உங்கள் வீடு, கடை மற்றும் வணிகத்திற்கான ஃபயர் இன்சூரன்ஸ்
ஸிரோ பேப்பர் ஒர்க். ஆன்லைன் செயல்முறை

ஃபையர் இன்சூரன்ஸ் என்பது ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு முக்கிய பகுதியாகும். இது உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த சொத்துக்களான அடுக்குமாடி கட்டிடங்கள், அலுவலக இடங்கள் மற்றும் கடைகள் போன்றவற்றை தீயினால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

பொறுப்பு துறப்பு - ஃபையர் இன்சூரன்ஸ் ஒரு ஸ்டான்ட்அலோன் புராடக்ட் அல்ல. இதனை வாங்குவதற்கு நீங்கள்  கோ டிஜிட், பாரத் லகு உத்யம் சுரக்ஷா மற்றும்/அல்லது கோ டிஜிட் பாரத் சூக்ஷ்மா உத்யம் சுரக்ஷா மற்றும் வீட்டிற்கு - கோ டிஜிட், பாரத் க்ரிஹா ரக்ஷா ஆகியவற்றையும் வாங்க வேண்டும்.  

ஃபையர் இன்சூரன்ஸ் ஏன் முக்கியம் என்று தெரியவில்லையா?

மேலும் படிக்கவும்..

1

தொடர்ந்து தொழில் செய்வதில் சிக்கலைகளை ஏற்படுத்துவதில், தீ விபத்துகள் 3வது பெரிய ஆபத்தாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (1)

2

ஏடிஎஸ்ஐ வழங்கிய ஒரு அறிக்கையின்படி, குடியிருப்பு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. (2)

3

2021-ல் மட்டுமே 1.6 மில்லியன் தீ விபத்துகள் நாட்டில் பதிவிடப்பட்டுள்ளது.(3)

டிஜிட் வழங்கும் ஃபையர் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?

பணத்திற்கான மதிப்பு : சொத்துக்களை உள்ளடக்குவது என்பது பெரிய விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக, இதில் நிறைய ஆபத்து இருக்கிறது! எனவே, அதற்கான பிரீமியங்கள் பொதுவாக அதிகமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். எவ்வாறாயினும், தீ மற்றும் பிற சாத்தியமான சேதங்களில் இருந்து உங்கள் சொத்தை இன்சூர் செய்ய உங்களுக்கு சிறந்த மற்றும் மிகவும் மலிவு பிரீமியத்தை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

டிஜிட்டல் நட்பு: இந்தியாவின் முதல் டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதால், ஃபையர் இன்சூரன்ஸ் வாங்குவது முதல் கிளைம்கள் செய்வது வரை டிஜிட்டல் முறையில் எங்களின் அனைத்து செயல்முறைகளையும் நாங்கள் முயற்சி செய்துள்ளோம். எனவே ஒரு ஆய்வு தேவைப்படும்போதும், நீங்கள் அதை ஆன்லைனில் செய்யலாம்! (ரூ. 1 லட்சத்துக்கும் மேலான கிளைம்கள் தவிர. ஐஆர்டிஏஐ படி- (IRDAI- காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) அவை கைமுறையாக மட்டுமே செய்யப்பட வேண்டும்.

அனைத்து தொழில் வகைகளையும் உள்ளடக்கியது: உங்கள் குடும்ப தொழில், அலுவலக இடம், கிரானா ஸ்டோர் அல்லது கடைகளின் சங்கிலியைப் பாதுகாக்க விரும்பினாலும், எங்கள் ஃபையர் இன்சூரன்ஸ் அனைத்து வகையான தொழில்களுக்கும் ஏற்றது, அவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் பொருந்தும்.

வாடகைதாரர்களுக்கான திட்டங்கள்: பல ஆண்டு காலமாக அதிகளவில் வாடகைக்கு இடங்கள் தேர்ந்தெடுக்கின்றன. இடம் சொந்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான், உங்களுக்குச் சொந்தமான பொருட்களை மட்டுமே வாடகைக்கு எடுப்பவர்களுக்கான திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம். எனவே, உங்கள் வாடகை குடியிருப்பை இன்சூரன்ஸில் கவர் செய்ய  விரும்பினாலும், நீங்கள் அவ்வாறு செய்யலாம்!

டிஜிட் மூலம் பெறப்படும் ஃபையர் இன்சூரன்ஸில் என்னென்ன அடங்கும்?

ஃபையர் இன்சூரன்ஸின் வகைகள்:

டிஜிட்டில், எங்கள் ஃபையர் இன்சூரன்ஸானது ஒரு தனித்த பாலிசி அல்ல, முழுமையான காவேரேஜின் ஒரு பகுதியாகும். அதாவது, தீ மற்றும் இயற்கை சீற்றங்கள் வரை அனைத்திலிருந்தும் காப்புறுதி அளிக்கிறது. நாங்கள் வழங்கும்  கவரேஜ் ஆப்ஷன்களில் சில பின்வருமாறு:  

ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 ஆப்ஷன் 3
உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்களுக்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது. உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் பில்டிங் ஆகிய இரண்டிற்கும் காப்புறுதி வழங்குகிறது. உங்கள் பில்டிங்கிற்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது.

எங்கள் ஃபையர் இன்சூரன்ஸின் சலுகைகள்

  •  உங்கள் வீட்டிற்கான ஃபையர் இன்சூரன்ஸ் - எங்கள் ஃபையர் இன்சூரன்ஸ் என்பது எங்கள் ஹோம் இன்சூரன்ஸில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கிய கவரேஜ் ஆகும். எனவே உங்களிடம் அபார்ட்மெண்ட், வில்லா அல்லது தனி கட்டிடம் இருந்தாலும்; எங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பாலிசியானது தீயினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டும் காப்புறுதி வழங்காமல், வெடிப்புகள், வெள்ளம் மற்றும் புயல்கள் போன்ற பிற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புகளுக்கும் காப்புறுதி வழங்கும்.  

  • உங்கள் தொழில் மற்றும் கடைக்கான  ஃபையர் இன்சூரன்ஸ்- நாங்கள் வழங்கும் ஃபையர் இன்சூரன்ஸ் அனைத்து பிசினஸ் மற்றும் ஷாப் இன்சூரன்ஸிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சிறிய மற்றும் பெரிய வணிகங்கள் மற்றும் பொட்டிக்குகள், அலுவலக இடங்கள், கிரானா ஸ்டோர்கள் போன்ற அனைத்து கடைகளும் அடங்கும். இந்த பிசினஸ் மற்றும் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசியானது தீயினால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு மட்டும் காப்புறுதி வழங்காமல், புயல்கள், நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படக்கூடிய இழப்புகளுக்கும் காப்புறுதி அளிக்கிறது. 

யாருக்கு ஃபையர் இன்சூரன்ஸ் தேவை?

தீ விபத்துகள் கணிக்க முடியாதவை. எனவே சொத்து உள்ள எவரும் தீயினால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து தங்கள் வீடு அல்லது வணிகத்தை பாதுகாக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்கள்

பல ஆண்டுகளாக அது உங்கள் வீடாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் புதிய கனவு இல்லமாக இருந்தாலும் சரி, வீடு என்பது எவருக்கும் மிகவும் விலையுயர்ந்த உடைமையாகும். மேலும், குடியிருப்பு கட்டிடங்களில் அடிக்கடி தீ ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, உங்கள் பணத்தையும் வீட்டையும் பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய மிக சிறிய வேலை தீயிலிருந்து அவற்றை பாதுகாப்பதாகும்.

வாடகைக்கு எடுப்பவர்கள்

ஃபையர் இன்சூரன்ஸ் என்பது சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே என்றும் பெரும்பாலான இன்சூரர்களுக்கு இது உண்மையாக இருக்கலாம் என்றும் மக்கள் பொதுவாக கருதுகின்றனர். இருப்பினும், டிஜிட்டில் நாங்கள் வாடகை சொத்துகளுக்கும் ஃபையர் இன்சூரஸை வழங்குகிறோம். எனவே, உங்களிடம் வாடகை அலுவலக இடம் அல்லது வாடகை அடுக்குமாடி இருந்தால், உங்களுக்குச் சொந்தமான பாகங்களுக்கு ஃபையர் இன்சூரஸைப் பெறலாம்; உங்கள் வீட்டின் உள்ளடக்கங்கள் போன்றவை இதில் அடங்கும். 

சிறு தொழில் உரிமையாளர்கள்

நீங்கள் ஒரு சிறிய பொது அங்காடியை நடத்திக் கொண்டிருந்தாலும் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட ஃபேஷன் மற்றும் கைவினைப் பொருட்களுடன் சிறிய பொட்டிக்கை நடத்தினாலும், எங்கள் ஃபையர் இன்சூரன்ஸ் அனைத்து வகையான தொழில்களுக்கும் ஏற்றது. நீங்கள் ஒரு தனிப்பட்ட, சிறு தொழிலை நடத்தும் ஒருவராக இருந்தால், தீயினால் ஏற்படக்கூடிய சாத்தியமான இழப்புகள் மற்றும் அபாயங்களிலிருந்து உங்கள் தொழிலைப் பாதுகாப்பது இன்றியமையாததாக இருக்கும். 

நடுத்தர தொழில் நடத்துபவர்கள்

நீங்கள் பொது கடைகள், உணவகங்கள் அல்லது நடுத்தர அளவிலான நிறுவனங்களின் சங்கிலியை நடத்தினால்; தீயினால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடுகட்ட நடுத்தர அளவிலான வணிக உரிமையாளர்களுக்கு எங்கள் ஃபையர் இன்சூரன்ஸ் கவரேஜ் பொருத்தமானது; அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் சரி இந்த கவரேஜ் அனைவருக்கும் பொருந்தும்.

பெரிய நிறுவனங்கள்

உங்கள் தொழிலின் பெரிய செயல்பாடுகளின் காரணமாக நீங்கள் பல சொத்துக்களை வைத்திருக்கும் ஒருவராக இருந்தால், ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் என்பது ஒன்றல்ல உங்கள் எல்லா சொத்துக்களையும் பாதுகாப்பதில் இன்றியமையாததாக அமைகிறது. இது தொழில் சார்ந்த அபாயத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், பொறுப்பான தொழில் நிறுவனமாக இருப்பதற்கான நல்லெண்ணத்தை மேம்படுத்தவும் உதவும்.

ஃபையர் இன்சூரன்ஸில் உள்ள தனிநபர் சொத்துகளின் வகைகள்

தனிநபர் அபார்ட்மெண்ட்

இது ஹவுசிங் சொசைட்டிகள் அல்லது தனியான கட்டிடங்களின் ஒரு பகுதியாக இருக்கும் தனியான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கானது. இது உங்களுக்குச் சொந்தமான அல்லது நீங்கள் வாடகைக்கு எடுத்த பிளாட்டாக இருக்கலாம். எங்கள் தயாரிப்பு இருவருக்கும் ஏற்றது!

தனியான கட்டிடம்

நீங்களும் உங்கள் குடும்பமும் ஒரு தனியான கட்டிடத்தில் வசித்து வரலாம்,  முழு கட்டிடத்திலும் பிளாட்களை சொந்தமாக அல்லது வாடகைக்கு எடுத்தும் வசித்து வரலாம். இந்த நிலையில், ஃபையர் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் இவை அனைத்திற்கும் காப்புறுதி பெறுவதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

தனியான வில்லா

நீங்கள் ஒரு தனியான வில்லா அல்லது வீட்டைச் சொந்தமாக வைத்திருந்தால் அல்லது வாடகைக்கு எடுத்திருந்தால், உங்கள் வில்லாவையும் அதன் உள்ளடக்கங்களையும் தீயின் அபாயத்திலிருந்து பாதுகாக்க ஃபையர் இன்சூரன்ஸ்  இன்றியமையாதது.

ஃபையர் இன்சூரன்ஸில் உள்ள தொழில் சார்ந்த வணிக சொத்துகளின் வகைகள்

ஆட்டோமொபைல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்

முதன்மையாக மொபைல் ஃபோன்கள், மொபைல் பாகங்கள் அல்லது பிற எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகங்கள்.  

பலசரக்கு, பல்பொருள் அங்காடி மற்றும் ஸ்டேஷனரி கடைகள்

அருகிலுள்ள மளிகை கடைகள் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சூப்பர்மார்க்கெட்களும் மற்றும் பல்பொருள் அங்காடிகளும்; அனைத்து மளிகை கடைகளுக்கும், பல்பொருள் அங்காடிகளுக்கும் கூட ஃபையர் இன்சூரன்ஸில் காப்புறுதி பாதுகாப்பளிக்கப்படுகிறது.

அலுவலகங்கள் மற்றும் கல்வி பயிலும் இடங்கள்

ப்ராபர்டி இன்சூரன்ஸின் ஒரு பகுதியாக இது அலுவலக வளாகங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் கிளாஸ்கள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழுதுபார்ப்புகள் மற்றும் வீடு சார்ந்த உதவிகள்

இந்த வகையானது மர வேலைகள் மற்றும் பிளம்பிங் முதல் மோட்டார் கரேஜ்கள் மற்றும் என்ஜினியரிங் வொர்க்ஷாப்புகள் வரை அனைத்திற்கும் காப்புறுதி அளிக்கிறது.    

பர்சனல் லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபிட்னஸ்s

உங்களுக்கு விருப்பமான மால்கள் மற்றும் துணிக்கடைகளிலிருந்து, ஸ்பாக்கள், ஜிம்கள் மற்றும் பிற கடைகள்; பர்சனல் லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபிட்னஸ் துறையில் உள்ள அனைத்து பிசினஸ்களுக்கும் கூட டிஜிட்-ன் ப்ராபர்டி இன்சூரன்ஸ் காப்புறுதி அளிக்கிறது.

உணவு மற்றும் தின்பண்டங்கள்

ஆம், அனைவரும் உணவருந்தும் ஒரு இடம்! காஃபி ஷாப்கள் மற்றும் ஃபுட் ட்ரக்-களிலிருந்து உணவகங்கள் மற்றும் பேக்கரிக்கள் வரை; உணவருந்தும் அனைத்து விதமான இடங்களுக்கும் கூட டிஜிட்-ன் ஃபையர் இன்சூரன்ஸ் பொருந்தக் கூடியது.  

சுகாதாரம்

தீ மற்றும் பிற அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான சொத்துகளில் ஒன்று; மருத்துவமனைகள், கிளினிக்குகள், நோயறிதல் மையங்கள் மற்றும் மருந்தகங்கள் மற்றும் பிற மருத்துவக் கடைகளையும் டிஜிட்டின் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் உள்ளடக்குகிறது.

சேவை மற்றும் பிற

மேலே குறிப்பிட்டுள்ள வகைகளைத் தவிர, டிஜிட் வழங்கும் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு பகுதியாக ஃபையர் இன்சூரன்ஸ் என்பது அனைத்து அளவிலான மற்றும் வகையான வணிகங்களுக்கும் ஏற்றது.

இந்தியாவில் ஃபையர் இன்சூரன்ஸ் பற்றி ஆன்லைனில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஃபையர் இன்சூரன்ஸ் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு பகுதியா?

ஆம், டிஜிட்டில், நாங்கள் வழங்கும் கோ டிஜிட், பாரத் லகு உத்யம் சுரக்ஷா, கோ டிஜிட், பாரத் சூக்ஷ்ம உத்யம் சுரக்ஷா மற்றும் கோ டிஜிட், பாரத் க்ரிஹா ரக்ஷா ஆகியவற்றின் ஒரு பகுதியாக தீ விபத்து காரணமாக ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறோம். இந்த பாலிசி உங்கள் சொத்துக்களை களவு மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்ற பிற ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கிறது.

ஃபையர் இன்சூரன்ஸ் பெறுவதற்கான தகுதி என்ன?

சொத்து வைத்திருக்கும் எவரும் அல்லது ஒரு சொத்தை வாடகைக்கு எடுத்தவரும் ஆன்லைனில் ஃபையர் இன்சூரன்ஸை வாங்கலாம்.

ஃபையர் இன்சூரன்ஸ் பெறுவதற்கு எஃப்ஐஆர் (FIR) கட்டாயமா?

இல்லை, திருட்டு வழக்குகளில் மட்டுமே எஃப்ஐஆர் என்பது கட்டாயமாக கருதப்படுகிறது.

ஃபையர் இன்சூரன்ஸ் மூலம் முழு ஹவுசிங் சொசைட்டிக்கும் நான் இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

ஆம் உங்களால் முடியும். டிஜிட்டின் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் (ஸ்டாண்டார்டு ஃபையர் மற்றும் பெரில்ஸ் பாலிசி) திட்டங்கள் ஹவுசிங் சொசைட்டிகள் மற்றும் வளாகங்களுக்கும் பொருந்தும்.