவீன அட்டகாசமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் காரணமாக, விட்டாரா பிரெஸ்ஸா 2018 டெக் மற்றும் ஆட்டோ விருதுகளில் [1] 'ஆண்டின் எஸ்யூவி/எம்பிவி' உட்பட பல விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த எஸ்யூவி தரமான வாகனம், தினசரி பயணத்திற்கு ஏற்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருப்பினும், மற்ற கார்களைப் போலவே, ஒரு வெஹிக்கிலுக்கும் எதிர்பாராதவிதமாக ஏற்படும் டேமேஜுக்குப் பிறகு செய்யவேண்டிய ரிப்பேரை விரைவாகத் தொடங்க நீங்கள் சிறந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டும். நீங்கள் விரும்பும் நிதி பாதுகாப்பின் அளவைப் பொறுத்து, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அல்லது காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யலாம்.
தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அதன் பெயர் குறிப்பிடுவதை மட்டுமே செய்கிறது. இது விபத்தில் உங்கள் காரினால் டேமேஜான தேர்டு பார்ட்டியினருக்குரிய உங்கள் நிதி பொறுப்பைப் பூர்த்தி செய்கிறது.
இருப்பினும், உங்கள் சொந்த காரின் டேமேஜிற்கு நீங்கள் எந்தவிதமான நிதி உதவியையும் கிளைம் செய்ய முடியாது. அதற்கு, நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தப் பாலிசியின் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, சொந்த காருக்கு ஏற்பட்ட டேமேஜுக்கான இழப்பீட்டையும் வழங்குகின்றன.
இது தொடர்பாக, மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட் 1988 இன் படி, இந்திய சாலைகளில் ஓட்டப்படும் அனைத்து வெஹிக்கலுக்கும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால், ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் (மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ரூ.4000). எனவே, நீங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் வாங்க வேண்டுமா? என்பது கேள்வி அல்ல, ஆனால் நீங்கள் அதை எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என்பதுதான் கேள்வி.
இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் இன்சூரன்ஸ் வழங்குநர்களில் டிஜிட் நிறுவனமும் ஒன்றாகும். அதன் பாலிசி அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.
ரெஜிஸ்ட்ரேஷன் தேதி |
பிரீமியம் (சொந்த டேமேஜ்களுக்கான பாலிசிக்கு மட்டும்) |
ஆகஸ்ட்-2019 |
2,315 |
ஆகஸ்ட்-2018 |
2,198 |
ஆகஸ்ட்-2017 |
2,028 |
**பொறுப்பு திறப்பு - மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எல்எக்ஸ்இ பிஎஸ்விஐ 1462 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.
நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு ஆகஸ்ட்-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போவது |
×
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது |
×
|
✔
|
தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
After you buy or renew our car insurance plan, you live tension free as we have a 3-step, completely digital claims process!
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்
நீங்கள் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்ய விரும்பினாலோ புதிய ஒன்றை வாங்க விரும்பினாலோ, நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இன்சூரன்ஸ் வழங்குநர் டிஜிட் நிறுவனம் ஆகும்.
பாலிசிதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட மிகவும் பயனுள்ள சில அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் பிரபலமான சில வசதிகள் இதோ:
நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்கள் என்றால், டிஜிட்டின் இன்சூரன்ஸ் பாலிசியை ஏன் ஒருமுறை முயற்சி செய்துபார்க்கக்கூடாது? அதன் பல அம்சங்களையும் நன்மைகளையும் நீங்கள் விரைவாகக் கவனிப்பீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் நிதி உதவியைப் பெற உதவும் அட்சயபாத்திரம் இது.
டிரைவிங்கை கொண்டாடுங்கள், ஆனால் அதேசமயம் பாதுகாப்பாக ஓட்டுங்கள்!
பவர் பேக் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி நீங்கள் பாதுகாக்க வேண்டும் என விரும்பும் வைக்கும் சொத்தாகும். உங்கள் புதிய கார் மற்றும் உங்கள் பாக்கெட் இரண்டிற்கும் கார் இன்சூரன்ஸ் முக்கியமானது. கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பதன் பெனிஃபிட்கள் பின்வருமாறு:
ஃபைனான்ஷியல் லையபிளிட்டிஸ்: இது உங்கள் பாதுகாப்பாளனாகச் செயல்படுகிறது, அத்துடன் எந்தவொரு தேர்டு பார்ட்டியினருக்கும் உங்களால் ஏற்படும் டேமேஜ்களுக்கான அனைத்து செலவுகளையும் கவர் செய்கிறது. ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸைப் பொறுத்தவரை, இது உங்கள் சொந்த காரை டேமேஜ்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும்.
சட்டரீதியாக இணக்கமானது: சரியான இன்சூரன்ஸ் இல்லாமல் உங்கள் பிரெஸ்ஸாவை ஓட்டுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவில், கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது, மேலும் அதற்கு கடும் அபராதம் (2000 ரூபாய் வரை) விதிக்கப்படலாம் மற்றும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் / பறிமுதல் செய்யலாம் மற்றும் / அல்லது உங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
தேர்டு-பார்ட்டி லையபிளிட்டி: ஒரு எதிர்பாராத விபத்து அல்லது அது போன்ற ஒரு சம்பவத்தில் வேறொருவரின் கார் அல்லது சொத்திற்கு டேமேஜ் / காயம் ஏற்பட்டால் இந்த வகை இன்சூரன்ஸ் உங்களுக்கு புரட்டெக்ஷன் கவரேஜை வழங்குகிறது. இத்தகைய செலவுகள் பெரும்பாலும் திடீரெனவும் எதிர்பாராதவையாகவுமே இருக்கும். மேலும் அந்த நேரத்தில் நிலைமையை நிதி ரீதியாக கையாள நீங்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம், இந்த இன்சூரன்ஸ் தக்கசமையத்துக்கு உதவுவதுடன் உங்களையும் உங்கள் பாக்கெட்டையும் பாதுகாக்கிறது.
காம்ப்ரிஹென்சிவ் கவர்: இதை உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் மாற்றியமைக்கலாம்; உங்கள் பிரெஸ்ஸாவுக்கான கூடுதல் இன்சூரன்ஸ் கவராகி அத்தகைய இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். பெயர் குறிப்பிடுவது போல, தீ விபத்து, திருட்டு, இயற்கை / மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், நாசவேலைகள், இயற்கை / வானிலை போன்ற உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஏற்படும் அனைத்து டேமேஜ்கள் என அனைத்தையும் காம்ப்ரிஹென்சிவ் கவர் செய்கிறது. இது தவிர, பாலிசியின் கீழ், சில கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கவரேஜை நீட்டிப்பதற்கான விருப்பதேர்வும் உள்ளது. பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன், டயர் புரட்டெக்டிவ் கவர் மற்றும் ஜீரோ-டெப் கவர் ஆகிய சிலவும் இதில் இருக்கலாம்.
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஸ்டைல் உங்களைத் திணறடிக்க வைக்கும் என்பதால் நிதானமாக அதை ஆராயுங்கள். இந்தத் தைரியமான, கவர்ச்சியான, புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான கார் ஸ்டைல் உணர்வு உள்ள அனைவருக்கும் பொருந்தும். ஆண்மையான வெளிப்புறம் மற்றும் இன்றைய காலத்திற்கு ஏற்ற உட்புறம் என இந்த கார் அனைத்து வகையான அற்புதமான அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த கார் அதிவேக காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் 2017-18 ஆம் ஆண்டு அதன் பிரிவில் கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையும் வென்று சாதனை பிடித்துள்ளது. அதாவது 2017 ஆண்டின் இந்திய கார் விருது உட்பட ஒரே ஆண்டில் 28 விருதுகளை வாரி குவித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய வசதியான டிரைவ், டூயல் டோன் ஃப்ளோட்டிங் ரூஃப், ஸ்போர்ட்டி போல்ட் மஸ்குலர் டிசைன், பிளாட்பெட்களுக்கான ஃப்ளிப் ஃபோல்ட் செய்யப்பட்ட அரிய இருக்கைகள் போன்ற சிறந்த அம்சங்களைக் கொண்ட முதல் காம்பேக்ட் எஸ்யூவி இது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், எஸ்யூவி முன்பக்க வடிவமைப்பு மற்றும் டாஷிங் இன்டீரியர் உங்களை ஈர்க்க தவறாது. விட்டாரா பிரெஸ்ஸா எல்டிஐ, விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ+ என நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. டிடி 200 என்ஜின் கொண்ட இந்த கார் 24.3 கிமீ மைலேஜ் தரும்.
ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற சில மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் உள்ளன. அது மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்பிற்காக, இந்த காரில் டூயல் ஏர்பேக், லேம்ப் பஸருடன் கூடிய சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீட் வார்னிங் அலர்ட் போன்ற அம்சங்களும் உள்ளன.
விட்டாரா பிரெஸ்ஸா ஸ்டைல், கம்ஃபர்ட், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் இணையற்ற கலவையாகும். எஸ்யூவி தரத்தில் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் விட்டாரா பிரெஸ்ஸா மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் கஸ்டமர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வார இறுதி விடுமுறைக்காக மட்டுமல்ல, தினசரி டிரைவிற்கும் மிகப் பொருத்தமானது. பிரெஸ்ஸா ஒரு குடும்ப கார், அதை உங்கள் அன்றாட பயணத்திற்குப் பயன்படுத்துங்கள் அல்லது உங்கள் குடும்பம் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் ரோட் டிரிபிற்கு செல்ல ஆயுத்தமாகுங்கள்!
இதையும் படியுங்கள்: மாருதி கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்
வேரியண்ட்டுகள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடும்) |
LDi 1248 cc, மேனுவல், டீசல் |
₹.7.67 லட்சம் |
VDi 1248 cc, மேனுவல், டீசல் |
₹.8.19 லட்சம் |
VDi AMT 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் |
₹.8.69 லட்சம் |
ZDi 1248 cc, மேனுவல், டீசல் |
₹.8.97 லட்சம் |
ZDi AMT 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் |
₹.9.47 லட்சம் |
ZDi Plus 1248 cc, மேனுவல், டீசல் |
₹.9.92 லட்சம் |
ZDi Plus Dual Tone 1248 cc, மேனுவல், டீசல் |
₹.10.08 லட்சம் |
ZDi Plus AMT 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் |
₹.10.42 லட்சம் |
ZDi Plus AMT டியூவல் டோன் 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் |
₹.10.64 லட்சம் |