6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் என்பது ஒரு வகையான மோட்டார் இன்சூரன்ஸ் ஆகும், இது எலக்ட்ரிக் கார்களை விபத்துக்கள், இயற்கை பேரழிவுகள் அல்லது தீ போன்றவற்றில் ஏற்படக்கூடிய பல சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பதாகும்.
எலக்ட்ரிக் கார்கள் செலவு குறைந்ததாகவும், சுற்றுச்சூழலுக்குச் சிறந்ததாகவும் இருப்பதால் அவை பிரபலமடைந்து வருகின்றன. வழக்கமான கார்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் எரிபொருளாகத் தேவைப்படுவது போலவே, இந்த கார்களிலும் உங்கள் தொலைபேசி அல்லது லேப்டாப் போன்று எலக்ட்ரிக் சார்ஜ் செய்யப்படுகிறது!)
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இன்னும் அதிகம் இல்லை என்பதால், உங்கள் எலக்ட்ரிக் காருக்கான இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது சற்று வித்தியாசமாக இருக்கும்.
உங்கள் விலைமதிப்பற்ற எலக்ட்ரிக் கார்களுக்கு என்ன நடக்கும் என்று உங்களால் கணிக்க முடியாது. இந்த வகையான கார்களில் சிக்கலான தொழில்நுட்ப மற்றும் இயந்திர பாகங்கள் உள்ளன, அவை சீராக இயங்க உதவுகின்றன, ஆனால் எந்த நேரத்திலும் உங்களுக்குச் சிக்கலைக் கொடுக்கலாம்.
எனவே, எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் செய்வது பெரும் உதவியாக இருக்கும் மற்றும் விபத்து, தீ, இயற்கை சீற்றங்கள் அல்லது திருட்டு போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில் நிதிப் பாதுகாப்பை அளிக்கும், மேலும் உங்கள் காரை எந்த கவலையும் இல்லாமல் ஓட்டுவதை உறுதிசெய்ய முடியும். இந்தியாவில் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் இருப்பது கட்டாயம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்...
தனியார் எலக்ட்ரிக் கார்களுக்கான கார் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் கிலோவாட் திறன், தயாரிப்பு, மாடல் மற்றும் வயது போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை.
வாகன கிலோவாட் திறன் (KW) |
ஒரு வருட தேர்டு பார்ட்டி பாலிசிக்கான பிரீமியம் விகிதம் |
லாங் டெர்ம் பாலிசிக்கான பிரீமியம்* விகிதம் |
30 KW க்கு மிகாமல் |
₹1,780 |
₹5,543 |
30KWக்கு மேல் ஆனால் 65KW மிகாமல் |
₹2,904 |
₹9,044 |
65KWக்கு மேல் |
₹6,712 |
₹20,907 |