ஆன்லைனில் பஜாஜ் பல்சர் 150/160/200/220 ஆகியவற்றிற்கான பைக் இன்சூரன்ஸ்லை வி மற்றும் புதுப்பிப்பு
பஜாஜ் பல்சர் பைக் வாங்க எண்ணுகிறீர்களா? வாங்குவதற்கு முன்பு, இந்த பைக்கை பிரபலப்படுத்திய விஷயங்கள் என்னென்ன என்பதையும், அதற்கு டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கு முன்னர் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதையும் பற்றி அறிந்து கொள்ளவும்!
நீடித்து உழைக்கும் தன்மை, கட்டுப்படியாகும் விலை மற்றும் தரம் ஆகிய மூன்று அம்சங்களை பற்றியும் நீங்கள் பஜாஜ் வண்டி வாங்கும் போது கவலைப்பட தேவையில்லை. அதன் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளின் வரிசையில், நேர்த்தி, வேகம் மற்றும் சௌகரியம் ஆகிய அம்சங்களை கொண்டு அசத்தும் பிரபலமான பல்சர் ரேஞ்ச் வருகிறது.
மற்ற ஸ்போர்ட் பைக்குகளை விடவும் மலிவாக கிடைக்கிறதென்றாலும் கூட, பல்சர் வைத்திருப்பதென்பதன் பொருள் வண்டியில் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்வது என்பதாகும். எனவே தான், உங்கள் வண்டியின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, பஜாஜ் பல்சர் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்வது முக்கியமாகும்.
பல்சர் இன்சூரன்ஸ் வாங்குவதால், திட்டமிடப்படாத செலவுகளிலிருந்து உங்கள் பணத்தை பாதுகாப்பது மட்டுமின்றி உங்களை சட்ட பிரச்சினையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் உதவும். மோட்டார் வாகனங்கள் சட்டம், 1988-இன் படி, இந்திய சாலைகளில் ஓடுகின்ற எல்லா மோட்டார் வாகனங்களும் செல்லத்தக்க இன்சூரன்ஸை வைத்திருக்க வேண்டும். இதனை பின்பற்ற தவறும் பட்சத்தில், ரூ.2000-ஐ டிராஃபிக் அபராதமாக செலுத்த வேண்டி வரும், திரும்பவும் இதே தவறை செய்யும் போது ரூ.4000 செலுத்த வேண்டியது வரும்.
ஆயினும், நிற்க!
பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்களை பற்றி நீங்கள் கவலைப்படுவதற்கு முன்பு, பஜாஜ் பல்சரை பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
பஜாஜ் பல்சர் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்பட்டிருக்கிறது
நீங்கள் ஏன் டிஜிட்-இன் பஜாஜ் பல்சர் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
பஜாஜ் பல்சருக்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல் |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ் |
×
|
✔
|
Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!
ஸ்டெப் 1
1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
ஸ்டெப் 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!
டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்பஜாஜ் பல்சர் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்: கவர்ச்சிகரமான பைக்
டோக்யோ ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மற்றும் பைக் டிசைனர், கிலின் கேருடன் இணைந்து, பஜாஜ் நிறுவனம் பல்சரை உருவாக்கியிருக்கிறது.
சந்தையில் பல்சரை அறிமுகப்படுத்தியதற்கு முன்னர், இந்தியாவில் பைக் மார்க்கெட் பெரும்பாலும் எரிபொருள் சிக்கன பயன்பாட்டினில் மட்டுமே கவனம் செலுத்தியது. இது குறைந்த அளவு திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
பஜாஜ் பல்சர் மாடல்கள் 150சிசி மற்றும் 180சிசி வண்டிகளை கட்டுப்படியாகும் விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தி புரட்சி செய்தது. அப்போதிலிருந்து, இந்தியாவில் டூ-வீலர் பயனீட்டாளர்கள் அதிக ஆற்றல் மிக்க பைக்குகளை தங்கள் பட்ஜெட்-டுக்கு ஏற்ற மலிவான விலையில் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.
பல்சர் 200என்எஸ் போன்ற புதிய பல்சர் மாடல்கள், எண்ணற்ற மதிப்புமிக்க விருதுகளை வாங்கியுள்ளது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவிலேயே அதிக விருது பெற்ற பைக் என்று அறியப்படுகிறது. அவற்றுள் என்டிடிவி-யின் கார் அண்ட் பைக் அவார்டில், பைக் ஆஃப் தி யேர் விருது (Bike of the Year Award) மற்றும் எக்கனாமிக் டைம்ஸ்-இன் சிக்வீல்ஸ் பைக் ஆஃப் தி யேர் விருதும் அடங்கும்.
காற்று மாசினை கட்டுப்படுத்துவதன் பொருட்டு அரசாங்கத்தின் முன்னெடுப்பிற்கு தக்கவாறு, BS-VI-க்கு இணக்கமான பல்சர் மாடல்களை விரைவில் தயாரிக்க போவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தகைய அனைத்து அம்சங்களும் மற்றும் பலவும் சேர்ந்து பஜாஜ் பல்சருக்கு இந்தியாவின் மிக பிரபலமான பைக்குகளில் ஒன்று என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதனால் தான், டிசம்பர் 2019-இல் மட்டும், பஜாஜ் நிறுவனம் 50,000 யூனிட்களுக்கும் மேலான வெவ்வேறு பல்சர் மாடல் வேரியன்ட்களை (வேறுபட்ட வடிவங்கள்) விற்பனை செய்துள்ளது. (1)
பல்சர் போன்ற பெரிய பைக்குகள் அதிக வேகத்தில் செல்லும் ஆற்றலுடையவை, வண்டி ஓட்டுபவர்களுக்கு இதுவே மகிழ்வூட்டும் விஷயமாக அமைகிறது.
எனினும், வேகமாக செல்லுவதினால் உங்கள் உயிருக்கும், பைக்கிற்கும் ஆபத்துண்டாக்கக் கூடிய கொடிய விபத்துகள் ஏற்படக் கூடும். இன்சூரன்ஸினால் விபத்துகளை தடுக்க முடியவில்லையென்றாலும் கூட, இது போன்ற சம்பவங்களின் போது ஏற்படும் பொருளாதார சிக்கலை தீர்த்து வைக்க உதவுகிறது.
மேலும், இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் போதுமான அளவு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு, நீங்கள் பெயர்பெற்ற இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து உங்கள் பஜாஜ் பல்சருக்கு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கவரை வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் டிஜிட் எப்படி உங்களுக்கு உதவ முடியும் என்பதை பார்க்கலாம்!
பஜாஜ் பல்சர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கு ஏன் டிஜிட்-ஐ தேர்வு செய்ய வேண்டும்?
உங்கள் வாகனத்திற்கு நீங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர்களை தேர்வு செய்யும் போது, உங்களின் மதிப்புமிக்க உடைமைக்கு நல்லதொரு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் சில அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். நல்வாய்ப்பாக, டிஜிட்-இன் பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கள் இந்த அனைத்து அம்சங்களையும், சௌகரியங்களையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் டிஜிட்-டிலிருந்து பஜாஜ் பல்சர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது கீழ்க்கண்ட பெனிஃபிட்களை எதிர்பார்க்கலாம்.
ஆவணங்களற்ற கிளைம் மற்றும் அதிகமான கிளைம் செட்டில்மென்ட் விகிதம்
அவசர காலங்களில், உங்களுடைய பாலிசி சம்பந்தப்பட்ட ஆவணங்களை தேடுவது சிரமமாக இருக்கும். கிளைமிற்கு விண்ணப்பிக்கும் நடைமுறையின் போது, எல்லா தேவையான ஆவணங்களையும் கண்டுபிடித்து சமர்ப்பிப்பதற்குள் அநாவசியமான தாமதங்கள் ஏற்படக் கூடும்.
நல்வாய்ப்பாக, தொந்தரவில்லாத, டிஜிட்டல்மயமான கிளைம் நடைமுறை மற்றும் செட்டில்மென்ட் நடைமுறையை உருவாக்கியதன் மூலம் இப்பேற்பட்ட தடங்கல்களை டிஜிட் நீக்கியுள்ளது. மேலும், கிளைம் செய்வதற்கான டிஜிட்-இன் ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் சுய-ஆய்வு நடைமுறை என்பது கூடுதல் பெனிஃபிட் ஆகும், இது கிளைம் செட்டில்மென்ட் நடைமுறையை மேலும் எளிதாக்குகிறது.
உங்கள் இன்சூரன்ஸ் கிளைம் எந்த தொந்தரவும் இன்றி அங்கீகரிக்கப்படும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவும் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் டிஜிட்-இல் சிறப்பாக உள்ளது.
நீங்கள் தேர்வு செய்ய வசதியாக பல விதமான இன்சூரன்ஸ் பாலிசிக்கள்
பல்சருக்கு இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது நீங்கள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி(பொறுப்பு) டூ-வீலர் இன்சூரன்ஸ்– இந்த பாலிசி எடுப்பது கட்டாயமாகும். இது விபத்து நேரும் போது உங்கள் பைக்கினால் தேர்டு பார்ட்டிக்கு (தனிநபர், வாகனம் அல்லது சொத்து) சேதமேற்படும் போது, அதற்கான இழப்பீட்டினை மட்டுமே வழங்குகிறது. உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கு நீங்கள் இந்த பிளானில் கிளைம் செய்ய முடியாது. ஆயினும் இந்த கவர் வைத்திருப்பதால் சட்ட சிக்கல்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் – உங்களுக்கு நல்லதொரு பாதுகாப்பினை வழங்குகின்ற இன்சூரன்ஸை நீங்கள் வாங்க விரும்பினால், டிஜிட்-இன் காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யவும். விபத்து சமயத்தில் உங்கள் பல்சரினால் ஏற்படக் கூடிய சேதங்களை சரி செய்வதற்கு தேவையான பொருளாதார ரீதியான உதவியுடன் இந்த பிளான் வருகிறது. தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி கவரும் இந்த பாலிசியோடு வருகிறது. பைக் திருடு போகும் சமயத்தில் அல்லது இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களின் போதும் இந்த பிளான் காப்புறுதி அளிக்கிறது.
உங்கள் பஜாஜ் பல்சரை செப்டம்பர் 2018-க்கு பிறகு நீங்கள் வாங்கியிருந்தால், ஓன் டேமேஜ் பைக் இன்சூரன்ஸை கூட நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும், இது புதிய பைக் உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும், பழைய பைக் வாங்கி உபயோகப்படுத்துவோருக்கு பொருந்தாது. இந்த பாலிசியில், தேர்டு-பார்ட்டு லையபிலிட்டி பகுதியை மட்டும் தவிர்த்து, காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியின் அனைத்து பெனிஃபிட்களையும் நீங்கள் பெறலாம்.
எளிதான புதுப்பிப்பு மற்றும் வாங்கும் நடைமுறை
டிஜிட் என்பது இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆன்லைனில் விற்கும் விற்பனையாளர் ஆவார். எனவே தான் இது டூ-வீலர் உரிமையாளர்கள் ஆன்லைனில் பாலிசிக்களை வாங்குவதையும், புதுப்பிப்பதையும் மிக எளிதாக்கியிருக்கிறது. எங்களின் வலைதளத்திற்கு சென்று, அவசியமான தகவல்களை பூர்த்தி செய்து, பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்தவும். சில நிமிடங்களிலேயே, உங்கள் இ-மெயிலில் பாலிசியை நீங்கள் பெற்று விடுவீர்கள்!
பைக் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களுக்கான கவர்ச்சிகரமான விருப்பத் தேர்வுகள்
சிற்சில சூழ்நிலைகளில், காம்ப்ரிஹென்சிவ் பஜாஜ் பல்சர் பைக் இன்சூரன்ஸ் பிளான் மட்டுமே, நீங்கள் விரும்பும் அளவிற்கான முழுமையான பாதுகாப்பினை தருவதற்கு போதுமானதல்ல. இப்பேற்பட்ட சூழ்நிலைகளுக்கு தான் டிஜிட் கூடுதல் ஆட்-ஆன்களை வழங்குகிறது. இன்சூரன்ஸ் பாலிசியின் காப்புறுதி பாதுகாப்பினை இந்த ஆட்-ஆன்கள் பெருமளவில் மேம்படுத்தும்.
டிஜிட்-இல் உங்கள் பஜாஜ் பல்சர் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியுடன் நீங்கள் பெறக் கூடிய சில ஆட்-ஆன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
என்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவர்
கன்ஸ்யூமபில் கவர்
ரிடர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் கவர்
.. மற்றும் பல.
குறைபாடற்ற 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவைகள்
நீங்கள் எப்போதாவது உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரை அவசர காலங்களில் தொடர்பு கொண்டு, அங்கிருந்து பதில் ஏதும் கிடைக்காமல் சிரமப்பட்டதுண்டா? ஒரு வேளை நீங்கள் இத்தகைய சூழலை சந்தித்திருந்தால், பாலிசிதாரர்கள் பொதுவாகவே தங்கள் இன்சூரர்களிடம் அனுபவிக்கக் கூடிய பெருஞ்சிரமத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
நல்வாய்ப்பாக, இந்த பிரச்சினையை சரி செய்வதற்கு டிஜிட் தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளது. டிஜிட் நிறுவனம் 24-மணி நேர சேவையை வழங்குகிறது, தேசிய விடுமுறைகள் உட்பட அனைத்து நாட்களிலும் இயங்குகிறது, ஒரு முறை தொடர்பு கொண்டாலே போதுமானது!
வாடிக்கையாளர் சேவை வழங்கும் பிரதிநிதிகள் தங்கள் பணியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மேலும் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளை சரிசெய்ய வழிகாட்டுமளவிற்கு விஷய ஞானம் பெற்றவர்கள்.
கணிசமான ஐடிவி (IDV)
ஐடிவி அல்லது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது ஒரு வேளை உங்கள் பைக் பெருத்த சேதமடைந்திருந்தாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ உங்களுடைய இன்சூரர் உங்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு கடமைப்பட்டிருக்கும் முன்னமே தீர்மானித்த தொகையை குறிக்கிறது. வண்டியின் அசல் விலையில், டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) தொகையை கழித்து விட்டு, இந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் கணக்கிடும்.
டிஜிட்-இல், உங்கள் பைக்கிற்கு கணிசமான ஐடிவி-யினை நீங்கள் பெறலாம். கூடுதலாக, நீங்கள் முழுமையான பாதுகாப்பினை பெற விரும்பினால் ஐடிவி-ஐ தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
இந்தியா முழுவதிலுமுள்ள நெட்வொர்க் கேரேஜ்களில் கேஷ்லெஸ் ரிப்பேர்கள்
விபத்து ஏற்பட்டதற்கு பிறகு, உங்கள் பைக்கை ரிப்பேர் செய்வதற்கு தேவையான பணம் உங்கள் கையில் இல்லாமல் இருக்கலாம். உங்கள் இன்சூரரிடமிருந்து ரீஇம்பர்ஸ்மென்ட் பெறுவதற்கு காத்திருப்பதற்கு பதிலாக, நீங்கள் டிஜிட்-இல் பஜாஜ் பல்சர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கியிருந்தால், இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களில் நீங்கள் கேஷ்லெஸ் ரிப்பேர் வசதியை பெறலாம்.
ஒரு பைசா செலவில்லாமல், நீங்கள் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த உங்கள் பைக்கை எடுத்துக் கொண்டு நேரடியாக இந்த நெட்வொர்க் கேரேஜ்களுக்கு சென்று, ரிப்பேர் செய்து விட்டு, வெளியே வரும் போது முற்றிலும் புத்தம் புதிய பல்சருடன் வரலாம்.
கிளைம்-செய்யாத சமயத்தில் கிடைக்கப்பெறும் நோ கிளைம் போனஸ்
கிளைம்-செய்யாத பாலிசி காலத்தில் நீங்கள் நோ கிளைம் போனஸை பெறுவதற்கான வாய்ப்பினை டிஜிட்-இன் இன்சூரன்ஸ் பிளான்கள் வழங்குகின்றன. ஒவ்வொரு கிளைம்-செய்யாத பாலிசி ஆண்டிலும், உங்கள் போனஸ் பெருகுகிறது, இதன் மூலம் உங்கள் பாலிசி பிரீமியத்தின் மீதான தள்ளுபடி அதிகரித்து, உங்கள் பைக்கிற்கு மலிவான விலையில் காப்புறுதியை பெறுவீர்கள். உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தின் மீது நீங்கள் 50% வரையில் நோ கிளைம் போனஸின் பெனிஃபிட்களை பெறலாம்.
இத்தகைய பெனிஃபிட்களின் மூலம், உங்கள் பஜாஜ் பல்சர் வண்டிக்கு எத்தனை முறை சேதமேற்பட்டாலும் அதற்கு காப்புறுதி பெறக் கூடிய வகையிலே மிகச் சரியான முறையில் செயல்படுவதை டிஜிட் உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவில் பிரபலமான பஜாஜ் பல்சர் மாடல்களுக்கான பைக் இன்சூரன்ஸ்
பஜாஜ் பல்சர் ரேஞ்ச் வண்டிகள் ஒன்பது விதமான மாடல்களில் வருகிறது, மலிவான பல்சர் 125 முதல் மிக நேர்த்தியான, ஆற்றல்மிக்க பல்சர் RS 200 வரை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு வகையான டூ-வீலர்களுக்கும் டிஜிட் வெவ்வேறு விதமான பாலிசிக்களை வழங்குகிறது.
சற்று பார்க்கவும்!
பஜாஜ் பல்சர் 125 நியான் – பல்சர் ரேஞ்சில் மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் பைக் பல்சர் 125 ஆகும். 125சிசி என்ஜின் ஆற்றல் உள்ள பல்சர் 125 நியான் வண்டி அன்றாடம் வண்டி ஓட்டிச் செல்வதற்கு ஏற்றதாகும். நீங்கள் காலேஜிற்கு அல்லது அலுவலகத்திற்கு பைக்கில் செல்ல விரும்பினால், இது ஒரு சிறந்த தேர்வாகும். டிஜிட் நிறுவனம் பல்சர் 150 இன்சூரன்ஸ் கவரை, அதன் நீண்ட கால தொந்திரவற்ற செயல்பாட்டிற்கு வழங்குகிறது.
பஜாஜ் பல்சர் என்எஸ்160 – ஓரளவிற்கு விலையுயர்ந்த பல்சர் என்எஸ்160 பைக்கில் என்ஜின் ஆற்றலும், அசத்தலான வடிவமைப்பும் சேர்ந்து, இளைஞர்களிடையே இந்த டூ-வீலரை பிரபலப்படுத்தியுள்ளது. 160சிசி என்ஜின் நல்ல வேகமாக செல்லும் ஆற்றலை அளிக்கிறது, பஜாஜின் ஒட்டுமொத்த தரமும் பாராட்டத்தக்கது. இந்த மதிப்புமிக்க மாடலை பாதுகாப்பதற்கு டிஜிட்-இன் இன்சூரன்ஸ் பாலிசிக்களை தேர்வு செய்யவும்.
பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 – பஜாஜின் இந்த தயாரிப்பு மிக அற்புதமானது. அதன் தரம், வடிவமைப்பு மற்றும் என்ஜின் ஆற்றல் மிகச் சிறப்பானது. மற்ற பல்சர் மாடல்களை விடவும் இதன் மைலேஜ் குறைவாக இருப்பினும், அதன் 200சிசி என்ஜின் ஆற்றல் இந்த குறைபாட்டினை ஈடுகட்டி விடுகிறது. அதி வேக பயணத்திற்கு ஏற்றது, விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையில் உங்களை பொருளாதார ரீதியாக பாதுகாத்துக் கொள்வதற்கு பல்சர் ஆர்எஸ்200 இன்சூரன்ஸ் பிளான் அவசியமானது.
நீங்கள் எந்த பைக்கை தேர்வு செய்தாலும், வண்டிக்கு இன்சூரன்ஸ் வாங்குவது மிக முக்கியம். கெடுவாய்ப்பான சம்பங்கள் நிகழும் போது உங்களுக்கு முழுமையான பொருளாதார பாதுகாப்பினை அளிக்கும் பாலிசிக்களை நீங்கள் தேர்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பஜாஜ் பல்சர் – வேரியன்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை
வேரியன்ட்கள் (வேறுபட்ட வடிவங்கள்) |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்துக்கு தக்கவாறு மாறக் கூடியது) |
பல்சர் 150 நியான் ஏபிஎஸ், 65கி.மீ/லி, 149.5 சிசி |
₹ 68,250 |
பல்சர் 150 ஏபிஎஸ், 65 கி.மீ/லி, 149 சிசி |
₹ 84,960 |
பல்சர் 150 டிவின் டிஸ்க் ஏபிஎஸ், 65 கி.மீ/லி, 149.5 சிசி |
₹ 88,838 |
பல்சர் 180 எஸ்டிடி (நான்-ஏபிஎஸ்), 178.6 சிசி |
₹ 85,000 |
பல்சர் 180 ஏபிஎஸ், 178.6 சிசி |
₹ 85,523 |
பல்சர் 220 எஃப் ஏபிஎஸ், 40 கி.மீ/லி, 220 சிசி |
₹ 107,028 |
பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ், 36.1 கி.மீ/லி, 199.5 சிசி |
₹ 100,557 |
பல்சர் ஆர்எஸ்200 எஸ்டிடி, 35 கி.மீ/லி, 199.5 சிசி |
₹ 127,482 |
பல்சர் ஆர்எஸ்200, 35 கி.மீ/லி, 199.5 சிசி |
₹ 140,237 |
பல்சர் என்எஸ்160 எஸ்டிடி, 160.3 சிசி |
₹ 82,624 |
பல்சர் என்எஸ்160 டிவின் டிஸ்க், 160.3 சிசி |
₹ 93,094 |