காம்ப்ரிஹென்சிவ் & தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸுக்கு இடையேயான வேறுபாடுகள் என்னென்ன?
தேர்டு பார்ட்டி & காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸுக்கு இடையேயான மிக முக்கியமான வேறுபாடு அவ்விரண்டின் கவரேஜினால் பெறக்கூடுய பயன்கள் மட்டுமே. ஒருபுறம் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி சார்ந்த லயபிலிட்டிகளை மட்டுமே கவர் செய்கையில் மறுபுறம் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் உங்கள் வண்டியின் சொந்த சேதங்களை கவர் செய்வது மட்டுமின்றி அடிப்படை பயன்களை தாண்டி, ஆட்-ஆன் (add-on) மற்றும் கவர்களின் வரம்பிற்குள்ளே உங்கள் கவரேஜை நீட்டிக்கும் வாய்ப்பினையும் வழங்கும்.
நகரத்தின் உள் அல்லது வெளியே என வண்டியில் சுற்றித் திரியும் போது ஆபத்துக்குள் நேர்வது சகஜம் தான். இவ்வாறு ஏற்படும் அபாயத்தினால் உங்கள் டூ வீலர்களுக்கு சிறந்த வகை பைக் இன்சூரன்ஸை தேர்வு செய்வது என்பது அவசியம். அதுமட்டுமின்றி, செல்லுபடியாகக் கூடிய பைக் இன்சூரன்ஸ் இல்லாமல் போனால் புதிய போக்குவரத்து (டிராஃபிக்) சட்டத்திற்கு பிறகு அமல்படுத்தப்பட்ட அதிக அபராதங்களினால் நீங்கள் கண்டிப்பாக பாதிப்படையைக் கூடும். அதனால் உங்களால் கண்டிப்பாக ஒரு இன்சூரன்ஸ் இல்லாமல் இருக்க முடியாது!
நீங்கள் சரியான பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான முடிவை எளிமைப்படுத்த நாங்கள் தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்சின் நன்மைகள் மற்றும் தீமைகளை கீழேயுள்ள அட்டவணையில் கொடுத்திருக்கிறோம், நீங்கள் உங்கள் தேர்வை ஆய்வு செய்து தெளிவான முடிவை எடுக்க அது பயன்படும்.
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸுக்கு இடையேயான வேறுபாடு
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் |
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் |
|
அப்படி என்றால் என்ன? |
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் விதத்தில் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் மற்றும் சொந்த சேதம் ஆகிய இரண்டையும் இணைத்து முழுமையான கவரேஜை கொடுக்கிறது! |
தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஈடு செய்யும் கட்டாயமயமாக்கப்பட்ட பாலிசி, இது 1988 ஆம் ஆண்டு இந்தியாவில் கட்டாயமயமாக்கப்பட்ட சட்டமாக்கப்பட்டது. |
கவரேஜ் சம்பந்தமான விவரங்கள் |
இந்த பாலிசி விரிவான கவரேஜ்களை வழங்குகிறது. திருட்டு, இழப்பு மற்றும் சேதம் ஆகியவைகளிலிருந்தும் உங்கள் பைக் கவர் செய்யப்படும். இது ஒரு தனிநபர், உங்கள் வாகனம் மற்றும் சொத்து என எல்லா விதமான சேதங்களுக்கும் நிதி உதவியை வழங்குகிறது. |
இந்த பாலிசி வரம்பிற்குட்பட்ட கவரேஜை மட்டுமே வழங்குகிறது. ஒரு தேர்ட்-பார்ட்டி லயபிலிட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட இழப்பு/சேதத்திலிருந்து மட்டுமே உங்களை பாதுகாக்கும். |
ஆட்-ஆன்ஸ் |
இந்த பாலிசியுடன், நீங்கள் நன்மைகள் தரும் ஆட்-ஆன்களையும் சேர்த்துக்கொள்ளலாம், அதாவது ஜீரோ-டிப்ரிஸியேஷன் கவர், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர், ரோட் சைட் அசிஸ்டன்ஸ் மற்றும் மற்றவைகள் மத்தியில் இது கன்ஸ்யூமபில் கவராகவும் இருக்கிறது. |
இந்த பாலிசி பர்சனல் ஆக்சிடன்ட் கவரை மட்டும் வழங்குகிறது. |
நான் என்ன வாங்க வேண்டும்? |
ஒருவேளை நீங்கள் ஆட்-ஆன்களுடன் கூடிய முழுமையான கவரேஜ் உடைய பைக்கை விரும்புபவர் என்றால் இது பரிந்துரைக்கத்தக்கது. |
ஒருவேளை நீங்கள் உங்கள் பைக்கை அரிதாக பயன்படுத்துபவர் என்றாலோ அல்லது அது ஏற்கனவே மிக பழமையானது என்றாலோ இது பரிந்துரைக்கத்தக்கது. |
பிரீமியம் பிரைஸ் |
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தேர்ட்-பார்ட்டி இன்சூரன்ஸை விட அதிகமானது. |
தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் குறைந்த விலையுடையது. |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸை விவரமாக புரிந்துக்கொள்வோம் வாருங்கள்:
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்ட்-பார்ட்டி கவர் மற்றும் சொந்த சேதத்திற்கான(ஓன் டேமேஜ்) கவர் என இரண்டையும் உள்ளடக்குகிறது. இது இயற்கை சீற்றம், விபத்துகள், மோதல்கள் போன்ற எதிர்ப்பராதவிதமான சூழ்நிலைகளால் உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதத்திலிருந்து தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ் வரை எல்லாவற்றிற்குமான விரிவான பைக் கவரேஜையும் வழங்குகிறது.
கூடுதலாக, உங்கள் டூ-விலருக்கு சிறந்த கவரேஜை வழங்க நீங்கள் பல்வேறு ஆட்-ஆன்களின் கலவை ஒன்றையும் தேர்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸை வாங்கும் போது எங்கள் ரோட்சைட் அசிஸ்டன்ஸ் கவரையும் நீங்கள் தேர்வு செய்யலாம், மேலும், எப்போதெல்லாம் பிரேக்டவுன் சார்பான உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதற்கான உதவியை பெறலாம்.
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்சின் பயன்கள்
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸில் உள்ள லிமிட்டேஷன்கள்
- உங்கள் பைக்கின் இயற்கையாக ஏற்படும் தேய்மானத்தை கவர் செய்வதில்லை
- இது உங்கள் பைக்கிற்கு காலப்போக்கில் ஏற்படும் தேய்மானத்தை பாதுகாப்பதில்லை.
- பொதுவாக, நீங்கள் ஓரு குறிப்பிட்ட ஆட்-ஆனை )add-on) எடுத்தாலொழிய, ஃபைபர் மற்றும் ரப்பர் பகுதி முழுவதும் ஸ்டாண்டர்ட் பைக் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுவதில்லை.
- நிலையான விதிப்படி, எந்த பைக் இன்சூரன்சாலும் நியக்ளீயர் அட்டாக் அல்லது போரினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளை கவர் செய்யமுடியாது.
விதிவிலக்குகள்
- Riding Drunk - மது அருந்தி வண்டி ஓட்டுதல் - இது சட்டத்திற்கு புறம்பானதால், நீங்கள் கிளைம் செய்யும் போது மது அருந்தி வண்டி ஒட்டியதாக தெரியவந்தால் அது கவர் செய்யப்படாது.
- Riding without a Two-Wheeler License - டூ-வீலர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுதல்- சொல்லப்போனால், நீங்கள் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக்கூடாது! ஆனால், நீங்கள் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுவதாக தெரியவந்தால் நீங்கள் கிளைம் செய்யும் போது - அந்த குறிப்பிட்ட பைக் இன்சூரன்ஸ் கிளைம் கவர் செய்யப்படாது!
- Driving without a Valid License Holder - செல்லுபடியாகும் உரிமம் வைத்திருப்பவர் இல்லாமல் வண்டி ஓட்டுதல் சட்டத்தின் அடிப்படையில், நீங்கள் கற்பவர் உரிமத்துடன் வண்டி ஓட்டுவதாக இருந்தால், செல்லுபடியாகும் உரிமம் வைத்திருப்பவர் முன் இருக்கையில் இல்லாமல் நீங்கள் வண்டி ஓட்டினால் நாங்கள் அதை கவர் செய்யமாட்டோம்.
- Consequential Damages - பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள் பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள் என்பது விபத்துக்கு பிறகு ஏற்படும் எல்லா சேதங்கள் மற்றும் இழப்புகளை குறிக்கிறது. எனவே, அத்தகைய சேதங்கள் உங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைமில் கவர் செய்யப்படாது! நீங்கள் குறிப்பிட்ட ஆட்-ஆன்களை வாங்கியிருந்தால் நிச்சியம் அது கவர் செய்யப்படும்.
- Contributory Negligence - அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள் - எளிமையாக சொல்வதானால், நீங்கள் செய்யக்கூடாத விஷயங்களை நீங்கள் செய்யக்கூடாது! அதாவது, நீங்கள் உங்கள் கவனக்குறைவினால் ஏற்பட்ட ஏதேனும் சேதம் அல்லது இழப்பிற்கு கிளைம் செய்தால் அது கவர் செய்யப்படாது!
- Add-ons Not Bought - வாங்கப்படாத ஆட்-ஆன்கள் - ஒருவேளை நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட ஆட்-ஆனை வாங்கவில்லை எனில், உங்களால் நிச்சியமாக அதற்கான பயன்களை வாங்க முடியாது. ஆகவே, எப்போதும் சூழ்நிலை எழுவதற்கு முன்பே பயனுள்ள ஆட்-ஆன்களை வாங்கிடுங்கள்! அதற்கான தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.
தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
பெயர் குறிப்பிடுவது போல, தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்ட்-பார்ட்டி லயபிலிட்டிஸ் சார்பான இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான குறைந்தபட்ச, கட்டாயமயமான தேவையை கவர் செய்யும் ஒரு வகை பைக் இன்சூரன்ஸ் ஆகும்.
எடுத்துக்காட்டாக; ஒருவேளை நீங்கள் இன்னொரு பைக்கில் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் ஆனது தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்களை கவர் செய்யும். இருப்பினும், இதனால் உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்களை கவர் செய்ய முடியாது.
தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்சின் நன்மைகள் யாவை
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்சிற்கான வரம்புகள்
- அது விபத்தினால் ஏற்பட்டாலும் சரி, மோதல், தீ அல்லது இயற்கை சீற்றம் எதுவாக இருந்தாலும் சரி இது உங்கள் சொந்த இழப்புகள் அல்லது சேதங்களை கவர் செய்யாது;
- உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை ஆட்-ஆன்ஸ் அல்லது கவர்கள் மூலம் தனிப்பயனாக்க முடியாது.
- தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்சில் உங்களால் ஐடிவியை(IDV) தனிப்பயனாக்க முடியாது இது உங்கள் பைக் திருட்டை ஈடுசெய்யாது.
- இது உங்கள் திருட்டு போன பைக்கிற்கு நஷ்ட ஈடு வழங்காது.
விதிவிலக்குகள்
- Bike’s Own Damages - பைக்கின் சொந்த இழப்புகள் - மேலே குறிப்பிட்டது போல , தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி தேர்டு பார்ட்டியினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளை மட்டுமே கவர் செய்யும் மேலும் சொந்த பைக்கின் இழப்புகள் மற்றும் சேதங்களை கவர் செய்யாது.
- Riding Drink - குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல் -சட்டத்தை பொருத்தவரை, நீங்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக தெரியவந்தால் எந்த இன்சூரன்ஸ் வழங்குனராலும் உங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைமை ஏற்றுக்கொள்ள முடியாது.
- Riding without a Valid License - செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுதல் - அதேபோல, இங்கும் சட்டம் பேசும், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் நீங்கள் வண்டி ஓட்டினால் உங்கள் கிளைம் ஏற்றுக்கொள்ளப்படாது.
நீங்கள் ஏன் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்சுக்கு மேம்படுத்தவேண்டும்?
- To protect your dear bike: உங்கள் பைக்கை பாதுகாக்க: நீங்கள் உண்மையிலேயே உங்கள் பைக்கின் நிலையில் கருத்தாக இருப்பவரானால், காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் சிறந்த தேர்வு! ஒருவேளை விபத்து, இயற்கை சீற்றம் அல்லது ஏதேனும் எதிர்பாராத விபத்தினால் உங்கள் வண்டக்கு சேதம் ஏற்பட்டால் உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு கவர் செய்யும்.
- To cover both own damages and third-party liabilities within one bike insurance policy: உங்கள் சொந்த சேதங்கள் மற்றும் தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ் இரண்டையும் கவர் ஒரே பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் கவர் செய்:
- காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸின் சிறந்த பயன் என்னவெனில் உங்களுக்கும், உங்கள் வண்டிக்கும் ஆகும் சொந்த சேதங்கள் மற்றும் தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ் ஆகிய இரண்டும் ஒரே பிளானில் கிடைக்கும்.
- To benefit from additional covers: கூடுதலான கவர்களிலிருந்து பயன்களை அடைய:
- இது காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியினுள் மட்டுமே, மேலும் சொந்த சேதத்திற்கான பைக் இன்சூரன்சில் நீங்கள் வெவ்வேறு ஆட்-ஆன்களை நீங்கள் விரும்பும் வகையில், உங்களுக்கு தேவையான கவரேஜ் வகையை பொறுத்து உங்கள் பாலிசிக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம்.
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய காரணிகள்.
- வாங்கும் & கிளைம் செய்யும் செயல்முறை: இன்சூரஸிலிருந்து மக்களை தடுக்கும் விஷயங்களில் ஒன்று செயல்முறைகள். எனவே இது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று. டிஜிட் என்று எடுத்துக்கொண்டால், எங்கள் எல்லா செயல்முறையும் ஆன்லைனில் வெறும் சில கிளிக்குகளியிலேயே விரைவாக முடிந்துவிடும்.
- சேவை பயன்கள்:ஒரு பைக் இன்சூரன்ஸ் வழங்குநரை மற்றோருவரிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது அவர்கள் வழங்கும் தனித்துவமான சேவைகளே. சேவை பயன்களை கவனமாக பார்த்து உங்களுக்கு எது மிக பொருந்தும் என்பதையும் கவனிக்கவும்.
- கிளைம் செட்டில்மென்ட் ஸ்பீட் & விகிதம்:ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் உங்களுக்கு அவர்கள் எப்படி வெற்றிகரமாக கிளைம்களை பூர்த்தி செய்கிறார்கள் என்பதை பொறுத்த யோசனையை உங்களுக்கு வழங்கும். டிஜிட்டை பொறுத்தவரை டூ-வீலருக்கு எங்களது கிளைம் செட்டில்மென்ட் விகதம் இப்போது 92% ஆகும்.
- 24x7 மணி நேர சேவை: உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படலாம். எனவே, எப்போதும் உங்கள் பைக் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்காக இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- சரியான ஐடிவி (IDV): சரியான ஐடிவி (IDV) என்பது இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ, இது ஒருவேளை உங்கள் பைக் திருடப்பட்டுவிட்டாலோ அல்லது சேதம் ஏற்பட்டாலோ இன்சூரர் உங்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச தொகையாகும். குறைந்த பிரீமியங்கள் கவர்ந்திழுக்கக்கூடியவை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அது உங்களுக்கு அதிகபட்ச நிதி நன்மையை வழங்காது. எப்போதும் பிரீமியம் மட்டும் அல்லாமல் உங்களுக்கு வழங்கப்படும் ஐடிவி (IDV)-யையும் சரிபார்க்கவும்..நாங்கள் நீங்கள் அதிக ஐடிவி (IDV) தேர்வு செய்ய பரிந்துரைக்கிறோம், ஏன் தெரியுமா? உங்கள் பைக் மொத்த இழப்பு வழக்கில், அதிக ஐடிவி (IDV) அதிக பணத்தை திரும்ப வழிவகுக்கிறது. உங்கள் விருப்பப்படி உங்கள் ஐடிவி (IDV)-யை தனிப்பயனாக்க நாங்கள் அனுமதிக்கிறோம். ஏனென்றால், எந்த சமரசமும் இல்லாமல் நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.