ஊழியர்களுக்கான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ்

26,000+

பெருநிறுவனங்களுக்கு காப்புறுதி அளிக்கப்பட்டுள்ளது

 

45 லட்சம்+

உயிர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது

 

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் நபர்களடங்கிய ஒரு குழுவிற்கு காப்புறுதி வழங்குகின்ற ஒரு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இதன் பிரீமியம் தொகை முதலாளியால் செலுத்தப்படுவதால் இது பொதுவாகவே ஊழியர்களுக்கு ஒரு பயனுள்ள திட்டமாக கருதப்படுகிறது. சில சமயங்களில் இந்த குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் காப்புறுதியானது, ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இந்த இன்சூரன்ஸ் பிளான், கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது ஊழியர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆயினும், இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இதன் விலை மிகக் குறைவாகும். மேலும் முதலாளிகளுக்கு வரி குறைப்பிற்கு உதவுகிறது, எனவே, இது முதலாளி மற்றும் ஊழியர் ஆகிய இருவருக்குமே பயனுள்ளதாக அமைகிறது.

டிஜிட்-இல், உங்கள் ஊழியர்களை எல்லா உடல்நலக் கேடுகள் மற்றும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து காப்புறுதி வழங்குவதற்கு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) ஊழியர் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான், கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து உங்கள் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கோவிட்-19 குரூப் கவர் ஆகிய இரண்டையுமே நாங்கள் வழங்குகிறோம்.

டிஜிட் ஹெல்த் பிளஸ் பாலிசி (திருத்தம்) - GODHLGP21487V032021

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் உதவியோடு உங்கள் ஊழியர்களின் உடல்நலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?

ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது - தங்களுக்கு பாதுகாப்புணர்வை அளிக்கின்ற வேலைகளுக்கே மக்கள் மதிப்பளிக்கிறார்கள். குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது உங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தங்களின் முதலாளி தங்களைப் பற்றி அக்கறைப்படுகிறாரென்னும் ஒரு வகையான திருப்தியுணர்வையும் தருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது பொருளாதார ரீதியாக பாதுகாக்கிறது               -  பெருந்தொற்று காலத்தில், பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணிகளில் சம்பளக் குறைப்பு  ஆகியவற்றின் காரணமாக பொருளாதார ரீதியான பாதுகாப்பு என்பது முக்கியத்துவத்தை பெறுகிறது. உங்கள் ஊழியர்களை இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படும் சிகிச்சை செலவுகளிலிருந்து காப்பதொன்றே, அவர்கள் பொருளாதார ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பாதுகாப்பாக உள்ளதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவும்.

 ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்கு உதவுகிறது-மகிழ்ச்சியான ஊழியர்களே மகிழ்ச்சியான பணியிடங்களை உருவாக்குகிறார்கள், இதன் மூலம் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்குகின்றன. பாதுகாப்புணர்வுடன், திருப்தியான மனநிலையில் இருக்கும் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், தன்முனைப்பாற்றலோடும் இருப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

தீவிரமான நோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது - இந்தியாவில் 61%-க்கும் மேற்பட்ட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செய்யப்படும் சிகிச்சையும், நிகழும் மரணங்களும் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் மூலமாக ஏற்படுவது தான். மற்ற நோய்களுக்கு மத்தியில், இவைகளிலிருந்தும் உங்கள் ஊழியர்களை பாதுகாத்திடுங்கள்; முன்கூட்டியே இந்த பிரச்சினைகளை கண்டறிவதால், முன்னதாகவே சிகிச்சை அளித்து தீர்வு காண முடியும்.

ஊழியர்களின் மனநலத்தை மேம்படுத்தவும்- ஊழியர்கள் பலர் பொதுவாகவே பொருளாதார அழுத்தம் அல்லது பிற சொந்த பிரச்சினைகளின் காரணமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக பணியிலும் குறைந்த உற்பத்தித் திறனையே காண்பிக்கக் கூடும். எங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானானது, அவர்களின் சேமிப்பை பாதுகாப்பது மட்டுமின்றி, அவர்களின் மனநலத்தை காப்பதற்கும் உதவுகிறது.

டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பம்சம் என்ன?

டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது?

எவற்றுக்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை?

பேறு காலத்திற்கு முன் மற்றும் பின் ஆகக் கூடிய செலவுகள்

ஊழியர் அல்லது அவரின் துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது ஆகும் செலவுகள் தவிர்த்து, பேறு காலத்திற்கு முன் மற்றும் பின்னான செலவுகள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பிஇடி (PED) காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்)

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு, காத்திருப்பு காலம் முடியும் வரையில், அந்த நோய் அல்லது உடல்நலக் கேட்டிற்கு கிளைம் செய்ய முடியாது. ஆயினும், நீங்கள் 50 பேர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு காப்புறுதி செய்ய விரும்பினால், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

மருத்துவரின் பரிந்துரையின்றி மருத்துவமனையில் சேர்தல்

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்றி உங்கள் ஊழியர் எந்தவொரு நோய்நிலைமைக்கும் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் பட்சத்தில், அவருக்கு காப்புறுதி வழங்கப்படாது.

சிங்கிள் கவருக்கு மட்டுமே கோவிட் சிகிச்சை

நீங்கள் கோவிட் கவரை மட்டுமே தேர்வு செய்திருந்தால், இன்சூர் செய்யப்பட்ட நபருக்கு கோவிட் தொற்று இருப்பதாக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் இருந்து சான்று காண்பித்தால் மட்டுமே, அதற்கான சிகிச்சை செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

தொடக்க காத்திருப்பு காலத்திற்கு (வெயிட்டிங் பீரியட்) முன்னர் செய்யப்படும் கிளைம்கள்

கோவிட் சம்பந்தப்பட்ட கிளைம்களுக்கு, தொடக்க காத்திருப்பு காலமானது (வெயிட்டிங் பீரியட்) 15 நாட்களாகும். இந்த காலம் முடிவடையும் முன்னர் செய்யப்படும் கிளைம்களுக்கு காப்புறுதி வழங்கப்படாது.

டிஜிட் வழங்கும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கியமான பெனிஃபிட்கள்

பிரீமியம் ஒரு ஊழியருக்கு ரூ.1500-லிருந்து தொடங்குகிறது
கோ-பேமெண்ட் வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் கிடையாது
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் 16400+ கேஷ்லெஸ் மருத்துவமனைகள்
வாங்குவது மற்றும் கிளைம் செய்யும் செயல்முறை ஆவணங்களற்ற செயல்முறை, டிஜிட்டல்மயமானது
பாயிண்ட் ஆஃப் காண்டாக்ட் சிங்கிள் பாயிண்ட் ஆஃப் காண்டாக்ட்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிற்கான சிகிச்சை குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில் காப்புறுதியளிக்கப்படுகிறது மற்றும் தனியான குரூப் கவராகவும் வழங்கப்படுகிறது.

எவ்வாறு கிளைம் செய்வது?

உங்களுக்கு கிளைம் செய்ய வேண்டியிருந்தால், எங்களுக்குத் தெரிவிக்கவும்! எங்களை 1800-258-4242 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது healthclaims@godigit.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தகவல் தெரிவிக்கவும்.

கேஷ்லெஸ் கிளைமிற்கு, உங்கள் ஊழியர் அவர்தம் விருப்பத்திற்கேற்ற ஒரு நெட்வொர்க் மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். அங்கு அவர்தம் இ-ஹெல்த் கார்டினை காண்பித்தால் போதுமானது, மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். தோராயமாக மதிப்பிடப்பட்ட மருத்துவ செலவுகளை வழங்குவதன் மூலம், 50% வரையில் அட்வான்ஸ் கேஷ் பெனிஃபிட்டினை கூட உங்கள் ஊழியர் தேர்ந்தெடுக்கலாம்.

  ஒரு வேளை எங்கள் நெட்வொர்க்கில் இல்லாத ஒரு மருத்துவமனையை ஊழியர் தேர்வு செய்ய விரும்பினால், அவர்கள் ரீஇம்பர்ஸ்மெண்ட்-ஐ (பணத்தை முதலில் செலுத்தி விட்டு பின்னர் பெற்றுக் கொள்ளுதல்) தேர்ந்தெடுக்கலாம். மெடிக்கல் பில்கள், பரிசோதனை அறிக்கைகள், கலந்தறி அறிக்கை போன்ற தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியை பெற முடியும்.

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் எவ்வாறு செயல்படுகிறது?

  • ஒரு நிறுவனமானது பொதுவாகவே அதன் ஊழியர்களுக்கு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் மூலம் காப்புறுதி வழங்குவதற்கு உரிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரையே தேர்வு செய்யும், அதன் பிரீமியம் தொகையை கூட அந்த குறிப்பிட்ட நிறுவனமே செலுத்தி விடும். இது ஊழியர்களுக்கு ஹெல்த்கேர் பெனிஃபிட்டாக வழங்கப்படுகிறது.

  • ஒரு நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் எடுக்கப்படுவதால், அடிப்படையான பிளான் மற்றும் இன்சூர் செய்யப்பட்ட தொகையும் கூட எல்லா ஊழியர்களுக்கும் ஒன்று தான். ஆயினும், ஊழியர்கள் அவர்தம் துணைவர்/துணைவி மற்றும் குழந்தைகள் போன்ற சார்ந்திருப்பவர்களையும் தேர்வு செய்யலாம். சில சமயங்களில், தங்களுடைய மூத்த பெற்றோருக்கு கூடுதலான பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலம் அவர்களையும் இந்த இன்சூரன்ஸ் பிளானில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஊழியர்களுக்கு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதன் நோக்கமென்ன?

தங்களுடைய ஊழியர்களின் உடல்நலம் குறித்து அக்கறை கொள்ளும் முதலாளியாக இருங்கள். இதன் பெயருக்கேற்றவாறு, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது, ஓரிடத்தில் பணிபுரிகின்ற நபர்கள் அடங்கிய குழுவிற்கு எடுக்கப்படுகின்ற ஒரு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியாகும்.

புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பெரிய ஸ்தாபனங்கள் ஆகிய இரண்டுமே தங்கள் ஊழியர்களுக்கு இந்த இன்சூரன்ஸை வாங்குகின்றன, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் அந்நிறுவனத்தின் ஊழியர்களை மட்டுமல்லாது, முதலாளிக்கும் நன்மை பயக்கிறது. ஏனெனில், இன்றைய தேதியில் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பயனுள்ள பெனிஃபிட்களை வழங்குகின்ற ஸ்தாபனங்களையே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள், மற்றும் அது போன்ற நிறுவனங்களிலேயே தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறார்கள்.

யார் குரூப் இன்சூரன்ஸ் பிளானை வாங்க வேண்டும்?

வழக்கமாக, 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை கொண்ட எந்தவொரு ஸ்தாபனமும் தங்களுடைய ஊழியர்களை ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பாதுகாக்க வேண்டும். உங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வேண்டுமா என்பதை நீங்கள் அறிய, உங்களுக்கு புரிவது போல் நாங்கள் விளக்கமாக விவரிக்கிறோம்.

சிறிய நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் நிறுவனங்கள்

நீங்கள் சொந்தமாக அண்மையில் ஒரு தொழில் தொடங்கியிருந்து, அதில் குறைந்தபட்சம் 15 நபர்கள் வரை கொண்ட குழு பணிபுரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் ஊழியர்களை பாதுகாப்பது மட்டுமின்றி, வரி மீதான சேமிப்புகளுக்கும் உங்களுக்கு உதவும். நீங்கள் இதன் விலையை குறித்து கவலை கொண்டிருந்தால், கவலைப்பட வேண்டாம் – நிறுவனத்தின் பொருளாதார பலம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது.

நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் புதிய நிறுவனங்கள்

உங்கள் நிறுவனமானது புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது மற்றும் சிறிது காலமாக செயல்பட்டு வருகிறது என்றாலும் கூட உங்கள் ஊழியர்களை குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் மூலம் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், நன்றிக்கடன் பட்டவர்களாகவும் இருப்பது மட்டுமின்றி, அவர்களை நீண்ட காலத்திற்கு உங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதை தக்க வைத்துக் கொள்வதற்கும் இது உதவுகிறது.

பெரிய ஸ்தாபனங்கள் மற்றும் நிலைபெற்ற நிறுவனங்கள்

பெரிய, நிலைபெற்ற ஒரு ஸ்தாபனமாக இருக்கும் பட்சத்தில் – ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பெனிஃபிட்களை ஊழியர்கள் அவர்தம் ஊதியத்தில் ஒரு பகுதியாக எதிர்பார்க்கிறார்கள். எனவே, உங்கள் நிறுவனத்தில் 1000 நபர்கள் வரையில் அல்லது அதற்கும் குறைவான நபர்கள் இருந்தால், அவர்களுக்கும், அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் முலம் நீங்கள் காப்புறுதி வழங்க வேண்டும். இது அவர்களுக்கு பாதுகாப்புணர்ச்சியை தருவது மட்டுமின்றி, உங்கள் ஸ்தாபனத்தின் மீதான அவர்களின் நல்லெண்ணத்தையும் வளரச் செய்யும்.

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் சாதகங்கள்

குறைந்த விலையில் பிரீமியம்

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது ஒரு குழுவினருக்கு வழங்கப்படுவதால், அதன் பிரீமியம் தொகை மற்ற ஹெல்த் பாலிசிக்களை விடவும் மலிவானதாகும்.

வரிச் சலுகைகள்

இந்திய வருமான வரித்துறையின் வரையரைப் படி, தங்களுடைய ஊழியர்களுக்கு கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் காப்புறுதி வழங்குகின்ற நிறுவனங்களுக்கு சில வரிச் சலுகைகள் அளிக்கப்படும்!

நிறுவனத்தின் மீதான நல்லெண்ணம்

தங்கள் ஊழியர்களுக்கு மதிப்புமிக்க பெனிஃபிட்களை வழங்குகின்ற ஸ்தாபனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அந்த சூழ்நிலையில் பணியிடமும் மிக மகிழ்ச்சியாகவே இருக்கும். இது எந்தவொரு நிறுவனமாயிருப்பினும், பெரியதோ அல்லது சிறியதோ, எதுவாயிருப்பினும், அந்த நிறுவனத்தின் மீதான நல்லெண்ணம் உருவாக வழிவகை செய்கிறது. ஏனெனில், ஒவ்வொருவரும் தங்கள் ஊழியர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் நல்லதொரு ஸ்தாபனத்தையே விரும்புகிறார்கள்.

இந்தியாவில் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது முதலாளிகள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

அர்த்தமுள்ள பெனிஃபிட்கள்

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் முதன்மையான நோக்கமே, ஊழியர்களுக்கான ஹெல்த் கேர் பெனிஃபிட்களை வழங்குவது தான். இத்தகைய பெனிஃபிட்கள் உண்மையாகவே ஊழியர்களுக்கு நன்மை தருபவையாக இருப்பது அவசியமாகும். எனவே, உங்கள் ஊழியர்களுக்கு சிறந்த குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்யும் போது, அந்த பிளானில் அடங்கியுள்ள பெனிஃபிட்களுக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டும். உதாரணத்திற்கு: கோவிட்-19 பெருந்தொற்றினால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை நீங்கள் அறிவீர்களாகையால், உங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸானது அதற்கும் காப்புறுதி வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்

என்ன தான் இருந்தாலும், விலை முக்கியமானது! அதனால் தான் உங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிடுவது முக்கியமாகும், அது மட்டுமின்றி அந்த விலைக்கேற்ற பெனிஃபிட்கள் கிடைக்கின்றனவா இல்லையா என்பதை ஆய்வு செய்வதும் முக்கியம். குறைவான பிரீமியம் தொகையைப் பார்த்து குருட்டாம்போக்கில் முடிவு செய்ய வேண்டாம், பிளானுடன் வருகின்ற பெனிஃபிட்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.

கருத்துப் பரிமாற்ற திறன்

நீங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும் போது, பிளான் பெனிஃபிட்கள் மட்டுமின்றி, உங்கள் இன்சூரர் எந்தளவிற்கு விரைவாக, ஆற்றலுடன் உங்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்பதும் முக்கியம். அவசியப்படும் சமயங்களில், உங்கள் ஊழியர்கள் அவர்தம் இன்சூரரை தொடர்பு கொள்ளும் போது, அதுவொரு நல்லதொரு அனுபவமாக அமைவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதும் முக்கியம். பல நேரங்களில், இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தேர்டு பார்ட்டியினரை இடையீட்டாளராக பயன்படுத்துவார்கள். இந்த சூழ்நிலையில், அந்த குறிப்பிட்ட தேர்டு பார்ட்டி நபர் நம்பகமானவரா என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சர்வீஸ் பெனிஃபிட்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் என்று வரும் போது, சர்வீஸ் முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது. ஹெல்த் கேர் தொடர்பான நடவடிக்கைகளை மிகுந்த அக்கறையுடனும், கவனத்துடனும் மேற்கொள்கின்ற ஒரு இன்சூரரையே நீங்கள் விரும்புவீர்கள். எனவே, எப்போதுமே குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை எடுப்பதற்கு முடிவு செய்யும் முன்னர், வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்களின் சர்வீஸை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்யவும்.

நிலவியல் சார்ந்த காப்புறுதி

விபத்துகளும், உடல்நலக் கேடுகளும் எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம்! ஆகவே, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்யும் போது, அது நாடு முழுவதிலும் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஒரு வேளை அது நாடு முழுவதும் செயல்படுகிறது என்றால், நாடு முழுவதும் எவ்வளவு நெட்வொர்க் மருத்துவமனைகள் உள்ளன போன்ற விபரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊழியர்களுக்கான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் பெனிஃபிட்கள்

டீஃபால்ட் ஹெல்த்கேர் பெனிஃபிட்

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வருடாந்திர பெனிஃபிட்களின் ஒரு பகுதியாகவே குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்குகின்றன; அதாவது நீங்கள் அதனை தேர்வு செய்தாலும் அல்லது தேர்வு செய்யவில்லையென்றாலும் கூட, உங்கள் நிறுவனத்தில் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் இருந்தால் – நீங்கள் பிரீமியம் தொகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமலேயே, உங்களுக்கு அதன் கீழ் காப்புறுதி வழங்கப்படும்.

முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை

பொதுவாகவே, நீங்கள் இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குவதற்கு முன் உங்கள் இன்சூரர் மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. எனினும், குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானிற்கு, இவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் பாலிசி செல்லுபடி ஆவதற்கு நீங்கள் எந்த மருத்துவ பரிசோதனைகளும் எடுக்கத் தேவையில்லை. 

பிரீமியம் கிடையாது

மேலே குறிப்பிட்டபடி, பெரும்பாலான முதலாளிகள் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை நிறுவனம் வழங்குகின்ற உங்களுடைய வருடாந்திர பெனிஃபிட்களிலேயே சேர்த்து விடுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், இதற்கான பிரீமியம் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை, மாறாக உங்கள் நிறுவனம் அதனை செலுத்தும். எனினும், இது ஒரு முதலாளிக்கும் மற்றவருக்கும் மாறுபடக் கூடும். ஆனாலும், உங்கள் முதலாளி இதற்கான கட்டணத்தை உங்களை செலுத்த கேட்டுக் கொண்டாலும் அல்லது இல்லையென்றாலும் கூட, அதன் பிரீமியம் தொகையானது இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவாகும்.

எளிதான கிளைம் செயல்முறை

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை உங்கள் முதலாளியே தேர்வு செய்திருப்பதால், தேர்டு-பார்ட்டி நிர்வாகி அல்லது இன்சூரருடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பு எல்லாம் அவரையே சார்ந்தது. எனவே, நீங்கள் இன்சூரரை தொடர்பு கொள்வதற்கான அவசியமிருப்பதில்லை, உங்கள் கிளைம் செயல்முறையும் பொதுவாக எளிதாக அமைந்து விடுகிறது.

இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸை விடவும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் எப்படி வேறுபடுகிறது?

இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ்

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ்
இங்கு தனிப்பட்ட நபர் தான் அவர்தம் இன்சூரரை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு கடமைப்பட்டவர். இங்கு நிறுவனம் தான் தன்னுடைய குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு கடமைப்பட்டது.
ஒவ்வொரு தனிநபரும் தங்களுடைய பாலிசியை எந்த நேரத்திலும் இரத்து செய்வதற்கு உரிமையிருக்கிறது. குரூப் ஹெல்ட் இன்சூரன்ஸில், முதலாளிக்கு மட்டுமே பாலிசியை இரத்து செய்வதற்கு உரிமையிருக்கிறது.
இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) பாலிசி என்பது ஒரு தனிநபர் வருடா வருடம் உரிய பிரீமியம் தொகையை செலுத்தும் பட்சத்தில் செல்லத்தக்கதாக இருக்கிறது. குரூப் ஹெல்த் பாலிசி என்பது, அந்த குறிப்பிட்ட ஸ்தாபனத்தில் ஊழியர் பணிபுரியும் வரையில் மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கும்.
இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் பாலிசி என்பது ஒரு தனிநபரின் வயது, மெடிக்கல் ஹிஸ்டரி, நோய்நிலைமைகள் போன்றவற்றையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. குரூப் ஹெல்த் பாலிசி என்பது ஒரு ஸ்தாபனத்தின் பலம், அதாவது பொருளாதார பலம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டையுமே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது.
வழக்கமாக, எந்தவொரு இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போதும் இன்சூரரால் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னரே பாலிசிக்கள் வழங்கப்படும். குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில், முன்கூட்டியே செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் இன்சூரரால் செய்யப்படாது. இதனால் பாலிசிக்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் குறைகின்றன.

டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் குரூப் கொரோனா வைரஸ் கவர் ஆகிய இரண்டிற்குமான வேறுபாடு

டிஜிட் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் டிஜிட் இல்னஸ் குரூப் இன்சூரன்ஸ் (கோவிட்-19)
டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு ஸ்தாபனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் உடல்நலக் கேடுகள், நோய்கள் மற்றும் விபத்துகளினால் நேரும் மருத்துவ செலவுகளுக்கு காப்புறுதி அளிக்கும் ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். கூடுதலாக, டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பெருந்தொற்று நோயான கோவிட்-19-க்கும் காப்புறுதி வழங்கி பாதுகாப்பளிக்கிறது. தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, பல நிறுவனங்கள் முழுமையான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரை தேர்வு செய்வதற்கு முன்வராது. பிரீமியம் விலை மற்றும் தற்போதிருக்கும் பொருளாதார பாதுகாப்பின்மையே இதற்கான காரணங்களாகும். எனினும், முதலாளிகள் குறைந்தபட்சம் கோவிட்-19 பெருந்தொற்றிற்காவது தங்கள் ஊழியர்களுக்கு காப்புறுதி எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது. அதனால் தான், நாங்கள் கோவிட்-19-க்கான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை கட்டுப்படியாகும் விலையில் அனைத்து ஊழியர்களுக்கும் காப்புறுதி அளிக்கின்ற வகையிலே தனிப்பயனாக்கப்பட்ட கவரை உருவாக்கியுள்ளோம்.

இந்திய ஊழியர்களுக்கான கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டிஜிட் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில் கொரோனா வைரஸுக்கு காப்புறுதி வழங்கப்படுகிறதா?

ஆம், டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில் கொரோனா வைரஸுக்கு காப்புறுதி வழங்கப்பட்டிருக்கிறது, தனிப்பட்ட கவராகவும் கூட வழங்கப்படுகிறது.

 

டிஜிட்-இன் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸில் தொடக்க காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) என்ன?

எங்கள் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸில் தொடக்க காத்திருப்பு காலமானது 15 நாட்கள் மட்டுமே. எனினும், 50-க்கு மேற்பட்ட நபர்களுக்கு காப்புறுதி அளிக்கின்ற ஸ்தாபனங்களுக்கு அதிலும் விலக்கு அளிக்கப்படும்.

 

காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) என்றால் என்ன?

காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) என்பது, குறிப்பிட்ட பெனிஃபிட்களுக்கு கிளைம்களை செய்ய தொடங்கும் முன்னர் ஒருவர் காத்திருக்க வேண்டிய கால அவகாசத்தை குறிக்கிறது.

 

என்னுடைய ஊழியர்களுக்கு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நான் எப்போது வாங்க வேண்டும்?

ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு அடிப்படையான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸாவது வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் ஸ்தாபனமானது குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்டிருக்குமாயின், அவர்களை பாதுகாப்பதற்கு ஒரு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை எடுப்பது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். 

எனினும், தற்போதைய சூழ்நிலையின் காரணமாக உங்களால் அது முடியவில்லையென்றால், உங்கள் ஊழியர்களை கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்து காப்புறுதி வழங்குவதற்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கிற கொரோனா வைரஸ் குரூப் கவரை மட்டும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

 

எங்கள் பணியிடத்தில் 10-லிருந்து 15 நபர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு நான் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கலாமா?

ஆம், நீங்கள் வாங்கலாம். மற்ற குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களை போலல்லாமல், எங்களுடைய குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட நிறுவனங்களுக்கும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

 

அட்வான்ஸ் கேஷ் பெனிஃபிட் என்றால் என்ன?

அட்வான்ஸ் கேஷ் பெனிஃபிட் என்பது, இன்சூர் செய்யப்பட்ட நபரின் சிகிச்சை செலவுகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில், உங்கள் இன்சூரர் (அதாவது நாங்கள்!) மதிப்படப்பட்ட தொகையில் 50%-ஐ கேஷாக வழங்குவார். இதன் மூலம் அவர்கள் சிகிச்சை முடியும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை, மேலும் அவர்கள் எப்போதுமே காப்புறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். சிகிச்சை முடிந்த பிறகு மீதமுள்ள 50% மதிப்பிடப்பட்ட தொகையை நீங்கள் முதலில் கட்டி விட்டு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

 

குரூப் ஹெல்த் பாலிசியில் யாருக்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படும்?

18 வயதிற்கு மேற்பட்ட, 70 வயதிற்கு கீழேயுள்ள, ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஸ்தாபன குரூப் ஹெல்த் பாலிசியின்படி காப்புறுதி வழங்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள். கூடுதலாக, அவர்கள் தங்களின் துணைவர்/துணைவி மற்றும் 3 மாதங்களிலிருந்து 25 வயது வரையிலான, 3-குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

 

இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை விடவும் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மலிவானதா?

ஆம், பொதுவாகவே இதன் விலை பல நபர்களுக்கிடையே, அதாவது ஊழியர்களுக்கிடையே பரவியுள்ளதால், கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மலிவானதாகும்.

 

என்னுடைய சிறிய தொழிலுக்கு ஊழியர் மெடிக்கல் இன்சூரன்ஸை எப்படி பெறுவது?

டிஜிட்-இல், நாங்கள் பெரியதும், சிறியதுமான தொழில் நிறுவனங்களுக்கேற்றவாறு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை தனிப்பயனாக்கி வழங்குகிறோம். உங்கள் பிளானை பற்றி தெரிந்து கொள்வதற்கு, உங்கள் விவரங்களை மேலே உள்ளிடவும். தனிப்பயனாக்கப்பட்ட குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டுடன்(quote) நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.

 

என்னிடம் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் இருக்கிறது. நான் இதனை டிஜிட்-இன் இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸாக மாற்றிக் கொள்ள முடியுமா?

இது உங்களிடம் உள்ள கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வகையை சார்ந்திருக்கிறது. பொதுவாக, கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் என்பது உங்களுடைய முதலாளியால் பணம் செலுத்தப்பட்டு வாங்கப்படுகின்றன, மேலும் நீங்கள் அந்த நிறுவனத்தை விட்டுச் செல்லும் போது அது இரத்து செய்யப்படும்.

எனினும், நீங்கள் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்யலாம், தனிப்பட்ட வரிச் சேமிப்பிற்கும் கூட இது உங்களுக்கு உதவுகிறது, மேலும் உங்களுக்கு கூடுதல் ஹெல்த்கேர் பெனிஃபிட்களையும் அளிக்கிறது.

 

நான் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆகிய இரண்டையுமே ஒரே நேரத்தில் வைத்திருக்கலாமா?

ஆம், மேலே குறிப்பட்டபடி நீங்கள் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆகிய இரண்டையும் நிச்சயமாக ஒரே நேரத்தில் வைத்திருக்கலாம்.

 

முதலாளியின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

முதலாளியின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் விலையானது ஒரு நிறுவனத்திற்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் வேறுபடுகின்றது, ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்களின் எண்ணிக்கை வேறுபடும். ஒரு முதலாளியின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்.

 

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, இருப்பிடம் மற்றும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் நீங்கள் காப்புறுதி அளிக்க விரும்பும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.

 

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் முதலாளிக்கும், ஊழியருக்கும் பயனுள்ளதாக இருப்பினும், அதன் மிகப் பெரிய கட்டுப்பாடுகளுள் ஒன்று என்னவென்றால், ஒரு ஊழியரின் அனைத்து விதமான உடல்நலத் தேவைகளுக்கும் அது காப்புறுதி வழங்காது. பெரும்பாலான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் பொதுவானதும், வரம்புக்குட்பட்டதுமாகும். ஆனால், இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை தனிப்பட்ட உடல்நலத் தேவைகளுக்கேற்றவாறு தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

இதனை சமாளிப்பதற்கான சரியான வழி என்னவென்றால், குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் மற்றும் இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகிய இரண்டையுமே எடுத்துக் கொள்வது தான். இதன் மூலம் உடல்நலத் தேவைகளையும் பார்த்துக் கொள்ளலாம், வரிச் சேமிப்பிற்கும் உதவும்.

 

பொறுப்புத்துறப்பு: 13 செப்டம்பர் 2021 வரை, டிஜிட் ஹெல்த் பிளஸ் பாலிசி (திருத்தம்) மற்றும் டிஜிட் இல்னஸ் குரூப் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் காப்புறுதியளிக்கப்பட்ட நபர்களை இந்த தரவு உள்ளடக்கியுள்ளது.