ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்)உடனான டூ-வீலர் இன்சூரன்ஸ்
நாம் அனைவரும் நாம் விரும்பும் விஷயங்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். இது மனித இயல்பு. குறிப்பாக, இது உங்கள் இரு சக்கர வாகனமாக இருந்தால், அதிலும் நீங்கள் அந்த வாகனத்தை வாங்கி கொஞ்ச நாட்களே ஆகியிருந்தால்! நமக்குப் பிரியமான விஷயங்கள் எப்போதுமே புதியவையாக இருப்பதை உறுதிசெய்யக்கூடிய ஏதாவது ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நிச்சயமாக, அதெற்கென்று ஒரு மேஜிக் கிடையாது. ஆனால், அது மாதிரியான மேஜிக் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பைக் இன்சூரன்ஸில், பூஜ்ஜிய தேய்மான இன்சூரன்ஸ் என்ற ஒரு திட்டத்தில் உள்ளது. உங்கள் பைக்கைப் புதியதாக, நீங்கள் வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருக்க இது உதவும். வேடிக்கையாக சொன்னால், இது உங்கள் பைக் பழைய பைக்காக மாறுவதை எதிர்க்கக்கூடிய கிரீம் என வைத்துக்கொள்ளலாம்.
புரியவில்லையா? காத்திருங்கள், நாங்கள் இதனை விளக்கமாக கூறுகிறோம்.
ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
ஜீரோ டிப்ரிஸியேஷன் என்றால் என்ன என்பதை விளக்கும் முன், டிப்ரிஸியேஷன் என்றால் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். தேய்மானம் என்பது உங்கள் பைக் பழையதாக ஆக ஆக அதன் மதிப்பு குறைவது ஆகும். இன்னும் சுலபமாக சொன்னால், புதியதாக இருக்கும் போது உங்கள் பைக்கின் மதிப்பு ரூ. 1 லட்சம் என்றால் அதன் தற்போதைய மதிப்பு ரூ. 50,000 ஆகும். ரூ. 50,000 என்பது பைக்கில் நீங்கள் சந்தித்த தேய்மானம்.
ஆனால், உங்கள் பைக்கிற்கு பூஜ்ஜிய தேய்மான இன்சூரன்ஸ் இருந்தால், தேய்மானத்திற்காக தொகை எதுவும் கழிக்கப்படாமல், மாற்றப்பட வேண்டிய பாகங்களின் முழுச் செலவையும் இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். எளிமையான வார்த்தைகளில், பூஜ்ஜிய தேய்மானம் காப்பீடு என்பது உங்கள் காப்பீட்டாளரின் பார்வையில், உங்கள் பைக்கை புதியதாக வைத்திருக்கும்.
சரிபார்க்க: வெவ்வேறு ஆட்-ஆன் காப்பீடுகளை எடுத்துக்கொள்ளும் போது பெறக்கூடிய பிரீமியத்தை பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கணக்கிடுங்கள்.
இரு சக்கர வாகனங்களின் டிப்ரிஸியேஷன்
வாகனத்தின் பயன்பாட்டு காலம் |
டிப்ரிஸியேஷன் % |
6 மாதங்களுக்கு உள்ளானது |
5% |
6 மாதங்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கு மிகாமல் இருத்தல் |
15% |
1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கு மிகாமல் இருத்தல் |
20% |
2 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் |
30% |
3 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் |
40% |
4 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் |
50% |
ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) உடனான மற்றும் இல்லாத பைக் இன்சூரன்ஸ்
|
ஜீரோ டிப்ரிஸியேஷன் உடனான பைக் இன்சூரன்ஸ் |
ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) இல்லாத பைக் இன்சூரன்ஸ் |
ஜீரோ டிப்ரிஸியேஷன் உடனான பைக் இன்சூரன்ஸ் |
கிளைம் செலுத்தும் நேரத்தில் தேய்மானம் கருதப்படாமல் இருப்பதால், தொகை அதிகமாக உள்ளது. |
உங்கள் இரு சக்கர மற்றும் அதன் உதிரிபாகங்களின் தேய்மானம் கணக்கிடப்படுவதால் தொகை குறைவாக உள்ளது. |
பாகங்கள் மீதான தேய்மானம் |
கவர்(காப்பீடு) செய்யப்படுகிறது |
கவர்(காப்பீடு) செய்யப்படவில்லை |
டூ-வீலரின் பயன்பாட்டு காலம் |
இந்த ஆட்-ஆன் மூலம், தேய்மானம் கணக்கிடப்படாததால், உங்கள் இரு சக்கர வாகனத்தின் பயன்பாட்டு காலம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. |
தேய்மானம் என்பது உங்கள் இரு சக்கர வாகனம் எவ்வளவு பழையது என்பதன் அடிப்படையில் அமையும். |
டூ-வீலர் பாகங்கள் மீது பொருந்தக்கூடிய தேய்மான விகிதம்
பைக்கின் பாகங்கள் |
பொருந்தக்கூடிய தேய்மானம் (சதவீதத்தில்) |
நைலான்/ரப்பர்/டயர்கள் மற்றும் டியூப்கள்/பிளாஸ்டிக் பாகங்கள் / பேட்டரிகள் |
50% |
ஃபைபர்/கண்ணாடி பொருட்கள் |
30% |
மற்ற அனைத்து கண்ணாடியால் ஆன பாகங்கள் |
Nil |
ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) உடனான பைக் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிக
இதில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது?
- நைலான், ரப்பர், ஃபைபர்கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் போன்ற தேய்மானம் அடையக்கூடிய பைக் பாகங்களுக்கான இழப்பீட்டுத் தொகை.
- உங்கள் பைக் இன்சூரன்ஸ் செல்லுபடியாகும் வரை, உங்களின் அனைத்து பைக் இன்சூரன்ஸ் கிளைம்களுக்கும் பூஜ்ஜிய தேய்மான பாதுகாப்பு பொருந்தும்.
- உங்களிடம் தற்போது பூஜ்ஜிய தேய்மானம் காப்பீடு இல்லை என்றால், உங்கள் புதுப்பித்தலின் போதும் அதைச் சேர்க்கலாம்.
இதில் என்ன உள்ளடக்கப்படவில்லை?
- 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பைக்குகளுக்கு இந்த காப்பீட்டுப் பாதுகாப்பு பொருந்தாது
- பைக் தேய்மானம் அல்லது இயந்திரக் கோளாறுகள் காரணமாக உங்கள் பைக் அல்லது அதன் பாகங்களுக்கு ஏற்படும் சேதங்களை இது உள்ளடக்காது.
- இது உங்கள் பைக்கின் டயர், இரு எரிபொருள் கிட் மற்றும் கேஸ் கிட் ஆகியவற்றை உள்ளடக்காது
ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) உடனான பைக் இன்சூரன்ஸின் நன்மைகள்
- பைக் இன்சூரன்ஸ் கிளைம்களின் மூலம் சேமிப்பை அதிகப்படுத்தலாம். ஏனெனில், இதற்காக உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
- உங்களின் கிளைம் தொகையை (கட்டாய விலக்குகளுக்குப் பிறகு) முழுவதாகுமாக பெறலாம். ஏனெனில், உங்கள் இன்சூரர் உங்கள் கிளைம் தொகையிலிருந்து உங்கள் தேய்மானத்தை இனி கழித்துக் கொள்ளமாட்டார்.
- உங்கள் புதிய பைக் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கு பாதுகாப்பாக செயல்படும்.