Third-party premium has changed from 1st June. Renew now
எலக்ட்ரிக் பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
எலக்ட்ரிக் பைக் இன்சூரன்ஸ் என்பது மின்னாற்றலினால் இயங்கும் இரு சக்கர வாகனத்திற்கு எதிர்பாராதவிதமாக விபத்தினால், இயற்கை பேரிடர்களினால் அல்லது தீயினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து உங்களுக்கு நிதிப் பாதுகாப்பு தரும் ஒருவகையான மோட்டார் இன்சூரன்ஸ்.
இ-பைக்குகள் அல்லது எலக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் என்றும் அழைக்கப்படும் எலக்ட்ரிக் பைக்குகள், சாலையில் செல்லும் போது சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நண்பனாகவும், (பெரும்பாலும்!) வழக்கமாக உபயோகிக்கும் பைக்குகளுக்கு பதில் சத்தமில்லாத மாற்றீடுகளாகவும் சாலையில் மிகவும் பிரபலமாகி வருகின்றன என்று சொன்னால் மிகையாது.
வழக்கமாக உபயோகிக்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஃபியூவலாக பெட்ரோல் தேவைப்படுவது போலவே, இவற்றிற்கு மின்சாரம் மூலம் ஆற்றல் அளிக்கப்படவேண்டும்(அதாவது பெரிய ஸ்மார்ட் போன் போல). .
இந்தியாவில் எலக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் என்பது இப்போதும் ஒரு புதுமையான அறிமுகமாகவே இருக்கிறது. ஆனால், உங்கள் வாகனத்திற்கு பைக் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதற்கும், வழக்கமாக பயன்படுத்தப்படும் ஃபியூவல் -மூலம் ஓடும் வாகனத்திற்குப் பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
நீங்கள் ஏன் எலக்ட்ரிக் பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
உங்கள் அபிமானத்தைப் பெற்றப் புதிய என்ன நடக்கும் என்பதை உங்களால் முன்கூட்டியே கணிக்க முடியாது. எலக்ட்ரிக் பைக்கின் இண்டஸ்ட்ரி வளர்ந்து வந்தாலும், அதற்கான விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் இன்னும் சரியாக அமைக்கப்படவில்லை, இ-பைக்குகள் சிறிது விலை உயர்ந்தவை.
பல்வேறு கடினமான தொழில்நுட்பத்தினால் இயங்கும் எலக்ட்ரிக் டூ வீலரில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை உண்டாக்கும் பல வகையான எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள் இருக்கின்றன. எனவே, மற்ற வாகனங்களை போல் எதிர்பாராத விதமாக நிகழும் துர்சம்பவங்களால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க இன்சூரன்ஸ் வைத்திருப்பது பெரும் நிம்மதியை தருகிறது. மேலும், அது உங்களை எந்த கவலையுமின்றி வண்டி ஓட்ட அனுமதிக்கும்.
அதுமட்டுமின்றி, மோட்டார் வாகன சட்டத்தின் படி, குறைந்தபட்சமாக தேர்டு பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும்.
டிஜிட்டின் எலக்ட்ரிக் பைக் இன்சூரன்சில் காப்பீடு செய்யப்படுவது யாவை?
எலக்ட்ரிக் டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்
டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம்கள் பல காரணிகளை பொருத்து அமைகிறது, அதாவது கிலோவாட் திறன், உருவாக்கப்பட்ட மாடல் மற்றும் வருடம் போன்றவை சில காரணிகள் ஆகும்.
கிலோவாட் திறன் கொண்ட டூ வீலர்கள் (KW) | ஒரு வருட பாலிசிக்கான பிரீமியம் விலை | நீண்ட நாள் பாலிசிக்கான பிரீமியம்*விலை |
3 KW மேல் மிகாதது | ₹457 | ₹2,466 |
3 KW மேல் உள்ளது 7 KW மேல் மிகாதது | ₹609 | ₹3,273 |
7 KW மேல் உள்ளது 16 KW மேல் மிகாதது | ₹1,161 | ₹6,260 |
16 KW மேல் உள்ளது | ₹2,383 | ₹12,849 |
* நீண்ட நாள் பாலிசி என்றால் புதிய டூ-வீலருக்கான 5-ஆண்டு கால பாலிசியாகும்(மூலம் - IRDAI)
காப்பீடு செய்யப்படாதது யாவை?
உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் எதற்கு காப்பீடு அளிக்கப்படுவதில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
சில சூழ்நிலைகளை ஆட்-ஆன்கள் மூலம் காப்பீடு செய்யலாம். நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், அதற்கு தொடர்புடைய சூழ்நிலைகள் இதில் உள்ளடக்கப்படாது.
ஒருவேளை தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியாக இருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படாது.
நீங்கள் குடிபோதையில் அல்லது சரியான இரு சக்கர வாகன உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டி செல்லும் சூழ்நிலைகளில் உங்கள் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு வழங்கப்படாது.
ஒருவேளை நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு கற்றல் உரிமத்தை மட்டுமே வைத்திருந்து, செல்லுபடியாகும் லைசன்ஸ் வைத்திருப்பவர் பில்லியன் இருக்கையில் இல்லாமல் நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருத்தல்- மாதிரியானச் சூழ்நிலைகளில் உங்கள் கிளைம் வழங்கப்படாது.
விபத்தின் நேரடி விளைவினால் ஏற்படும் எந்தவொரு சேதமும் (எடுத்துக்காட்டிற்கு, விபத்திற்கு பிறகுப் பாதிப்படைந்த இரண்டு சக்கர வாகனத்தைத் தவறாக பயன்படுத்தப்படுதல் மற்றும் அதனால் இன்ஜின் பாதிப்படைதல், பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள் என கருதப்படுகிறது அதுமட்டுமின்றி அவற்றிற்குக் காப்பீடு செய்யப்படாதது.
எத்தகைய சேதமானாலும் அலட்சியத்தினால் ஏற்படக்கூடாது (எடுத்துக்காட்டிற்கு: உற்பத்தியாளரின் கையேட்டில் கொடுக்கப்பட்டிருப்பது படி பின்பற்றாமல், வெள்ளத்தில் இரண்டு சக்கர வாகனத்தை ஒட்டியதால் ஏற்படும் சேதத்திற்குக் காப்பீடு வழங்கப்படாது),
டிஜிட்டின் எலக்ட்ரிக் பைக் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்யவேண்டும்?
கிளைமைக் கோருவது எப்படி?
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித பதற்றமும் இல்லாமல் வாழலாம். ஏனெனில், எங்களிடம் 3 எளிய படிகள் மட்டுமே கொண்டுள்ள முழு டிஜிட்டல் கிளைம் செயல்முறை உள்ளது!
படி 1
1800-258-5956 என்ற எண்ணுக்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
படி 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்டப் படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களைப் பதிவு செய்யவும்.
படி 3
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.
இந்தியாவிலிருக்கும் எலக்ட்ரிக் பைக் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்ப்படும் கேள்விகள்
இந்தியாவில் இருக்கும் எலக்ட்ரிக் பைக்கை காப்பீடு செய்வது அவசியமா?
இ-பைக்குகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 250 வாட்ஸுக்கு குறைவாக ஆற்றல் இருக்கும் வாகனமும், அதிகபட்சம் மணிக்கு 25 கிமீ வேகம் பயணிக்கக்கூடிய எந்த பைக்கையும் பதிவு செய்யவோ அல்லது காப்பீடு செய்யவோத் தேவையில்லை. இருப்பினும், சமீபத்தில் எலக்ட்ரிக் பைக்குகளை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சேர்க்க அதிகாரிகள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக் டூ வீலர் வாகனங்களின் உரிமையாளர்கள், எரிபொருள் அடிப்படையிலான இரு சக்கர வாகனங்களுக்கு, பதிவு செய்தல், காப்பீடு செய்தல், ஹெல்மெட் அணிதல் போன்ற அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
எந்த வகை பைக் இன்சூரன்ஸ் சிறந்தது?
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் தான் பொதுவாக அனைத்து வகையான இரு சக்கர வாகனக் காப்பீடுகளுக்கும் சிறந்தத் தேர்வாக இருக்கும், ஏனெனில் இது கூடுதல் இழப்புகளுக்குக் காப்பீடு தருகிறது. மேலும், எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை சற்று அதிகமாக இருப்பதால் - அதை முழுமையாக ஈடுசெய்யும் காப்பீட்டை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் எலக்ட்ரிக் பைக்கிற்கான ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸானது, கட்டாய தேர்டு பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் கவரேஜ் பலன்கள், உங்களுக்கு ஏற்படும் சொந்த சேதங்கள் மற்றும் டிஜிட்டுடன் கிடைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்-ஆன் கவர்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்து காப்பீடு வழங்குகிறது.