டிஜிட் பார்ட்னராகுங்கள்

60,000+ பார்ட்னர்கள் டிஜிட் மூலம் 1000 கோடி+ சம்பாதித்துள்ளனர்.

மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவர் ஒரு  இன்சூரன்ஸ் நிறுவனத்தில்  வேலை செய்பவர், அந்த நிறுவனத்தின் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பவர். நீங்கள் ஒரு மோட்டார் ஏஜென்ட் அல்லது பிஒஎஸ்பி ஆக இருந்தால், மோட்டார் வெஹிக்கிளுக்கான இன்சூரன்ஸ் பிளான்களிலிருந்து  வாடிக்கையாளர் அவரது தேவைக்கேற்ப சரியான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளை தேர்வுசெய்ய நீங்கள் உதவுவீர்கள்.

டிஜிட் மூலம் நீங்கள் கார், பைக் (அல்லது டூ வீலர்) மற்றும்  கமர்ஷியல் வெஹிக்கில்  பாலிசிகளை விற்கலாம். 

What is Motor Insurance? 

மோட்டார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

கார், டூ வீலர் அல்லது ஆட்டோ, டிரக் போன்ற கமர்ஷியல் வண்டிகளுக்குக் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி காப்பீடு அளிக்கும். இந்தியாவில் இருக்கும் எல்லா வண்டிகளுக்கும் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். விபத்துக்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களை ஈடு செய்ய மக்கள் இதை வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்கள் மூன்று வகைப்படும், அவை - தேர்டு-பார்ட்டி மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி, ஓன் டேமேஜ் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் காம்பிரிஹென்சிவ் (அல்லது ஸ்டாண்டர்ட் ) மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும்.  

*குறிப்பு - ஏஜென்ட்களுக்கு என்று குறிப்பிட்ட பிரிவு எதுவும் இல்லை. நீங்கள் ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்டாக பதிவு செய்திருந்தால், நீங்கள் அனைத்து வகையான ஜெனரல் இன்சூரன்ஸ் பாலிசிகளையும் விற்கலாம்.

இந்தியாவின் மோட்டார் இன்சூரன்ஸ் துறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

1

இந்தியாவின் நான்-லைஃப்(உயிர் இல்லாத) இன்சூரன்ஸ் வகை மார்க்கெட்டில், 39.4% மோட்டார் இன்சூரன்ஸின் பங்கு ஆகும். (1)

2

இந்தியாவின் கார் இன்சூரன்ஸ் துறையின் மதிப்பு ரூ 70,000 கோடி ஆகும். (2)

3

2012 ஆண்டிலிருந்து கார் இன்சூரன்ஸ் துறை 11.3% வளர்ச்சி அடைந்துள்ளது. (3)

டிஜிட்-இல் ஏன் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேண்டும்?

நீங்கள் ஏன் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்டாக ஆக வேண்டும்? அதிலும், டிஜிட்-இன் ஏஜென்டாக ஏன் ஆக வேண்டும்?  என்பதைப் பற்றி  அறிந்துகொள்ளுங்கள்.

டிஜிட் உடன் நேரடியாக வேலை செய்யுங்கள்

எங்களின் பிஒஎஸ்பி பார்ட்னரான நீங்கள் எங்களுடன் நேரடியாக வேலை செய்வீர்கள். வேறு எந்த இடைத்தரகர்களும் இதில் ஈடுபடமாட்டார்கள். டிஜிட்  இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இன்சூரன்ஸ்  நிறுவனமாகும்.  2019 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற விருதைப் பெற்ற வளர்ந்து வரும் இளம் நிறுவனமாக திகழ்கிறோம்.

இன்சூரன்ஸை எளிதாக்கலாம்

இன்சூரன்ஸை எளிதாக்கலாம் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதகற்காகத் தான் எங்களின் அனைத்து ஆவணங்களையும் 15 வயதுடையவர்களால் கூட எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமையானதாக வைத்திருக்கிறோம்.

முழு நேர ஆதரவு

தொழில்நுட்பத்தின் பக்கபலத்தினால், உங்களுக்காகவே இயங்கும் ஆதரவு சேவைக் குழு எங்களிடம் உள்ளது. அத்துடன் நீங்கள் 24x7 மணி நேரமும் பாலிசிகளை விற்பதற்கு ஏதுவாக திறன் வாய்ந்த வெப் மற்றும் மொபைல் செயலியும் உள்ளது.

ஃபேஸ்புக்-ல் 4.8 ரேட்டிங் பெற்றது

எங்களின் சேவைகள் வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், எந்தவொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் கிடைத்திடாத 4.8/5 ஃபேஸ்புக் ரேட்டிங்கை (மதிப்பீடு)  பெற்றுள்ளோம்.

அதிவேக வளர்ச்சி

இந்தக் குறுகிய காலத்தில், மோட்டார் இன்சூரன்ஸ் பிரிவில், 2%க்கும் அதிகமான சந்தைப் பங்கை (முந்தைய காலாண்டில்) நாங்கள் அடைந்துவிட்டோம்.

அதிகமான கிளைம் செட்டில்மெண்ட் விகிதம்

தனியார் கார்களுக்கான எங்களின்  கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் அதிகம். தனியார் கார்களுக்கான கிளைம்களில்  96% செட்டில் செய்துவிட்டோம்.

காகிதம் இல்லா செயல்முறைகள்

இன்சூரன்ஸை வாங்குவது முதல் கிளைம் செய்வது வரை எங்களின் அனைத்து செயல்முறைகளும் ஆன்லைன் மூலமாக நடக்கிறது.  இதனால், நீங்கள் எந்த ஆவணங்களையும் நேரடியாகப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. உங்களிடம்  ஸ்மார்ட்போன்/கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பு l/இன்டர்நெட் சேவை இருந்தால் மட்டுமே போதும். ஆதலால், நீங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!

விரைவாக கமிஷன் அளிக்கப்படுகிறது

நீங்கள் இதைப் பற்றி  கவலைப்பட தேவையில்லை.  நாங்கள் வழங்கும் கமிஷன்கள் அனைத்தும் அவரவர் கணக்கில் விரைவாக சேர்க்கப்படுகிறது. அதாவது, பாலிசி வழங்கிய 15 நாட்களில் உங்கள் கமிஷனானது உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி?

பிஒஎஸ்பி சான்றிதழைப் பெறுவதே வெஹிக்கில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான எளிய வழி ஆகும். பிஒஎஸ்பி (பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்பெர்சன்/Point of Salesperson) என்பது இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும் இன்சூரன்ஸ் ஏஜென்ட்களுக்கு கொடுக்கப்படும் பெயர் ஆகும்.

ஒரு பிஒஎஸ்பி ஆவதற்கு, IRDAI வரையறை செய்துள்ளது குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மேலும், நாங்கள் வழங்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சிகள் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை! அதை டிஜிட் கவனித்துக் கொள்ளும்.

மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான தேவையான தகுதிகள் என்ன?

நீங்கள் கார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக விரும்பினால், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும், மேலும் அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு மற்றும் பான் (PAN ) கார்டு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

அதற்குப் பின்,  ஐஆர்டிஏஐ-ஆல் குறிப்பிடப்பட்ட 15 மணிநேர கட்டாயப் பயிற்சியை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொள்ள .உதவுவதற்காக நாங்கள் இருக்கிறோம்!

யாரெல்லாம் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாம்?

விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், 10 ஆம் வகுப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும் என்பது தான் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு அவசியமான ஒரே தகுதி ஆகும்.  

அதாவது இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும் திறன் கொண்ட எவராக இருந்தாலும்  பிஒஎஸ்பி ஏஜென்ட் ஆகலாம். கல்லூரி மாணவர்கள், வீட்டில் இருக்கும் துணைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் /பெண்கள் ஆகியோரும் இதில் அடங்குவர்.

டிஜிட்-ல் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட்/பிஒஎஸ்பி (POSP) ஆவது எப்படி?

ஸ்டெப் 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்களின் பிஒஎஸ்பி படிவத்தைப் பூர்த்தி செய்துப் பதிவு செய்யுங்கள். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள்.

ஸ்டெப் 2

உங்கள் 15 மணிநேர பயிற்சியை முடித்திடுங்கள்.

ஸ்டெப் 3

பரிந்துரைக்கப்பட்ட தேர்வை முடித்திடுங்கள்.

ஸ்டெப் 4

எங்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள். அவ்வளவு தான்! நீங்கள் சான்றிதழளிக்கப்பெற்ற ஒரு பிஒஎஸ்பி ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்?

இன்சூரன்ஸ் ஏஜென்டான உங்களின் வருமானம் நீங்கள் விற்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. அதிக பாலிசிகளை விற்றால், நீங்கள்  அதிகமாக சம்பாதிக்கலாம். மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவர் கார், பைக் மற்றும் கமர்ஷியல் வண்டிகளுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கலாம். 

அப்படி என்றால், நீங்கள் காம்பிரிஹென்சிவ் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பாலிசிகளை வாடிக்கையாளர்களுக்கு  விற்கலாம். அதற்கான கமிஷன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பாலிசி மற்றும் வண்டியின் வகை வண்டியின் வயது அதிகபட்ச கமிஷன் தொகை
காம்பிரிஹென்சிவ் பாலிசி - ஃபோர் வீலர்ஸ் மற்றும் இதர வகையான தனியார் மற்றும் கமர்ஷியல் வண்டிகள் 1-3 வருடங்கள் பழமையான வண்டி ஓன் டேமேஜ் பிரீமியத்தில்15%
காம்பிரிஹென்சிவ் பாலிசி – டூ வீலர்ஸ் 1-3 வருடங்கள் பழமையான வண்டி ஓன் டேமேஜ் பிரீமியத்தில்17.5%
காம்பிரிஹென்சிவ் பாலிசி – ஃபோர் வீலர்ஸ் மற்றும் இதர வகையான தனியார் மற்றும் கமர்ஷியல் வண்டிகள் 4 வருடங்கள் மற்றும் அதற்கும் மேல் பழமையான வண்டி ஓன் டேமேஜ் பிரீமியத்தில் 15% + தேர்டு-பார்ட்டி பிரீமியத்தில் 2.5%
காம்பிரிஹென்சிவ் பாலிசி – டூ வீலர்ஸ் 4 வருடங்கள் மற்றும் அதற்கும் மேல் பழமை யான வண்டி ஓன் டேமேஜ் பிரீமியத்தில் 17.5% + தேர்டு-பார்ட்டி பிரீமியத்தில் 2.5%
அனைத்து வண்டிகளுக்குமான ஸ்டாண்ட் அலோன் தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) பாலிசி வண்டியின் வயது ஏதுவாக இருந்தாலும் பிரீமியத்தில் 2.5%
மூலம்: ஐஆர்டிஏஐ

நான் ஏன் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்டாக வேண்டும்?

நீங்களே உங்களுக்கு முதலாளி

பிஒஎஸ்பி ஆக இருப்பதனால் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப வேலை செய்யலாம், அதுவே இதன் சிறப்பு அம்சம் ஆகும். நீங்கள் தான் உங்களுக்கு முதலாளி!

நேரக் கட்டுப்பாடுகள் இல்லை!

உங்களுக்கான வேலை நேரத்தை நீங்களே முடிவு செய்யலாம். இத்துடன் இதனை முழு நேர அல்லது பகுதி நேர வேலையாக செய்யலாமா என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வீட்டில் இருந்தபடி வேலை

டிஜிட் இன்சூரன்ஸ்-ல் பாலிசிகள் ஆன்லைன் மூலமாக  விற்கப்படுகிறது. எனவே, பிஒஎஸ்பி ஆன நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் மற்றும் பாலிசிகளை ஆன்லைன் செயல்முறைகளை பயன்படுத்தி விற்கலாம் மற்றும் விநியோகிக்கலாம் .

வெறும் 15 மணிநேர பயிற்சி

அங்கீகரிக்கப்பட்ட பிஒஎஸ்பி ஆவதற்கு ஐஆர்டிஏஐ-இன் 15 மணி நேர பயிற்சியை கட்டாயமாக முடித்திருக்க வேண்டும்; உண்மையை சொல்லப் போனால் இது அவ்வளவு கடினமான காரியமே இல்லை! எங்களோடு இணைந்து வேலை பார்க்க வெறும் 15 மணிநேர முதலீடு மட்டுமே!

அதிக வருமானத்தை ஈட்டுங்கள்

உங்களின் வருமானம் நீங்கள் வேலை பார்க்கும் நேரத்தை பொறுத்தது அல்ல , நீங்கள் விற்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இதைப் பற்றி புரிந்துகொள்ள மேலே உள்ள எங்களின் இன்கம் கால்குலேட்டரைப் பயன்படுத்தி, நீங்கள் விற்கும் பாலிசி ஒவ்வொன்றின் மூலம் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்!

முதலீடு எதுவும் தேவையில்லை

ஸ்மார்ட்போன், சிறந்த இணைய இணைப்பு/இன்டர்நெட் சேவை மற்றும் கண்டிப்பாக முடிக்க வேண்டிய 15 மணி நேர பயிற்சியைத் தவிர, நீங்கள் பிஒஎஸ்பி ஆக வேறு எதுவும் தேவையில்லை. சேரும் போது முன்பணம் கட்டாமல் அதிகமாக சம்பாதிக்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிஒஎஸ்பி ஏஜென்ட் ஆவதற்கான தகுதி வரம்பு என்ன?

நீங்கள் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக விரும்பினால், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும், மேலும், அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

எந்தெந்த ஆவணங்களை நான் சமர்ப்பிக்க வேண்டும்?

10 ஆம் வகுப்பு அல்லது மேல் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ், பான் (PAN ) கார்டு மற்றும் ஆதார் கார்டின் நகல் (முன் மற்றும் பின் பக்கம்) , உங்கள் பெயர் கொண்டுள்ள கான்செல்ட் செக் , மற்றும் 1 புகைப்படம் ஆகியவை அனைத்தும் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் ஆகும்.

பான் (PAN) கார்டு மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய இரண்டும் ஒருவருடையதாக இருக்க வேண்டுமா?

ஆம், செலுத்தப்படும் அனைத்து கமிஷன்களும் டிடிஎஸ் க்கு உட்பட்டது. உங்கள் பான் கார்டை வைத்து தான் வருமான வரி அதிகாரிகளுக்கு டிடிஎஸ்(TDS) செலுத்தப்படுகிறது.

நான் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை எப்போது விற்கத் தொடங்கலாம்?

நீங்கள் எங்களிடம் பதிவு செய்தவுடன், பிஒஎஸ்பி தேர்வுக்கான உங்கள் பயிற்சியைத் தொடங்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், உங்களுக்கு eCertificate (ஈ சான்றிதழ்) கிடைக்கும். அதற்குப் பின் நீங்கள் பிஒஎஸ்பி ஏஜென்ட் ஆகி இன்சூரன்ஸை விற்கத் தொடங்கலாம்.

பிஒஎஸ்பி ஆக சான்றிதழ் பெறுவதற்கு கட்டாயமாக ஏதேனும் பயிற்சி மேற்கொள்ள வேண்டுமா?

ஆம், நீங்கள் பிஒஎஸ்பி ஆக, பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இன்சூரன்ஸின் அடிப்படைகள், பாலிசி வகைகள், பாலிசி வழங்குவதற்கான செயல்முறை மற்றும் கிளைம்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போன்ற தலைப்புகள் யாவுமே இந்த பயிற்சியில் இடம்பெறும்.

டிஜிட்-ன் பார்ட்னராக நான் எவ்விதமான ஆதரவு சேவைகளைப் பெறலாம்?

அனைத்து டிஜிட் பார்ட்னர்களுக்கும் ரிலேஷன்ஷிப் மேனேஜர் என்று ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் ஏஜென்ட்டுகளுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவார். மேலும், டிஜிட் தளத்தில் விற்கப்படும் பாலிசிகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளிப்பார். ஏஜென்ட்டுகள் எங்களின் வாடிக்கையாளர் உதவிக் குழுவை தொடர்புகொள்ள,  partner@godigit.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கும் இமெயில் அனுப்பலாம்.

பிஒஎஸ்பி சான்றிதழை பெற்ற பின்பும் இன்சூரன்ஸ் பற்றிய என்னுடைய அறிவை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம்?

சான்றிதழ் பெற்ற எங்கள் பிஒஎஸ்பி-களுக்கு  இன்னும் பல பயிற்சிகளை அளிக்கிறோம். 

இந்த பயிற்சியானது உங்களின்  இன்சூரன்ஸ் துறை சார்ந்த அறிவை மேம்படுத்தவும், விற்பனை மற்றும் சேவை திறன்களை மேம்படுத்தவும் இது  உதவியாக இருக்கும். பின்வரும்  தலைப்புகளை பற்றி இதில் அறிந்துகொள்வீர்கள்:  

  • அட்வான்ஸ்டு இன்சூரன்ஸ் நாலேட்ஜ் டூ ஹாண்டில் காம்ப்ளிகேடட் கேஸஸ் (சிக்கலான வழக்குகளை கையாள்வதற்கு தேவையான  மேம்பட்ட இன்சூரன்ஸ்  அறிவு)

  • சமீபத்திய இன்சூரன்ஸ் திட்டங்கள் மற்றும் அவற்றை எப்படி விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

  • உங்கள் விற்பனை எண்ணிக்கையை  அதிகரிக்க உதவும் வகையில் வேறுபட்ட விற்பனை நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான வழிகள்.

நான் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு விற்பனை(சேல்ஸ்) துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமா?

விற்பனை(சேல்ஸ்) துறையில் அனுபவம்  இருந்தால் அது உங்களுக்கு  நன்மையாகும். அதே சமயம் அனுபவம்  இல்லை என்றாலும்  விண்ணப்பிக்கலாம். இந்தத் துறையில் ஒரு தொழிலை நீங்கள் உருவாக்கிக்கொள்ளாம்.

For list of Corporate & Individual Agents,  click here.