டென்டல் கவர் உடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ்
No Capping
on Room Rent
24/7
Customer Support
Zero
Co-payment
No Capping
on Room Rent
24/7
Customer Support
Zero
Co-payment
டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
உங்களுக்கு ஏன் டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவை?
பல் சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை ஈடு செய்யும் டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பு அம்சங்கள் என்ன?
பல் சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்யும் ஓபிடி (OPD) கவருடன் கிடைக்கும் டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸில் எந்தெந்த செலவுகள் அடங்கும்?
ஸ்மார்ட் + ஓபிடி
டென்டல் ட்ரீட்மெண்ட்கள் பல் மருத்துவர் மூலம் பல் வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற எடுத்துக்கொண்ட வெளிநோயாளர் பல் சிகிச்சை; எக்ஸ்ரே எடுத்தல், பற்களை நீக்குதல், பற்களில் அமல்கம் கலவை கொண்டு நிரப்புதல்கள், பற்களின் வேர்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் இவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான பற்கள் சீரமைப்பு ஆகியவற்றிற்கு மட்டுமே நாங்கள் பணம் செலுத்துவோம். |
✔
|
ஓபிடி (OPD) கவரேஜ் |
|
தொழில்முறை கட்டணங்கள் எந்தவொரு நோய் ஏற்பட்ட பின்னர் உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதற்கு மருத்துவ பயிற்சியாளர்கள் உடன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவ ரீதியான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளுக்கான கட்டணம். |
✔
|
நோய் கண்டறிவதற்கான கட்டணங்கள் மருத்துவரீதியாக பரிந்துரைக்கப்பட்டு நோயறிதல் மையத்தின் மூலம் சிகிச்சைக்காக நோயறிதலை கண்டறிய பயன்படுத்தப்படும் பின்வரும் வெளிநோயாளிக்கான செயல்முறைகள்: எக்ஸ்ரே, நோயியல், மூளை மற்றும் உடல் ஸ்கேன் (எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்) போன்றவைகளுக்கு காப்பீடு அளிக்கபப்டும். |
✔
|
அறுவை சிகிச்சைகள் POP, மருத்துவ தையல், விபத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு ட்ரெஸ்ஸிங் செய்தல் மற்றும் விலங்குகள் கடித்தல் தொடர்பான வெளிநோயாளர் நடைமுறைகள் போன்ற சிறிய அறுவை சிகிச்சைகள் மருத்துவப் பயிற்சியாளரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான செலவுகள். |
✔
|
மருந்துகளுக்கான பில்கள் உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கான செலவுகள். |
✔
|
கேட்கும் கருவிகள் தீவிர செவிப்புலன் நிலைகளுக்கான காது கேட்கும் கருவிகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது. |
✔
|
பிற கவரேஜ்கள் |
|
கொரோனா வைரஸ் தாக்குதல் உட்பட எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பத்திருந்தால் இது ஒரு நோய், விபத்து அல்லது ஒரு தீவிர நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செலவுகளை ஈடுசெய்கிறது. உங்கள் காப்பீட்டுத் தொகைக்குள் மொத்தச் செலவுகள் இருக்கும் வரை, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு இது பயன்படுத்தப்படலாம். |
✔
|
டே-கேர் செயல்பாடுகள் உடல்நலக் காப்பீடுகள் பொதுவாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் தேவைப்படும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகளை இது உள்ளடக்குகிறது. |
✔
|
வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் இல்லை கோ -பேமெண்ட் என்பது, உடல்நலக் காப்பீட்டுக் கோரிக்கையின் போது, உங்கள் சேமிப்பிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைக் குறிக்கிறது. எங்கள் திட்டங்களில், வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் செலுத்துதல் எதுவும் இல்லை! |
✔
|
அறை வாடகைக்கு வரம்பு இல்லை வெவ்வேறு வகை அறைகள் வெவ்வேறு வாடகைகளைக் கொண்டுள்ளன. ஹோட்டல் அறைகளுக்கு எப்படி கட்டணங்கள் உள்ளனவோ அது போல. டிஜிட்டில், சில திட்டங்களில் உங்கள் காப்பீட்டுத் தொகைக்குக் கீழே இருக்கும் வரை, அறை வாடகைக்கு வரம்பு இல்லை என்ற பயனை உங்களுக்கு வழங்குகிறது. |
✔
|
ஐசியு (ICU) அறை வாடகைக்கு வரம்பு இல்லை ஐசியூ (தீவிர சிகிச்சை பிரிவுகள்) தீவிர நோயாளிகளுக்கானது. ஐசியூ-களில் கவனிப்பின் நிலை அதிகமாக உள்ளதால் அதற்கான வாடகையும் அதிகமாக உள்ளது. உங்கள் காப்பீட்டுத் தொகைக்குக் கீழே இருக்கும் வரை, டிஜிட் உங்கள் ஐசியூ வாடகைக்கு எந்த வரம்பையும் வரையறை செய்வதில்லை. |
✔
|
குமுலேடிவ் போனஸ் ஒவ்வொரு கிளைம் செய்யப்படாத வருடத்திற்கும் இலவச வெகுமதியைப் பெறுங்கள். சில காப்பீட்டு திட்டங்கள், ஒரு வருடத்தில் நீங்கள் எந்த கிளைமும் செய்யவில்லை என்றால், அடுத்த வருடத்தில் உங்களுக்கு தள்ளுபடியை வழங்குகின்றன. இந்த கூடுதல் தள்ளுபடி குமுலேட்டிவ் போனஸ் என்று அழைக்கப்படுகிறது. |
கிளைம் செய்யாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 10% போனஸ் (50 % வரை)
|
சாலை ஆம்புலன்ஸ் கட்டணங்கள் சாலை ஆம்புலன்ஸ் கட்டணம் காப்பீடு அளிக்கப்படுகிறது |
✔
|
இலவச வருடாந்திர ஹெல்த் செக்அப் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய வருடாந்திர சுகாதார பரிசோதனைகள் முக்கியம். இது ஒரு பாலிசி புதுப்பித்தலின் பயனாகும், இதன் மூலம் நீங்கள் உங்கள் விருப்பப்படி எந்த மருத்துவமனையிலும் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்கு ஆகும் செலவினங்களுக்கு காப்பீடு பெற அனுமதிக்கிறது. |
✔
|
போஸ்ட் ஹாஸ்ப்பிடலைசேஷன் லம்ப்சம் அனுமதிக்கப்பட்ட பின்னர் உங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஈடுகட்ட நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பயன் இது. பில்கள் தேவையில்லை. இந்த பயனை பயன்படுத்த அல்லது திருப்பிச் செலுத்தும் செயல்முறையின் மூலம் ஸ்டாண்டர்ட் போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் பெனிஃபிட்டை நீங்கள் தேர்வு செய்யலாம். |
✔
|
சைக்யாட்ரிக் இல்நஸ் கவர் ஒரு அதிர்ச்சியின் காரணமாக, மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால், அதுக்காகும் செலவு இந்த நன்மையின் கீழ் வழங்கப்படும். இருப்பினும், வெளிப்புற நோயாளி ஆலோசனைகளுக்கு ஆகும் செலவு இதன் கீழ் வராது. |
✔
|
பேரியாட்ரிக் சர்ஜரி (எடை குறைப்பு அறுவை சிகிச்சை) உடல் பருமன் (பிஎம்ஐ > 35) காரணமாக உறுப்புப் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த கவரேஜ் உள்ளது. இருப்பினும், உடல் பருமன் உணவுக் கோளாறுகள், ஹார்மோன்கள் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சையளிக்கக்கூடிய நிலைமைகள் காரணமாக இருந்தால், இந்த அறுவை சிகிச்சை செலவு ஈடுசெய்யப்படாது. |
✔
|
நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய கூடுதல் கவர்கள் |
|
நியூ பார்ன் பேபி கவருடன் கூடிய மெட்டர்னிட்டி பெனிஃபிட் அடுத்த இரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால், இதை நீங்கள் தேர்வு செய்யலாம். இது குழந்தைப் பிரசவம் (மருத்துவ ரீதியாக அவசியமான கரு-கலைத்தல் உட்பட), கருவுறாமைக்கான செலவுகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் முதல் 90 நாட்கள் வரை கவரேஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது. |
✔
|
சோன் அப்கிரேடு ஒவ்வொரு நகரமும் சோன் A, B அல்லது C. சோன் A-இல் டெல்லி மற்றும் மும்பை உள்ளது. B சோனில் பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்கள் உள்ளன. மருத்துவ செலவின் அடிப்படையில் சோன்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சோன் A நகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் இருப்பதால், இந்த நகரங்களில் உடல்நலக் காப்பீட்டின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான பிரீமியம் சற்று அதிகமாக உள்ளது. நீங்கள் வசிக்கும் இடத்தை விட பெரிய நகரத்தில் சிகிச்சை பெற விரும்பினால், அதற்கான திட்டத்தை நீங்கள் இந்த கவர் மூலம் நீங்கள் மேம்படுத்தலாம். |
✔
|
இதில் எது அடங்காது?
காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சைகள், டெண்டுர்ஸ் (dentures), டென்டல் புரோஸ்தெசிஸ் (dental prosthesis), டென்டல் இம்பிளான்ட்ஸ் (dental implants), ஆர்த்தோடோன்டிக்ஸ் (orthodontics), ஆர்த்தோக்னாதிக் (orthognathic) அறுவை சிகிச்சைகள், தாடை சீரமைப்பு (ஜா அலைன்மென்ட்) அல்லது டெம்போரோமாண்டிபுலர் (தாடை), மேல் மற்றும் கீழ் தாடை எலும்பு அறுவை சிகிச்சை மற்றும் கடுமையான காயம் அல்லது புற்றுநோயினால் ஏற்பட்ட காயங்களை சீர் செய்வதற்காக டெம்போரோமாண்டிபுலர் (தாடை) அறுவைசிகிச்சை ஆகிய பல் சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகள் எதுவும் இந்த இன்சூரன்ஸ் ஈடு செய்யாது.
இதைத் தவிர கண்ணாடிகள், கான்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் பிசியோதெரபி, காஸ்மெட்டிக் செயல்முறைகள், வாக்கர்ஸ், பிபி (BP) மானிட்டர்கள், குளுக்கோமீட்டர்கள், தெர்மாமீட்டர்கள் போன்ற ஆம்புலேட்டரி சாதனங்கள், டயட்டீஷியன் கட்டணம், வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றுக்கான செலவுகள் எதுவும் இந்த ஓபிடி (OPD) கவரில் அடங்காது.