கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ்

கமர்ஷியல்/பிசினஸ் வேனுக்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

Third-party premium has changed from 1st June. Renew now

கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் என்பது வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் வேன்களுக்கு காப்பீடு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். அதாவது, பயணிகள் அல்லது பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பள்ளி வேன்கள், தனியார் வேன்கள் மற்றும் பிற வேன்கள் போன்றவற்றிற்கு காப்பீடு வழங்குவதற்காக உள்ளது.

சட்டத்தினால் கட்டயாமாக்கப்பட்ட அடிப்படையான தேர்டு பார்ட்டி லயபிலிட்டி பாலிசி என்பது தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸை மட்டும் கவர்(காப்பீடு) செய்ய உதவுகையில், ஒரு காம்ப்ரிஹென்சிவ் வேன் இன்சூரன்ஸ் பாலிசியானது ஒருவரின் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் காப்பீடு அளிக்க உதவுகிறது.

கவர் (காப்பீடு) செய்யப்படும் கமர்ஷியல் வேன்களின் வகைகள்

  • ஸ்கூல் வேன்: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டி செல்லுவதற்குப் பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கு சொந்தமான வேன்கள், எங்கள் வேன் இன்சூரன்ஸின் ஒரு பகுதியாக இன்சூர் செய்யப்படலாம்.
  • பப்ளிக் வேன்: பொதுமக்கள் போக்குவரத்து நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வேன்களும் கவர் (காப்பீடு) செய்யப்படலாம்.
  • பிரைவேட் வேன்: பயணிகளை ஏற்றிச் செல்லும் அல்லது வணிகப் பொருட்களைக் கொண்டு செல்லும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் தனியார் வேன்களும் கவர் (காப்பீடு) செய்யப்படலாம்.
  • மற்ற கமர்ஷியல் வேன்கள்: கமர்ஷியல் மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மற்ற அனைத்து வேன்களும் கவர் (காப்பீடு) செய்யப்படலாம்.

நான் ஏன் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

  • சட்டத்திற்கு உட்படுதல்மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வேன்கள் உட்பட அனைத்து வாகனங்களும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி வெஹிக்கள் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். அது இல்லையெனில், உங்களிடமிருந்து  அதிகமான தொகை அபராதமாக வசூலிக்கப்படலாம்!·
  • எதிர்பாராதவிதமான இழப்புகளிலிருந்து பாதுகாப்பு: தேர்டு பார்ட்டி  வேன் இன்சூரன்ஸ் தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்பட்ட இழப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு கவர் (காப்பீடு) செய்கையில், காம்ப்ரிஹென்சிவ் வேன் இன்சூரன்ஸானது  உங்கள் வேனிற்கு எதிர்பாராதவிதமாக எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து உங்களுக்குக் காப்பீடு வழங்குகிறது.
  • வேன் ஓனர்-டிரைவருக்கான கவர்கள்: நீங்கள் தேர்டு பார்ட்டி வேன் இன்சூரன்ஸ் அல்லது காம்ப்ரிஹென்சிவ் வேன் இன்சூரன்ஸ் என எந்த இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டாலும், எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளில் வேனின் ஓனர்-டிரைவருக்கு ஏற்படும் காயங்களுக்கான செலவுகளுக்கும் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் கவர்(காப்பீடு) அளிக்கும்.·
  • பயணிகள் பாதுகாப்பு: காம்ப்ரிஹென்சிவ் வேன் இன்சூரன்ஸ்  மூலம், உங்கள் வேனில் பயணம் செய்யும் எந்தவொரு பயணிகளுக்கும் நீங்கள் இன்சூரன்ஸ் செய்வதைத் தேர்வு செய்யலாம்.

டிஜிட்டின் மூலம் ஏன் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்?

கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸில் என்னென்ன கவராகியிருக்கிறது (காப்பீடு அளிக்கப்படுகிறது)?

இதல் கவர்(காப்பீடு) செய்யப்படாதது எது?

உங்கள் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

ஒருவேளை தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சேதங்கள்:

நீங்கள் உங்கள் வேனிற்கு தேர்டு பார்ட்டி கமர்ஷியல் பாலிசியை வைத்திருக்கும் பட்சத்தில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

கிளைம் செய்யும் போது இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடிப்போதையிலோ அல்லது சரியான உரிமம் இல்லாமல் வாகனத்தை ஒட்டியதாக தெரியவந்தால் கிளைம் அங்கீகரிக்கப்படாது.

Contributory Negligence

உரிமையாளர்-ஓட்டுநரின் அலட்சியத்தால் கமர்ஷியல் வேனுக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

தாக்கத்தினால் ஏற்படும் சேதங்கள்

இயற்கை சீற்றம் அல்லது தீ, விபத்து மூலம் நேரடியாக ஏற்படாத சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் கமர்ஷியல் வேன் இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

முக்கிய அம்சங்கள் டிஜிட் பெனிஃபிட்
கிளைம் செயல்முறை நேரடி ஆவண சரிபார்ப்பு இல்லாத பேப்பர்லெஸ் கிளைம்ஸ்
வாடிக்கையாளர் சேவை 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை
கூடுதல் கவரேஜ் PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல,
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பறற லயபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும்.

கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்11

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் கமர்ஷியல் வேனின் வகைப் பொறுத்து, இரண்டு முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.

லயபிலிட்டி மட்டுமே ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

உங்கள் இன்சூர்டு கமர்ஷியல் வேனால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

உங்கள் இன்சூர்டு கமர்ஷியல் வேனால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

உங்கள் கமர்ஷியல் வேனுக்கு இயற்கை சீற்றம், தீ, திருட்டு அல்லது விபத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள்

×

உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்பட்டிருக்கும் காயம்/உயிரழப்பு

If the owner-driver doesn’t already have a Personal Accident Cover from before

×
Get Quote Get Quote

கிளைமைக் கோருவது எப்படி?

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது தொடர்புகொள்ள hello@godigit.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் இன்சூர் செய்யப்பட்டவரின்/அழைப்பவரின் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை தயராக வைத்திருப்பதன் மூலம் எங்கள் செயல்முறை நீங்கள் எளிதாக்க முடியும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

இந்தியாவில் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் ஆன்லைன் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது வேன் உட்பட எனது அனைத்து கமர்ஷியல் வாகனங்களையும் ஒரே பாலிசியில் இன்சூர் செய்ய முடியுமா?

இல்லை, உங்களால் முடியாது. கமர்ஷியல் வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு பாலிசி இருத்தல் அவசியம். இருப்பினும், நீங்கள் என்ன செய்யலாம் என்றால் உங்கள் அனைத்து வாகனங்களுக்கும் குறைந்த செலவில் தனிப்பயனாக்கப்பட்ட பேக்கேஜைப் பெற்றிடலாம். மேலும் அறிய, வாட்ஸ்அப் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

டிஜிட்டின் வேன் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் என்ன வகையான வேன்கள் பாதுகாக்கப்படுகின்றன?

கமர்ஷியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வேன்களும் (பள்ளிகள், தனியார் சுற்றுப்பயணங்கள் போன்றவை) எங்கள் வணிக வேன் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் இன்சூர் செய்யப்படலாம். பிற வேன்கள் மற்றும் மினிபஸ்கள் போன்றவையும் மாருதி ஈகோ மற்றும் மாருதி சுசூக்கி ஆம்னி ஆகியவற்றிற்கு காப்பீடு பாதுகாப்பு அளிக்கப்படலாம்.

பயணிகளும் வேன் இன்சூரன்ஸில் இன்சூர் செய்யப்படுகிறார்களா?

ஆம், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க முடிவு செய்தால், உங்கள் பயணிகளையும் பாதுகாக்க பயணிகளுக்கான இன்சூரன்ஸையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஆன்லைனில் வேன் இன்சூரன்ஸ் வாங்குவதன் நன்மைகள் என்ன?

தொழில்நுட்பத்திற்கு நன்றி, நீங்கள் இப்போது ஆன்லைனிலேயே வேன் இன்சூரன்ஸை வாங்கலாம். இதில் நேரடியாக ஆவங்களை சமர்ப்பிக்கும் பேப்பர் ஒர்க் இல்லை, நேரடியாக முகவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய நன்மைகளுடன் வருவதால் இது குறைவான நேரத்தை எடுத்துக்கொள்வது மட்டுமின்றி நேரடியாக வாங்கும் இன்சூரன்ஸுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையை கொண்டிருக்கிறது!

கமர்ஷியல் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ஒரு வேனை இன்சூர் செய்ய எவ்வளவு செலவாகும்?

செலவு நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் வேன் வகை, அதன் வயது, எந்த நகரத்தில் அது இயங்குகிறது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் பிளானின்  வகை ஆகியவற்றைப் பொறுத்தது . உங்கள் வேனுக்கான வேன் இன்சூரன்ஸ் பிரீமியத்தைச் தெரிந்துகொள்ள, உங்கள் விவரங்களை இங்கே உள்ளிடவும்.