நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? ஆம் என்றால், நாங்கள் உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும் எதிர்காலத்திலும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று 100% உறுதியாக நம்புகிறீர்களா? இல்லை, நம்மில் யாரும் உறுதியாக அவ்வாறு நம்புவதற்கில்லை. உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் பிளான் செய்வது மற்றும் எதிர்காலத்தில் மன அழுத்தமின்றி இருப்பது நல்லது.
எங்கிருந்து தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், நாங்கள் உங்களுக்காகவே உதவ இங்கே இருக்கிறோம்😊
மெடிக்கல் எமெர்ஜென்சிகளில் நீங்கள் சிறந்த நன்மைகளைப் பெற இரண்டு வழிகள் உள்ளன, ஒரு வழி மெடிக்கிளைம் வைத்திருப்பது மற்றும் மற்றொரு வழி ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை கொண்டிருப்பது. இந்த இரண்டையும் நாங்கள் உங்களுக்கு விளக்குவோம், இதனால் உங்களால் சிறப்பாக மதிப்பீடு செய்ய உதவும்.
மெடிக்கிளைம் என்பது மெடிக்கல் எமெர்ஜென்சியில் உங்களுக்கு குறிப்பிட்ட நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். ஹாஸ்பிடலைஷேஷனின்போது பின்வரும் அனைத்து செலவுகளையும் இது கவனித்துக் கொள்கிறது;
மெடிக்கிளைமில் கேஷ்லெஸ் மற்றும் ரீஃபண்ட் என இரண்டு வகைகள் உள்ளன.
ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அவசர காலங்களில் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் ஒரு இன்சூரன்ஸ் கவராகும். உங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால், நீங்கள் செலவுகளை சிரமப்பட்டு செலுத்துவீர்கள், இது பின்னர் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ரீஇம்பர்ஸ் செய்யப்படுகிறது அல்லது இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டணத்தை நேரடியாக மருத்துவமனையிடம் செலுத்துகிறது.
இரண்டும் ஒரே மாதிரியாகத் தெரிகிறது அல்லவா? ஆனால் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
மெடிக்கிளைம் |
ஹெல்த் இன்சூரன்ஸ் |
மெடிக்கிளைம் ஹாஸ்பிடலைஷேஷன் செலவுகளுக்கு மட்டுமே கவரேஜ் அளிக்கிறது; அதாவது நீங்கள் ஹாஸ்பிடலைஷேஷன் செய்யப்பட்டால் மட்டுமே இதற்கு கிளைம் செய்யமுடியும். |
ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு விரிவான கவரேஜை வழங்குகிறது, இது ஹாஸ்பிடலைஷேஷன் செலவுகளை தாண்டியும் நீட்டிக்கப்படுகிறது. இந்த செலவுகளில் சில வருடாந்திர ஹெல்த் செக்அப்ஸ், தினசரி ஹாஸ்பிட்டல் கேஷ், வெளிநோயாளிகள் பிரிவிற்கான (ஓ.பி.டி) செலவுகள் மற்றும் மாற்று சிகிச்சைகள் ஆயுஷ் ஆகியவை அடங்கும். |
மெடிக்கிளைம் உடன் ஆட்-ஆன் கவர்கள் எதுவும் இல்லை. |
கிரிட்டிக்கல் இல்னெஸ் கவர், மகப்பேறு நன்மை மற்றும் கருவுறாமை காப்பீடு போன்ற ஏராளமான ஆட்-ஆன் கவர்கள் உள்ளன. |
மெடிக்கிளைமில் ஹாஸ்பிடலைஷேஷன் கவர் வரையறுக்கப்பட்டுள்ளது அத்துடன் ரூ .5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளது. |
ஹெல்த் இன்சூரன்ஸ் கவர் விரிவானது அத்துடன் வயது, நகரம், சிங்கிள் பிளானில் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. |
மெடிக்கிளைம் நெகிழ்வானது (ஃபிளேக்சிபில்) அல்ல. |
ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் நெகிழ்வானவை மற்றும் கஸ்டமைஸ் செய்யலாம். |
உங்கள் முடிவு பல காரணிகளைப் பொறுத்தது, அவை:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காரணிகளையும் மனதில் கொண்டு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எது சிறந்தது என்று உங்களுக்குத் தெரிந்தால் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம் அல்ல. மேலும் தகவல் தேவைப்பட்டால், தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்! உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
முக்கியமானது: கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பெனிஃபிட்கள் மற்றும் அதில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.