Third-party premium has changed from 1st June. Renew now
டிஜிட் கார் இன்சூரன்ஸ் மூலம், நீங்கள் எவ்வளவு குறைவாக ஓட்டுகிறீர்களோ, அவ்வளவு குறைவாக உங்கள் கட்டணமும் குறையும்!
கார் இன்சூரன்ஸ்: ஆன்லைனில் உடனடியாக கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும்/புதுப்பிக்கவும்
கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
கார் இன்சூரன்ஸ் என்பது ஆட்டோ அல்லது மோட்டார் இன்சூரன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது விபத்துகள், திருட்டுகள் அல்லது இயற்கை பேரிடர்கள் போன்றவற்றினால் ஏற்படக் கூடிய அபாயங்கள் மற்றும் சேதங்களிலிருந்து உங்களையும், உங்கள் காரையும் பாதுகாக்கின்ற ஒரு வகையான வெஹிகிள் இன்சூரன்ஸ் பாலிசியாகும். ஆகவே, இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய இழப்புகளிலிருந்து உங்களை பொருளாதார ரீதியாக நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். கூடுதலாக, தேர்டு-பார்ட்டியினருக்கு ஏற்படும் சேதங்களிலிருந்தும் கூட உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீங்கள் சட்டப்பூர்வமாக வண்டி ஓட்டுவதற்கு தேவையான அடிப்படையான, தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸை வாங்க விரும்பினாலும், அல்லது காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை கொண்டு உங்கள் காருக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்க விரும்பினாலும் அல்லது ஓன் டேமேஜ் பாலிசியை எடுக்க விரும்பினாலும், டிஜிட் நிறுவனம் ஆன்லைனிலேயே தேர்டு-பார்ட்டி, காம்ப்ரிஹென்சிவ் மற்றும் ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸை கட்டுப்படியாகும் விலையில் உங்களுக்கு வழங்குகிறது.
இதன் சிறப்பு என்ன? உங்கள் காருக்கு பொருந்தக் கூடிய வகையில் 7 பயனுள்ள ஆட்-ஆன்களை தேர்வு செய்வதுடன் உங்கள் ஐடிவி-ஐ நீங்களே தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். எனவே, டிஜிட்-இல் கார் இன்சூரன்ஸை நீங்கள் வாங்க/புதுப்பிக்க விரும்பினாலும் அல்லது கிளைம் செய்ய விரும்பினாலும் - இவை அனைத்தையுமே ஆன்லைனிலேயே எங்கள் எளிதான ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்யப்படும் சுய-ஆய்வு நடைமுறையின் மூலமாக விரைவாக செய்து விடலாம்.
டிஜிட்-இன் கார் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது?
டிஜிட் கார் இன்சூரன்ஸுடன் வரும் ஆட்-ஆன் கவர்கள்
உங்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் நீங்கள் வாங்கக்கூடிய கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள்
உங்கள் காரை வாங்கி 5 வருடத்திற்கும் குறைவான ஆண்டுகள் தான் ஆகிறது என்றால், இது உங்களுக்கானது. ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரானது உங்கள் கார் மற்றும் அதன் பாகங்கள் மீது குறைக்கப்படும் டிப்ரிஸியேஷனை பூஜ்ஜியமாக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் கிளைம் செய்யும் போது, ரிப்பேர்கள், விலைகள் மற்றும் மாற்றீடுகளுக்கு முழு மதிப்பை பெறுகிறீர்கள்.
ரிப்பேர் தவிர திருட்டோ அல்லது சேதமோ ஏற்படும் நேரங்களில், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் ஆட்-ஆன் உங்கள் காரின் இன்வாய்ஸ் மதிப்பின் முழு தொகையையும் திரும்பி பெறும் பலனைத் தருகிறது. இதில் புதிய வாகனத்தை பதிவு செய்ததன் தொகை மற்றும் அதற்கான சாலை வரியும் முறையே அடங்கும்.
பொதுவாக, விபத்தின் போது ஏற்பட்டாலே தவிர சக்கரங்களில் ஏற்படும் சேதம் ஸ்டாண்டர்டு இன்சூரன்ஸுகளில் சேர்க்கப்படுவதில்லை. ஆகவே, இந்த டையர் புரொட்டெக்ட் ஆட்-ஆன் ஆனது டையர் வெடித்து விடுதல், உப்பி போதல் அல்லது வெட்டு படுதல் போன்ற டையர் சேதங்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.
நம் அனைவருக்கும் ஒரு சில நேரங்களில் சிறு சிறு உதவிகள் தேவைப்படலாம்! உங்களுக்கு உதவி தேவைப்படும்போது அதனை பயன்படுத்தி கொள்ளும் பலனை பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ் ஆட்-ஆன் வழங்குகிறது. அதாவது, உங்கள் கார் பிரேக்டவுன் ஆகி விட்டால் எந்த நேரத்திலும் நீங்கள் எங்கள் உதவியை நாடலாம். இதில் சிறந்த விஷயம் என்ன தெரியுமா? இது ஒரு கிளைம் ஆக கூட கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாது!
கன்ஸ்யூமபிள் கவர் உங்கள் காருக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. இந்த கவர் உங்கள் காரின் உதிரி பாகங்களான என்ஜின் ஆயில், ஸ்குரூகள், நட்டுகள் மற்றும் போல்ட்டுகள், கிரீஸ் மற்றும் பல காரின் உதிரிபாகங்கள் விபத்தின்போது சேதம் ஏற்பட்டால் அவற்றிற்கு காப்புறுதி அளிக்கிறது.
என்ஜினை மாற்றுவதற்கான செலவு அதன் அசல் தொகையில் இருந்து 40% ஆகும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு ஸ்டாண்டர்டு கார் இன்சூரன்ஸ் பாலிசியில் விபத்தின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு மட்டுமே காப்புறுதி வழங்கப்படும். எனினும், என்ஜின் மற்றும் கியர்-பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவரில் விபத்துக்கு பின் ஏற்படும் சேதங்களில் இருந்து உங்கள் காரை (என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்!) நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இன்சூரர்கள் வழங்கும் டெய்லி கன்வேயன்ஸ் பெனிஃபிட் ஆட்-ஆன் ஆனது இன்சூர் செய்யப்பட்ட வாகனம் ரிப்பேர் செய்வதற்காக கேரேஜில் இருக்கும்போது பாலிசிதாரரின் அன்றாட பயண செலவுகளை டெய்லி அலவன்சாக வழங்குகிறது அல்லது அந்த நேரத்திற்கு உதவும் வகையில் வேறொரு வாகனத்தை தருகிறது.
காரில் உள்ள லாக்செட் திருட்டு போனாலோ, தொலைந்து போனாலோ அல்லது சேதம் ஏற்பட்டாலோ அதனை ரிப்பேர் செய்வதற்கும் அல்லது புதிதாக ஒன்றை வாங்குவதற்கும் பாலிசிதாரர் செய்யும் செலவுகள் கீ அண்டு லாக் புரொட்டெக்ட் ஆட்-ஆன் கவரின் ஒரு பகுதியாக இன்சூரரால் வழங்கப்படும்.
பாலிசிதாரர் அல்லது அவரின் நெருங்கிய உறவினர், பாலிசியில் குறிப்பிட்டபடி இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தில் வைத்திருந்த தங்களின் தனிப்பட்ட பொருட்கள் எதையும் தொலைத்து விட்டால், அது இன்சூரரால் ஈடு செய்யப்படும்.
பே அஸ் யு டிரைவ் கவர் ஆனது பாலிசிதாரருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், அடிப்படை பாலிசியின் ஓன் டேமேஜ் கவரின் பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெற அனுமதிக்கிறது. கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலமாக, அடிப்படை பாலிசியில் கிலோமீட்டர்களை டாப் அப் செய்யும் வசதியும் இதில் உண்டு.
எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை?
உங்களுடைய கார் இன்சூரன்ஸ் பாலிசியில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை என்று தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும், அப்போது தான் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு ஏதும் சங்கடங்கள் நேராது. அவ்வாறான சில சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
தேர்டு-பார்ட்டி அல்லது லையபிலிட்டி(பொறுப்பு) ஒன்லி கார் பாலிசியில், நம் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி வழங்கப்படாது.
நீங்கள் மது அருந்தி விட்டு வண்டி ஓட்டினாலோ அல்லது செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டினாலோ, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உங்கள் கார் இன்சூரன்ஸ் காப்புறுதி வழங்காது.
நீங்கள் பழகுநர் லைசென்ஸ் வைத்திருந்து, முன்னால் இருக்கும் பயணி இருக்கையில் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ்தாரரின்றி நீங்கள் வண்டி ஓட்டியிருக்கும் பட்சத்தில், ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் உங்களுக்குக் காப்புறுதி வழங்கப்படாது.
விபத்தின் காரணமாக நேரடியாக ஏற்படாத எந்தவொரு சேதங்களுக்கும் காப்புறுதி வழங்கப்படாது (உதாரணத்திற்கு, விபத்திற்கு பிறகு, சேதமடைந்த காரை முறையாக பயன்படுத்தாத காரணத்தால், என்ஜின் சேதமடைந்திருக்கும் பட்சத்தில், இதற்கு காப்புறுதி வழங்கப்பட மாட்டாது).
எந்தவொரு அலட்சியத்தினால் ஏற்படும் டேமேஜ்கள் (எ.கா., உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாத நிலையில், வெள்ளத்தில் ஒரு காரை ஓட்டுவதால் ஏற்படும் சேதம், கவர் செய்யப்படாது)
சில சூழ்நிலைகளில் ஆட்-ஆன்களினால் காப்புறுதி வழங்கப்படுகிறது. நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளுக்கு காப்புறுதி வழங்கப்படாது.
நீங்கள் ஏன் டிஜிட் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
டிஜிட் வழங்கும் கார் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள் | டிஜிட் பலன்கள் |
---|---|
பிரீமியம் | ₹2094-ல் இருந்து ஆரம்பிக்கிறது |
நோ கிளைம் போனஸ் கிடையாது | 50% வரை தள்ளுபடி |
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்கள் | 10 ஆட்-ஆன்கள் கிடைக்கும் |
கேஷ்லெஸ் ரிப்பேர்கள் | டோர்ஸ்டெப் பிக்அப் & டிராப் வசதி 6000+ கேரேஜ்களில் வழங்கப்படுகிறது |
கிளைம் செயல்முறை | ஸ்மார்ட்போன் மூலம் செயல்படும் கிளைம் செயல்முறை. வெறும் 7 நிமிடங்களில் செய்து விடலாம்! |
ஓன் டேமேஜ் கவர் | கிடைக்கும் |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட டேமேஜ் | சொந்த சேதங்களுக்கு அன்லிமிடெட் லையபிலிட்டி, சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை கிடைக்கும் |
உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கார் இன்சூரன்ஸ் பிளான்கள்
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்தின் காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்விபத்து அல்லது மோதல் காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதத்திற்கு காப்புறுதி |
|
தீ காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்தீ காரணமாக உங்களின் காருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறது. |
|
இயற்கை சீற்றங்கள் காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்வெள்ளப்பெருக்கு, பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறது. |
|
தேர்டு-பார்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்உங்கள் காரின் காரணமாக தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரையிலான காப்புறுதியை வழங்குகிறது. |
|
தேர்டு-பார்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்உங்கள் காரின் காரணமாக தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரையிலான காப்புறுதியை வழங்குகிறது. |
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர்ஓனர் கம் டிரைவராக இருக்கும் நபருக்கு ஏதேனும் காயங்கள் அல்லது இறப்பு நேர்ந்தால் அதற்கான காப்புறுதியை வழங்குகிறது. (சட்டரீதியாக கட்டாயமானது, ஒருவர் இதனை தங்கள் பாலிசியில் ஏற்கனவே சேர்க்கவில்லை என்றால், தற்போது தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.) |
|
தேர்டு-பார்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/ இறப்புஉங்கள் காரின் காரணமாக தேர்டு-பார்ட்டி நபரின் உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது இறப்பு நிகழ்ந்தாலோ, அன்லிமிடெட் லையபிலிட்டி வரையிலான காப்புறுதியை வழங்குகிறது. |
|
கார் திருடு போதல்துரதிஷ்டவசமாக உங்கள் கார் திருடப்பட்டுவிட்டால் அந்த இழப்பிற்கான காப்புறுதியை பெறுவீர்கள் |
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப்எங்களின் நெட்வொர்க் கேரேஜ்களில் செய்யப்படும் ரிப்பேர்களுக்கு- 6 மாத வாரன்டியுடன் கூடிய டோர்ஸ்டெப் பிக்அப், ரிப்பேர் மற்றும் டிராப் வசதி வழங்கப்படும் |
|
உங்கள் ஐடிவி-யை தனிப்பயனாக்குஙகள்உங்களின் விருப்பப்படி உங்கள் காரின் ஐடிவி-யை தனிப்பயனாக்குஙகள். அதற்கு தகுந்தாற்போல உங்கள் காரின் இன்சூரன்ஸ் பிரீமியத்தை சரிசெய்து கொள்ளலாம். |
|
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்கள் மூலமாக கூடுதல் பாதுகாப்புடையர் புரொட்டக்ட் கவர், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரொட்டெக்ஷன், ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்கள் மூலம் உங்கள் காருக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை வழங்குங்கள். |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
நான்கு சக்கர வாகனங்களுக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பிரைசஸ்
தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உங்கள் காரின் என்ஜின் சிசி (CC)-ஐ பொறுத்தது மற்றும் அந்தந்த பிரீமியம் ரேட்ஸை கூட ஐ.ஆர்.டி.ஏ.ஐ, முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன, அவை பின்வருமாறு:
என்ஜின் திறன் கொண்ட தனியார் கார்கள் | 2019-20க்கான பிரீமியம் INR | பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமலுக்கு வரும்) |
1000 சிசி(CC)-க்கு மிகாமல் | ₹2072 | ₹2094 |
1000 சிசி(CC)-க்கு மேல் ஆனால் 1500 சிசி(CC)-க்கு மிகாமல் இருக்கும். | ₹3221 | ₹3416 |
1500 சிசி(CC)-க்கு மேல் | ₹7890 | ₹7897 |
இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் மார்க்கெட் அளவு, பிராந்திய வாரியாக, 2015 முதல் 2025 வரை
கார் இன்சூரன்ஸ் கிளைமிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடன் அல்லது புதுப்பித்தவுடன், நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
படி 1
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். எந்த படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டாம்.
படி 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய-ஆய்விற்கான லிங்க் கிடைக்கப்பெறும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனிலிருந்தே படிப்படியான வழிகாட்டுதல்களின் படி உங்கள் வாகனத்தின் சேதங்களை படம் பிடிக்கவும்.
படி 3
நீங்கள் விரும்பும் ரிப்பேர் வழிமுறையை தேர்வு செய்யவும், அதாவது எங்களுடைய கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட்(பணம் செலுத்தி விட்டு பின்னர் பெற்றுக் கொள்ளுதல்) அல்லது கேஷ்லெஸ் வசதியை பெறவும்.
டிஜிட்-இல் கார் இன்சூரன்ஸ் கிளைம்கள் எளிதாக்கப்பட்டுள்ளன
நாங்கள் கிளைம் ப்ராஸஸை எளிமையாக்குகிறோம் என்று கூறும் போது, உண்மையாகவே அந்த கருத்தை வலியுறுத்தித் தான் கூறுகிறோம்! கார் இன்சூரன்ஸ் என்று வரும் போது, நீங்கள் ஏற்கனவே கார் வாங்குவதற்கு அதிகமாக செலவு செய்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம், எனவே தான் கார் இன்சூரன்ஸ் கிளைம்களை எளிமையாகவும், சிக்கனமாகவும் செய்து கொடுப்பதற்கு முடிந்த வரையில் முயலுகிறோம்.
டிஜிட்-இன் கேஷ்லெஸ் கேரேஜ்கள்
6000+ நெட்வொர்க் கேரேஜ்களின் பட்டியல் >எங்கள் வாடிக்கையாளர் எங்களைப் பற்றி கூறுவதென்ன
இன்சூரன்ஸ் கிளைம் நடைமுறை சுலபமாகவும், திருப்தியாகவும் இருந்தது. சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் திறமையான சர்வேயர்கள் ( திரு.சதீஷ் குமார் என் விஷயத்தில் உதவினார்). படங்களை பதிவேற்றம் செய்தால் போதும், உங்கள் கிளைம் ப்ராஸஸ் செய்யப்படும். ரீஇம்பர்ஸ்மெண்ட் கூட விரைவாக செய்யப்படும். கோடிஜிட் அருமையாக பணிபுரிகிறது!
டிஜிட்-உடனான என்னுடைய சமீபத்திய அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிளைம் செட்டில்மெண்ட் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் அடிப்படையில், சந்தை நிலவரப்படி, சிறந்த இன்சூரன்ஸ் சேவை வழங்குநர் கோடிஜிட் தான் என்று என்னால் கூற முடியும். என்னுடைய கிளைம்-ஐ மிகவும் சிறப்பாக கையாண்ட, திரு.இரத்னா (சர்வேயர்) அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர் சரியான நேரத்தில் சரியான விஷயம் குறித்து எனக்கு ஆலோசனை வழங்கினார், உங்களுடைய இன்சூரரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது இது தான். எதிர்காலத்திலும் டிஜிட் இதே போன்ற தரமான சேவையை செய்வார்கள் என நம்புகிறோம்.
டிஜிட் இன்சூரன்ஸுடன் இணைந்து செயல்பட்ட தருணம் ஒரு சிறந்த, மகிழ்ச்சியானதொரு அனுபவமாகும். முழு நடைமுறையும் சுலபமாகவும், வாடிக்கையாளருக்கு எளிதாக புரியும் வகையிலும் இருந்தது, என்னுடைய காரை ஒர்க்-ஷாப்பில் ரிப்பேர் செய்து கொள்வதற்கு நான் அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கவில்லை. உங்களுக்கு லிங்க் கிடைக்கப்பெறும், உங்கள் சேதமடைந்த காரை நீங்களே படமெடுக்க வேண்டும், மற்றும் அதற்கான கிளைம் எண்ணையும் உருவாக்க வேண்டும். மேற்கொண்டு உங்கள் சர்வேயர் பார்த்துக் கொள்வார். என்னுடைய கிளைமில், திரு.மாத்ரே மிகவும் உதவி புரிந்தார், எல்லா விஷயங்களிலும் உடனடியாக பதிலளித்தார். என்னுடைய முந்தைய இன்சூரரை விடவும் சிறப்பானதொரு சேவை கிடைக்கப்பெற்றேன். கோ டிஜிட்-ஐ தேர்வு செய்யவும்!!
கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதின் பயன்கள்
நீங்கள் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸை வாங்க நினைத்தாலும் அல்லது காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை வாங்க நினைத்தாலும், கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது, விபத்து, இயற்கை பேரிடர், தீவிபத்து, திருட்டு அல்லது இது போன்ற பிற எதிர்பாராத சூழ்நிலைகளில் நேரும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு நீங்கள் பெரிய தொகை செலவழிப்பதிலிருந்து உங்களை பாதுகாத்து காப்புறுதி அளிக்கிறது. கூடுதலாக, நீங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி செலுத்தக் கூடிய அபராதத் தொகையிலிருந்தும் உங்களை காக்கிறது.
விபத்துகள் எல்லோருக்குமே நிகழக் கூடியது தான். ஒரு வேளை நீங்கள் தற்செயலாக யாரையேனும் இடித்து விட்டாலோ, கார் அல்லது அடுத்தவரின் சொத்தினை சேதப்படுத்தி விட்டாலோ, நீங்கள் தேர்டு-பார்ட்டிக்கு நேரக் கூடிய சேதங்களுக்கும்,இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு உங்கள் கார் இன்சூரன்ஸ் இருக்கிறது. இதனால் நீங்கள் மணிக்கணக்கில் வாக்குவாதம் செய்வதோ அல்லது சண்டையிடுவதோ தவிர்க்கப்படும்!
நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை தேர்வு செய்தால், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், ரிடர்ன் டூ இன்வாய்ஸ் கவர், கன்ஸ்யூமபிள் கவர், மற்றும் பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் போன்ற ஆட்-ஆன்களின் மூலம் நீங்கள் இன்னும் சிறப்பான காப்புறுதியை பெற்று மேலும் நன்மையடையலாம்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, அனைத்து கார்களுக்கும் குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸாவது இருக்க வேண்டும். அது இல்லையென்றால், முதல் முறை நீங்கள் ரூ.2000-ஐ அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும், இரண்டாவது முறை ரூ.4000 செலுத்த வேண்டி வரும்.
டிஜிட்-இன் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்யும் போது, உங்கள் கார் சேதமடைந்து ரிப்பேர் செய்ய நேரும் தருணத்தில், உங்கள் வீட்டிற்கே வந்து உங்கள் காரை பிக்-அப் செய்து எடுத்துச் சென்று, ரிப்பேர் செய்த பின் உங்கள் வீட்டிலேயே டிராப் செய்து விடும் வசதி கிடைக்கப்பெறும்.
டிஜிட்-இன் தொழில்நுட்பத்திற்கு நன்றி- கார் இன்சூரன்ஸ் வாங்குவதிலிருந்து கிளைம் செய்வது வரை அனைத்துமே ஆன்லைனில் சில நிமிடங்களில் செய்து விடலாம். இதனால் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, நேரத்தையும் மிச்சப்படுத்துகிறீர்கள் என்று பொருள்!
எந்த கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு சிறந்தது?
கேஸ் 1: நீங்கள் ஒரு புதிய ஆடம்பர கார் வாங்கினால் - ஆடம்பர காரை வாங்குவது பெரும்பாலான உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய விஷயமாகும். எனவே, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் ஓன் டேமேஜ் ஆகிய இரண்டையும் ஈடுசெய்ய காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் அதை ப்ரொடெக்ட் செய்ய வேண்டும். ஆடம்பர கார்களுக்கு பொருத்தமான ஆட்-ஆன்ஸும் அவசியம்.
அதன் விலையுயர்ந்த பாகங்களை ரிப்பேர் செய்தல்/ரீப்ளேஸ் செய்தல் ஆகியவற்றுக்கு முழு வேல்யூவையும் கிளைம் செய்ய நீங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் பெறலாம். திருட்டு அல்லது மொத்த இழப்பு ஏற்பட்டால் உங்கள் காரின் ஒரிஜினல் இன்வாய்ஸ் வேல்யூவைப் பெறுவதை உறுதி செய்வதால் ஆடம்பர கார்களுக்கு ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் பயனுள்ளதாக இருக்கும்.
என்ஜின் புரட்டெக்ஷன் கவர் ஆடம்பர காருக்கு அவசியம், ஏனெனில் இது காரின் விலையுயர்ந்த அங்கமாகும், மேலும் இந்த கவர் அனைத்து என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ரிப்பேர்களிலிருந்தும் உங்களுக்கு கவர் செய்யும். மேலும், லூப்ரிகன்ட்ஸ், ஆயில்ஸ், நட்ஸ், போல்ட்ஸ், ஸ்க்ரூஸ், வாஸர்ஸ், கிரீஸ் போன்றவற்றின் ரீப்ளேஸ்மென்ட் காஸ்டை ஈடுசெய்ய கன்ஸ்யூமபிள் கவரை பெறுவது நல்லது.
கேஸ் 2: நீங்கள் தினமும் ஓட்டும் கார் வாங்கி 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் - உங்களிடம் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட கார் இருந்தால் பெரும்பாலான கார் உரிமையாளர்கள் கார் இன்சூரன்ஸ் முக்கியத்துவத்தை புறக்கணிக்க முனைகிறார்கள்; இருப்பினும், குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் வைத்திருப்பது சட்டரீதியில் கட்டாயமாகும். உங்கள் கார் ஏற்கனவே 7 ஆண்டுகள் பழமையானது என்பதால், விபத்துகள், திருட்டு, தீ விபத்து, இயற்கை பேரழிவுகள் போன்றவற்றின் போது உங்கள் காரை ரிப்பேர் செய்ய அல்லது ரீப்ளேஸ்மென்ட் செய்வதற்கான கவரேஜைப் பெற ஓன் டேமேஜ் கவரை வைத்திருப்பது நல்லது.
மேலும், ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் போன்ற ஆட்-ஆன்களுடன் காம்ப்ரிஹென்சிவ் கவர் பெறுவது உங்கள் கார் பிரேக் டவுன் ஆனால், டயர் பஞ்சர் ஆகி இருந்தால் அல்லது டோயிங் தேவைப்பட்டால் நீண்ட சாலை பயணங்களில் உங்களைப் பாதுகாக்கும்.
கேஸ் 3: எப்போதாவது ஓட்டும் உங்கள் தாத்தாவின் காரை நீங்கள் பாதுகாத்து வைத்திருந்தால் - குடும்பத்தில் எமோஷனல் வேல்யூக்காகவே இதுபோன்ற காரை வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் இதை ஓட்ட மாட்டார்கள், ஆனாலும் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கவரேஜ் பாலிசி மூலம் இந்தக் காருக்கும் நீங்கள் இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். நீங்கள் அந்த காரை ஓட்டவில்லை என்பதால், மற்ற ஆட்-ஆன்ஸ் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
சரியான கார் இன்சூரன்ஸை எப்படி தேர்வு செய்வது?
உங்கள் காருக்கு சரியான கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் கீழ்க்கண்டவற்றை கவனிக்க வேண்டும்:
நேரத்தை கையாள்வது மிக முக்கியமானது. எனவே, கார் இன்சூரன்ஸ் வாங்கும் போது நீண்ட, சிக்கலான நடைமுறையை கொண்டிருப்பவற்றை தேர்வு செய்ய வேண்டாம். டிஜிட்-இல், உங்கள் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஆன்லைனிலேயே சில நிமிடங்களில் வாங்கி விடலாம்.
உங்கள் ஐடிவி, அல்லது உங்கள் காரின் சந்தை மதிப்பென்பது, உங்கள் கார் இன்சூரன்ஸின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால், இது உங்கள் கார் இன்சூரன்ஸையும், கிளைம் செய்யும் சமயங்களில், உங்கள் கிளைம் தொகையையும் கூட நேரடியாக பாதிக்கிறது. டிஜிட்-இல், உங்கள் ஐடிவி-ஐ நீங்களே சுயமாக தனிப்பயனாக்கிக் கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம்.
நாம் எல்லோருமே சில கூடுதல் பெனிஃபிட்களை விரும்புவோம், இல்லையா? ஆகவே, உங்கள் கார் இன்சூரன்ஸில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சர்வீஸ் பெனிஃபிட்களும் அடங்கும். உதாரணத்திற்கு, டிஜிட்-இல் வழங்கப்படும் நட்சத்திர சர்விஸ் பெனிஃபிட்களுள் ஒன்று, வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து, டிராப் செய்கின்ற வசதி!
நாம் கார் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான காரணமே கிளைம் செய்வதற்காக தான்! எனவே, உங்கள் கார் இன்சூரன்ஸில் கிளைம் செய்யும் நடைமுறை எளிதாக இருப்பதாகவும், மிக நீண்டதாக இல்லாமல் இருப்பதும் அவசியம். நீங்கள் பிரச்சினையில் இருக்கும் போது, கிளைமிற்கு விண்ணப்பிப்பதற்கு மட்டும் தான் நீங்கள் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் செலவிடுவதற்கு விரும்புவீர்கள்!
கிளைம் செட்டில்மெண்ட்கள் என்பது உங்கள் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வது. கார் இன்சூரன்ஸின் முக்கியமான பகுதியாக கிளைம்கள் இருப்பதால், உங்கள் விருப்பமான இன்சூரரின் கிளைம் செட்டிமெண்ட் விகிதத்தை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம், எந்த பிரச்சினையாக இருப்பினும், உங்கள் கிளைம்கள் செட்டில் செய்யப்பட்டு விடும் என்று நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், கார் இன்சூரன்ஸ் என்று வரும் போது வாடிக்கையாளர் சேவை மிக முக்கியமானதாகும். யோசித்துப் பாருங்கள். பிரச்சினை ஏற்படும் சமயங்களில் நீங்கள் யாரை தொடர்பு கொள்வீர்கள்? ஆகவே, உங்களுக்கு 24x7 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவையை வழங்கக் கூடிய கார் இன்சூரரை தேர்வு செய்யவும், இதன் மூலம் உங்களுக்கு எப்போதுமே உதவி கிடைக்கும்!
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கார் இன்சூரன்ஸ் துறைச்சொற்கள்
கார் இன்சூரன்ஸில் ஐடிவி/IDV என்றால் என்ன?
ஐடிவி என்பது, உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது முழுமையாக சேதப்படுத்தப்பட்டாலோ, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச தொகையை குறிக்கிறது.
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவும், உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இதன் பொருள் என்னவென்றால், உங்கள் ஐடிவி அதிகமாக இருக்கும் போது, உங்கள் கார் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும் - மற்றும் உங்கள் வாகனம் பழையதாகி அதன் ஐடிவி மதிப்பு குறையும் போது, உங்கள் பிரீமியம் தொகையும் குறைகிறது.
மேலும், உங்கள் காரை நீங்கள் விற்பதற்கு முடிவு செய்யும் போது, ஐடிவி அதிகமாக இருக்கும் பட்சத்தில், உங்கள் காருக்கு அதிக விலை கிடைக்கும். காரின் பயன்பாடு, முந்தைய கார் இன்சூரன்ஸ் கிளைம் அனுபவம் போன்ற பிற காரணிகளால் கூட அதன் விலை பாதிக்கக் கூடும்.
எனவே, உங்கள் காருக்கு சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யும் போது, பிரீமியம் தொகை மட்டுமின்றி, உங்கள் காருக்கு வழங்கப்படும் ஐடிவி-யையும் கவனிப்பதற்கு தவறாதீர்கள்.
ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு வழங்குகின்ற பிரீமியம் தொகை குறைவாக இருக்கிறதென்றால், அந்நிறுவனம் வழங்கும் ஐடிவி தொகை குறைவானதாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஒரு வேளை உங்கள் கார் முழுமையாக சேதமடையும் பட்சத்தில், அதிக ஐடிவி இருப்பது உங்களுக்கு அதிக இழப்பீட்டினை பெற்றுத் தரும்.
காரை விற்பதற்கு எண்ணும் போது, உங்கள் ஐடிவி தான் உங்கள் காரின் சந்தை மதிப்பை குறிப்பதாக அமைகிறது. எனினும், உங்கள் காரை நல்ல முறையில் பராமரித்திருக்கும் பட்சத்தில், அது புதியது போலவே பளிச்சென்று இருந்தால், உங்கள் ஐடிவி மதிப்பினை விடவும் உங்கள் காருக்கு அதிக விலையினை நீங்கள் தீர்மானிக்கலாம்.
முடிவில், உங்கள் காரை நீங்கள் எந்த அளவிற்கு நேசித்திருக்கிறீர்கள் என்பதை இவையெல்லாம் காட்டும்.
கார் இன்சூரன்ஸில் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
கார் இன்சூரன்ஸில் நோ கிளைம் போனஸ் (என்சிபி/NCB) என்றால் என்ன?
என்சிபி-யின் (நோ கிளைம் போனஸ்) பொருள் வரையறை: என்சிபி என்பது பாலிசிதாரருக்கு கிளைம் பெறாத பாலிசி காலத்தின் போது பிரீமியத்தின் மீது வழங்கப்படும் தள்ளுபடியை குறிக்கிறது.
நோ கிளைம் போனஸ் என்பது 20-50% வரை தள்ளுபடி வழங்குகிறது. இது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை பயன்படுத்தி நீங்கள் கார் விபத்திற்கான எந்தவொரு கிளைம்களையும் செய்திருக்காத பட்சத்தில், உங்கள் பாலிசி காலத்தின் இறுதியில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
இதன் பொருள், உங்களுடைய முதல் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு நோ கிளைம் போனஸ் கிடைக்காது - உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது தான் இது உங்களுக்குக் கிடைக்கப்பெறும். கிளைம் செய்யாத ஒவ்வொரு வருடத்திற்கு பிறகும், உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் சமயத்தில் உங்கள் நோ கிளைம் போனஸ் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், முதல் வருடத்தில் எந்தவொரு கிளைமும் செய்திருக்காத பட்சத்தில் உங்களுக்கு 20% என்சிபி கிடைக்கப்பெறும். ஒவ்வொரு கிளைம் செய்யாத வருடங்களிலும் இந்த சதவிகிதம் உயரும், 5 வருடங்களுக்கு பிறகு 50% ஆகும் - பிறகு நீங்கள் கிளைம் செய்யும் போது ஜீரோவிற்கு சென்று விடும்.
5-ஆம் வருடத்தில் 50%-ஐ அடைந்ததும், உங்கள் என்சிபி சதவிகிதம் உயர்வது நிற்கிறது, பின்பு அப்படியே இருக்கிறது. இது நோ கிளைம் போனஸ் சன்செட் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது.
காரைப் பொறுத்து என்றில்லாமல், நோ கிளைம் போனஸ் என்பது கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரரையே சேருகிறது. அதாவது, நீங்கள் உங்கள் காருக்கு பதிலாக வேறு காரை மாற்றி விட்டாலும் கூட, உங்கள் என்சிபி உங்களுடனே இருக்கும்.
நீங்கள் புது கார் வாங்க முற்படும் போது, உங்களுக்கு புது கார் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படும். ஆனாலும் கூட, உங்கள் பழைய கார் அல்லது பாலிசியில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள என்சிபி-யின் நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
கார் இன்சூரன்ஸில் என்சிபி-ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
கார் இன்சூரன்ஸில் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
பம்பர்-பம்பர் அல்லது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் அல்லது பார்ட்ஸ் டிப்ரிஸியேஷன் கவர், 5 வருடங்களுக்கு குறைவாக பயன்படுத்திய கார்களுக்கு பொருந்தும். எல்லா பொருள்களையும் போலவே, காலப்போக்கில் பம்பர் அல்லது வேறு ஏதேனும் மெட்டல் அல்லது ஃபைபர் கிளாஸ் பாகங்கள் உள்ளிட்ட உங்கள் காரின் சில பாகங்களின் மதிப்பு குறையும்.
எனவே, சேதமேற்படும் போது, கிளைம் தொகையிலிருந்து டிப்ரிஸியேஷன் தொகை கழிக்கப்படுவதால், பாகங்களை மாற்றுவதற்கான இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த ஆட்-ஆனை வாங்குவதால், டிப்ரிஸியேஷன் தொகை கழிக்கப்படாது. மேலும் ரிப்பேர் செய்வதற்கு அல்லது பாகங்களை மாற்றுவதற்கான முழு தொகையும் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கார் ஓரளவிற்கு சேதமடைந்திருக்கும் போது, டிப்ரிஸியேஷனுக்கு கணக்கிடப்பட்டிருக்கும் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை, உங்கள் இன்சூரரே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.
மேலும் தெரிந்து கொள்ளவும்:
கார் இன்சூரன்ஸில் கேஷ்லெஸ் கிளைம்கள் என்றால் என்ன?
நீங்கள் டிஜிட்-இன் அங்கீகரிக்கப்பட்ட ரிப்பேர் சென்டரில் உங்கள் காரை ரிப்பேர் செய்ய தேர்வு செய்தால், உங்கள் காரினை ரிப்பேர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட கிளைம் தொகையை நாங்கள் நேரடியாக ரிப்பேர் சென்டரிலேயே செலுத்தி விடுவோம். இது தான் கேஷ்லெஸ் கிளைம்.
கம்பல்சரி எக்ஸெஸ்/டிடக்டபிள் போன்ற டிடக்டபிள்ஸ் (கழிப்புத்தொகை) ஏதேனும் இருப்பின், அல்லது உங்கள் இன்சூரன்ஸால் பாதுகாப்பளிக்கப்படாத ரிப்பேர் செலவுகள் அல்லது டிப்ரிஸியேஷன் கட்டணங்கள் போன்றவை இருப்பினும், இவற்றையெல்லாம் இன்சூர் செய்யப்பட்ட நபரின் சொந்த செலவில் தான் செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை எப்படி தேர்வு செய்வது?
கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தி, ஆன்லைனில் பிரீமியத்தை கணக்கிட்டுப் பார்க்கவும்
உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் குறித்து நீங்கள் நன்கு புரிந்து கொள்வதற்கும், அதனை தனிப்பயனாக்குவதற்கும் சௌகரியமாக, கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் சுயமாகவே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பினை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை முடிவு செய்வது எது? நீங்கள் இதனை உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரிலும் பார்க்கலாம். உங்கள் பிரீமியத்தினை பாதிக்கின்ற காரணிகளுள் சில:
- கார் இன்சூரன்ஸ் பாலிசியின் வகை - உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும் கவரேஜ் மற்றும் பெனிஃபிட் உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கின்றன. எனவே, நீங்கள் தேர்டு பார்ட்டி பாலிசியை விட ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசியைத் தேர்வுசெய்தால், உங்கள் பிரீமியம் அதிகமாக இருக்கும், ஏனெனில் இது பிந்தையதை விட அதிக கவரேஜை வழங்குகிறது.
- உங்கள் கார் ஐ.டி.வி (IDV) - இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ (IDV) என்பது டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) சார்ஜஸை டிடக்ட் செய்த பிறகு உங்கள் காரின் தற்போதைய மார்க்கெட் வேல்யூ ஆகும். உங்கள் ஐ.டி.வி (IDV) அதிகரித்தால், இன்சூரன்ஸ் பிரீமியமும் அதிகரிக்கும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்-ஆன்ஸ் - உங்கள் முக்கியமான இன்சூரன்ஸ் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அனைத்து கேஸ்களிலும் உங்கள் காரைப் புரொடெக்ட் செய்வதற்கும் வெவ்வேறு ஆட்-ஆன் கவர்களுடன் கஸ்டமைஸ்டு இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு அதிக பிரீமியத்தைப் பெற்றுத் தரும்.
- டிடெக்டிபள்ஸ் - கார் காப்பீட்டில் டிடெக்டிபள்ஸ் என்பது இன்சூரன்ஸ் நிறுவனம் மீதமுள்ள கிளைம் அமெளன்ட்டை செலுத்துவதற்கு முன்பு பாலிசிதாரர் தங்கள் பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டிய முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அமெளன்ட்டைக் குறிக்கிறது. எனவே, நீங்கள் குறைந்த பிரீமியத்திற்கு அதிக வாலண்டரி டிடெக்டிபள்ஸைத் தேர்வு செய்யலாம், ஏனெனில் இன்சூரன்ஸ் நிறுவனம் கிளைம் செட்டில்மென்ட்களின்போது குறைவாக செலுத்த வேண்டியிருக்கும்.
- கிளைம் போனஸ் இல்லை - ஒரு பாலிசி ஆண்டில் நீங்கள் எந்த கிளைமையும் எழுப்பவில்லை என்றால், இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் அடுத்த பாலிசி ரீனியூவல் பிரீமியத்தில் டிஸ்கவுன்ட்டை நோ கிளைம் போனஸ் வடிவில் உங்களுக்கு பரிசாக அளிக்கும்.
- உங்கள் காரின் தயாரிப்பு மற்றும் மாடல் - உங்கள் காரின் உற்பத்தியாளர் மற்றும் மாடலைப் பொறுத்து கார் இன்சூரன்ஸ் பிரீமியம் மாற்றத்திற்கு உட்பட்டது. ஸ்டாண்டர்டு ஹேட்ச்பேக் காரை விட சொகுசு செடான் காருக்கு இன்சூரன்ஸ் செய்தால் அதிக பிரீமியம் கிடைக்கும். மேலும், காரின் என்ஜின் கன கொள்ளளவு மற்றும் அதன் எரிபொருள் செயல்திறன் ஆகியவையும் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நேரடியாக பாதிக்கின்றன.
- உங்கள் காரின் வயது - ஒவ்வொரு ஆண்டும் உங்கள் காரின் பாகங்கள் தேய்மானம் அடைவதால், ஐ.டி.வி குறைகிறது, எனவே பாலிசி பிரீமியமும் குறைகிறது. அதாவது புதிய காருக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாகவும், பழைய காருக்கு குறைவாகவும் இருக்கும்
உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்
- வாலன்டரி டிடக்டபிள்-ஐ (தன்னிச்சையான கழிப்புத்தொகை) அதிகப்படுத்தவும் - 4-5 வருடங்களுக்கும் மேலாக நீங்கள் எந்த கிளைமும் செய்திருக்காத பட்சத்தில், அல்லது கிளைம் செய்யும் சமயங்களில் உங்கள் கையிலிருந்து பணத்தை அதிகமாக செலவு செய்ய முடியுமென நீங்கள் நினைத்தால், உங்கள் வாலன்டரி டிடக்டபிள்-ஐ அதிகப்படுத்தி, அதன் மூலம் உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் குறைக்கலாம்.
- பாதுகாப்பாக வண்டி ஓட்டிச் செல்லும் ரிக்கார்டினை பராமரிக்கவும் - இது வெளிப்படையானது, ஆயினும் முக்கியமானது. சாலைகளில் பாதுகாப்பாகவும், ஸ்பீட்-லிமிட்களில் ஜாக்கிரதையாகவும் வண்டி ஓட்டுவதன் மூலம் நீங்கள் விபத்துகளை தவிர்க்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு நோ கிளைம் போனஸ் கிடைக்கும்.
- சரியான ஆட்-ஆன்களை தேர்வு செய்யவும் - நீங்கள் சரியானவற்றை தேர்வு செய்யும் பட்சத்தில், கூடுதலான கவர்கள் பயனளிக்கும். ஆகவே, எல்லாவற்றையும் தேர்வு செய்யாமல், உங்களுக்கும், உங்கள் காருக்கும் பயன்படக் கூடிய குறிப்பிட்ட ஆட்-ஆன்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவும்.
கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்
ஆன்லைனில் கார் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை (quotes) ஒப்பிட்டுப் பார்க்கவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பற்றி உங்கள் கார் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான விவரங்களை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
உங்கள் ஐடிவி-ஐ(IDV) சரிபார்க்கவும் - மலிவான கார் இன்சூரன்ஸ் தோராய மதிப்பீடுகளை கொண்டிருப்பவையின் ஐடிவி (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது உங்கள் காரின் சந்தை மதிப்பு குறைவாக இருக்கும். இது குறைவாக இருக்கும் பட்சத்தில், கிளைம் செய்யும் சமயத்தில், குறிப்பாக உங்கள் கார் திருடு போகும் சமயத்தில் மற்றும் முழுதாக சேதமடைந்திருக்கும் சமயத்திலும், நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்! எனவே இதன் சரியான மதிப்பை தீர்மானிப்பது மிக முக்கியம். ஆன்லைனில் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது இதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினை டிஜிட் வழங்குகிறது.
சர்வீஸ் பெனிஃபிட்களை சரிபார்க்கவும் - விற்பனைக்கு பின்னர் வழங்கும் சேவைகளை நல்லபடியாக வழங்கும் நிறுவனத்தினை தேர்வு செய்யவும். டிஜிட் வழங்கும் சேவைகளுள் சில - 6 மாத வாரண்டியுடன் வீட்டு வாசலிலேயே வண்டியை பிக்-அப் செய்து, ரிப்பேர் செய்தவுடன், டிராப் செய்யும் வசதி, 24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை, 6000+ கேரேஜ்களில் கேஷ்லெஸ், மற்றும் பல.
இன்சூரர் கிளைம்களை செட்டில் செய்யும் வேகம் - நீங்கள் கிளைமிற்காகவே இன்சூரன்ஸை வாங்குகிறீர்கள், எனவே இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றுவதற்கு முன் இதனை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும். டிஜிட் கிளைம்களில் 90.4% கிளைம்கள் வெறும் 30 நாட்களுக்குள்ளாகவே செட்டில் செய்யப்பட்டு விடும். எங்கள் கிளைம்கள் விரைவானது மற்றும் இடைஞ்சலற்றது என்பது இதன் பொருள். மேலும் நாங்கள் ஜீரோ ஹார்டுகாப்பி பாலிசியை பின்பற்றுகிறோம், அதாவது நாங்கள் மென் நகல்களை மட்டுமே கேட்கிறோம், முழுமையாக ஆவணங்களற்ற கிளைம்கள்!
சிறந்த மதிப்பு - சர்வீஸில் நீங்கள் திருப்தியடைந்து, ஐடிவி சரியாக இருக்கும் பட்சத்தில், பிரீமியம் தொகை மற்றும் நீங்கள் பெறும் தள்ளுபடியை சரிபார்க்கவும்.
கார் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை(quotes) ஒப்பிட்டுப் பார்ப்பதின் சரியான வழியை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
கார் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை(quotes) ஒப்பிட்டுப் பார்க்கும் போது தவிர்க்க வேண்டிய பொதுவான பிழைகள்
இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன் கார் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்ல விஷயமாகும். ஆனால் அவற்றை கீழ்க்கண்ட அலகுகளை கொண்டு ஒப்பிட்டுப் பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தங்களின் கார் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, பொதுவாகவே மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
குறைவான பிரீமியம்
ஆனால் உங்கள் கார் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, நீங்கள் உண்மையில் பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
- சரியான ஐடிவி
- சிறந்த சேவைகள்
- குறைவான விலை
டிஜிட்-இல் கார் பாலிசியை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
உங்கள் கார் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கு ஏன் டிஜிட்-ஐ தேர்வு செய்ய வேண்டும்?
உங்கள் பழைய கார் இன்சூரன்ஸ் பாலிசி எங்களிடம் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட, கார் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கு டிஜிட்-ஐ தேர்வு செய்வது எளிமையானது, இடைஞ்சலற்றது. மேலும் ஆன்லைனில் சில நிமிடங்களிலேயே இதனை செய்து விடலாம்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை முதல் முறையாக எங்களிடம் புதுப்பிக்க இருக்கிறீர்களா? கீழ்க்கண்ட சில பெனிஃபிட்களை நீங்கள் எங்களிடம் எதிர்பார்க்கலாம்:
- விரைவான கிளைம்கள் - நாம் ஒவ்வொருவரும் கார் இன்சூரன்ஸ் வாங்குவதின் முக்கிய நோக்கமே, தேவைப்படும் போது கிளைம் செய்து அதன் பலனை பெற்றுக் கொள்வதற்காக தான். நல்வாய்ப்பாக, கிளைம் செய்வது முதல் கார் சேதங்களை மதிப்பீடு செய்வது வரை எங்களுடைய எல்லா நடைமுறைகளையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.
- கேஷ்லெஸ் கார் ரிப்பேர்கள் - விபத்து நேரும் சமயங்களில், அநாவசியமாக நீங்கள் உங்கள் கையிலிருந்து பணத்தை செலவு செய்ய விரும்ப மாட்டீர்கள். அதனால் தான், கேஷ்லெஸ் ரிப்பேர் செய்து கொள்ளும் வாய்ப்பினை நாங்கள் வழங்குகிறோம். எங்களுடைய நெட்வொர்க் கேரேஜ்கள் ஏதேனும் ஒன்றில் நீங்கள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி கிளைம் ஆகும் ரிப்பேர்களை செய்து கொள்ளலாம்.
- அதிக கேரேஜ்களின் நெட்வொர்க் - எங்களுடைய நெட்வொர்க் கேரேஜ்களில் மட்டுமே நீங்கள் கேஷ்லெஸ் சேவைகளை பெற முடியும். நல்வாய்ப்பாக, நாடு முழுவதிலும் 5800+ கேரேஜ்கள் இருப்பதனால், நீங்கள் இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
- வீட்டு வாசலிலேயே பிக்-அப் மற்றும் டிராப் - தேவைப்படும் போது, அதாவது சரியான நேரத்தில் உங்கள் காரை ரிப்பேர் செய்ய முடியவில்லையென்றால், நாங்கள் பிக்-அப் மற்றும் டிராப் சேவைகளை வழங்குகிறோம், அதனால் நீங்கள் நிர்வாகம் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
- 24x7 மணி நேர சேவை - எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும், நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்.
- உங்கள் ஐடிவி-ஐ(IDV) தனிப்பயனாக்கிக் கொள்ளவும் - குறைவான பிரீமியம் என்று கூறி பிறர் உங்களை முட்டாளாக்குவதை நீங்கள் அனுமதிக்காதீர்கள், மேலும் குறைவான ஐடிவி-யும் கூட கிளைம் செய்யும் சமயங்களில் நீங்கள் பெறக் கூடிய தொகையை பாதிக்கும். அதனால் தான், டிஜிட்-இல் நாங்கள் வெளிப்படைத்தன்மையை விரும்புவதனால், உங்கள் ஐடிவி-ஐ உங்களை சுயமாகவே தனிப்பயனாக்கிக் கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம்.
டிஜிட்-இல் கார் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு வாங்குவது/புதுப்பிப்பது?
- படி 1: உங்கள் வாகனத்தின் மேக், மாடல், வேரியன்ட்(மாற்றுரு), ரெஜிஸ்ட்ரேஷன் தேதி, மற்றும் உங்கள் காரை நீங்கள் ஓட்டுகின்ற ஊர் ஆகியவற்றை உள்ளிடவும். ‘தோராய மதிப்பீட்டினை பெறவும்’ என்பதை அழுத்தியவுடன், நீங்கள் விரும்பும் பிளானை தேர்வு செய்யவும்.
- படி 2: தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி ஒன்லி அல்லது ஸ்டாண்டர்ட் பேக்கேஜை (காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ்) தேர்வு செய்யவும்.
- படி 3 : உங்கள் முந்தைய இன்சூரன்ஸ் பாலிசியை பற்றிய விவரங்களை எங்களுக்குத் தெரிவிக்கவும்- காலாவதியாகும் தேதி, கடந்த வருடத்தில் செய்த கிளைம்கள், பெற்ற நோ கிளைம் போனஸ் ஆகியவை.
- படி 4 : உங்கள் பிரீமியத்திற்கான தோராய மதிப்பீடு (quote) உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஸ்டாண்டர்ட் பிளானை தேர்வு செய்திருந்தால், ஆட்-ஆன்களை தேர்வு செய்வதன் மூலமும், ஐடிவி-ஐ அமைத்துக் கொள்வதின் மூலமும், உங்களிடம் சிஎன்ஜி கார் இருக்கிறதா என உறுதிப்படுத்துவதன் மூலமும், பிளானை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் நீங்கள் இறுதியான பிரீமியத்தினை பார்க்கலாம்.
- படி 5 : நீங்கள் பணத்தை செலுத்திய உடனேயே, உங்கள் பாலிசி உங்களுக்கு ஆன்லைனில் வந்து விடும்!
கார் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் எடுப்பது ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
கெடுவாய்ப்பாக, கார் இன்சூரன்ஸ் எடுப்பது போன்ற சுவாரசியமற்ற விஷயங்கள் வரும் போது, இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தினால் எந்தவொரு பின்விளைவுகளும் ஏற்பட்டிருக்காத பட்சத்தில், மக்கள் அதனை புறக்கணிப்பார்கள் அல்லது மறந்து விடுவார்கள்.
எனினும், இந்த வழிகாட்டுதல்கள் உங்களையும் என்னையும் போன்ற மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு வழங்கப்படுகிறது.
உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்; தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் எடுப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்படவில்லையென்றால் என்ன ஆகும்? இப்பேற்பட்ட சூழ்நிலையில், பெரும்பாலான மக்களிடம் இன்சூரன்ஸ் இருக்காது. விபத்து ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட இரு தரப்பு நபர்களும் அநாவசியமான வாக்குவாதங்களில் ஈடுபடுவார்கள், மேலும் ஏகப்பட்ட செலவுகளும் ஆகும்!
எனவே, கார் இன்சூரன்ஸ் வாங்குவதின் முதன்மையான நோக்கம் விபத்து அல்லது ஆபத்துக் காலங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினை பாதுகாப்பது தான் என்ற போதிலும், இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.
சாலை விபத்துகளின் அதிகரிப்பு : இந்தியாவில் சாலை விபத்துகள் மிக அதிகரித்திருக்கிறது, மோட்டார் வாகனச் சட்டப்படி கார் இன்சூரன்ஸ் எடுப்பதை கட்டாயமாக்கியிருப்பதன் முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று. 2017-ஆம் ஆண்டில், சாலை விபத்துகளின் காரணமாக தினசரி 1200 பேர்களுக்கும் மேல் காயமடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது! கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது இது போன்ற சூழ்நிலையில் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது.
தேர்டு-பார்ட்டியினரை பாதுகாக்கிறது : நீங்கள் ஒருவரது வண்டியை இடித்து விட்டாலும் அல்லது உங்களுடைய பிரியமான காரை வேறு ஒரு கார் இடித்து விட்டாலும், குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது பாதிக்கப்பட்ட தேர்டு-பார்ட்டி அவர்தம் காருக்கு ஏற்பட்ட சேதங்கள் அல்லது தனிப்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதை உறுதிப்படுத்தும்.
சட்ட நடைமுறைகளை எளிதாக்குகிறது : ஒரு விபத்து நிகழும் போது, ஏற்பட்ட சேதங்களை காட்டிலும் - சட்ட நடைமுறை தான் ஒருவரின் நேரத்தையும், ஆற்றலையும் விரயமாக்குகின்றது. எனினும், உங்களிடம் செல்லத்தக்க கார் இன்சூரன்ஸ் இருக்கும் பட்சத்தில், சட்ட நடைமுறைகளும் கூட இன்சூரன்ஸ் மூலம் பார்த்துக் கொள்ளப்படும்.
இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்
கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் வாங்குவது ஏன் அர்த்தமுள்ளதாக இருக்கிறது?
உங்கள் எலக்ட்ரிசிட்டி பில்-ஐ பதிவு செய்யப்பட்ட மையத்தில் கடைசியாக எப்போது நேரில் சென்று கட்டினீர்கள் அல்லது, உங்கள் அருகிலுள்ள பலசரக்கு கடையில் கடைசியாக எப்போது உங்கள் மொபைல்-ஐ ரீசார்ஜ் செய்து கொண்டீர்கள்? இதற்கெல்லாம் நேரில் சென்று சில காலம் ஆகி விட்டதல்லவா?
இன்டர்நெட் வசதிக்கு நன்றி, நம்மில் பெரும்பாலானோர் பல காரியங்களுக்கு இன்டர்நெட்டையே பயன்படுத்துகின்றனர். பில்களை கட்டுவதற்கு, ரீசார்ஜ் செய்வதற்கு, இப்போது மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு கூட பயன்படுத்துகின்றனர்! இயல்பாகவே, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக நாம் கார் இன்சூரன்ஸ் வாங்க வேண்டுமானால், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளையோ அல்லது டீலர்களையோ நேரில் சென்று சந்திக்க வேண்டியதில்லை.
இப்போது, நீங்கள் ஆன்லைனிலேயே உங்கள் கார் இன்சூரன்ஸை எளிதாக வாங்கி விடலாம். அடிப்படையான உங்கள் கார் பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் பிரீமியத்தை செலுத்துவதற்கு உங்களுடைய டெபிட்/கிரெடிட் கார்டு மட்டுமே தேவைப்படும், அவ்வளவு தான், சில நிமிடங்களிலேயே உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பப்படும்.
- ஆன்லைனில் கார் இன்சூரன்ஸை வாங்குவதால் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். நீங்கள் யாரையேனும் சந்திப்பதற்கு செல்லும் நேரத்தை அல்லது அவருக்காக காத்திருக்கும் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலிருந்த படியே, உங்கள் லாப்டாப்-இல், 5 நிமிடங்களிலேயே இதனை செய்து விடலாம்.
- ஆன்லைனில் கார் இன்சூரன்ஸை வாங்குவதன் மூலம் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் சுயமாகவே தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். அது மட்டுமின்றி, டிஜிட் கார் இன்சூரன்ஸில், உங்கள் காரின் ஐடிவி-ஐ கூட நீங்கள் சுயமாகவே தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
- ஆன்லைனில் கார் இன்சூரன்ஸை வாங்குவது மிகச் சரியானதென்று கருதப்படுகின்றது, ஏனென்றால், மூன்றாம்-தரப்பு நபரை நம்பியிருக்காமல், நீங்கள் சுயமாகவே இன்சூரன்ஸை வாங்குவதால், இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கும் நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது.
- ஆன்லைனில் கார் இன்சூரன்ஸை வாங்குவதின் சிறப்பு என்னவென்றால், எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
செகண்ட்-ஹேண்ட் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்/புதுப்பிக்கவும்
நீங்கள் புத்தம் புதிய காரை வாங்கியிருந்தாலும் அல்லது செகண்ட்-ஹேண்ட் காரை வாங்கியிருந்தாலும், நீங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை உங்கள் காருக்கு வாங்கிக் கொள்ளலாம்.
எனினும், நீங்கள் செகண்ட்-ஹேண்ட் கார் வாங்கும் போது, அதன் உரிமையாளர் ஏற்கனவே செல்லத்தக்க கார் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறாரா இல்லையா என்பதை சரிபார்க்கவும், மேலும் அதனை கார் வாங்கிய 14 நாட்களுக்குள் உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளவும். கூடுதலாக, உங்கள் செகண்ட்-ஹேண்ட் காரை இன்சூர் செய்யும் போது, கீழ்க்கண்டவற்றையும் உறுதி செய்து கொள்ளவும்:
- காரும் அதன் இன்சூரன்ஸும் உங்கள் பெயருக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். வண்டி வாங்கிய 14 நாட்களுக்குள் நீங்கள் இதனை செய்ய வேண்டும்.
- காரின் கிளைம் வரலாறினை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட கார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எண்ணை அளிப்பதன் மூலம் நீங்கள் இதனை தெரிந்து கொள்ளலாம்.
- நீங்கள் ஏற்கனவே கார் இன்சூரன்ஸ் வைத்திருந்தால், உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கு உங்கள் நோ கிளைம் போனஸை நீங்கள் மாற்றிக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- உரிமையாளரிடம் ஒரு வேளை செல்லத்தக்க கார் இன்சூரன்ஸ் இல்லையென்றால், அல்லது அது காலாவதி ஆகியிருந்தால், நீங்கள் உடனடியாக எங்களுடைய வலைதளத்தில் உங்கள் காரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
- உங்கள் செகண்ட்-ஹேண்ட் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏற்கனவே உங்கள் பெயருக்கு மாற்றியிருந்தால், அதன் காலாவதியாகும் தேதியை சரிபார்க்கவும். அதன் காலாவதி தேதியன்று அல்லது அதற்கு முன்னரே இன்சூரன்ஸை புதுப்பிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
செகண்ட்-ஹேண்ட் கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்
பழைய காருக்கு கார் இன்சூரன்ஸை வாங்கவும் அல்லது புதுப்பிக்கவும்
நீங்கள் பழைய, செகண்ட்-ஹேண்ட் காரை வாங்கியிருக்கும் பட்சத்தில், உங்கள் தற்போதைய காருக்கு இன்னும் கார் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தீர்களானால், நீங்கள் உடனடியாக எங்கள் வலைதளத்தில் உங்கள் காரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
எனினும், உங்கள் பழைய காருக்கு ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன்பு, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
காரின் பயன்பாடு மற்றும் இன்சூரன்ஸின் வகை - இரண்டு வகையான கார் இன்சூரன்ஸ்கள் உள்ளன, தேர்டு-பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் ஆகியன. நாங்கள் பொதுவாகவே அதிகபட்ச நன்மைகளை பெறும் பொருட்டு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை வாங்குவதற்கு பரிந்துரைத்தாலும், நீங்கள் காரை அதிகமாக பயன்படுத்த போவதில்லையென்றாலோ அல்லது சிறிது காலத்திற்கு தான் பயன்படுத்த போகிறீர்கள் என்றாலோ, நீங்கள் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸை வாங்கிக் கொள்ளலாம். இந்த சூழ்நிலையில், குறைந்தபட்சம் உங்கள் காரின் சட்டபூர்வமான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதால், தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் வாங்கிக் கொள்வது சரியானதாகும்.
ஐடிவி (IDV/இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ) - ஐடிவி, அதாவது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது உங்கள் காரின் சந்தை மதிப்பாகும். உங்கள் கார் பழையதாக இருப்பதால், அதன் வயதினை பொறுத்து காலப்போக்கில் ஏற்படும் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) காரணமாக, அதன் ஐடிவி-யும் குறைவாகவே இருக்கும் (நீங்கள் ஆன்லைனில் கார் இன்சூரன்ஸை வாங்கும் போது எங்கள் வலைதளத்தில் அதற்கேற்றவாறு தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்). இந்த ஐடிவி-யானது உங்கள் பிரீமியத்தையும், இன்சூர் செய்யப்பட்ட தொகையையும் நேரடியாக பாதிக்கிறது. பிரீமியம் குறைவாக இருக்கும் போது, கிளைம் செய்யும் சமயத்தில் இன்சூர் செய்யப்பட்ட தொகையும் குறைவாகவே இருக்கும்.
ஆட்-ஆன்கள் - ஆன்லைனில் உங்கள் பழைய காருக்கு நீங்கள் கார் இன்சூரன்ஸ் வாங்கும் போது, நீங்கள் ஆட்-ஆன்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆயினும், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ்/ஸ்டாண்டர்ட் கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது தான் இது பொருந்தும். இவை உங்களுக்கும், உங்கள் காருக்கும் அதிகபட்ச காப்புறுதிப் பாதுகாப்பினையும், டயர் புரொட்டெக்ட், கியர்பாக்ஸ் மற்றும் என்ஜின் புரொட்டெக்ஷன், ரிடர்ன் டூ இன்வாய்ஸ் போன்ற பெனிஃபிட்களையும் பெறுவதற்கு உதவும். எனினும், நீங்கள் பழைய காருக்கு கார் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு திட்டமிட்டிருப்பதால், எந்தெந்த ஆட்-ஆன்கள் உங்கள் பழைய காருக்குக் கிடைக்கும் என்பதை சரிபார்க்கவும். உதாரணத்திற்கு, உங்கள் கார் 5 வருடங்களுக்கு மேற்பட்டதாயிருந்தால், ஜீரோ டிப்ரிஸியேஷன் அல்லது பம்பர் டூ பம்பர் கவர் உங்கள் காருக்கு கிடைக்காது.
ஆன்லைனில் பழைய காருக்கான இன்சூரன்ஸ் பெறுவது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்.
காலாவதியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும்/புதுப்பிக்கவும்
உங்கள் காலாவதியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிப்பது ஏன் முக்கியமாக கருதப்படுகிறது?
- உங்கள் என்சிபி-ஐ (NCB) நீங்கள் இழந்து விடுவீர்கள் - என்சிபி என்பது நீங்கள் வருடக்கணக்கில் கிளைமே செய்யாத பட்சத்தில், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நோ கிளைம் போனஸை குறிக்கிறது. உங்கள் என்சிபி அதிகமாக இருக்கும் போது, புதுப்பிக்கும் போது உங்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கும். எனினும், பாலிசி காலாவதியாவதற்கு முன்னர் நீங்கள் இதனை செய்யவில்லையென்றால், உங்கள் என்சிபி-ஐ முழுமையாக இழந்து விட நேரிடலாம், அப்படியே உங்கள் தள்ளுபடியையும் கூட!
- அபராதம் செலுத்த நேரிடும் வாய்ப்பிருக்கிறது - நீங்கள் சரியான சமயத்தில் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கவில்லையென்றால், நீங்கள் அபராதத் தொகை செலுத்த நேரிடலாம். ஏனென்றால், காலாவதித் தேதியை கடந்த பின்னர் உங்கள் முந்தைய கார் இன்சூரன்ஸ் பாலிசி செல்லாது.
- பொருளாதார சுமையை தாங்க வேண்டி வரும் - அபராதம் கட்டுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், என்சிபி-ஐ தக்க வைத்துக் கொள்வதற்கும் மட்டுமின்றி, சரியான நேரத்தில் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கவில்லையெனில், கெடுவாய்ப்பாக நேரும் விபத்து போன்ற சூழ்நிலையில் நீங்கள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடலாம். ஆகவே தான், வந்த பின் வருந்துவதை காட்டிலும் முன்கூட்டியே பாதுகாப்பாக இருப்பது சிறந்தது, உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதித் தேதிக்கு முன்னரே உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் காலாவதியான கார் இன்சூரன்ஸை புதுப்பிப்பது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்.
செய்திகளில் டிஜிட்
How to make your car and bike ‘fire-proof’ with motor insurance? Key points
- 05 Apr 2022
- Financial Express
ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நான் எனது வாகனத்திற்கு ஸ்டாண்டுஅலோன் ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க முடியுமா?
நீங்கள் ஏற்கனவே எங்களிடமோ அல்லது வேறொரு இன்சூரரிடமோ தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸை பெற்றிருந்தால், உங்களின் காரையும் சேதங்களில் இருந்து பாதுகாக்க நீங்கள் ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம்.
டிஜிட்டில் உங்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசியை எப்படி புதுப்பிப்பது?
உங்களின் தற்போதைய கார் இன்சூரன்ஸ் பாலிசி கூடிய விரைவில் காலாவதியாக போகிறது (காலாவதி ஆகவில்லை என்று நம்புகிறோம்) என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் அதை எளிதாக ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம்:
படி 1: www.godigit.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
படி 2: உங்கள் காரின் பிராண்டு, கார் வேரியண்ட் மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி போன்ற தகவல்களை உள்ளிட்டு தோரா மதிப்பீட்டினை (Quote) பெறவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: மேலும் உங்கள் தற்போதைய அல்லது முன்னதாக எடுக்கப்பட்ட பாலிசியின் காலாவதி தேதி மற்றும் உங்களின் நோ கிளைம் போனஸை (ஏதேனும் இருந்தால்) உள்ளிட சொல்லி கேட்கப்படுவீர்கள்.
படி 4: உங்களுக்கு பிடித்தமான கார் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்யவும் (தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ்/ காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ்). மேலும், ஆட்-ஆன்களுடன் (உங்களுக்கு தேவைப்பட்டால்) உங்களின் பாலிசியை தனிப்பயனாக்கி கொள்ளலாம்.
படி 5: online!உங்கள் பேமெண்ட்டை முடித்துவிட்டால், உங்களின் பாலிசி உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் அல்லது தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி கார் இன்சூரன்ஸ், இவை இரண்டில் எது சிறந்த கார் இன்சூரன்ஸ்?
காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் எடுப்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், இது தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் போல வேறு ஒருவரின் காருக்கு மட்டும் காப்புறுதி வழங்காமல், உங்கள் காரின் சொந்த சேதங்களுக்கும், ஓனர் டிரைவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அவருக்கும் சேர்த்து காப்புறுதி வழங்குகிறது.
காரில் பயணிப்பவர்களுக்கும் கார் இன்சூரன்ஸில் காப்புறுதி கிடைக்குமா?
காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியில், ஏதேனும் தனிநபர் விபத்து ஏற்படும் போது வழக்கமாக ஓனர் டிரைவருக்கு மட்டுமே காப்புறுதி வழங்கப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான இன்சூரர்கள் பேசென்ஜர் கவர் ஆட்-ஆன் வழங்குகிறது. இதன் மூலம் சிறிதளவு கூடுதல் பிரீமியம் மட்டும் செலுத்தி, உங்கள் காரில் பயணிக்கும் நபர்களுக்கும் நீங்கள் காப்புறுதி பெறலாம்.
நான் உங்களிடம் எனது கார் இன்சூரன்ஸை புதுப்பித்தால், எனது நோ கிளைம் போனஸ் குறையுமா?
கண்டிப்பாக, வேறொரு கார் இன்சூரன்ஸ் வழங்குனரிடம் உங்களுக்கு இருக்கும் வரலாறு பொறுத்து, நாங்கள் உங்களுக்கு என்சிபி தள்ளுபடிகளை வழங்குவோம். மீண்டு வாருங்கள்!
ரிப்பேர்கள் செய்வதற்கு எனக்கு விருப்பமான கேரேஜ்களை நான் தேர்வு செய்து கொள்ளலாமா?
ஆம், அவ்வாறு செய்யலாம்! ஒரு சில சூழ்நிலைகளில், நீங்கள் நெட்வொர்க் கேரேஜ்களுக்கு அருகில் இல்லாமல் போகலாம் அல்லது உங்கள் பைக் அல்லது காரை உங்களுக்கு விருப்பமான வேறொரு கேரேஜில் ரிப்பேர் செய்ய விரும்பலாம். இந்த நிலையில், நீங்கள் இன்வாய்ஸ்களை அனுப்பிய ஒரு சில நாட்களிலேயே நீங்கள் செலவு செய்த பணம் உங்களுக்கு ரீஇம்பர்ஸ் செய்யப்படும்.
கூடுதலாக, உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க் கேரேஜ்கள் பற்றி எங்களின் வாடிக்கையாளர் ஆதரவு குழுவிடமும் நீங்கள் சரிபார்க்கலாம். எனவே, உங்களுக்கு தேவைப்பட்டால் அவர்கள் மூலமாக நாங்கள் உங்களுக்கு பிக்-அப்பை ஏற்பாடு செய்து தருவோம்.
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசியை புதுப்பிக்கும் முன் நான் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்
ஒரு பாலிசியை வாங்கும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்க்கியமான அம்சங்கள்:
- கிளைம் செட்டில்மென்ட் செய்யப்படும் வேகம் - நீங்கள் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, சரிதானா?
- அணுகும் தன்மை - மறுபடியும், வாடிக்கையாளர் ஆதரவு குழுவிடம் பல மணிநேரம் பேச வேண்டியது தேவையில்லை!
- உங்களின் கார் ரிப்பேர்கள் நெட்வொர்க் கனக்டிவிட்டிக்கான கேஷ்லெஸ் ஆப்ஷன்- உங்களது போனில் வரும் ஒன்று மட்டும் அல்ல, சேவை மைய வெட்வொர்க் உள்ளது.
- நிறுவனத்தின் கிளைம் செட்டில்மென்டுக்கான வரலாறு.
விபத்தின்போது நான் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக நீங்கள் 1800-103-4448 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்! அந்த நிமிடம் முதல் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து விடுவோம்.
டிஜிட்டில் எத்தனை நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன?
நாடு முழுவதும் எங்களிடம் 6000+ நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன!
நான் என்னுடைய பழைய கார் இன்சூரரை மாற்றும்போது எனது என்சிபி-யும் மாற்றப்படுமா?
கண்டிப்பாக, நீங்கள் உங்களின் பழைய இன்சூரரிடம் இருந்து என்சிபி-யை மாற்றிக்கொள்ளலாம். மேலும் நாங்கள் உங்களுக்கு கூடுதல் தள்ளுபடியை வழங்குவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல ஓட்டுநர்களுக்கு நிச்சயமாக ரிவார்வடுகள் வழங்கப்பட வேண்டும்.
என்னுடைய பாலிசியை பழைய இன்சூரரிடம் மாற்றுவதற்கு, புதிய பாலிசியை வாங்கும் போது நான் ஏதேனும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா?
இல்லை, நாங்கள் ஜீரோ பேப்பர்வொர்க் பாலிசியில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, எங்களிடம் நீங்கள் பாலிசியை புதுப்பிக்கும்போது நாங்கள் எந்த விதமான பேப்பர்வொர்க்கையும் கேட்பதில்லை!
கார் இன்சூரன்ஸில் என்ஜின் கவர் ஆகுமா?
பொதுவாக ஸ்டாண்டர்டு பேக்கேஜ் பாலிசியில் என்ஜினுக்கு காப்புறுதி வழங்கப்படாது. இருப்பினும், இது பெரும்பாலான இன்சூரர்கள் வழங்கும் ஆட்-ஆன் ஆகும். ஆகவே, இதன் மூலம் நீங்கள் சிறிதளவு கூடுதல் பிரீமியம் மட்டுமே செலுத்தி என்ஜினுக்கான காப்புறுதியைப் பெறலாம்.
என்ஜின் அன்டு கியர் புரொட்டெக்ட் ஆட்-ஆன் ஆனது எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக என்ஜின் மற்றும் கியர் பாக்ஸிற்கு ஏற்படும் சேதங்களில் இருந்து காப்புறுதி வழங்குகிறது.
கார் இன்சூரன்ஸில் டையருக்கு காப்புறுதி கிடைக்குமா?
பொதுவாக ஸ்டாண்டர்டு பேக்கேஜ் பாலிசியில் டையருக்கு காப்புறுதி வழங்கப்படாது. இருப்பினும், பெரும்பாலான இன்சூரர்கள் வழங்கும் டையர் புரொட்டெக்ட் ஆட்-ஆன் மூலம் சிறிதளவு கூடுதல் பிரீமியம் மட்டுமே செலுத்தி டையருக்கான காப்புறுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
மின் சார்ந்த தீ விபத்துகளுக்கு கார் இன்சூரன்ஸில் காப்புறுதி கிடைக்குமா?
ஏதேனும் விபத்து காரணமாக மின் சார்ந்த தீ விபத்து ஏற்படுமாயின், அது காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) கார் பாலிசியில் காப்புறுதி செய்யப்படும்.
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
உங்கள் காரை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்களில் நீங்கள் ரிப்பேர் செய்தால், அந்த ரிப்பேருக்கான செலவுகள் எதையும் நீங்கள் செலுத்த தேவையில்லை. அச்செலவுகளை கார் இன்சூரரே வழங்கும் இந்த இன்சூரன்ஸ் கவரானது கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸ் ஆகும்.
டிஜிட்டில், நாடு முழுவதும் 6000+ கேரேஜ்கள் உள்ளன. இதனுடன் நாங்கள் 6 மாத வாரண்டி உடனான பிக்-அப், ரிப்பேர் மற்றும் டிராப் சேவையையும் வழங்குகிறோம்.
கார் இன்சூரனஸ் வாங்குழதற்கான தகுதி என்ன?
செல்லுபடியாகக்கூடிய ஓட்டுநர் உரிமத்துடன் நீங்கள் ஒரு காரை கொண்டிருந்தால், உங்கள் காருக்கான கார் இன்சூரன்ஸ் வாங்க நீங்கள் தகுதி (உண்மையில், இது சட்டரீதியாக கட்டாயமானது) பெறுவீர்கள்.
இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் வாங்குவது கட்டாயமா?
மோட்டார் வாகனச் சட்டம் 1988-யின்படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்டி டேமேஜ்களை கவர் செய்யக்கூடிய ஒரு கார் இன்சூரன்ஸையாவது பெற்றிருக்க வேண்டும்.
எனது காரில் நான் என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்?
எப்போதுமே நீங்கள் உங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை (ஆர்சி) காரினுள் வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் சிறந்த கார் இன்சூரன்ஸை நான் எப்படி தேர்வு செய்வது?
- நீங்கள் முதல் முறையாக ஒரு கார் இன்சூரன்ஸை வாங்குகிறீர்கள் என்றால், கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு எவ்வளவு ஐடிவி வழங்கும், அவர்கள் வழங்கும் ஆட்-ஆன்கள் என்ன, கிளைம் செய்யும்போது அவர்களின் சேவை எப்படி இருக்கும் போன்றவற்றின் அடிப்படையில் நீங்கள் பல்வேறு கார் இன்சூரன்ஸ் பற்றிய ஒரு ஆராய்ச்சியை செய்து பார்க்க வேண்டும்.
- நீங்கள் உங்கள் கார் இன்சூரன்ஸை புதிப்பிப்பதாக இருந்தால், உங்களுக்கான சிறந்த டீல்களை தேர்வு செய்ய பிற நிறுவனங்களின் விலையையும் சரிபார்த்தல் அவசியம்.
- உங்கள் காருக்கு எவ்வளவு ஐடிவி வழங்கப்படும் மற்றும் உங்கள் கவரேஜை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
- சரியான டிடக்டபிளை அமைக்கவும். கம்பல்சரி மற்றும் வாலண்டரி டிடக்டபிள் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். ஒரு வாலண்டரி டிடக்டபிள் பிரீமியத்தை குறைக்கும். ஆனால் ஒரு விபத்து நேரிடும்போது, நீங்கள் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். உங்களிடம் ஒரு சிறந்த டிரைவிங் ரெக்கார்டு மற்றும் உங்களின் தவறால் இதுவரை விபத்தில் சிக்கியதில்லை என்றால், நீங்கள் அதிக பிரீமியத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- நீங்கள் உங்கள் கார் இன்சூரன்ஸை புதிப்பிப்பதாக இருந்தால், உங்களின் என்சிபி-யை கிளைம் செய்ய மறக்காதீர்கள். ஏனெனில், இது குறைவான பிரீமியத்திற்கு வழிவகுக்கும்.
விபத்துகளுக்கு கார் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
- சரியாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிட்ட கிளைம் படிவம்.
- உங்கள் வாகன ஆர்சி-ன் ஒரு நகல்.
- உங்களின் செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸின் ஒரு நகல்.
- உங்கள் பாலிசி ஆவணத்தின் முதல் இரண்டு பக்கங்களின் ஒரு நகல்.
- எஃப்ஐஆர்-ன் ஒரு நகல்
- கேஷ் மற்றும் கேஷ்லெஸ் கேரேஜுக்கான ஒரிஜினல் எஸ்டிமேட், இன்வாய்ஸ், மற்றும் பேமெண்ட் ரசீது.
தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கிளைம்களுக்கு தேவையான ஆவணங்கள்?
- சரியாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிட்ட கிளைம் படிவம்.
- எஃப்ஐஆர்-ன் ஒரு நகல்.
- உங்களின் செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸின் ஒரு நகல்.
- உங்கள் பாலிசி ஆவணத்தின் முதல் இரண்டு பக்கங்களின் ஒரு நகல்.
- உங்கள் வாகன ஆர்சி-ன் ஒரு நகல்.
திருட்டின்போது கார் இன்சூரன்ஸ் கிளைமை தாக்கல் செய்வதற்கான செயல்முறை என்ன?
துரதிஷ்டவசமாக, உங்கள் கார் திருடு போய்விட்டால், ஒரு கிளைம் செய்வதற்கு நீங்கள் பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்:
a) காவல்துறையின் உதவியுடன் ஒரு எஃப்ஐஆர்-ஐ தாக்கல் செய்யவும்.
b) திருடு போய்விட்ட விஷயத்தை உங்களின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்கவும். நீங்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- உங்கள் காரின் பதிவு சான்றிதழுக்கான ஒரு நகல்
- உங்கள் டிரைவிங் லைசன்ஸின் ஒரு நகல்.
- எஃப்ஐஆர்-ன் ஒரு நகல்.
- உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆவணத்தின் முதல் இரண்டு பக்கங்கள்.
- ஆர்டிஓ-விற்கு எழுதப்பட்ட ஒரு கடிதம். இதனை நீங்கள் செய்ததும், காவல்துறை உங்களின் வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். 6 மாதங்களுக்கு பிறகு, வாகனத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறை உங்கள் தொலைந்து போன காரின் ஆர்சி-யை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்த பிறகு, ‘நான்-டிரேசபிள் ரிப்போர்ட்’ ஒன்றை வெளியிடுவார்கள். இதனுடன் சப்ரொகேஷன் கடிதமும் இணைக்கப்படும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்ற பின், இன்சூரர் உங்கள் கிளைம் தொகையை வழங்குவார்.
நான் எனது பழைய இன்சூரன்ஸை புதிய காருக்கு மாற்ற முடியுமா? ஆம் எனில், அதை எப்படி செய்வது?
நீங்கள் ஒரு புதிய காரை வாங்கும்போது, உங்களின் பழைய இன்சூரன்ஸை புதிய காருக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றம் குறித்து உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்களின் என்சிபி-யையும் தக்கவைத்துக்கொள்ளலாம்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு காரினை நீங்க வாங்கினால், பதிவு சான்றிதழை (ஆர்சி) மாற்றுவதே நீங்கள் செய்யும் முதல் படியாக இருக்க வேண்டும். மேலும் அதே சமயத்தில், உங்களின் இன்சூரன்ஸ் பாலிசியையும் மாற்றிக்கொள்ளுங்கள். புதிய ஓனரிடம் காரை ஒப்படைத்த பிறகு, பழைய ஓனரின் இன்சூரன்ஸ் பாலிசி செல்லுபடி ஆகாது.
ஐஆர்டிஏ விழிமுறைகளின்படி, காருக்கான இன்சூரன்ஸ் ஆவணங்கள் மற்றும் ஆர்சி-ல் கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எனவே, அவசரகாலத்தின்போது புதிய கார் ஓனர் எந்த ஒரு சிக்கலும் இன்றி தான் செலவு செய்த பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
கார் இன்சூரன்ஸை மாற்ற பின்வரும் ஆவணங்கள் தேவை:
- பதிவு சான்றிதழின் நகல் (படிவம் 29).
- பழைய இன்சூரன்ஸ் பாலிசிக்கான ஆவணம்.
- முந்தைய கார் ஓனரிடம் பெறப்பட்ட நோ அப்ஜக்ஷன் கிலாஸ் (என்ஓசி).
- சரியாக நிரப்பட்ட புதிய விண்ணப்ப படிவம்
- ஆய்வு அறிக்கை - இது ஒரு வாகன ஆய்வுக்கு பின் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்படும்.