முழுமையான பைக் இன்சூரன்ஸ்

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இன் தோராய மதிப்பீட்டினை(quote) ஆன்லைனில் பெறவும்

Third-party premium has changed from 1st June. Renew now

முழுமையான டூ வீலர் இன்சூரன்ஸ் விளக்கப்பட்டுள்ளது

நீங்கள் உங்களுடைய பைக்-ஐ நேசிக்கிறீர்கள் என்பதையும், நிறைய யோசனை, ஆராய்ச்சி, திட்டம், பட்ஜெட், விசாரணைகள், மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு தான் உங்கள் பைக்-ஐ வாங்கியிருப்பீர்கள் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். உங்கள் கனவு பைக் இப்போது உங்களிடம் இருக்கிறது; உங்கள் பைக் மற்றும் உங்கள் பாக்கெட்டிலுள்ள பணத்தை நீங்கள் பாதுகாக்க விரும்பவில்லையா?

உங்கள் பைக்-ஐ இன்சூர் செய்து, பரபரப்பான சாலை பயணங்களை இனிதே அனுபவியுங்கள். சரியான பைக் இன்சூரன்ஸ்-ஐ பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கும், உங்களை பாதுகாக்கத் தேவையான ஆட்-ஆன் கவர்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்கும் நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.

முழுமையான பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

முழுமையான பைக் இன்சூரன்ஸ் என்பது, எதிர்பாராமல் ஏற்படும் அனைத்து விதமான நிகழ்வுகளில் இருந்தும் உங்களை பாதுகாப்பதற்கு பரவலான ஒரு காப்பீட்டு முறையை வழங்குகிறது. இதனால் நீங்கள் எந்த இடைஞ்சலுமின்றி நிம்மதியாக வண்டி ஓட்டலாம். இது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும்.

பைக் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யும் போது ஐடிவி-இன் முக்கியத்துவம்

ஐடிவி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ (Insured Declared Value) என்பதன் சுருக்கமாகும். ஒரு வேளை உங்கள் பைக் திருடப்பட்டாலோ அல்லது பழுதுநீக்க முடியாதபடிக்கு சேதமடைந்திருந்தாலோ, இது தான் உங்கள் இன்சூரர் உங்களுக்கு வழங்கவிருக்கின்ற அதிகபட்ச தொகையாகும். குறைந்த பிரீமியம் தொகை கவர்ச்சிகரமானதாக இருக்குமென்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அது உங்களுக்கு அதிகபட்ச பொருளாதார பலனை அளிக்காது.

எப்போதுமே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஐடிவி-ஐ பாருங்கள், பிரீமியத்தை மட்டும் பார்த்தால் போதாது. அதிக ஐடிவி-ஐ நீங்கள் தேர்வு செய்வதற்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம், ஏன் தெரியுமா? உங்கள் பைக் முழுமையாக சேதப்பட்டிருக்கும் பட்சத்தில், பெரிய அளவு ஐடிவி உங்களுக்கு அதிகமான இழப்பீட்டினை பெற்றுத் தரும்.

உங்கள் விருப்பப்படியே உங்கள் ஐடிவி-ஐ நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம், ஏனென்றால் நீங்கள் எந்த சமரசமுமின்றி சரியான முடிவெடுப்பதை நாங்கள் விரும்புகிறோம்.



சரிபார்க்கவும்: பைக் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களுடன் சேர்த்து மூன்றாம் தரப்பினர் அல்லது முழுமையான பாலிசியின் பிரீமியம் தொகையை கணக்கிடுவதற்கு பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை உபயோகப்படுத்தவும்.

முழுமையான மற்றும் மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸிற்கான வேறுபாடுகள்

முழுமையான பைக் இன்சூரன்ஸ் மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ்
முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும். முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும்.
திருட்டு, இழப்பு, மற்றும் சேதத்திற்கு உங்கள் பைக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் பைக் மட்டுமின்றி வேறு நபர், வாகனம் அல்லது சொத்து போன்றவைகளுக்கு நேரும் அனைத்து விதமான சேதங்களுக்கும் பண உதவியை வழங்குகிறது. மூன்றாம்-தரப்பினர் பொறுப்பு பைக் இன்சூரன்ஸ் என்பது மூன்றாம்-தரப்பினருக்கு ஏற்படும் சேதம்/இழப்பிற்கு மட்டுமே பாதுகாப்பளிக்கிறது.
இந்த பாலிசியின் மூலம் பயனளிக்கும் ஆட்-ஆன்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த பாலிசியானது பர்சனல் ஆக்சிடன்ட் காப்பீட்டினை மட்டுமே வழங்குகிறது.
உங்கள் பைக்-கிற்கு முழுமையான காப்பீட்டுடன் கூடிய ஆட்-ஆன்களை நீங்கள் விரும்பினால், இந்த இன்சூரன்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் அரிதாக மட்டுமே பைக் ஓட்டும் பட்சத்தில் அல்லது அது ஏற்கனவே மிக பழையதாக ஆகி விட்டிருக்கும் போது இந்த இன்சூரன்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பாலிசி பரவலாக பாதுகாப்பளிக்கிறது. இந்த பாலிசி வரையறுக்கப்பட்ட அளவிலேயே பாதுகாப்பளிக்கிறது.
மூன்றாம்-தரப்பினர் இன்சூரன்ஸ்-ஐ விடவும் முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகை அதிகமானது. மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ் பாலிசி குறைந்த விலையினது.

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இன் பலன்கள்

டிஜிட்-இன் முழுமையான பைக் இன்சூரன்ஸ்-ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-உடன் உள்ள ஆட்-ஆன்கள்

ஜீரோ மதிப்பிறக்க கவர்

காலம் செல்லச் செல்ல பைக் போன்ற உங்கள் சொத்துக்களின் மதிப்பு குறைகிறது. அதனால் தான், நீங்கள் கிளெய்ம் செய்யும் போது, மதிப்பிறக்கம் கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த ஆட்-ஆன் மூலம், அதாவது ஜீரோ மதிப்பிறக்க கவர் மூலமாக, உங்கள் பைக்-இன் மதிப்பிறக்கத்தை நீங்கள் தடுக்கலாம். கிளெய்ம் மற்றும் ரிப்பேர் செய்யும் போது முழுத் தொகையையும் (மதிப்பிறக்கமின்றி) நீங்கள் பெறலாம்.

முழு பில் தொகை இழப்பீட்டு கவர்

உங்கள் பைக் திருடப்பட்டிருந்தாலோ அல்லது பழுதுநீக்க இயலாதபடிக்கு சேதம் அடைந்திருந்தாலோ, இந்த ஆட்-ஆன்(add-on/கூட்டுறுப்பு) உதவியாக இருக்கும். இந்த முழு பில் தொகை இழப்பீட்டு கவரின் மூலம், நாங்கள் உங்களுக்கு அதே பைக், அல்லது அதற்கு ஒத்த பைக் வாங்குவதற்கான செலவுகள் - அதன் சாலை வரி மற்றும் பதிவீடு கட்டணங்கள் உள்ளிட்ட செலவுகளையும் வழங்குவோம்.

எஞ்ஜின் மற்றும் கியர் பாதுகாப்பு கவர்

விபத்தின் காரணமாக எஞ்ஜின் சேதமடைந்து விட்டால், அது ஒரு திட்டமான தொகுப்பு கொள்கையின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பின்விளையும் சேதமாக இருப்பின், அதற்கு காப்பீடு வழங்கப்படவில்லை. இங்கு தான், இந்த ஆட்-ஆன்(add-on/கூட்டுறுப்பு) உங்கள் ரிப்பேர் கட்டணங்களுக்கு பாதுகாப்பளித்து உதவி செய்கிறது.

பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் கவர்

பிரேக்டவுன் ஏற்படும் சமயங்களில், உங்களுக்கும், உங்கள் டூ-வீலருக்கும் உதவுவதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை இந்த ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் உறுதிப்படுத்துகின்றது. மிகச் சிறந்ததல்லவா? இங்கு எங்கள் உதவியை பெறுவது கிளெய்ம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

நுகர்பொருள் கவர்

இந்த ஆட்-ஆன்-இல்(add-on/கூட்டுறுப்பு), ஸ்கிரூ, எஞ்ஜின் ஆயில், நட்கள்(nuts) மற்றும் போல்ட்கள்(bolts), கிரீஸ் போன்ற பகுதிகளை மாற்றீடு செய்வதற்கான செலவுகளுக்கு இந்த திட்டமான தொகுப்பு கொள்கை பாதுகாப்பளிக்கிறது

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இல் என்னவெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?

எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை என்பது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் வேறுபடக் கூடியது. ஆயினும் உங்கள் முழுமையான இன்சூரன்ஸ் பாலிசியில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் பாதுகாப்பளிக்கப்படாது என்பதை இங்கு சிறிது விளக்கியிருக்கிறோம்:

மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ்-ஐ காட்டிலும், முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளுமாறு உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசியானது, இன்சூர் செய்யப்பட்ட வாகனம், அதன் உரிமையாளர், மற்றும் பாதிக்கப்பட்ட மூன்றாம்-தரப்பினர் போன்றோருக்கு நேர்ந்த பாதிப்புகளின் செலவுகளை கவனித்துக் கொள்கிறது. ஆனால், மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு குறைந்த அளவு பாதுகாப்பினையே வழங்குகிறது.

முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி குறித்து அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

ஜீரோ மதிப்பிறக்க டூ வீலர் இன்ஷூரன்ஸிலிருந்து, முழுமையான டூ வீலர் இன்ஷூரன்ஸ் எவ்வாறு வேறுபடுகிறது?

இரண்டும் முற்றிலும் வெவ்வேறான விஷயங்களாகும்! முழுமையான டூ வீலர் இன்ஷூரன்ஸ் என்பது பைக் இன்ஷூரன்ஸ் பாலிஸியின் ஒரு வகையாகும். ஜீரோ மதிப்பிறக்கம் என்பது, உங்கள் முழுமையான டூ வீலர் இன்ஷூரன்ஸ் பாலிஸியில் நீங்கள் தேர்வு செய்து கொள்ளக் கூடிய ஒரு ஆட்-ஆன் வாய்ப்பாகும்.

பழைய பைக்கிற்கு முழுமையான பைக் இன்ஷூரன்ஸ் வாங்குவது நல்ல யோசனையாக இருக்குமா?

 இது உங்கள் பைக்-இன் வயது, நீங்கள் எந்தளவு அதிகமாக அதனை பயன்படுத்துகிறீர்கள் மற்றும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. உங்கள் பைக் வாங்கி 10 வருடத்திற்குள் தான் இருக்கும் மற்றும் நீங்கள் அதனை வாடிக்கையாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்னும் பட்சத்தில், முழுமையான பைக் இன்ஷூரன்ஸ் பெறுவதற்கு நீங்கள் அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருக்காது. மேலும் இந்த முழுமையான கார் இன்ஷூரன்ஸ் கெடுவாய்ப்பான சூழ்நிலைகளில் நீங்கள் உங்கள் பைக்கிற்கு செலவு செய்வதிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

முழுமையான பைக் இன்ஷூரன்ஸ் பாலிஸியை எப்போது வாங்க வேண்டும்?

 நீங்கள் பைக் வாங்கியவுடனேயே முழுமையான பைக் இன்ஷூரன்ஸ் பாலிஸியை வாங்குவது தான் சிறந்தது. எனினும், இன்னும் தாமதமாகவில்லை! உங்களிடம் தற்போது மூன்றாம்-தரப்பினர் பாலிசி மட்டும் தான் உள்ளதென்றால், நீங்கள் சொந்த சேத காப்பீட்டை வாங்கி புதுப்பித்துக் கொள்ளலாம். அல்லது, உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் நேரம் வந்து விட்டதென்றால் - இந்த முறை முழுமையான பைக் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கி புதுப்பித்துக் கொள்ளவும்.