ஆஃபிஸ் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
ஆஃபிஸ் இன்சூரன்ஸ் என்பது ஒரு அலுவலகம் மற்றும் அதில் உள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. கோ டிஜிட்டின் பாரத ஸூக்ஷ்ம உத்யம் சுரக்ஷா பாலிசியானது (UIN - IRDAN158RP0002V01201920) தீ மற்றும் வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு எதிராக உங்களுக்கு காப்புறுதி அளிக்கிறது.
எனினும், பல வணிகம் சார்ந்த சொத்துக்கள் களவு ஏற்படும் அபாயம் உள்ளதால், கோ டிஜிட்டின் பாரத ஸூக்ஷ்ம உத்யம் சுரக்ஷா பாலிசியுடன் டிஜிட் பர்க்கலரி இன்சூரன்ஸ் பாலிசி (UIN - IRDAN158RP0019V01201920) என்ற ஒரு தனி பர்க்கலரி இன்சூரன்ஸ் பாலிசியையும் வழங்குகிறோம். இதன் மூலமாக, உங்கள் அலுவலகமானது தீ மற்றும் இயற்கை சீற்றங்கள் மற்றும் களவு காரணமாக ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
ஆஃபிஸ் இன்சூரன்ஸ் தேவை தானா என்ற சந்தேகமா?
மேலும் படிக்கவும்..
எஃப்ஐசிசிஐ - பின்கெர்டான்-ஆல் நடத்தப்பட்ட இந்திய ஆபத்து ஆய்வு 2021-இன் படி, இந்தியாவில் 9,329 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன, இது நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது.
வணிகங்கள் தொடர்ந்து செயல்படுவதில் இடையூறாக அமைவதில் தீ நான்காவது இடத்தை பிடிக்கிறது.(1)
ஐக்கிய நாடுகளின் பேரழிவு அபாயக் குறைப்பு அலுவலகத்தின் (யுஎன்டிஆர்ஆர்) அறிக்கையின்படி, 2000 முதல் 2019 ஆண்டு வரை ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், உலக அளவில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.. (2)
டிஜிட் வழங்கும் ஆஃபிஸ் இன்சூரன்ஸில் சிறப்பு என்ன?
பணத்திற்கான மதிப்பு: ஒரு வணிகத்தை நிர்வகிப்பது என்பது எளிதான காரியம் இல்லை, அதற்கு செலவு அதிகமாவது மட்டும் அல்ல, ஃபைன் பெலென்சும் தேவைப்படும். ஆஃபிஸ் இன்சூரன்ஸ் என்பது ஒரு மிகப் பெரிய டீல் ஆக இருந்தாலும், உங்கள் அலுவலகம் மற்றும் அதனுள் இருக்கும் அனைத்தும் கவர் செய்யப்படுவது அவசியமாகும்! பொதுவாக ப்ராபர்டி இன்சூரன்ஸின் பிரீமியம் அதிகமாக இருப்பதால், நாங்கள் டிஜிட்-ல் எங்களால் முடிந்த வரை உங்கள் சொத்தை உங்களால் கட்டக் கூடிய பிரீமியம் கொண்டு இன்சூர் செய்ய உதவுகிறோம்.
முழுமையான பாதுகாப்பு: வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற இயற்கையாக ஏற்படக் கூடிய பேரிடர்கள் முதல் சாதாரண கொள்ளைச் சம்பவங்கள் வரையிலான அனைத்து சேதங்களுக்கான பாதுகாப்புடன், எங்கள் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் பாலிசியானது அனைத்து நன்மைகளையும் வழங்கும் ஒரு முழுமையான தொகுப்பாகும்.
டிஜிட்டல் மயமானது: இந்தியாவின் முதல் ஆன்லைன் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான நாங்கள், எங்கள் அனைத்து ப்ராஸஸ்களையும், ஆஃபிஸ் இன்சூரன்ஸ் வாங்குவதிலிருந்து கிளைம் செய்வது வரை, எல்லாவற்றையும் டிஜிட்டலாகவே வைத்திருக்க முயன்றிருக்கிறோம். எனவே ப்ராபர்டி இன்சூரன்ஸ் கிளைம்களின் போது கூட, ஆய்வு செய்வது அவசியப்படும் போதும், நீங்கள் இதனை ஆன்லைனிலேயே செய்யலாம்! (ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைம்களை தவிர்த்து. ஏனெனில், இதற்கு இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ/IRDAI) ஆணைப்படி நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்)
அனைத்து வகையான பிசினஸ்களுக்கும் காப்புறுதி அளிக்கிறது: பெரிய ஆஃபிஸ் பில்டிங் அல்லது சிறிய ஆஃபிஸ் ஸ்பேஸ் என சிறியதோ, பெரியதோ, அனைத்து விதமான பிசினஸ்களுக்கும் எங்கள் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் ஏற்றதாகும்.
முழு பாதுகாப்பு: வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் தீ போன்ற இயற்கை சீற்றங்களுக்கு எதிராக காப்புறுதி வழங்குவதோடு, எங்கள் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் ஆனது ஒரே பாலிசிக்குள் அனைத்து நன்மைகளையும் வழங்கும் முழுமையான தொகுப்பாகவும் அமைகிறது.
டிஜிட் வழங்கும் ஆஃபிஸ் இன்சூரன்ஸில் என்னென்ன அடங்கும்?
இதில் எது அடங்காது?
வேண்டுமென்றே, விருப்பத்தோடு அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்படும் அழிவு செயல்களுக்கு இதில் காப்பீடு அளிக்கப்படமாட்டாது.
பின்வரும் இழப்புகள் இதில் காப்பீடு அளிக்கப்படமாட்டாது.
மர்மமான முறையில் காணாமல் போதல் மற்றும் விவரிக்கப்படாத இழப்புகள் இதில் பாதுகாக்கப்படாது.
கூடுதல் மதிப்புடைய அருங்கலைப் பொருள், கலைப்பொருள், அல்லது விலையுயர்ந்த கற்கள் இந்த பாலிசியில் பாதுகாக்கப்படாது.
இயற்கை சீற்றம், தீ, வெடிப்பு, கசிவு போன்றவற்றின் விளைவாக ஏற்பட்ட இயந்திரச் செயலிழப்புகளுக்கு இந்த பாலிசி காப்புறுதி வழங்காது. .
போர், அல்லது அணு விபத்து காரணமாக ஏற்பட்ட இழப்புகள் இந்த பாலிசியில் பாதுகாக்கப்படாது.
ஆஃபிஸ் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
டிஜிட்டில் உள்ள எங்கள் இன்சூரன்ஸ் ஆனது வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து உங்கள் அலுவலகத்தைப் பாதுகாக்கிறது. ஆனால், உங்கள் அலுவலகத்தில் களவு ஏற்படும் அபாயமும் இருப்பதால், நாங்கள் கவரேஜ் ஆப்ஷன்களை பின்வருமாறு வேறுபடுத்தி காட்டியுள்ளோம்:
ஆப்ஷன் 1 | ஆப்ஷன் 2 | ஆப்ஷன் 3 |
உங்கள் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கு (உள்ளடக்கங்கள்) மட்டுமே காப்புறுதி அளிக்கிறது. | உங்கள் அலுவலகம் மற்றும் அதில் உள்ள பொருட்கள் (உள்ளடக்கங்கள்) ஆகிய இரண்டிற்குமே காப்புறுதி அளிக்கிறது. | உங்கள் கட்டிடத்திற்கு காப்புறுதி வழங்குகிறது . |
ஆஃபிஸ் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
‘கண்டன்ட்’ என்றால் என்ன? ஆஃபிஸ் இன்சூரன்ஸில் உள்ள கண்டன்ட் என்பது உங்கள் அலுவலகத்தில் உள்ள முதன்மை பொருட்களைக் குறிக்கும். உதாரணமாக, நிலநடுக்கம் அல்லது வேறு ஏதேனும் இயற்கை சீற்றங்களால் உங்கள் அலுவலகத்தின் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு பாலிசி மூலம் காப்புறுதி வழங்கப்படும்.
'பில்டிங்' என்றால் என்ன?: பில்டிங் என்பது அலுவல்கத்தின் கட்டிடத்தைக் குறிக்கிறது.
யாருக்கு ஆஃபிஸ் இன்சூரன்ஸ் தேவைப்படும்?
பொதுவாகவே, ப்ராபர்டி இன்சூரன்ஸ் என்பது சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்ற கருத்து இருக்கிறது. ஆனால், டிஜிட்-ல், தங்களின் பிசினஸிற்காக அலுவலகங்களை வாடகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு கூட நாங்கள் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசிக்களை வழங்குகிறோம். எனவே, நீங்கள் இந்த வகையை சேர்ந்தவராக இருந்தால், ப்ராபர்டி இன்சூரன்ஸ் உங்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது!
உங்கள் பிசினஸிற்கு நீங்கள் சிறிய அலுவலகம் வைத்திருந்தால் கூட, டிஜிட்-ன் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் ஆனது உங்களுக்கு ஏற்றதாக அமையும். இயற்கை பேரிடர்கள் மற்றும் கொள்ளைச் சம்பவம் போன்ற உங்கள் கட்டுப்பாட்டினை மீறிய சூழ்நிலைகளில் நிகழக்கூடிய அபாயங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து இந்த இன்சூரன்ஸ் உங்கள் பிசினஸை பாதுகாக்கிறது.
நீங்கள் பல்பொருள் அங்காடிகளை சில இடங்களில் வைத்து நடத்துபவராகவோ, உணவகம் அல்லது நடுத்தர அளவிலான நிறுவனத்தை நடத்துபவராகவோ இருந்தாலும், கொள்ளைச் சம்பவம், தீ விபத்து, குண்டுவெடிப்பு அல்லது வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றினால் ஏற்படக் கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து நடுத்தர அளவிலான பிசினஸ் உரிமையாளர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பளிக்கும் வகையில் ப்ராபர்டி இன்சூரன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பெரிய அளவில் பிசினஸ் செய்பவராக இருந்து பல ப்ராபர்டிகளுக்கு சொந்தகாரராக இருக்கும் பட்சத்தில், ப்ராபர்டி இன்சூரன்ஸ் உங்கள் அனைத்து ப்ராபர்டிக்களையும் பாதுகாப்பதற்கு அவசியமாகும். இது பிசினஸில் ஏற்படக் கூடிய அபாயங்களை குறைக்க உதவுவது மட்டுமின்றி, பொறுப்பான முறையில் உங்கள் நிறுவனத்தை நடத்துவதின் காரணமாக உங்கள் மீதான நல்லெண்ணத்தையும் பெருக்குகிறது.
ஆஃபிஸ் இன்சூரன்ஸ் வழங்கும் நன்மைகள் யாவை?
இந்தியாவில் உள்ள பில்டிங் இன்சூரன்ஸின் முக்கிய நன்மைகளைப் பாருங்கள்:
எதிர்பாராத சூழலுக்கும் கவரேஜ் வழங்குகிறது - தீ, கொள்ளை, இயற்கை பேரிடர்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் போன்ற அனைத்து எதிர்பாராத சூழல்கள் காரணமாக ஏற்படக் கூடிய இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு எதிராக இது உங்கள் அலுவலகத்தையும் அதன் உள்ளடக்கங்களையும் பாதுகாக்கிறது..
பிசினஸ் ரிஸ்க்கை குறைக்கிறது - உங்கள் அலுவலகம் மற்றும் அதன் உள்ளடக்கங்களை பாதுகாக்க தனிப்பயனாக்கப்பட்ட பாலிசியாக ஆஃபிஸ் இன்சூரன்ஸ் அமைகிறது. இதனால் நீங்கள் தீ விபத்து, நிலநடுக்கம், வெள்ளம், கொள்ளை போன்ற நிகழ்வுகளால் ஏற்படக் கூடிய இழப்புகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
மன நிம்மதி - உங்கள் அலுவலகம் காப்புறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், நீங்கள் உங்கள் அலுவலகம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இன்றி இருக்கலாம். ஏனென்றால், உங்கள் இன்சூரர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்!
ஆஃபிஸ் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியமத்தை பின்வரும் காரணிகள் பாதிக்கும்:
கட்டிடத்தின் வகை - நீங்கள் இன்சூர் செய்யும் கட்டிடம் உங்கள் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, சிங்கிள் ஃப்ளோர் ஆஃபிஸ் ஸ்பேஸை விட முழு பில்டிங் அதிக பிரீமியத்தைக் கொண்டிருக்கும்.
கட்டிடம் எவ்வளவு பழமையானது - மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளைப் போலவே, பிரீமியம் விலைகளைத் தீர்மானிப்பதில் கட்டிடம் எவ்வளவு பலமியானது என்பது முக்கிய காரணியாகும். பழைய கட்டிடம் என்றால் அதன் பிரீமியம் குறைவாக இருக்கும் மற்றும் புதியது என்றால் அதிகமாக இருக்கும்.
சொத்தின் பரப்பளவு - இன்சூர் செய்யப்படும் அலுவலகம் எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதின் அடிப்படையில் பிரீமியம் மாறுபடும். ஏனென்றால், மிகப் பெரிய சொத்து என்றால் அதிக சம் இன்சூர்ட் கொண்டிருக்கும், எனவே அதிக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் - பல அலுவலகங்களில் திருட்டு மற்றும் தீ விபத்து போன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, அத்தகையவை உங்கள் அலுவலகத்தில் இருந்தால், ரிஸ்க் மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைவாக இருக்கும்.
கூடுதல் கவரேஜ்கள் - ஆஃபிஸ் இன்சூரன்ஸ் ஆனது முக்கியமாக அலுவலகம் மற்றும் அதன் உள்ளடக்கங்களை உள்ளடக்கும். அதே வேளையில், அரிதான பொருட்கள், கலை நயமிக்க பொருட்கள் மற்றும் நகைகள் போன்ற பிற விலையுயர்ந்த உடைமைகளும் அங்கு இருக்கலாம். இவற்றை கவர் செய்ய, நீங்கள் கூடுதல் கவரேஜை வழங்கும் ஆட்-ஆன்களைத் தேர்வுசெய்யலாம். இதன் மூலம் உங்கள் பிரீமியம் அதிகரிக்கும்.
நான் ஏன் ஆன்லைனில் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்
பாரபம்ரிய இன்சூரன்ஸ் நிறுவனங்களில் கூட பல ஆஃப்லைன் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன.
இருப்பினும், ஆன்லைனில் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் வாங்குவதனால் உங்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கும்:
நேரத்தை சேமிக்கலாம்: உங்கள் ஆஃபிஸ் ஸ்பேஸிற்கு ஆன்லைனில் ஆஃபிஸ் இன்சூரன்ஸை சில நிமிடங்களில் வாங்கிவிடலாம்
விரைவான கிளைம்ஸ்: எங்களைப் போன்ற ஆன்லைன் இன்சூரர் மூலம், கிளைம்கள் எளிதில் விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன. இதற்கு நீங்கள் எங்கள் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் சுய-ஆய்வு செயலமுறைக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.
குறைவான பேப்பர்வொர்க்: டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதால், இதில் பேப்பர்வொர்க் அதிகம் இருக்காது! தேவைப்பட்டால் மட்டுமே ஆவணங்கள் கேட்கப்படும், அதுவும் சூழ்நிலையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு ஆவணங்கள் தான் கேட்கப்படும்.
பில்டிங் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிடுவதற்கான டிப்ஸ்
சரியான ஆஃபிஸ் இன்சூரன்ஸை தேர்வு செய்வது என்பது குழப்பமாகத் தான் இருக்கும். என்ன தான் இருந்தாலும், உங்கள் ஆஃபிஸ் மற்றும் உள்ளடக்கங்களை பாதுகாக்க நீங்கள் சிறந்த வழியைத் தான் தேர்வு செய்வீர்கள்!
நீங்கள் சரியான ஆஃபிஸ் இன்சூரன்ஸை தேர்வு செய்ய முடிவெடுக்கும் வகையில், நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில முக்கிய அம்சங்கள் இங்கே உள்ளன:
காப்புறுதியின் நன்மைகள் - உங்கள் இன்சூரன்ஸில், உங்களுக்குக் கிடைக்கப்பெறும் காப்புறுதிப் பாதுகாப்பு தான் மிக முக்கியமானதாகும். உங்கள் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் எவற்றிக்கு எதிராக காப்புறுதி வழங்குகிறது? அது உங்கள் ஆஃபிஸ் ஸ்பேஸ் மட்டுமே கவர் செய்யுமா, அல்லது அதன் உள்ளடக்கங்களையும் கவர் செய்யுமா? எனவே, உங்களுக்கு ஏற்ற சரியான பிளானை பற்றித் தெரிந்து கொள்வதற்கு, எப்போதுமே எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது, எதற்கெல்லாம் வழங்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
சம் இன்சூர்ட் - சம் இன்சூர்ட் என்பது நீங்கள் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பெறும் முழுத் தொகையை குறிக்கிறது. எனவே, உங்கள் அலுவலகத்தில் உள்ள உள்ளடங்களின் மொத்த மதிப்பின் அடிப்படையில் உங்களின் இன்சூரன்ஸ் தொகையைத் தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆஃபிஸ் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள். அதிக இன்சூரன்ஸ் தொகை என்பது அதிக பிரீமியத்தைக் குறிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எளிமையான கிளைம்ஸ் - எந்தவொரு பாலிசியிலும் கிளைம்கள் தான் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில், நீங்கள் ஒரு இழப்பை சந்திக்கும் போது, அதுவே உங்களுக்கு தக்க வகையில் உதவும்! எனவே, கிளைம் செட்டில்மென்ட் பதிவுகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் ஆஃபிஸ் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யவும். சிறந்த கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தைக் கொண்ட மற்றும் உங்கள் கிளைம்களை விரைவாக செட்டில் செய்யும் இன்சூரரை தேர்ந்தெடுப்பது நல்லது!
கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள் - சில நேரங்களில், அடிப்படையான (பேசிக்) பிளானில் இருக்கும் பெனிஃபிட்களையும் தாண்டி உங்களுக்கு காப்புறுதி தேவைப்படும். இங்கு தான் ஆட்-ஆன்கள் உதவி புரியும். வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வெவ்வேறு விதமான ஆட்-ஆன்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பினை மக்களுக்கு வழங்குகிறார்கள். உங்கள் விருப்பத் தேர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கும் உங்கள் அலுவலகத்திற்கும் ஏற்ற ஒன்றை தேர்வு செய்யவும்.
இந்தியாவிலுள்ள ஆன்லைன் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்தியாவில் ஆஃபிஸ் இன்சூரன்ஸ் கட்டாயமானதா?
இல்லை, இந்திய சட்டங்களின் படி ஆஃபிஸ் இன்சூரன்ஸ் இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை, ஆனால், சாத்தியமான இழப்புகளைத் தவிர்க்கவே இது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம், எதிர்பாராத சூழ்நிலைகளில் உங்கள் அலுவலகம் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.