முழுமையான டூ வீலர் இன்சூரன்ஸ் விளக்கப்பட்டுள்ளது
நீங்கள் உங்களுடைய பைக்-ஐ நேசிக்கிறீர்கள் என்பதையும், நிறைய யோசனை, ஆராய்ச்சி, திட்டம், பட்ஜெட், விசாரணைகள், மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு தான் உங்கள் பைக்-ஐ வாங்கியிருப்பீர்கள் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். உங்கள் கனவு பைக் இப்போது உங்களிடம் இருக்கிறது; உங்கள் பைக் மற்றும் உங்கள் பாக்கெட்டிலுள்ள பணத்தை நீங்கள் பாதுகாக்க விரும்பவில்லையா?
உங்கள் பைக்-ஐ இன்சூர் செய்து, பரபரப்பான சாலை பயணங்களை இனிதே அனுபவியுங்கள். சரியான பைக் இன்சூரன்ஸ்-ஐ பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கும், உங்களை பாதுகாக்கத் தேவையான ஆட்-ஆன் கவர்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்கும் நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.
முழுமையான பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
முழுமையான பைக் இன்சூரன்ஸ் என்பது, எதிர்பாராமல் ஏற்படும் அனைத்து விதமான நிகழ்வுகளில் இருந்தும் உங்களை பாதுகாப்பதற்கு பரவலான ஒரு காப்பீட்டு முறையை வழங்குகிறது. இதனால் நீங்கள் எந்த இடைஞ்சலுமின்றி நிம்மதியாக வண்டி ஓட்டலாம். இது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும்.
பைக் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யும் போது ஐடிவி-இன் முக்கியத்துவம்
ஐடிவி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ (Insured Declared Value) என்பதன் சுருக்கமாகும். ஒரு வேளை உங்கள் பைக் திருடப்பட்டாலோ அல்லது பழுதுநீக்க முடியாதபடிக்கு சேதமடைந்திருந்தாலோ, இது தான் உங்கள் இன்சூரர் உங்களுக்கு வழங்கவிருக்கின்ற அதிகபட்ச தொகையாகும். குறைந்த பிரீமியம் தொகை கவர்ச்சிகரமானதாக இருக்குமென்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அது உங்களுக்கு அதிகபட்ச பொருளாதார பலனை அளிக்காது.
எப்போதுமே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஐடிவி-ஐ பாருங்கள், பிரீமியத்தை மட்டும் பார்த்தால் போதாது. அதிக ஐடிவி-ஐ நீங்கள் தேர்வு செய்வதற்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம், ஏன் தெரியுமா? உங்கள் பைக் முழுமையாக சேதப்பட்டிருக்கும் பட்சத்தில், பெரிய அளவு ஐடிவி உங்களுக்கு அதிகமான இழப்பீட்டினை பெற்றுத் தரும்.
உங்கள் விருப்பப்படியே உங்கள் ஐடிவி-ஐ நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம், ஏனென்றால் நீங்கள் எந்த சமரசமுமின்றி சரியான முடிவெடுப்பதை நாங்கள் விரும்புகிறோம்.
சரிபார்க்கவும்: பைக் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களுடன் சேர்த்து மூன்றாம் தரப்பினர் அல்லது முழுமையான பாலிசியின் பிரீமியம் தொகையை கணக்கிடுவதற்கு பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை உபயோகப்படுத்தவும்.
முழுமையான மற்றும் மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸிற்கான வேறுபாடுகள்
முழுமையான பைக் இன்சூரன்ஸ் |
மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ் |
முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும். |
முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும். |
திருட்டு, இழப்பு, மற்றும் சேதத்திற்கு உங்கள் பைக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் பைக் மட்டுமின்றி வேறு நபர், வாகனம் அல்லது சொத்து போன்றவைகளுக்கு நேரும் அனைத்து விதமான சேதங்களுக்கும் பண உதவியை வழங்குகிறது. |
மூன்றாம்-தரப்பினர் பொறுப்பு பைக் இன்சூரன்ஸ் என்பது மூன்றாம்-தரப்பினருக்கு ஏற்படும் சேதம்/இழப்பிற்கு மட்டுமே பாதுகாப்பளிக்கிறது. |
இந்த பாலிசியின் மூலம் பயனளிக்கும் ஆட்-ஆன்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
இந்த பாலிசியானது பர்சனல் ஆக்சிடன்ட் காப்பீட்டினை மட்டுமே வழங்குகிறது. |
உங்கள் பைக்-கிற்கு முழுமையான காப்பீட்டுடன் கூடிய ஆட்-ஆன்களை நீங்கள் விரும்பினால், இந்த இன்சூரன்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. |
நீங்கள் அரிதாக மட்டுமே பைக் ஓட்டும் பட்சத்தில் அல்லது அது ஏற்கனவே மிக பழையதாக ஆகி விட்டிருக்கும் போது இந்த இன்சூரன்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. |
இந்த பாலிசி பரவலாக பாதுகாப்பளிக்கிறது. |
இந்த பாலிசி வரையறுக்கப்பட்ட அளவிலேயே பாதுகாப்பளிக்கிறது. |
மூன்றாம்-தரப்பினர் இன்சூரன்ஸ்-ஐ விடவும் முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகை அதிகமானது. |
மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ் பாலிசி குறைந்த விலையினது. |
முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இன் பலன்கள்
டிஜிட்-இன் முழுமையான பைக் இன்சூரன்ஸ்-ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
உங்கள் பைக் இன்ஷூரன்ஸ் மிக எளிதான கிளெய்ம் நடைமுறையை கொண்டுள்ளது, மேலும் பணமில்லா பரிவர்த்தனையை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
முழுமையான பைக் இன்சூரன்ஸ்-உடன் உள்ள ஆட்-ஆன்கள்
முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இல் என்னவெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?
எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை என்பது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் வேறுபடக் கூடியது. ஆயினும் உங்கள் முழுமையான இன்சூரன்ஸ் பாலிசியில் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் பாதுகாப்பளிக்கப்படாது என்பதை இங்கு சிறிது விளக்கியிருக்கிறோம்:
மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ்-ஐ காட்டிலும், முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளுமாறு உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசியானது, இன்சூர் செய்யப்பட்ட வாகனம், அதன் உரிமையாளர், மற்றும் பாதிக்கப்பட்ட மூன்றாம்-தரப்பினர் போன்றோருக்கு நேர்ந்த பாதிப்புகளின் செலவுகளை கவனித்துக் கொள்கிறது. ஆனால், மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு குறைந்த அளவு பாதுகாப்பினையே வழங்குகிறது.