26,000+
பெருநிறுவனங்களுக்கு காப்புறுதி அளிக்கப்பட்டுள்ளது
45 லட்சம்+
உயிர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது
Please enter your name
Please enter your Company Name
Please enter your designation
Please enter no. of employees
Please enter valid email address
Please enter your company email address
Please enter valid mobile number
Didn't receive SMS? Resend OTP
Please wait a moment....
We've just sent you an
OTP on this number.
+91 {{grphealthCtrl.userDetails.mobile}}
Resend code in
Resend OTP
By submitting your contact number and email ID, you authorize Go Digit General Insurance (Digit Insurance) to call, send SMS, messages over internet-based messaging application like WhatsApp and email and offer you information and services for the product(s) you have opted for as well as other products/services offered by Digit Insurance. Please note that such authorization will be over and above any registration of the contact number on TRAI’s NDNC registry.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் நபர்களடங்கிய ஒரு குழுவிற்கு காப்புறுதி வழங்குகின்ற ஒரு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இதன் பிரீமியம் தொகை முதலாளியால் செலுத்தப்படுவதால் இது பொதுவாகவே ஊழியர்களுக்கு ஒரு பயனுள்ள திட்டமாக கருதப்படுகிறது. சில சமயங்களில் இந்த குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் காப்புறுதியானது, ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இந்த இன்சூரன்ஸ் பிளான், கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது ஊழியர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆயினும், இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இதன் விலை மிகக் குறைவாகும். மேலும் முதலாளிகளுக்கு வரி குறைப்பிற்கு உதவுகிறது, எனவே, இது முதலாளி மற்றும் ஊழியர் ஆகிய இருவருக்குமே பயனுள்ளதாக அமைகிறது.
டிஜிட்-இல், உங்கள் ஊழியர்களை எல்லா உடல்நலக் கேடுகள் மற்றும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து காப்புறுதி வழங்குவதற்கு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) ஊழியர் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான், கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து உங்கள் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கோவிட்-19 குரூப் கவர் ஆகிய இரண்டையுமே நாங்கள் வழங்குகிறோம்.
டிஜிட் ஹெல்த் பிளஸ் பாலிசி (திருத்தம்) - GODHLGP21487V032021
ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது - தங்களுக்கு பாதுகாப்புணர்வை அளிக்கின்ற வேலைகளுக்கே மக்கள் மதிப்பளிக்கிறார்கள். குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது உங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தங்களின் முதலாளி தங்களைப் பற்றி அக்கறைப்படுகிறாரென்னும் ஒரு வகையான திருப்தியுணர்வையும் தருகிறது.
ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்கு உதவுகிறது-மகிழ்ச்சியான ஊழியர்களே மகிழ்ச்சியான பணியிடங்களை உருவாக்குகிறார்கள், இதன் மூலம் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்குகின்றன. பாதுகாப்புணர்வுடன், திருப்தியான மனநிலையில் இருக்கும் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், தன்முனைப்பாற்றலோடும் இருப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
தீவிரமான நோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது - இந்தியாவில் 61%-க்கும் மேற்பட்ட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செய்யப்படும் சிகிச்சையும், நிகழும் மரணங்களும் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் மூலமாக ஏற்படுவது தான். மற்ற நோய்களுக்கு மத்தியில், இவைகளிலிருந்தும் உங்கள் ஊழியர்களை பாதுகாத்திடுங்கள்; முன்கூட்டியே இந்த பிரச்சினைகளை கண்டறிவதால், முன்னதாகவே சிகிச்சை அளித்து தீர்வு காண முடியும்.
ஊழியர்களின் மனநலத்தை மேம்படுத்தவும்- ஊழியர்கள் பலர் பொதுவாகவே பொருளாதார அழுத்தம் அல்லது பிற சொந்த பிரச்சினைகளின் காரணமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக பணியிலும் குறைந்த உற்பத்தித் திறனையே காண்பிக்கக் கூடும். எங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானானது, அவர்களின் சேமிப்பை பாதுகாப்பது மட்டுமின்றி, அவர்களின் மனநலத்தை காப்பதற்கும் உதவுகிறது.
அதிகப்படியான ஆவணங்களுடன் கூடிய செயல்முறையை யாரும் விரும்புவதில்லை, அதனை நாங்களும் புரிந்து கொண்டுள்ளோம். குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வாங்கும் செயல்முறை தொடங்கி கிளைம் செய்வது வரையில் அனைத்துமே ஆவணங்களற்ற, எளிமையான, விரைவான, இடைஞ்சலற்ற செயல்முறை தான்! ஏனென்றால், டிஜிட்டல் புரட்சியின் அங்கத்தினர் நாம்.
ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே அதிக பாதிப்படைந்தோர் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதால், கோவிட்-19 பெருந்தொற்றிற்கு காப்புறுதி வழங்குவதே உங்கள் ஊழியர்களுக்கு, அவர்களின் பொருளாதார நலத்தையும், உடல்நலத்தையும் பாதுகாப்பதற்கு நீங்கள் செய்யக் கூடிய குறைந்தபட்ச நன்மையாகும். நீங்கள் கோவிட்-19 பெருந்தொற்றிற்கு மட்டும் காப்புறுதி வழங்கும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்யலாம் அல்லது எல்லா நோய்களுக்கும், உடல்நலக் குறைப்பாடுகளுக்கும் காப்புறுதி வழங்குகின்ற முழுமையான கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கலாம்.
இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருக்கும் எங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளின் மூலமாக கேஷ்லெஸ் கிளைம்களை தேர்வு செய்யும் வாய்ப்பினை உங்கள் ஊழியர்களுக்கு வழங்குகிறது. எனவே, அவர்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு எளிதில் காப்புறுதி கிடைக்கிறது!
டிஜிட்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனராக இருப்பதால், எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்கள் குறைந்த-விலை பிரீமியம்களுடன் வருகின்றன, எனவே நீங்கள் உங்களுடைய எல்லா ஊழியர்களுக்கும் காப்புறுதி வழங்கலாம்.
எளிமையான, விரைவான கிளைம் செயல்முறைகளையே நாங்கள் அங்கீகரிக்கிறோம். மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றதற்கு பின்னர் கிடைக்கும் ஒட்டுமொத்த தொகை என்பது, பில்கள், இரசீதுகள் போன்றவையின் அவசியமின்றி மருத்துவமனை சிகிச்சைக்கான செலவுகளை பார்த்துக் கொள்வதற்கு வழங்கப்படுகின்ற தொகையாகும்.
பல நபர்களிடமும், தேர்டு பார்ட்டியினரிடமும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை. டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில், நீங்கள் எங்களுடன் மட்டுமே தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும், வேறு யாரிடமும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை.
அனைவருமே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தான். நீங்கள் 10-நபர் கொண்ட குழுவாக இருப்பினும் சரி அல்லது 25+ நபர் கொண்ட ஒரு புதிய நிறுவனமாக இருப்பினும் சரி, எங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸானது, அனைத்து வடிவங்கள் மற்றும் அளவினதுமான நிறுவனங்களுக்கு காப்புறுதி வழங்குகின்றது.
இந்தியா முழுவதும் 16400+ கேஷ்லெஸ் மருத்துவமனைகள் இருப்பதால், உங்கள் ஊழியர்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும் எளிதாக காப்புறுதி பெற முடியும்!
ஒரு வேளை உங்கள் ஊழியர் அல்லது அவரை சார்ந்திருப்பவர் விபத்திற்குள்ளானால், இது ரோடு ஆம்புலன்ஸ் கட்டணங்கள், அறை வாடகை, நோய் கண்டறிதல், டே கேர் செயல்முறைகள் போன்ற மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னர் மற்றும் பின்னர் ஆகும் செலவுகளுக்கு காப்புறுதி வழங்குகிறது.
ஒரு வேளை உங்கள் ஊழியர் அல்லது அவரின் குடும்ப நபர்களுக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டால், இந்த கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸானது அதற்கான மருத்துவ சிகிச்சைக்காகும் செலவுகளை ஏற்றுக் கொள்ளும்.
சில சமயங்களில், சில உடல்நலக் கேடுகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இந்த பெனிஃபிட்டானது உங்கள் ஊழியர்களுக்கும் , அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் அனைத்து வகையான சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும்.
ஒரு வேளை உங்கள் ஊழியர் அல்லது அவரை சார்ந்திருப்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஹாஸ்ப்பிட்டல் பில் எக்கச்சக்கமாக இருக்கும், இந்த பெனிஃபிட்டானது, இந்த செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி, இந்திய ஜனத்தொகையில் குறைந்தபட்சம் 6.5% பேர் தீவிர மனநோயால் துன்புறுகின்றனர். நல்வாய்ப்பாக, எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸானது, உங்களுடைய ஊழியரின் மனநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் காப்புறுதி வழங்குகின்றது; ஏனெனில் உடல்நலத்தை போலவே மனநலமும் முக்கியமானதாகும்.
தீவிர உடல்நலக் கேடுகள் இன்று அதிகரித்து வருகிறது. எங்கள் பிளான் கிரிட்டிக்கல் இல்னஸ் பெனிஃபிட்டையும் உள்ளடக்கியிருக்கிறது. ஒரு வேளை உங்கள் ஊழியருக்கும் அவரை சார்ந்திருப்பவர்களுக்கும் ஏதேனும் தீவிர உடல்நலக் கேடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த கவர் அதற்கான மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்ளும்.
இள வயது ஊழியர்கள் இந்த விஷயம் குறித்து கவலைப்படுவார்கள்! உங்கள் ஊழியர் அல்லது அவரின் துணையின் டெலிவரி செலவுகளுக்கு காப்புறுதி பெறுவதற்கு இந்த பெனிஃபிட்டினை தேர்வு செய்து கொள்ளலாம். குழந்தையின்மை சிகிச்சை அல்லது மருத்துவ ரீதியாக அவசியமேற்படும் பட்சத்தில் செய்யப்படும் கருக்கலைப்பிற்கும் கூட இந்த கவர் செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.
எங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானானது, மாற்றுச் சிகிச்சை (ஆயுஷ்), உறுப்பு தான செலவுகள், குழந்தையின்மை சிகிச்சை மற்றும் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் போன்றவைக்கு காப்புறுதி வழங்குவதற்கும் கூட பெனிஃபிட்களை கொண்டுள்ளது.
ஊழியர் அல்லது அவரின் துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது ஆகும் செலவுகள் தவிர்த்து, பேறு காலத்திற்கு முன் மற்றும் பின்னான செலவுகள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு, காத்திருப்பு காலம் முடியும் வரையில், அந்த நோய் அல்லது உடல்நலக் கேட்டிற்கு கிளைம் செய்ய முடியாது. ஆயினும், நீங்கள் 50 பேர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு காப்புறுதி செய்ய விரும்பினால், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்றி உங்கள் ஊழியர் எந்தவொரு நோய்நிலைமைக்கும் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் பட்சத்தில், அவருக்கு காப்புறுதி வழங்கப்படாது.
நீங்கள் கோவிட் கவரை மட்டுமே தேர்வு செய்திருந்தால், இன்சூர் செய்யப்பட்ட நபருக்கு கோவிட் தொற்று இருப்பதாக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் இருந்து சான்று காண்பித்தால் மட்டுமே, அதற்கான சிகிச்சை செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
கோவிட் சம்பந்தப்பட்ட கிளைம்களுக்கு, தொடக்க காத்திருப்பு காலமானது (வெயிட்டிங் பீரியட்) 15 நாட்களாகும். இந்த காலம் முடிவடையும் முன்னர் செய்யப்படும் கிளைம்களுக்கு காப்புறுதி வழங்கப்படாது.
பிரீமியம் |
ஒரு ஊழியருக்கு ரூ.1500-லிருந்து தொடங்குகிறது |
கோ-பேமெண்ட் |
வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் கிடையாது |
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் |
இந்தியா முழுவதும் 16400+ கேஷ்லெஸ் மருத்துவமனைகள் |
வாங்குவது மற்றும் கிளைம் செய்யும் செயல்முறை |
ஆவணங்களற்ற செயல்முறை, டிஜிட்டல்மயமானது |
பாயிண்ட் ஆஃப் காண்டாக்ட் |
சிங்கிள் பாயிண்ட் ஆஃப் காண்டாக்ட் |
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிற்கான சிகிச்சை |
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில் காப்புறுதியளிக்கப்படுகிறது மற்றும் தனியான குரூப் கவராகவும் வழங்கப்படுகிறது. |
ஒரு நிறுவனமானது பொதுவாகவே அதன் ஊழியர்களுக்கு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் மூலம் காப்புறுதி வழங்குவதற்கு உரிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரையே தேர்வு செய்யும், அதன் பிரீமியம் தொகையை கூட அந்த குறிப்பிட்ட நிறுவனமே செலுத்தி விடும். இது ஊழியர்களுக்கு ஹெல்த்கேர் பெனிஃபிட்டாக வழங்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் எடுக்கப்படுவதால், அடிப்படையான பிளான் மற்றும் இன்சூர் செய்யப்பட்ட தொகையும் கூட எல்லா ஊழியர்களுக்கும் ஒன்று தான். ஆயினும், ஊழியர்கள் அவர்தம் துணைவர்/துணைவி மற்றும் குழந்தைகள் போன்ற சார்ந்திருப்பவர்களையும் தேர்வு செய்யலாம். சில சமயங்களில், தங்களுடைய மூத்த பெற்றோருக்கு கூடுதலான பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலம் அவர்களையும் இந்த இன்சூரன்ஸ் பிளானில் சேர்த்துக் கொள்ளலாம்.
தங்களுடைய ஊழியர்களின் உடல்நலம் குறித்து அக்கறை கொள்ளும் முதலாளியாக இருங்கள். இதன் பெயருக்கேற்றவாறு, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது, ஓரிடத்தில் பணிபுரிகின்ற நபர்கள் அடங்கிய குழுவிற்கு எடுக்கப்படுகின்ற ஒரு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியாகும்.
புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பெரிய ஸ்தாபனங்கள் ஆகிய இரண்டுமே தங்கள் ஊழியர்களுக்கு இந்த இன்சூரன்ஸை வாங்குகின்றன, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் அந்நிறுவனத்தின் ஊழியர்களை மட்டுமல்லாது, முதலாளிக்கும் நன்மை பயக்கிறது. ஏனெனில், இன்றைய தேதியில் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பயனுள்ள பெனிஃபிட்களை வழங்குகின்ற ஸ்தாபனங்களையே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள், மற்றும் அது போன்ற நிறுவனங்களிலேயே தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறார்கள்.
வழக்கமாக, 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை கொண்ட எந்தவொரு ஸ்தாபனமும் தங்களுடைய ஊழியர்களை ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பாதுகாக்க வேண்டும். உங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வேண்டுமா என்பதை நீங்கள் அறிய, உங்களுக்கு புரிவது போல் நாங்கள் விளக்கமாக விவரிக்கிறோம்.
நீங்கள் சொந்தமாக அண்மையில் ஒரு தொழில் தொடங்கியிருந்து, அதில் குறைந்தபட்சம் 15 நபர்கள் வரை கொண்ட குழு பணிபுரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் ஊழியர்களை பாதுகாப்பது மட்டுமின்றி, வரி மீதான சேமிப்புகளுக்கும் உங்களுக்கு உதவும். நீங்கள் இதன் விலையை குறித்து கவலை கொண்டிருந்தால், கவலைப்பட வேண்டாம் – நிறுவனத்தின் பொருளாதார பலம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது.
உங்கள் நிறுவனமானது புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது மற்றும் சிறிது காலமாக செயல்பட்டு வருகிறது என்றாலும் கூட உங்கள் ஊழியர்களை குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் மூலம் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், நன்றிக்கடன் பட்டவர்களாகவும் இருப்பது மட்டுமின்றி, அவர்களை நீண்ட காலத்திற்கு உங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதை தக்க வைத்துக் கொள்வதற்கும் இது உதவுகிறது.
பெரிய, நிலைபெற்ற ஒரு ஸ்தாபனமாக இருக்கும் பட்சத்தில் – ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பெனிஃபிட்களை ஊழியர்கள் அவர்தம் ஊதியத்தில் ஒரு பகுதியாக எதிர்பார்க்கிறார்கள். எனவே, உங்கள் நிறுவனத்தில் 1000 நபர்கள் வரையில் அல்லது அதற்கும் குறைவான நபர்கள் இருந்தால், அவர்களுக்கும், அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் முலம் நீங்கள் காப்புறுதி வழங்க வேண்டும். இது அவர்களுக்கு பாதுகாப்புணர்ச்சியை தருவது மட்டுமின்றி, உங்கள் ஸ்தாபனத்தின் மீதான அவர்களின் நல்லெண்ணத்தையும் வளரச் செய்யும்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது ஒரு குழுவினருக்கு வழங்கப்படுவதால், அதன் பிரீமியம் தொகை மற்ற ஹெல்த் பாலிசிக்களை விடவும் மலிவானதாகும்.
இந்திய வருமான வரித்துறையின் வரையரைப் படி, தங்களுடைய ஊழியர்களுக்கு கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் காப்புறுதி வழங்குகின்ற நிறுவனங்களுக்கு சில வரிச் சலுகைகள் அளிக்கப்படும்!
தங்கள் ஊழியர்களுக்கு மதிப்புமிக்க பெனிஃபிட்களை வழங்குகின்ற ஸ்தாபனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அந்த சூழ்நிலையில் பணியிடமும் மிக மகிழ்ச்சியாகவே இருக்கும். இது எந்தவொரு நிறுவனமாயிருப்பினும், பெரியதோ அல்லது சிறியதோ, எதுவாயிருப்பினும், அந்த நிறுவனத்தின் மீதான நல்லெண்ணம் உருவாக வழிவகை செய்கிறது. ஏனெனில், ஒவ்வொருவரும் தங்கள் ஊழியர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் நல்லதொரு ஸ்தாபனத்தையே விரும்புகிறார்கள்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் முதன்மையான நோக்கமே, ஊழியர்களுக்கான ஹெல்த் கேர் பெனிஃபிட்களை வழங்குவது தான். இத்தகைய பெனிஃபிட்கள் உண்மையாகவே ஊழியர்களுக்கு நன்மை தருபவையாக இருப்பது அவசியமாகும். எனவே, உங்கள் ஊழியர்களுக்கு சிறந்த குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்யும் போது, அந்த பிளானில் அடங்கியுள்ள பெனிஃபிட்களுக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டும். உதாரணத்திற்கு: கோவிட்-19 பெருந்தொற்றினால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை நீங்கள் அறிவீர்களாகையால், உங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸானது அதற்கும் காப்புறுதி வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
என்ன தான் இருந்தாலும், விலை முக்கியமானது! அதனால் தான் உங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிடுவது முக்கியமாகும், அது மட்டுமின்றி அந்த விலைக்கேற்ற பெனிஃபிட்கள் கிடைக்கின்றனவா இல்லையா என்பதை ஆய்வு செய்வதும் முக்கியம். குறைவான பிரீமியம் தொகையைப் பார்த்து குருட்டாம்போக்கில் முடிவு செய்ய வேண்டாம், பிளானுடன் வருகின்ற பெனிஃபிட்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும் போது, பிளான் பெனிஃபிட்கள் மட்டுமின்றி, உங்கள் இன்சூரர் எந்தளவிற்கு விரைவாக, ஆற்றலுடன் உங்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்பதும் முக்கியம். அவசியப்படும் சமயங்களில், உங்கள் ஊழியர்கள் அவர்தம் இன்சூரரை தொடர்பு கொள்ளும் போது, அதுவொரு நல்லதொரு அனுபவமாக அமைவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதும் முக்கியம். பல நேரங்களில், இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தேர்டு பார்ட்டியினரை இடையீட்டாளராக பயன்படுத்துவார்கள். இந்த சூழ்நிலையில், அந்த குறிப்பிட்ட தேர்டு பார்ட்டி நபர் நம்பகமானவரா என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் என்று வரும் போது, சர்வீஸ் முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது. ஹெல்த் கேர் தொடர்பான நடவடிக்கைகளை மிகுந்த அக்கறையுடனும், கவனத்துடனும் மேற்கொள்கின்ற ஒரு இன்சூரரையே நீங்கள் விரும்புவீர்கள். எனவே, எப்போதுமே குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை எடுப்பதற்கு முடிவு செய்யும் முன்னர், வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்களின் சர்வீஸை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்யவும்.
விபத்துகளும், உடல்நலக் கேடுகளும் எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம்! ஆகவே, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்யும் போது, அது நாடு முழுவதிலும் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஒரு வேளை அது நாடு முழுவதும் செயல்படுகிறது என்றால், நாடு முழுவதும் எவ்வளவு நெட்வொர்க் மருத்துவமனைகள் உள்ளன போன்ற விபரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வருடாந்திர பெனிஃபிட்களின் ஒரு பகுதியாகவே குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்குகின்றன; அதாவது நீங்கள் அதனை தேர்வு செய்தாலும் அல்லது தேர்வு செய்யவில்லையென்றாலும் கூட, உங்கள் நிறுவனத்தில் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் இருந்தால் – நீங்கள் பிரீமியம் தொகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமலேயே, உங்களுக்கு அதன் கீழ் காப்புறுதி வழங்கப்படும்.
பொதுவாகவே, நீங்கள் இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குவதற்கு முன் உங்கள் இன்சூரர் மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. எனினும், குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானிற்கு, இவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் பாலிசி செல்லுபடி ஆவதற்கு நீங்கள் எந்த மருத்துவ பரிசோதனைகளும் எடுக்கத் தேவையில்லை.
மேலே குறிப்பிட்டபடி, பெரும்பாலான முதலாளிகள் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை நிறுவனம் வழங்குகின்ற உங்களுடைய வருடாந்திர பெனிஃபிட்களிலேயே சேர்த்து விடுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், இதற்கான பிரீமியம் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை, மாறாக உங்கள் நிறுவனம் அதனை செலுத்தும். எனினும், இது ஒரு முதலாளிக்கும் மற்றவருக்கும் மாறுபடக் கூடும். ஆனாலும், உங்கள் முதலாளி இதற்கான கட்டணத்தை உங்களை செலுத்த கேட்டுக் கொண்டாலும் அல்லது இல்லையென்றாலும் கூட, அதன் பிரீமியம் தொகையானது இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவாகும்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை உங்கள் முதலாளியே தேர்வு செய்திருப்பதால், தேர்டு-பார்ட்டி நிர்வாகி அல்லது இன்சூரருடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பு எல்லாம் அவரையே சார்ந்தது. எனவே, நீங்கள் இன்சூரரை தொடர்பு கொள்வதற்கான அவசியமிருப்பதில்லை, உங்கள் கிளைம் செயல்முறையும் பொதுவாக எளிதாக அமைந்து விடுகிறது.
இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் |
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் |
இங்கு தனிப்பட்ட நபர் தான் அவர்தம் இன்சூரரை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு கடமைப்பட்டவர். | இங்கு நிறுவனம் தான் தன்னுடைய குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு கடமைப்பட்டது. |
ஒவ்வொரு தனிநபரும் தங்களுடைய பாலிசியை எந்த நேரத்திலும் இரத்து செய்வதற்கு உரிமையிருக்கிறது. | குரூப் ஹெல்ட் இன்சூரன்ஸில், முதலாளிக்கு மட்டுமே பாலிசியை இரத்து செய்வதற்கு உரிமையிருக்கிறது. |
இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) பாலிசி என்பது ஒரு தனிநபர் வருடா வருடம் உரிய பிரீமியம் தொகையை செலுத்தும் பட்சத்தில் செல்லத்தக்கதாக இருக்கிறது. | குரூப் ஹெல்த் பாலிசி என்பது, அந்த குறிப்பிட்ட ஸ்தாபனத்தில் ஊழியர் பணிபுரியும் வரையில் மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கும். |
இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் பாலிசி என்பது ஒரு தனிநபரின் வயது, மெடிக்கல் ஹிஸ்டரி, நோய்நிலைமைகள் போன்றவற்றையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. | குரூப் ஹெல்த் பாலிசி என்பது ஒரு ஸ்தாபனத்தின் பலம், அதாவது பொருளாதார பலம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டையுமே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. |
வழக்கமாக, எந்தவொரு இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போதும் இன்சூரரால் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னரே பாலிசிக்கள் வழங்கப்படும். | குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில், முன்கூட்டியே செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் இன்சூரரால் செய்யப்படாது. இதனால் பாலிசிக்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் குறைகின்றன. |
டிஜிட் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் |
டிஜிட் இல்னஸ் குரூப் இன்சூரன்ஸ் (கோவிட்-19) |
டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு ஸ்தாபனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் உடல்நலக் கேடுகள், நோய்கள் மற்றும் விபத்துகளினால் நேரும் மருத்துவ செலவுகளுக்கு காப்புறுதி அளிக்கும் ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். கூடுதலாக, டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பெருந்தொற்று நோயான கோவிட்-19-க்கும் காப்புறுதி வழங்கி பாதுகாப்பளிக்கிறது. |
தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, பல நிறுவனங்கள் முழுமையான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரை தேர்வு செய்வதற்கு முன்வராது. பிரீமியம் விலை மற்றும் தற்போதிருக்கும் பொருளாதார பாதுகாப்பின்மையே இதற்கான காரணங்களாகும். எனினும், முதலாளிகள் குறைந்தபட்சம் கோவிட்-19 பெருந்தொற்றிற்காவது தங்கள் ஊழியர்களுக்கு காப்புறுதி எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது. அதனால் தான், நாங்கள் கோவிட்-19-க்கான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை கட்டுப்படியாகும் விலையில் அனைத்து ஊழியர்களுக்கும் காப்புறுதி அளிக்கின்ற வகையிலே தனிப்பயனாக்கப்பட்ட கவரை உருவாக்கியுள்ளோம். |
ஆம், டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில் கொரோனா வைரஸுக்கு காப்புறுதி வழங்கப்பட்டிருக்கிறது, தனிப்பட்ட கவராகவும் கூட வழங்கப்படுகிறது.
ஆம், டிஜிட்-இன் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸில் கொரோனா வைரஸுக்கு காப்புறுதி வழங்கப்பட்டிருக்கிறது, தனிப்பட்ட கவராகவும் கூட வழங்கப்படுகிறது.
எங்கள் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸில் தொடக்க காத்திருப்பு காலமானது 15 நாட்கள் மட்டுமே. எனினும், 50-க்கு மேற்பட்ட நபர்களுக்கு காப்புறுதி அளிக்கின்ற ஸ்தாபனங்களுக்கு அதிலும் விலக்கு அளிக்கப்படும்.
எங்கள் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸில் தொடக்க காத்திருப்பு காலமானது 15 நாட்கள் மட்டுமே. எனினும், 50-க்கு மேற்பட்ட நபர்களுக்கு காப்புறுதி அளிக்கின்ற ஸ்தாபனங்களுக்கு அதிலும் விலக்கு அளிக்கப்படும்.
காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) என்பது, குறிப்பிட்ட பெனிஃபிட்களுக்கு கிளைம்களை செய்ய தொடங்கும் முன்னர் ஒருவர் காத்திருக்க வேண்டிய கால அவகாசத்தை குறிக்கிறது.
காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) என்பது, குறிப்பிட்ட பெனிஃபிட்களுக்கு கிளைம்களை செய்ய தொடங்கும் முன்னர் ஒருவர் காத்திருக்க வேண்டிய கால அவகாசத்தை குறிக்கிறது.
ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு அடிப்படையான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸாவது வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் ஸ்தாபனமானது குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்டிருக்குமாயின், அவர்களை பாதுகாப்பதற்கு ஒரு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை எடுப்பது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையின் காரணமாக உங்களால் அது முடியவில்லையென்றால், உங்கள் ஊழியர்களை கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்து காப்புறுதி வழங்குவதற்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கிற கொரோனா வைரஸ் குரூப் கவரை மட்டும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு அடிப்படையான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸாவது வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் ஸ்தாபனமானது குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்டிருக்குமாயின், அவர்களை பாதுகாப்பதற்கு ஒரு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை எடுப்பது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்.
எனினும், தற்போதைய சூழ்நிலையின் காரணமாக உங்களால் அது முடியவில்லையென்றால், உங்கள் ஊழியர்களை கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்து காப்புறுதி வழங்குவதற்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கிற கொரோனா வைரஸ் குரூப் கவரை மட்டும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஆம், நீங்கள் வாங்கலாம். மற்ற குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களை போலல்லாமல், எங்களுடைய குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட நிறுவனங்களுக்கும் கூட வாங்கிக் கொள்ளலாம்.
ஆம், நீங்கள் வாங்கலாம். மற்ற குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களை போலல்லாமல், எங்களுடைய குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட நிறுவனங்களுக்கும் கூட வாங்கிக் கொள்ளலாம்.
அட்வான்ஸ் கேஷ் பெனிஃபிட் என்பது, இன்சூர் செய்யப்பட்ட நபரின் சிகிச்சை செலவுகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில், உங்கள் இன்சூரர் (அதாவது நாங்கள்!) மதிப்படப்பட்ட தொகையில் 50%-ஐ கேஷாக வழங்குவார். இதன் மூலம் அவர்கள் சிகிச்சை முடியும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை, மேலும் அவர்கள் எப்போதுமே காப்புறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். சிகிச்சை முடிந்த பிறகு மீதமுள்ள 50% மதிப்பிடப்பட்ட தொகையை நீங்கள் முதலில் கட்டி விட்டு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
அட்வான்ஸ் கேஷ் பெனிஃபிட் என்பது, இன்சூர் செய்யப்பட்ட நபரின் சிகிச்சை செலவுகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில், உங்கள் இன்சூரர் (அதாவது நாங்கள்!) மதிப்படப்பட்ட தொகையில் 50%-ஐ கேஷாக வழங்குவார். இதன் மூலம் அவர்கள் சிகிச்சை முடியும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை, மேலும் அவர்கள் எப்போதுமே காப்புறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். சிகிச்சை முடிந்த பிறகு மீதமுள்ள 50% மதிப்பிடப்பட்ட தொகையை நீங்கள் முதலில் கட்டி விட்டு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
18 வயதிற்கு மேற்பட்ட, 70 வயதிற்கு கீழேயுள்ள, ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஸ்தாபன குரூப் ஹெல்த் பாலிசியின்படி காப்புறுதி வழங்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள். கூடுதலாக, அவர்கள் தங்களின் துணைவர்/துணைவி மற்றும் 3 மாதங்களிலிருந்து 25 வயது வரையிலான, 3-குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்ளலாம்.
18 வயதிற்கு மேற்பட்ட, 70 வயதிற்கு கீழேயுள்ள, ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஸ்தாபன குரூப் ஹெல்த் பாலிசியின்படி காப்புறுதி வழங்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள். கூடுதலாக, அவர்கள் தங்களின் துணைவர்/துணைவி மற்றும் 3 மாதங்களிலிருந்து 25 வயது வரையிலான, 3-குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆம், பொதுவாகவே இதன் விலை பல நபர்களுக்கிடையே, அதாவது ஊழியர்களுக்கிடையே பரவியுள்ளதால், கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மலிவானதாகும்.
ஆம், பொதுவாகவே இதன் விலை பல நபர்களுக்கிடையே, அதாவது ஊழியர்களுக்கிடையே பரவியுள்ளதால், கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மலிவானதாகும்.
டிஜிட்-இல், நாங்கள் பெரியதும், சிறியதுமான தொழில் நிறுவனங்களுக்கேற்றவாறு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை தனிப்பயனாக்கி வழங்குகிறோம். உங்கள் பிளானை பற்றி தெரிந்து கொள்வதற்கு, உங்கள் விவரங்களை மேலே உள்ளிடவும். தனிப்பயனாக்கப்பட்ட குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டுடன்(quote) நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
டிஜிட்-இல், நாங்கள் பெரியதும், சிறியதுமான தொழில் நிறுவனங்களுக்கேற்றவாறு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை தனிப்பயனாக்கி வழங்குகிறோம். உங்கள் பிளானை பற்றி தெரிந்து கொள்வதற்கு, உங்கள் விவரங்களை மேலே உள்ளிடவும். தனிப்பயனாக்கப்பட்ட குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டுடன்(quote) நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
இது உங்களிடம் உள்ள கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வகையை சார்ந்திருக்கிறது. பொதுவாக, கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் என்பது உங்களுடைய முதலாளியால் பணம் செலுத்தப்பட்டு வாங்கப்படுகின்றன, மேலும் நீங்கள் அந்த நிறுவனத்தை விட்டுச் செல்லும் போது அது இரத்து செய்யப்படும். எனினும், நீங்கள் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்யலாம், தனிப்பட்ட வரிச் சேமிப்பிற்கும் கூட இது உங்களுக்கு உதவுகிறது, மேலும் உங்களுக்கு கூடுதல் ஹெல்த்கேர் பெனிஃபிட்களையும் அளிக்கிறது.
இது உங்களிடம் உள்ள கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வகையை சார்ந்திருக்கிறது. பொதுவாக, கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் என்பது உங்களுடைய முதலாளியால் பணம் செலுத்தப்பட்டு வாங்கப்படுகின்றன, மேலும் நீங்கள் அந்த நிறுவனத்தை விட்டுச் செல்லும் போது அது இரத்து செய்யப்படும்.
எனினும், நீங்கள் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்யலாம், தனிப்பட்ட வரிச் சேமிப்பிற்கும் கூட இது உங்களுக்கு உதவுகிறது, மேலும் உங்களுக்கு கூடுதல் ஹெல்த்கேர் பெனிஃபிட்களையும் அளிக்கிறது.
ஆம், மேலே குறிப்பட்டபடி நீங்கள் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆகிய இரண்டையும் நிச்சயமாக ஒரே நேரத்தில் வைத்திருக்கலாம்.
ஆம், மேலே குறிப்பட்டபடி நீங்கள் கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆகிய இரண்டையும் நிச்சயமாக ஒரே நேரத்தில் வைத்திருக்கலாம்.
முதலாளியின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் விலையானது ஒரு நிறுவனத்திற்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் வேறுபடுகின்றது, ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்களின் எண்ணிக்கை வேறுபடும். ஒரு முதலாளியின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்.
முதலாளியின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் விலையானது ஒரு நிறுவனத்திற்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் வேறுபடுகின்றது, ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்களின் எண்ணிக்கை வேறுபடும். ஒரு முதலாளியின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, இருப்பிடம் மற்றும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் நீங்கள் காப்புறுதி அளிக்க விரும்பும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, இருப்பிடம் மற்றும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் நீங்கள் காப்புறுதி அளிக்க விரும்பும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் முதலாளிக்கும், ஊழியருக்கும் பயனுள்ளதாக இருப்பினும், அதன் மிகப் பெரிய கட்டுப்பாடுகளுள் ஒன்று என்னவென்றால், ஒரு ஊழியரின் அனைத்து விதமான உடல்நலத் தேவைகளுக்கும் அது காப்புறுதி வழங்காது. பெரும்பாலான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் பொதுவானதும், வரம்புக்குட்பட்டதுமாகும். ஆனால், இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை தனிப்பட்ட உடல்நலத் தேவைகளுக்கேற்றவாறு தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். இதனை சமாளிப்பதற்கான சரியான வழி என்னவென்றால், குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் மற்றும் இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகிய இரண்டையுமே எடுத்துக் கொள்வது தான். இதன் மூலம் உடல்நலத் தேவைகளையும் பார்த்துக் கொள்ளலாம், வரிச் சேமிப்பிற்கும் உதவும்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் முதலாளிக்கும், ஊழியருக்கும் பயனுள்ளதாக இருப்பினும், அதன் மிகப் பெரிய கட்டுப்பாடுகளுள் ஒன்று என்னவென்றால், ஒரு ஊழியரின் அனைத்து விதமான உடல்நலத் தேவைகளுக்கும் அது காப்புறுதி வழங்காது. பெரும்பாலான குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் பொதுவானதும், வரம்புக்குட்பட்டதுமாகும். ஆனால், இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை தனிப்பட்ட உடல்நலத் தேவைகளுக்கேற்றவாறு தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
இதனை சமாளிப்பதற்கான சரியான வழி என்னவென்றால், குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் மற்றும் இன்டிவிஜுவல் (தனிப்பட்ட) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகிய இரண்டையுமே எடுத்துக் கொள்வது தான். இதன் மூலம் உடல்நலத் தேவைகளையும் பார்த்துக் கொள்ளலாம், வரிச் சேமிப்பிற்கும் உதவும்.
பொறுப்புத்துறப்பு: 13 செப்டம்பர் 2021 வரை, டிஜிட் ஹெல்த் பிளஸ் பாலிசி (திருத்தம்) மற்றும் டிஜிட் இல்னஸ் குரூப் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் காப்புறுதியளிக்கப்பட்ட நபர்களை இந்த தரவு உள்ளடக்கியுள்ளது.
Please try one more time!
மறுப்பு #1: *வாடிக்கையாளர் காப்பீடு பெறும் நேரத்தில் விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். பிரீமியம் தொகை அதற்கேற்ப மாறுபடலாம். முன்மொழிவு படிவத்தில் பாலிசி வழங்குவதற்கு முன், காப்பீடு செய்யப்பட்டவர், ஏற்கனவே இருக்கும் நிலை அல்லது சிகிச்சைக்கு செல்லும் நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
மறுப்பு #2: இந்தத் தகவல் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டது மற்றும் இணையம் முழுவதும் உள்ள பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இலக்கக் காப்பீடு இங்கு எதையும் விளம்பரப்படுத்தவோ பரிந்துரைக்கவோ இல்லை. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் தகவலைச் சரிபார்க்கவும்.
மற்ற முக்கியமான கட்டுரைகள்
Get 10+ Exclusive Features only on Digit App
closeAuthor: Team Digit
Last updated: 06-01-2025
CIN: U66010PN2016PLC167410, IRDAI Reg. No. 158.
கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (முன்பு ஓபன் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) - பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி - 1 முதல் 6 மாடிகள், அனந்தா ஒன் (ஏ.ஆர் ஒன்), பிரைட் ஹோட்டல் லேன், நர்வீர் தானாஜி வாடி, சிட்டி சர்வே எண்.1579, சிவாஜி நகர், புனே-411005, மகாராஷ்டிரா | கார்ப்பரேட் அலுவலக முகவரி - அட்லாண்டிஸ், 95, 4 வது பி கிராஸ் ரோடு, கோரமங்களா இண்டஸ்டிரியல் லேஅவுட், 5 வது பிளாக், பெங்களூரு-560095, கர்நாடகா | மேலே காட்டப்பட்டுள்ள கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு லோகோ கோ டிஜிட் எல்என்ஃபோவொர்க்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் உரிமத்தின் கீழ் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்படுவதுடன் பயன்படுத்தப்படுகிறது.